PDA

View Full Version : ஜாலியாய் இளைக்கலாம் வாங்க...!!! − பாகம் 1.

யவனிகா
27-09-2007, 02:10 PM
ஜாலியாய் இளைக்கலாம் வாங்க...!!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12456)

இந்தத் தொடரை நான் தொடங்கும் இந்நேரம் ஒரு சுபயோக, சுபதினமாய் அமைந்து, இதைப் படிப்பவரெல்லாம் எடைகுறைய சர்வமதக் கடவுளரையும் வேண்டி, ஆரம்பிக்கிறேன். (கொஞ்சம் ஓவர் பில்ட்−அப்போ)

சரி, விசயத்திற்கு வருகிறேன். எடையை குறைக்கவோ, கூட்டவோ வேண்டி எந்த உணவியல் நிபுணரை அணுகினாலும், அவர் முதலில் தருவது தினசரி மெனு பிளான் தான்.

உணவில் எதைக் கூட்ட வேண்டும், எதைக் குறைக்க வேண்டும் என்பது தான் மெனு பிளானின் சாராம்சம். நாமும் அதை கர்மசிரத்தையாய் படித்துவிட்டு, இரண்டு நாள் மட்டும் பின்பற்றிவிட்டு, பத்திரமாய் எடுத்து வைத்துவிட்டு (யப்பா..... எத்தனை விட்டு), பின்னர் "பழைய குருடி கதவ திறடி..." கதையாய், பழைய படி சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம்.

சிறந்த உணவுப் பழக்கமும்,சரியான உடற் பயிற்சியும் கை கோர்த்தால் தான், உடல் எடை குறைப்பு சாத்தியமாகும்.(ஆ...வ்... என்ன கொட்டாவி வருகிறதா?)

எடையைக் குறைக்க நாம் முதலில் செய்ய வேண்டியது,வழக்கத்தை விடஒரு மணி நேரம் முன்பாகத் துயில் எழ வேண்டும். (என்ன முடியாதா? சரி ஒரு அரை மணி நேரம்?)

எழுந்தவுடன் அம்மா... காப்பி என்று கத்தாமல், சமத்தாக பல் தேய்த்து, காலைக் கடன்களை முடித்து (காப்பி குடிக்காட்டி, காலைக் கடன்களைக் கட்ட முடியாதா?... ஆரென் அண்ணா) வெறும் வயிற்றில் மூன்று டம்ளர் தண்ணி குடிக்கவும் (வெறும் வயிற்றில் தண்ணி குடிச்சா வாந்தி வர்ற மாதிரி இருக்கா?..) ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். போகப்போக பழகிவிடும் (என்னங்க லொள்ளு வாத்தியாரண்ணா� உங்களுக்கு ஆரம்பத்தில தண்ணி அ(கு)டிச்சப்ப வாந்தி வந்தது தானே?...).

வெது, வெதுன்னு தண்ணில லெமனும், தேனும் தலா ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கலாம். தேனும் லெமனும் சேர்ந்த கலவை நம்ம ரத்தத்தை சுத்திகரிக்கும், நமக்கே தெரியாம நம்ம உடல்ல தினமும் எத்தனையோ நச்சுப் பொருட்கள் சேருது. நம்ம எந்த அளவு தண்ணி குடிக்கிறோமோ அந்த அளவு நச்சு பொருட்கள் இரத்தத்திலிருந்து வெளியேற்றப் படுகிறது. அதோட, தினமும் ஏ.ஸி. ல இருப்பவர்களுக்கு எற்படும் தோல் வறட்சி, உடல் உஸ்ணம், மலச் சிக்கலுக்கு அதிக அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. தண்ணீரை பத்தி பேசனும்னா, (சும்மாவா சொன்னாங்க, நீரின்றி அமையாது உலகு...) தனி தொடரே போட வேண்டி வரும். சரி,ஒரு வ*ழியா தண்ணி குடிச்சாச்சா?

இப்ப கத்துங்க... அம்மா எந்திரிச்சு இத்தன நேரமாச்சு காப்பி எங்க?..., அம்மாவும் புள்ள மேல இருக்கிற அலாதி பிரியத்தில டபுள் ஸ்ட்ராங்கா, நல்லா நாலு ஸ்பூன் சக்கரைய போட்டு கொண்டு வருவாங்க பாருங்க. அங்க தான் கவனிக்கனும் நீங்க!!! மொதல்ல காபில போடற சக்கரைய ஒரு ஸ்பூனா குறைங்க.... எப்பிடி குடிக்கிறது? கசக்குமேன்னு தான கேக்கிறீங்க, முதல்ல சர்க்கரையே போடாம ஒரு வாய் குடிங்க, கசக்குதா....? இப்படித்தான் தினமும் சக்கரை வியாதிக்காரங்க குடிக்கிறாங்க... அவங்க நிலைமையை நினைச்சு வருத்தப் பட்டுட்டே... நமக்கும் அந்த நிலமை வரக்கூடாதுன்னு நினைச்சிட்டே, ஒரு ஸ்பூன் சர்க்கரையை மட்டும் கலக்குங்க காப்பில..., இப்ப குடிங்க..., இனிக்குமே? பேஷ்.. பேஷ் காப்பின்னா கம்மிச் சக்கரை காப்பிதான்.

சக்கரைய குறைக்க ஆரம்பிச்சாச்சுன்னாலே எடை குறைப்புக்கான முதலடி வெச்சாச்சுன்னு தான் அர்த்தம், அதுக்குனு குண்டாகணும்னு நினைக்கிறவங்க சர்க்கரய அள்ளி, அள்ளி சாப்பிடாதீங்க. உடம்பு வராது, சுகர் தான் வரும். இப்ப உங்க கையயே முதுகுப் பக்கம் கொண்டு போய் பலே, பலேன்னு ஒரு ஷொட்டு போட்டுக்கங்க.

அப்புறம் தான் முக்கியமான விசயமே... ஆரம்ப பள்ளிக்கூடத்திலிருந்து காலேஜ் முடிக்கிற வரை உங்க டிரில் மாஸ்டர், உங்களை டிரில் எடுத்திருப்பாரே? ஏதாவது டிரில் ஸ்டெப் ஞாபகம் இருக்கா? (இல்லையா, இதெல்லாம் வசதியாய் மறந்திருவீங்களே!!!)

ஸ்கூலில படிக்கும் உங்க பசங்களையோ (கல்யாணம் இன்னும் ஆகலலையா) அக்கா, தங்கச்சி பசங்களையோ கேட்டு எளிமையான கை, கால்களுக்கான உடற்பயிற்சியை பதினைந்து முதல் இருபது நிமிடம் செய்யலாம்.

வெறுமே குனிந்து நிமிர்வது, மல்லாக்க படுத்து கால்களை தூக்கி பின் இறக்குவது, தோப்புக்கரணம் போடுவது (மனைவியின் முன்னால்... இன்னும் சிறப்பு... பாருடா செல்லம் மாமா நேத்து உன்னை திட்டிட்டேன்னு தான் இன்னைக்கு தோப்புகரணம் போடுறேனு சொல்லுங்க..) போன்றவை இதில் அடங்கும். இது முதல் நாள். ஆப்ஷன் நம்பர் ஒண்ணு.

அடுத்த நாள் நல்ல பிள்ளையாய் (முடிந்தால்) குளித்து.. உங்க வீட்டுப் பக்கத்தில், பத்து நிமிட நடை தூரத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு, நடந்து போயிட்டு வாங்க.

பிள்ளையாரிடம் உங்க நீண்ட நாள் கோரிக்கையான (என்னையும் எத்தன நாள் உன்ன மாதிரி பிரம்மச்சாரியாகவே வெச்சிருக்கப் போற, நங்கு நங்குன்னு இந்த உடம்பயும் தூக்கிட்டு நடந்து வரேனே... சீக்கிரம் ஒரு ஃபிகரை காட்டுப்பான்னு சொல்லிட்டு) அங்க குடுக்கிற பிரசாதத்தை மட்டும் நெத்தில பூசிட்டு, சுண்டல், பொங்கல் போன்றவற்றை சாப்பிடாம இருங்க.

ஏன் சொல்றன்னா திடீர்னு பிள்ளையார் கண்திறந்து, ஒரு அழகான பொண்ணு (யவனிகா மாதிரி...ஹி..ஹி) உங்களைப் பார்த்துச்சின்னா சுண்டலும், வாயுமா நீங்க காட்சி குடுக்க வேண்டாம் பாருங்க. சரியான தின்னிப் பண்டாரம்னு உங்களை நினைச்சுக்கும். கற்பனைல மிதந்திட்டே வீடு மாறி போகாம, நேரா பொடி நடையா நடந்து, உங்க வீட்டுக்கு வாங்க. இது ஆப்ஷன் நம்பர் இரண்டு..

அடுத்த நாள், உங்களுக்கு தோட்ட வேலை தெரியுமா? இடமும் இருந்து மனதும் வைத்தால் அருமையான தோட்டம் போடலாம். பணத்துக்குப் பணமும், உடம்புக்கு உடம்பும் குறையும். ஃபிகருகளுக்கு ரோஸ் வாங்கற செலவும் மிச்சம். இது மூணாவது ஆப்ஷன்.

ஏரோபிக்ஸ், யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ் தெரிந்தவங்கன்னா எனக்கு வேலை மிச்சம். உங்களுக்கு தெரிந்த எதோவொண்ணை, ஒரு இருபது நிமிசம் பண்ணுங்கப்பு, உடம்பு குறைஞ்சா செரிதான். ஆனா இதெல்லாமும் தெரிஞ்சு வச்சிட்டு உடம்பையும் வெச்சிருந்தீங்கனா, முதல்ல உங்க மண்டைல யவனிகா நங்குன்னு ஒரு கொட்டு வெப்பா.

எனக்கு எதுவுமே தெரியாதுன்னு, இதெல்லாம் செய்ய முடியாதுன்னா, 20 நிமிசம் மைக்கேல் ஜாக்சன் பாட்டுப் போட்டுட்டு டான்ஸ் ஆடுங்க. அவர மாதிரி ஆட சொல்லலீங்க, உங்கள மாதிரி ஆடுங்க போதும். இதுல ரெண்டு விசயம் நீங்க கவனிக்கனும். ஒண்ணு கதவு, ஜன்னல் எல்லாம் மூடுறது. அப்புறம் நீங்க ஆடுற விசயம் மைக்கேல் ஜாக்சனுக்கு தெரியாம பாத்துக்கறது.(மனசு உடஞ்சு மண்டைய போட்டுடப் போறாரு). இது தான் என்னோட ஆப்ஷன் நம்பர் நாலு

வேர்க்க விறுவிறுக்க ஆடியாச்சா? இப்பா நல்லா ஒரு ஷவர் எடுத்துட்டு (அளவுத் தண்ணி காக்கா குளியளா) அப்ப அம்மாவுக்கு லாரி தண்ணி புடிக்க ஹெல்ப் பண்ணுங்க. (ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பாள், தன் மகன் லாரித் தண்ணீர் புடித்தல் கண்டு..)

நீங்க உடம்ப குறைக்க செய்யும் சுயநல முயற்சின்னு தெரியவா போகுது?. சமயத்தில பக்கதுது வீட்டு மாலா குடத்தையும் நிரப்பி வெச்சா, அவ உங்களுக்கு சொல்ற தேங்ஸ்ல, நீங்க தினமும் குடத்தை எடுத்துட்டு லாரி பின்னால போறது நிச்சயம்.

முன்பெல்லாம் எங்கூருல "வருத்தப் படாத வாலிபர் சங்கம்" முக்குக்கு முக்கு இருக்கும். எங்கண்ணணுக எல்லாம்,காலங்காத்தால முட்டையும் கையுமா அங்க போயிருவாங்க. தண்டால், பஸ்கி எடுத்துட்டே அக்காங்கா யாராவது க்ராஸ் ஆனால் புஜ, பல பராக்கிரமம் காட்டுவாங்க. இப்பத்தான் எல்லாம் ஏஸி ஜிம் ஆச்சே? பர்சையும் பதம் பர்க்கும்.

உங்கள அரைமணி நேரம் தூங்கவிடாத பாவத்தையெல்லாம் என் தலைல எறக்கி வெச்சிட்டு, காலை சிற்றுண்டி சாப்பிடப் போகலாமா.

அம்மா என்னக்கும் இல்லாத அதிசயமா உங்கள பாத்துட்டு, (ஏன்னு உங்களூக்கே தெரியும்) தட்டுல மொத இட்டிலிய வெச்சவுடனே சும்மா வீடே அதிருதில்ல

இன்னைக்கும் இட்லியா? நீ என்ன யோசிக்காம இட்டிலிக்கு ஊறப் போடுவோர் சங்கத் தலைவியான்னு "சும்மா மெர்சலாவிங்கல்ல... நானும் உங்களைப் போலத் தான். இட்லிக்கு பொடா, தடா போடணும்னு பொறப்படறவதான். ஆனா இட்டிலி, சட்னி, சாம்பார் காம்பினேசன் மாதிரி பேலன்ஸ்டு டயட்ட அடிச்சுக்க ஆளில்லை. தங்கத் தமிழனின் தன்னிகரற்ற கண்டு பிடிப்பு தான் இந்த இட்லி (தமிழுக்கு அடுத்தபடியாக).

எப்படியா? பொறுங்கள்.

தொடர்ந்து இளைக்கலாம் வாங்க...

அமரன்
27-09-2007, 06:55 PM
அட அட...ஜாலியாக இளைக்கலாம் வாங்க என்னும் தலைப்புக்கு ஏற்ப ஜாலியும் இளைத்தலுக்கான துணுக்குகளுமாக அழகு தமிழ் தோரணமாக விளங்குகின்றது உங்கள் பதிவு..என் போன்ற குளிர் பிரதேச வாழ் மக்களுக்கு காலை நடைபயிற்சி (பிள்ளையார் தரிசனம்) கடினமாக இருக்கும். மற்றப்படி எல்லாM இலகுவான முறைதான்...டிஃபனுக்கு இட்லி என்பதுதான் இடிக்குது...அதற்கு மாற்றீடு இல்லையா?

ஆவலுடன் எதிர்பாக்கும்
ஸ்லிம் விரும்பிகள் சங்க உறுப்பினர்

யவனிகா
27-09-2007, 07:12 PM
டிஃபனுக்கு இட்லி என்பதுதான் இடிக்குது...அதற்கு மாற்றீடு இல்லையா?
ஆவலுடன் எதிர்பாக்கும்
ஸ்லிம் விரும்பிகள் சங்க உறுப்பினர்

ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது, கிடைத்த உங்கள் அன்புக்கருத்துக்கு, நன்றி!!! சகோதரா.

நீங்கள் விரும்பியபடி இட்லிக்கு மாற்று, அடுத்த தொடரில் தருகிறேன்.

அன்புடன்,

யவனிகா

சாம்பவி
27-09-2007, 07:33 PM
யதார்த்தமான கட்டுரை நடை.
பயனுள்ளதும் கூட.
நன்றி யௌவனிகா

.

அறிஞர்
27-09-2007, 07:35 PM
நண்பா.. அருமையாக இருக்கு.... படிக்க...

தினமும் உடல்பயிற்சி... செய்து.... இளைக்க முயலுவோம்....

அக்னி
27-09-2007, 08:38 PM
உடம்பு இளைக்க, ஒரு நாளைக்கு எத்தனை தடவை இந்தக் கட்டுரையை வாசிக்கணும்னு,
சொல்லவே இல்லையே...
திரும்பத் திரும்பப் பார்த்திட்டன்...
யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்களேன்...

பாராட்டுக்கள் யவனிகா...
அருமையான, கவர்ச்சியான எழுத்துநடை...

தொடருங்கள்... இளைப்போம்...

aren
28-09-2007, 12:13 AM
இன்னொரு தபா படிக்கனும் அப்பத்தான் கொஞ்சம் புரியும். படித்துவிட்டு பின்னர் பின்னூட்டம் இடுகிறேன்.

lolluvathiyar
28-09-2007, 08:50 AM
அருமையான விளக்கம். நீங்கள் சொன்ன விசயத்தை விட நீங்கள் சொன்ன விதம் சிரிப்பை வரவளைத்து சிந்திக்கவைத்து விட்டது. இத்தனை நாள் காக்க வைத்து கொடுத்தால் இரண்டு நாள்ல கொஞ்சம் தொப்பை போட்டுச்சு. அதை குரைக்க உங்க டெனிக் தான் பயன்படுத்தனும்.
சபாஸ் பாராட்டுகள் 100 இபணம். தொடருங்கள்

(என்னங்க லொள்ளு வாத்தியாரண்ணா உங்களுக்கு ஆரம்பத்தில தண்ணி அ(கு)டிச்சப்ப வாந்தி வந்தது தானே?...).

த*ன்னி அடிக்க*ர*துனாலே என்னை தான் நினைவில் வைத்தீர்க*ளாக்கும். லொள்ளுவுக்கே லொள்ளா.

தங்கத் தமிழனின் தன்னிகரற்ற கண்டு பிடிப்பு தான் இந்த இட்லி

சோழ சேர பாண்டிய காலாத்தில் தமிழகத்தில் இட்லி இல்லை.
(முழுவதும் அறிய நான் எழுதிய தமிழர்கள் வரலாறு இறுதி பாகத்தில் எழுதி இருகிறேன்)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10759

இனியவள்
28-09-2007, 08:52 AM
தோழியே :) இதைப் படிக்கும் போதே
கொஞ்சம் எடை குறைஞ்ச மாதிரி இருக்கே :cool:

அருமை தோழியே தொடருங்கள்
இன்னும் எதிர் பார்க்கிறோம்

அமரு கவலை வேண்டாம் சீக்கிரம் மெலிஞ்சுடுவீங்கள்
யவனிக்காவின் இந்த திரியைப் பார்த்தே :)

சிவா.ஜி
28-09-2007, 08:55 AM
கட்டுரையின் தலைப்புக்கேற்ப என்னாவொரு ஜாலியான நடை(எழுத்து நடையச் சொன்னேனுங்க)அபாரமாக(பாரத்தை அ-பாரமாக்கத்தானே) இருக்கிறது.அமரனைப் போல நானும் இட்லிக்கு மாற்றுக்காக வெயிட்டிங்...
உடம்பு குறைக்க இல்லீங்கோ...இட்லி கிடைக்காத நிலைமைக்காகத்தான்.
நாம எல்லாம் ஏற்கனவே ஸ்லிம்தானுங்களே.
அசத்தல் கட்டுரை யவனிகா...பாராட்டுக்கள்.

aren
28-09-2007, 08:56 AM
ஆரம்பமே அசத்தலாக உள்ளது. நான் ஒரு 10 கிராம் இளைச்ச மாதிரி இருக்கிறது.

ஆனால் நீங்கள் செய்யச் சொல்லும் விஷயங்கள் கொஞ்சம் கஷ்டம்தான் ஆனால் பார்க்கலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
28-09-2007, 08:59 AM
ஆரம்பமே அசத்தலாக உள்ளது. நான் ஒரு 10 கிராம் இளைச்ச மாதிரி இருக்கிறது.

ஆனால் நீங்கள் செய்யச் சொல்லும் விஷயங்கள் கொஞ்சம் கஷ்டம்தான் ஆனால் பார்க்கலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

என்ன ஆரென் இப்படி சொன்னீங்கன்னா எப்படி.அப்புறமா நாம ரெண்டுபேரும் ஒரே ஆட்டொவுல போறதெப்படி(சென்னை சந்த்திப்புல படிச்சிருக்கேனே)

பூமகள்
28-09-2007, 08:59 AM
அற்புதமான திரி... எங்க மன்றத்தில நிறைய பேருக்கு உபயோகமா இருக்கும்... ஏன்னா பெரும்பான்மையினர் தொப்பையுடன் திரிவதாகக் கேள்வி....
அதுக்காக இந்த குச்சி குச்சி ராக்கம்மா ராக்கையாக்களையும் மறக்காம எங்களுக்கும் குண்டாக ஏதாச்சும் டிப்ஸ் தாங்க சகோதரி...!!
எனக்கு குண்டாகனும்... சீக்கிரமா ஆரம்பிச்சா தேவலை...!!
சூப்பரா கலாய்ப்புடனே கருத்துக்களை மெல்ல மெல்ல சொல்லியிருக்கீங்க.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டு தான் உங்க பதிவு.
கலக்குங்க தொடர்ந்து...
வாழ்த்துக்கள் யவனிகா அக்கா...!!
(கண்டிப்பா அக்காவா தான் இருப்பீங்கன்னு ஒரு யூகம்... இல்லாட்டி.. எனக்கு தனிமடலில் சொல்லுங்க..... ரகசியமாய்...!)

மன்மதன்
28-09-2007, 01:00 PM
நீங்க உடம்ப குறைக்க செய்யும் சுயநல முயற்சின்னு தெரியவா போகுது?. சமயத்தில பக்கதுது வீட்டு மாலா குடத்தையும் நிரப்பி வெச்சா, அவ உங்களுக்கு சொல்ற தேங்ஸ்ல, நீங்க தினமும் குடத்தை எடுத்துட்டு லாரி பின்னால போறது நிச்சயம்.

ஒரு சின்ன திருத்தம்.. லாரி பின்னால இல்லே.. சாரி பின்னாலே,,:D:D

(கட்டுரை சூப்பருங்கோ..:icon_b:)

யவனிகா
29-09-2007, 12:50 PM
[quote=]உடம்பு இளைக்க, ஒரு நாளைக்கு எத்தனை தடவை இந்தக் கட்டுரையை வாசிக்கணும்னு,
சொல்லவே இல்லையே...
திரும்பத் திரும்பப் பார்த்திட்டன்...
யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்களேன்......[quote]

எல்லாப் பிரதி வாரங்களிலும் பல்லுல பச்சத்தண்ணி கூடப் படாம பத்து தரம் இந்த கட்டுரையை பாராயணம் செய்தால் கண்டிப்பாக இளைக்கலாம்.

அன்புத் தங்கை தேவதைப் பூமகள்,
இருபத்து ஐந்து வயதுக்குட்பட்ட குட்டி தேவதை நீ என்றால் என்னை நீ அக்கா என்றே அழைக்கலாம்.இல்லை என்றால் நான் உன்னை தங்கை என்று அழைக்ககிறேன்.ஏற்கனவே எனக்கு கோவையில் ஒரு வாயாடித்தங்கை இருக்கிறாள்.இனி நீயும் எங்க பட்டியலில்.அது சரி.கோயமுத்தூரு பொண்ணுங்க எல்லாம் கொடி மாதிரி இல்லாம கொளுக்.மொழுக்குன்னு இருந்தாத் தான் நம்ம மண்ணுக்கும்,தண்ணிக்கும் பெருமை,சரியா நான் அடுத்த விடுமுறையில் ஊருக்கு வரும் போது சும்மா பூங் கொடி மாதிரி இல்லாம குண்டுப்பொண்ணா உன்னை எதிர்பார்க்கும்,

யவனி அக்கா.

யவனிகா
30-09-2007, 06:32 AM
அன்பான சகோதர சகோதரிளே,
இந்த தொடருக்கு நீங்கள் அனைவரும் அளிக்கும் ஆதரவுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி. பாராட்டுக்ளோடு தவறுகளையும் சுட்டிக் காட்டுங்கள்.கருத்துக்களைச் சொல்லும் விதத்திலோ,வார்த்தை அமைப்பிலோ பிழைகள் இருந்தால், தவறு இருப்பின் சுட்டுங்கள்.

நிற்க,நான் இந்த மன்றத்தில் சேரும் போது எல்லா இணையக் குழுமங்களையும் போலத்தான் ...என்ற நினைப்பில் என்னைப் பற்றிய அறிமுகத்தைக் கூட ஏனோ,தானோவென்று தான் எழுதினேன்.
ஆனால், சவூதி அரேபியாவின் பாலைவன வெம்மைக்கு நடுவே என் வாழ்க்கையில் வீசும் மென்தென்றல் காற்றாகத் தான் இந்த மன்றத்தை இப்பொது நினைக்கிறேன்.

ஒரு சாதாரண தமிழ் வார இதழ் வாங்கவேண்டுமென்றால் கூட குடியிருப்பிலிருந்து 20 கிலோ மீட்டர் போக வேண்டும்,அதுவும் ஆண்களைச் சார்ந்தே..., எனென்றால் பெண்கள் இங்கே காரோட்ட முடியாது
கார் தவிர வேறு போக்குவரத்து வசதிகளும் இல்லை.
இந்த நிலையில் நான் தமிழ் மன்றத்தை என் வாசல் தேடி வரும் வசந்தமாகவே கருதுகிறேன்.
பல இனிய உறவுகளைப் பெற்றுத் தந்ததுடன் சவூதி அரேபியாவில் சமாதி கட்டப்பட்ட என் தமிழ் உணர்வுகளையும், போதும் என்று நான் புதைத்து வைத்த என் பேனாவையும் அகழ்ந்தெடுத்துள்ளது, இந்ததமிழ் மன்றம். தமிழ்த் தாயைத் தாங்கிப் பிடிக்கும் தங்கக் கரங்கள் இந்தத் தமிழ் மன்றம்.

மெல்லத் தமிழ் இனிப் பிழைக்கும்......

நன்றியுடன்
யவனிகா.

பூமகள்
30-09-2007, 06:58 AM
அன்புத் தங்கை தேவதைப் பூமகள்,
இருபத்து ஐந்து வயதுக்குட்பட்ட குட்டி தேவதை நீ என்றால் என்னை நீ அக்கா என்றே அழைக்கலாம்.இல்லை என்றால் நான் உன்னை தங்கை என்று அழைக்ககிறேன்.ஏற்கனவே எனக்கு கோவையில் ஒரு வாயாடித்தங்கை இருக்கிறாள்.இனி நீயும் எங்க பட்டியலில்.அது சரி.கோயமுத்தூரு பொண்ணுங்க எல்லாம் கொடி மாதிரி இல்லாம கொளுக்.மொழுக்குன்னு இருந்தாத் தான் நம்ம மண்ணுக்கும்,தண்ணிக்கும் பெருமை,சரியா நான் அடுத்த விடுமுறையில் ஊருக்கு வரும் போது சும்மா பூங் கொடி மாதிரி இல்லாம குண்டுப்பொண்ணா உன்னை எதிர்பார்க்கும்,
யவனி அக்கா.
யவனி அக்காவின் அன்புத் தங்கை ஆனதில் மகிழ்ச்சி..:)(அப்பா..நான் அக்கா இல்லை.. ஹீ ஹீ..:icon_rollout:)
நிச்சயமாய் கொடி கொழுகொழு அமுல் பேபி ஆயிருப்பாள் நீங்க அடுத்த விடுமுறையில் ஊருக்கு வரும்போது.:p
கவலை படாதீங்க அக்கா..:cool: மன்றத்தில் பாசமெனும் சிமெண்ட் ஸ்ராங்கா என் மேல இருக்கு.. கண்டிப்பா குண்டு ஆயிருவேன்...!!:icon_b:
இல்லாட்டி இருக்கவே இருக்கு... :rolleyes:குண்டாகலாம் வாங்க திரி... !! :Dஅதை தினமும் நாலு வேளையும் படிச்சா அழகான அமுல் பேபி ஆயிருவேன்..!!:D

சிவா.ஜி
30-09-2007, 07:26 AM
நிற்க,நான் இந்த மன்றத்தில் சேரும் போது எல்லா இணையக் குழுமங்களையும் போலத்தான் ...என்ற நினைப்பில் என்னைப் பற்றிய அறிமுகத்தைக் கூட ஏனோ,தானோவென்று தான் எழுதினேன்.
ஆனால், சவூதி அரேபியாவின் பாலைவன வெம்மைக்கு நடுவே என் வாழ்க்கையில் வீசும் மென்தென்றல் காற்றாகத் தான் இந்த மன்றத்தை இப்பொது நினைக்கிறேன்.

யவனிகா.

ஆஹா...எங்கள்குழுவில் இன்னொரு அசத்தலான எழுத்தாளர் இணந்துவிட்டார். அதே மென்தென்றல் காற்றை இந்த பாலைவனத்தில்ல் நாங்களும் அனுபவிக்கிறோம்.சுகமோ சுகம்.மன்றத்தில் இருக்கும் நேரங்கள் வசந்தமாயிருக்கிறது.கோடி நன்றிகள் மன்ற உறவுகளுக்கு.

இளசு
30-09-2007, 08:29 AM
இளைக்கிறோமோ இல்லையோ
இளைப்பாற இத்திரி வரணும்..

இந்த மாதிரி ஒரு இளமையான நடையில், சரளமான உரையாடல் பாணியில், இடையிடையில் நகாசு வரிகளோடு..

உணவியலை உளவியல் அறிந்து பரிமாறும்
இளமைக்காவுக்கு - அதாங்க யவனிகாவுக்கு ஜே!

சூரியன்
30-09-2007, 08:46 AM
நல்ல பயனுள்ள திரி குண்டா இருக்கிறவங்க பயன்படுத்திக்கோங்க..

தளபதி
30-09-2007, 01:33 PM
அழகான எழுத்து நடை. சிலசமயம் நேரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு நான் நிறைய படிப்பதை நிறுத்திவிடுவேன். ஆனால் ஆரம்பம் முதல் முடிவு வரை இழுத்துப்பிடித்து படிக்கவைத்தது உங்கள் எழுத்தில் இருந்த ஈர்ப்பு.

பயனுள்ள தகவல்களை மிகவும் அழகாக கொடுத்தமைக்கு நன்றி.

aren
01-10-2007, 11:04 AM
யவனி அக்காவின் அன்புத் தங்கை ஆனதில் மகிழ்ச்சி..:)(அப்பா..நான் அக்கா இல்லை.. ஹீ ஹீ..:icon_rollout:)

நேர்ல பார்த்தால் உங்க வண்டவாளம் தெரிந்துவிடுமே!!!

aren
01-10-2007, 11:06 AM
அடுத்த பாகம் எங்கே!!!

ஆவலுடன்
ஆரென்

பூமகள்
01-10-2007, 11:30 AM
நேர்ல பார்த்தால் உங்க வண்டவாளம் தெரிந்துவிடுமே!!!
ஆகட்டும்.....:icon_rollout:ஆரென் அண்ணா..:icon_b:
அந்த வண்டவாளத்தை தண்டவாளமாக்கி நாங்க ரயில்விட்டிருவோமுங்க :sport-smiley-018: :D

aren
01-10-2007, 11:55 AM
ஆகட்டும்.....:icon_rollout:ஆரென் அண்ணா..:icon_b:
அந்த வண்டவாளத்தை தண்டவாளமாக்கி நாங்க ரயில்விட்டிருவோமுங்க :sport-smiley-018: :D

பார்க்கலாம் எப்படி வண்டவாளம் தண்டவாளம் ஏறுகிறது என்று.

யவனிகா
01-10-2007, 12:16 PM
[COLOR="DarkOrchidகவலை படாதீங்க அக்கா..:cool: மன்றத்தில் பாசமெனும் சிமெண்ட் ஸ்ராங்கா என் மேல இருக்கு.. கண்டிப்பா குண்டு ஆயிருவேன்
[/COLOR]

இதத்தான் பூசினாப்பில குண்டாகறதுன்னு சொல்லறதா?சிமென்ட் பூசற விசயம் எனக்குத் தெரியாதாக்கும்.

aren
01-10-2007, 12:17 PM
இதத்தான் பூசினாப்பில குண்டாகறதுன்னு சொல்லறதா?சிமென்ட் பூசற விசயம் எனக்குத் தெரியாதாக்கும்.

அப்படிப்போடுங்க அரிவாளை!!!

பூமகள் முகத்தில் ஈயாடவில்லையே!!! ஐயோ பாவம்!!!

பூமகள்
01-10-2007, 12:25 PM
இதத்தான் பூசினாப்பில குண்டாகறதுன்னு சொல்லறதா?
ரொம்ப சரியா புரிஞ்சிக்கிட்டீங்க அக்கா.. என் அக்காவாச்சே...!!:cool:
ரொம்ப நன்றியுங்கோ....!!:icon_b:

பூமகள்
01-10-2007, 12:27 PM
பூமகள் முகத்தில் ஈயாடவில்லையே!!!
நான் எப்பவும் ரொம்ப கிளீன்.. :cool: :icon_ush: அப்புறம் எப்படி அரென் அண்ணா ஈ என்னிடம் வரும்..?:icon_b: :icon_rollout: ஹீ ஹீ...!!:lachen001:

இதயம்
01-10-2007, 12:30 PM
முதல்ல ரொம்ப யூஸ்ஃபுல்லான மேட்டர் எழுதிட்டு வர்ற சகோதரிக்கு என் நன்றிகள்..!

அடுத்து, எனக்கு ஒரு உ(ண்)ம்ம தெரிஞ்சாவணும்..! (முதல்மரியாதை வீராச்சாமி ஸ்டைலில் படிக்கவும்..!). என் கேள்வி என்னன்னா இது உண்மையிலேயே உடம்பை இளைக்க வைக்கிறதுக்கான திரியா..? இல்ல ஒரே ஒரு கல்யாணம் மட்டும்(!) ஆன என்னை மாதிரி கன்னி பசங்க ("க"னாவை மறந்து "ப"னா போட்ராதீங்கோ..!) கலர் பார்க்க கொடுக்கிற கலர் ஃபுல் ஐடியாவா..? காரணம், சொன்ன ஐடியாவெல்லாம் ரொம்ப யூத் ஃபுல்லா இருக்கே..?!! அப்படின்னா தொந்தியும் தொப்பையுமா அலையும் வாத்தியார் மாதிரியான பெருசுகளுக்கு உருப்படியா ஒண்ணும் கிடைக்காதோ..! ஐயோ பாவம்..!! எனக்கென்னவோ "ஜாலியா இளைக்கலாம் வாங்க..!"-னு வச்ச தலைப்புக்கு பதிலா "ஜாலியா வளைக்கலாம் வாங்க..!"-னு போட்டா பொருத்தமா இருக்கும். காரணம், ஃபிகர் மடிக்க அவ்வளவு ஐடியாவ அள்ளி, அள்ளி கொடுக்கறீங்க..! இந்த திரிக்குள்ளே நுழைஞ்சா உள்ள வரமுடியாம வழுக்கி, வழுக்கி விடுது. எல்லாம் நீங்க கொடுத்த ஐடியாவ படிச்சிட்டு பசங்க விட்ட "ஜொள்" தான் காரணம்..! எல்லாரும் என்ன மாதிரி நல்ல பசங்களாவா இருப்பாங்க..! இப்டி அப்பாவியா இருக்கீங்களே..?!!

இவ்வளவும் செஞ்சி சர்வமத கடவுளோட அருள் இருந்தா தான் இளைக்க சான்ஸ் இருக்கா..? இதை படிக்க, படிக்க எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு..! காரணம் எனக்கும் ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கு. இருங்க.. கையில டார்டாய்ஸ் கொசுவர்த்தி சுருளை எடுத்து சுத்துறேன்.. அப்ப தான் ஃப்ளாஷ்பேக் வரும்..! சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னாடின்னு ஆரம்பிச்சா அதுல சரித்திர வாசனை அடிக்கிற கதை வரும். ஆனா, இது சுமார் 13 வருஷங்களுக்கு முன்பு நடந்த தரித்திர வாசனை அடிக்கிற உண்மை.! தலையிலேர்ந்து கால் வரை உருவி விட்டது போல ஒரே மாதிரி ஒல்லிப்பிச்சான் உடம்பை வச்சிக்கிட்டு, நான் ஓவரா கண்டதையும் தின்னு உடம்ப வளக்க நினைச்ச வரலாற்று நிகழ்வு நிறைய இருக்கு. அதத்தேன் நான் மயக்கும் மந்திரபானம்-கிற பேர்ல சுவையான அனுபவங்கள் பகுதியில எழுதியிருக்கேன். நானெல்லாம் ஒரு நேரம் "பூமகள்" க்ரூப் தான். நிறைய கவிதையா எழுதி தள்ளுவேனா?-னு சின்னப்புள்ளத்தனமா கேள்வி கேக்காதீங்க..! ஒல்லியா இருப்பேன்னு சொல்ல வந்தேன்..!! அப்பல்லாம் எக்குதப்பா யார்கிட்டயாவது பேசுனா எக்கச்சக்க அடிக்கிடைக்குமே.. அது நம்மோட ஒடம்புக்கு ஆகாதே-ன்னு வாழ்க்கையில் பல நாள் மவுன விரதமாவே இருந்திருக்கேன். அதெல்லாம் ஒரு கற்காலம்..! சரி.. அது கிடக்கட்டும் கழுத..! நாம இட்லிக்கு வருவோம்.

ஒரு நேரத்துல வீட்ல சாப்பிடறதுக்கு அம்மா தட்ல இட்லிய வச்சா எடுத்தெறிஞ்சி, எடுத்து + எறிஞ்சி பேசின காலமெல்லாம் மலையேறிப்போச்சி. சவுதில கப்ஸாவும்(விடுற கப்ஸா இல்ல..இது சாப்பிடறது..!), கண்ட, கண்ட பேர்ல உள்ள சாப்பாட்டையும் சாப்பிட்டு, சாப்பிட்டு வெறுத்துப்போயி எனக்கு இப்பல்லாம் "இட்லியே இதயம் கவர்ந்த கள்வன்" கதையாயிடுச்சி..! இதுக்காகவே இட்லிய பார்க்கணும்னா இருநூறு கிலோமீட்டர் வண்டி எடுத்துக்கிட்டு ஜித்தா போய்க்கிட்டிருக்கேன்..! சிலருக்கு வேணும்னா "குஷ்பூ" கனவுக்கன்னியா இருக்கலாம். எனக்கு "குஷ்பூ" மாதிரியான குண்டு இட்லி தான் கனவுக்கன்னி..!! அத தொடாத பாவம் தான் என்னவோ இந்த 2 வருஷத்தில் (8 கிலோ ஏறி,) 200 கிராம் இளைச்சிருக்கேன். நீங்களும் சவுதியில தான் இருக்கிறதா சொன்னீங்க.. ஒரு சவுதிக்காரன் கஷ்டம் இன்னொரு சவுதிக்காரனுக்கு தான் தெரியும்னு சொல்வாங்க..!(யார் சொல்வாங்கன்னு கேக்காதீங்க.. நான் தான்..!!). அதனால என் வேதனைய புரிஞ்சிக்கிட்டு முதல்ல இட்லி பகவானை தினம் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க என்ன வேண்டுதல் செய்யணும், எப்ப விரதம் இருக்கணும்னு ஒரு ஓரத்தில எழுதிக்கிட்டு வாங்க. அப்படியே எங்களை மாதிரி ஆளுங்களுக்காக இட்லிக்கு ஊறப்போடுறதுலேர்ந்து ஆரம்பிச்சி "இட்லி செய்வது எப்படி?"ன்னு ஒரு தொடர் எழுதுனா புண்ணியமா போகும்..! "யோசிக்காம இட்லிக்கு ஊறப்போடுவோர்" சங்கத்துல நீங்க தலைவி மாதிரி, நான் "இட்லிக்காக ஏங்குவோர்" சங்கத்துல தலைவரா இருக்கேன். எழுதுங்க.. எழுதுங்க.. ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள் இட்லிகளை அடிச்சி அதகளப்படுத்தி, சைஸில் அகலமா ஆகும்போது அப்ப உங்க பதிவ தான் தேடுவேன் உடம்பு இளைக்க வைக்க...! அது வரைக்கும் இந்த பதிவு எனக்கு எட்டா இட்லி தான்..!!!

யவனிகா
01-10-2007, 12:46 PM
அடுத்து, எனக்கு ஒரு உ(ண்)ம்ம தெரிஞ்சாவணும்..! (முதல்மரியாதை வீராச்சாமி ஸ்டைலில் படிக்கவும்..!). என் கேள்வி என்னன்னா இது உண்மையிலேயே உடம்பை இளைக்க வைக்கிறதுக்கான திரியா..? இல்ல ஒரே ஒரு கல்யாணம் மட்டும் ஆன என்னை மாதிரி கன்னி பசங்க ("க"னாவை மறந்து "ப"னா போட்ராதீங்கோ..!) கலர் பார்க்க கொடுக்கிற
!
அடப் பாவமே,நல்லதுக்கு காலமே இல்லீங்க...அது எப்படீங்க அது எப்படிங்க அன்றில் மாதிரி தேவையானதை மட்டும் எடுத்துக்கறீங்க?நான் அப்படியே ஷாக்...ஆயிட்டேன்(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்..)

ஜெயாஸ்தா
04-10-2007, 05:06 AM
ஆஹா... இதயம் நீங்க இப்படி ஜாலியும் எழுவீங்களா? இதற்கு முன் உங்கள் எழுததைப் படித்தபோது எனக்கு தலைமைஆசிரியராக இருந்த ஒருவரை நினைவு படுத்தினீர்கள். எப்போம் 'உம்'மென்று இருப்பார் அவர். தேவையில்லாமல் பேச மாட்டார். ஒரு முறை அவர் பேசினால் அதை கடைசி முறை மறக்க முடியாத அளவுக்கு பேசுவார். ஆனால் இந்த பதிவு மிகவும் ஜாலியாக வித்யாசமாக இருக்கே...!

வட்டா
04-10-2007, 11:49 PM
தோழியே :) இதைப் படிக்கும் போதே
கொஞ்சம் எடை குறைஞ்ச மாதிரி இருக்கே :cool:

எடையை குறைக்க இதுதான் ரொம்ப சுலபமான வழியா தெரியுது :lachen001:

ஷீ-நிசி
05-10-2007, 01:40 AM
யவனிகா....

சான்ஸே இல்லை.. படிக்கும்போது செமத்தியான ஜாலியா இருந்துச்சு,, இடையிடைல... போடற நக்கல்ஸ் செம குசும்பு. இத படிச்சி இளைக்கறோமோ இல்லையோ, நல்லா வாய்விட்டு சிரிக்கலாம், என்னடா இப்படி சிரிப்பா சிரிக்கறாங்களேன்னு தப்பா நினைச்சிடாதீங்க. உங்க நாலு ஆப்ஷனும், அதிரடி ஆப்பரேஷன் தான்.

அது யாருப்பா.. இதயம், அததேன் நானும் கேட்கறேன், அது எப்படி உங்களுக்கு தேவையானத மட்டும் நைஸா உருவிக்கறீங்க... ஃபிகர கரெக்ட் பன்றதுலயே இருங்கய்யா.... இதயம் ஆனா செம ஷோக்கா எழுதுறப்பா நீயும்....

யவனிகா உங்க லொல்லு தொடருங்க... வாழ்த்துக்கள்!

நேசம்
20-10-2007, 05:41 AM
நல்ல கட்டுரை நகைச்சுவையுடன் தந்துள்ளார் சகோதரி. ஆனால் இட்லிக்கு மட்டன் அல்லது சிக்கன் எது பெட்டர்னு சொல்லவில்லை.(சவூதியில் இன்னும் பெண்கள் தனியாக போக கூடாது சட்டம் இருக்கா/)

mukilan
31-07-2008, 06:13 PM
எனக்கும் என்னை(நான்) அறிந்த சில மன்ற நண்பர்களுக்கும் ரொம்ப அவசியமான திரி ஆச்சே!

யவனிகா டையட்டீசியன் என்று கண்டு கொண்டதும் அவர் ஆரம்பித்த திரிகள் என்ன என்னவென்று தேடி ஒரு வழியாத் கண்டு பிடிச்சிட்டோம்ல.

சிரிக்க சிரிக்க எழுதுறீங்க. நீங்க நல்லாயிருக்கணும். :icon_b:

உங்க புண்ணியத்தில இந்த உடம்பை குறைச்சிட்டா நான் குறைச்ச எடைக்கு சமமா மத்தவங்க எடை கூட என்னாலான உதவி செய்வேன்னு மன்றத்தின் மீது ஆணையாகச் சத்தியம் செய்கிறேன்.:D

இளந்தமிழ்ச்செல்வன்
06-08-2008, 07:43 PM
அன்பு தோழி யவனிகா,

தங்களின் இரண்டாம் பாகம் படித்த பிறகு இந்த பாகத்தை படித்தேன். உங்கள் நடை இளசு அவர்கள் கூறியதைபோல் சரளமாக கோவை குசும்புடனும் இருந்தது.

உங்களால் இதயத்தின் இன்னொரு பக்கம் இங்கே அறிமுகம் .

வாழ்த்துக்கள். தொடருங்கள்

இளந்தமிழ்ச்செல்வன்
06-08-2008, 07:48 PM
ஆரம்பமே அசத்தலாக உள்ளது. நான் ஒரு 10 கிராம் இளைச்ச மாதிரி இருக்கிறது.

ஆனால் நீங்கள் செய்யச் சொல்லும் விஷயங்கள் கொஞ்சம் கஷ்டம்தான் ஆனால் பார்க்கலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

நண்பரே உங்களுக்கு இது கஸ்டமாக இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனென்றால் நீங்கள் கூறிய EMS தான் மிகவும் எளிமையான அதே சமயம் ஜாலியான வழியாகவும் எனக்கு படுகிறது. அதற்க்கு உத்தரவாதமும் உண்டு.

Tamilmagal
27-05-2009, 02:41 PM
நல்ல அருமையான திரி, இளைக்கவிரும்புபவர்களுக்கு மிகவும் பயன்படும் என நினைகிறேன்.

கோவை.... சூப்பர்.

வாழ்த்துக்கள்.

dhrokiviji123
13-08-2009, 10:13 AM
என்னை பொறுத்தவரை நடப்பது தான் சரியான ஒரு பயிற்சி என்று எடுத்து கொள்ளலாம்

நல்ல ஆரோக்கியமான உடம்பு வேணும்னா தினசரி குறைந்த பட்சம் ஏழு கிலோமீட்டர் நடந்தா நிச்சயமா ஆரோக்கியமா இருக்கலாம் உதாரணம் அரசியல்வாதிகள்

துரோ' கி