PDA

View Full Version : லியோவின் சந்தேகங்கள்

leomohan
27-09-2007, 01:56 PM
சமீபத்தில் முகவிற்கு பல சந்தேகங்கள். நம் சிறப்பு நிருபர் லியோவும் தன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள அவரை அணுகுகிறார்

லியோ - ஓடினான் ஓடினான் வாழ்கையின் எல்லை வரைக்கும் ஓடினான். அப்படின்னா வாழ்கை எத்தனை ஏக்கர்? எல்லையில் முள் வேலியா அல்லது காம்பௌண்ட் சுவரா?

முக - ????

லியோ - அண்ணாவின் இதயக்கனி அப்படின்னு சொல்றாங்களே? அண்ணாவோடு இதயத்தில் இருப்பது மாமரமா பலாமரமா வாழை மரமா? எப்படி விதை விதைச்சாங்க?

முக -?? ?? ???

லியோ - மதுரை எரிச்ச கண்ணகின்னு சொல்றாங்களே? எப்படி எரிச்சாங்க? பெட்ரோல் போட்டா? பெட்ரோல் அப்ப கண்டுபிடிச்சிட்டாங்களா? ஃபயர் சர்வீஸ் என்ன பண்ணாங்க? பார்த்துட்டு சும்மா இருந்தாங்களா?

முக - ???

லியோ - கடமை கண்ணியம் கட்டுப்பாடு அதுவே எங்கள் கூப்பாடுன்னு சொல்றீங்களே? கடமை கண்ணுல வைக்கறதா? மை எந்த கலர்? கண்ணி-க்கு கல்யாணம் ஆயிடுத்தா? கட்டுபாடு - என்ன கட்டுப்பாடு? குடும்பக் கட்டுபாடா?

முக - ???

லியோ - 13 ஆண்டுகாலம் வனவாசம் இருந்தது போதும். எனக்கு ஓட்டுப்போடுங்கன்னு இரண்டு தேர்தலுக்கு முன்னாடி எங்க கிட்டே கேட்டீங்களே? அப்ப வனவாசம் இருந்த நீங்கள் ராமரா? எம்ஜிஆர் ராவணணா? இல்லை உங்களை வனவாசம் அனுப்பினதாலே எம்ஜிஆர் தசரதனா? அப்ப எம்ஜிஆர் உங்க அப்பா முறையாச்சே? அனுமார் யாரு?

முக - ஐயோ ஆளைவிடுப்பா. நான் இனிமே எந்த அறிக்கையும் விடலை.

லியோ - அறிக்கை. அரிக்கும் கை தான் அறிக்கையா?

முக - பாலு, லியோவை குண்டுகட்டா தூக்கி சேதுவுல போடு....

லியோ - ஏன் சேதுவுலே? காசிலே போடுங்க, கஜினிலே போடுங்க, ஏன் பிதாமகன்லே போடுங்க.

முக - ஐயோ கொல்றாங்களே கொல்றாங்களே

தொடரும்.....

அன்புரசிகன்
27-09-2007, 01:59 PM
கொன்னுட்டீங்க........... :D

மலர்
27-09-2007, 02:03 PM
லியோ அண்ணாவின் பேட்டியை படித்து எத்தனை நாள் ஆயிட்டு....
எதற்காக இந்த இடைவெளி.....

தொடரும்.....

அப்படின்னா ஓக்கே...
உங்க சந்தேகம் எல்லாமெ சூப்பருங்கோ.....

மலர்
27-09-2007, 02:03 PM
கொன்னுட்டீங்க........... :D

யாரை...அன்பு

அக்னி
27-09-2007, 02:03 PM
பின்னுட்டீங்க...
இப்பிடியே உண்மைல கேட்டு வச்சா என்னாகும்னு :icon_hmm:

ஜெயாஸ்தா
27-09-2007, 02:07 PM
நான் தமிழ்மன்றம் வந்த புதிதில் இது மாதிரி 'மன்றத்தில் எப்படியெல்லாம் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்காமல் பங்களிக்கலாம்' என்று ஒரு கட்டுரை படித்த ஞாபகம். அதுவும் லியோவினுடையதுதான். அதன்பின் வெகுநாளைக்குபிறகு ஒரு ரசிக்கத்தக்கபதிப்பு லியோவிடமிருந்து.

அன்புரசிகன்
27-09-2007, 02:07 PM
யாரை...அன்பு

உங்கள ... முடியுமா......

அது சரி உங்களை ஏன் அக்னி கூவ நதியென வர்ணிக்கிறார். (அரட்டைப்பகுதியைப்பார்க்கவும்.)

மலர்
27-09-2007, 02:10 PM
உங்கள ... முடியுமா......

அது சரி உங்களை ஏன் அக்னி கூவ நதியென வர்ணிக்கிறார். (அரட்டைப்பகுதியைப்பார்க்கவும்.)

வந்துட்டு இருக்கேன் கையில் கட்டையோடு.....

jpl
27-09-2007, 02:33 PM
இப்படியே எல்லாரையும் பேட்டி எடுத்துப் போடுங்க மோகன்.
அவர்களுக்கெல்லாம் மிகவும் உதவியாக இருக்கும்.

leomohan
27-09-2007, 02:37 PM
கொன்னுட்டீங்க........... :D

நன்றி அன்பு

leomohan
27-09-2007, 02:37 PM
லியோ அண்ணாவின் பேட்டியை படித்து எத்தனை நாள் ஆயிட்டு....
எதற்காக இந்த இடைவெளி.....

அப்படின்னா ஓக்கே...
உங்க சந்தேகம் எல்லாமெ சூப்பருங்கோ.....

நன்றி மலர். வேலை பளூ தான் காரணம்.

leomohan
27-09-2007, 02:38 PM
பின்னுட்டீங்க...
இப்பிடியே உண்மைல கேட்டு வச்சா என்னாகும்னு :icon_hmm:

நன்றி அக்னி.

உண்மையில் கேட்டா வெளிநாட்டவர் பிரச்சனைன்னு சொல்லி ஜகாவாங்கிடும்ல நம்ம தல

leomohan
27-09-2007, 02:38 PM
நான் தமிழ்மன்றம் வந்த புதிதில் இது மாதிரி 'மன்றத்தில் எப்படியெல்லாம் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்காமல் பங்களிக்கலாம்' என்று ஒரு கட்டுரை படித்த ஞாபகம். அதுவும் லியோவினுடையதுதான். அதன்பின் வெகுநாளைக்குபிறகு ஒரு ரசிக்கத்தக்கபதிப்பு லியோவிடமிருந்து.

நன்றி ஜேஎம்.

leomohan
27-09-2007, 02:39 PM
இப்படியே எல்லாரையும் பேட்டி எடுத்துப் போடுங்க மோகன்.
அவர்களுக்கெல்லாம் மிகவும் உதவியாக இருக்கும்.

ஹா ஹா. நன்றி லதா. ஏதோ நம்மால் ஆன சேவை.

அவர் லெவலுக்கு நம்மாலையும் உளற முடியுதேன்னு ஒரு அல்ப சந்தோஷம் தான். இருந்தாலும் அவர் உளறனா பேப்பர்ல டிவிலே வருது.

அறிஞர்
27-09-2007, 02:44 PM
லியோவின் பேட்டி... தொடருகிறது.. மகிழ்ச்சி...

புஷ், பின்லேடனிடம் மீண்டும் பேட்டி எடுத்து கொடுங்கள்....

அல்லிராணி
27-09-2007, 02:46 PM
லியோ - ஓடினான் ஓடினான் வாழ்கையின் எல்லை வரைக்கும் ஓடினான். அப்படின்னா வாழ்கை எத்தனை ஏக்கர்? எல்லையில் முள் வேலியா அல்லது காம்பௌண்ட் சுவரா?

முக - நான் எழுதியது வாழக் கையின் எல்லைக்கே (பிச்சை எடுக்க) ஓடினான் என்று. எழுதிய போது தம்பி சிவாஜி வர வரவேற்க எழுந்தேன். அப்போது பேனாவிலிருந்து சிந்திய மை ழ வை ழ் என பொட்டு வைத்து அழகு பார்க்க.. அது தம்பிக்கு மிகவும் பிடித்து விட்டது. அது சிந்தனைத் துளியல்ல.. சிந்தியத் துளி.

லியோ - அண்ணாவின் இதயக்கனி அப்படின்னு சொல்றாங்களே? அண்ணாவோடு இதயத்தில் இருப்பது மாமரமா பலாமரமா வாழை மரமா? எப்படி விதை விதைச்சாங்க?

முக - அந்தக் கனி ரோஜாப்பூ நிறம் கொண்டது.. அது ஊன்றி வளர்த்த மரத்தின் கனியல்ல. உள்ளமெனும் பானையிலிட்டுப் பழுக்க வைத்தக் கனி. எத்தனையோ ஏழைகளின் பசியாற்றி வாழ வைத்த அது வாழைக்கனி.
லியோ - மதுரை எரிச்ச கண்ணகின்னு சொல்றாங்களே? எப்படி எரிச்சாங்க? பெட்ரோல் போட்டா? பெட்ரோல் அப்ப கண்டுபிடிச்சிட்டாங்களா? ஃபயர் சர்வீஸ் என்ன பண்ணாங்க? பார்த்துட்டு சும்மா இருந்தாங்களா?

முக - மதுரை எரிந்தது கண்ணகி அல்ல. அவளின் கோபமுமல்ல. அவள் பெட்ரோலுமல்ல.. பெற்றோளுமல்ல.. இழந்தவள்.. சர்வாதிகாரமாய் தான் தொன்றித்தனமாய் ஆட்சியாளர்கள் அமையும் பொழுது மக்களின் வயிறும் மனமும் எரியும்பொழுது நகரம் எரிகிறது.. அதைத்தான் அடிகளார் சொல்கிறார்.

லியோ - கடமை கண்ணியம் கட்டுப்பாடு அதுவே எங்கள் கூப்பாடுன்னு சொல்றீங்களே? கடமை கண்ணுல வைக்கறதா? மை எந்த கலர்? கண்ணி-க்கு கல்யாணம் ஆயிடுத்தா? கட்டுபாடு - என்ன கட்டுப்பாடு? குடும்பக் கட்டுபாடா?

முக - கண்ணில் வைக்க கடையில் விற்கும் மை அல்ல கடமை. கடமையை கண்ணாய் கொள்ள வேண்டும். கடமை என்பது உனது பொறுப்பு. உன் பிறப்பின் நோக்கம். கண்ணியம் என்பது அன்னியமாய்ப் போனதால் கடமை கடை மை ஆகியிருக்கிறது உம்மிடம். கண்ணியம் என்பது பண்பாட்டின் பரிமாணம். பரிணாமம். மனிதனை மனிதனாய் மதித்து மனம் உள்ளவன் மனிதன் என்ற கோட்பாட்டை உணர்ந்து அனைவரைன் மனம் நோகாமல் நேர்மையுடன் நடத்தலாம். கட்டுப்பாடு என்பது மன அடக்கம்.. புலனடக்கம்.. கடமையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் புரிதல் வேண்டும். கடனுக்கு கன்னியைக் கட்டிக்கொண்டுக் குடும்பக் கட்டுப்பாடில்லாமல் அலைபவர்களுக்கு இவை புரிய ஞாயமில்லைதான்,

லியோ - 13 ஆண்டுகாலம் வனவாசம் இருந்தது போதும். எனக்கு ஓட்டுப்போடுங்கன்னு இரண்டு தேர்தலுக்கு முன்னாடி எங்க கிட்டே கேட்டீங்களே? அப்ப வனவாசம் இருந்த நீங்கள் ராமரா? எம்ஜிஆர் ராவணணா? இல்லை உங்களை வனவாசம் அனுப்பினதாலே எம்ஜிஆர் தசரதனா? அப்ப எம்ஜிஆர் உங்க அப்பா முறையாச்சே? அனுமார் யாரு?

முக - வால்மீகி இராமயணத்தில் ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்கத் தயாரா? இராமன் வனவாசம் போனது 14 ஆண்டுகள். தந்தையின் வாக்கைக் காப்பாற்ற. நான் தருமன்.. சூதால் 12 ஆண்டுகள் (1989 - 1977 = 12) வனவாசமிருந்தேன். மக்களுக்குத் தெரியும். எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் பங்காளி உறவென்று. நாங்கள் ஒரே வீட்டில் விளையாடி வளர்ந்த பங்காளிகள். அண்ணாவின் இதயம்தான் அந்த வீடு.

லியோ - அறிக்கை. அரிக்கும் கை தான் அறிக்கையா?

முக - ஆமாம்.. அரித்த கைகள் சொறிந்து கொண்டு சுகம் காண்பதைத் தான் தினம் நீங்கள் காண்கிறீர்களே! அறிக்கை என்பது காகிதங்களில் அவர்கள் கட்டும் கதை. மக்கள் அதற்குக் கொடுப்பார்கள் உதை. உடன்பிறப்பே! அறிக்கைகள் பலிக்காமல் போனதால் இன்று வெறிக்கைகள் ஆகி நிற்கின்றன சில நரிக்கைகள். சேதுவில் இருக்கும் பவளத்திட்டுக்களை 100 அடி வெட்டிக் கப்பல் போக்குவரத்து நடந்தால் தமிழ்நாடு வாழ்ந்துவிடும் எனப் பொறுக்காத ஆரியமாயையில் மயங்கி விடாதீர்கள்..

லியோ - ஏன் சேதுவுலே? காசிலே போடுங்க, கஜினிலே போடுங்க, ஏன் பிதாமகன்லே போடுங்க
முக - ஐயோ கொல்றாங்களே கொல்றாங்களேதொடரும்.....[/QUOTE]

அக்னி
27-09-2007, 02:49 PM
சூப்பர்...
அல்லிராணி அவர்களின் அசத்தல் பதில்களும்...
நீண்ட நாட்களின் பின் மன்றத்தில் காண்பது சந்தோஷமாய் உள்ளது....

leomohan
27-09-2007, 03:10 PM
லியோவின் பேட்டி... தொடருகிறது.. மகிழ்ச்சி...

புஷ், பின்லேடனிடம் மீண்டும் பேட்டி எடுத்து கொடுங்கள்....

நன்றி அறிஞரே.

leomohan
27-09-2007, 03:10 PM
சூப்பர்...
அல்லிராணி அவர்களின் அசத்தல் பதில்களும்...
நீண்ட நாட்களின் பின் மன்றத்தில் காண்பது சந்தோஷமாய் உள்ளது....

ஹா ஹா. ஆம் சுவைபட எழுதியிருக்கிறார்.

lolluvathiyar
27-09-2007, 03:52 PM
லியோவின் பேட்டி படிச்சு ரொம்ப நாளாச்சு. இன்னிக்கு ஹைலைட்டா முக வின் பேட்டி தந்திருகிறீர்கள். நல்ல கற்பனை
அல்லியில் பதிலும் உன்மையில் முக எப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லி விட்டார்.
சபாஸ் தொடருங்கள்

leomohan
28-09-2007, 06:29 AM
முகவிடம் இனி நல்ல பேட்டி எடுப்பேன் என்று உறுதி கூறி சமாளித்து மீண்டும் பேச ஒரு வாய்ப்பு ஏற்படுத்தினேன்.

லியோ - 1972வில் ராமநாதபுரம் கெசட்டியர் (Gazetteer ) நூலின் முன்னுரையில் It reflects our civilization and is a mirror of society" என்று ராமர் பாலத்தை பற்றி நீங்கள் எழுதினீர்களாமே?

முக - அது நான் ஆங்கிலம் பயிலும் போது எழுதியது. தவறு இருந்திருக்கலாம்.

லியோ - ஏக பத்தினி விரதன் என்றால் என்ன?

முக - ஏக என்பது வடமொழிச் சொல்.

லியோ - சரி. ஒரு பத்தினி விரதன் என்றால் என்ன?

முக - பத்தினி என்பது பிறமொழிச் சொல்.

லியோ - சரி ஒரு மனைவி விரதன் என்றால் என்ன?

முக - விரதன் என்பது சமஸ்கிருதச் சொல்?

லியோ - ஐயோ. சரி. ஒரு மனைவி வேள்வி என்றால் என்ன?

முக - இது அநாவசியமான கேள்வி.

லியோ - உங்கள் மகளின் வீட்டை சிலர் தாக்கினார்களாமே?

முக - அவர்கள் மத வெறியர்கள்.

லியோ - அப்ப ஒரு பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கிய உங்கள் ஆதரவாளர்கள்?

முக - அவர்கள் மாத வெறியர்கள்.

லியோ - மாத வெறியர்கள் என்றால்?

முக - அதாவது மாத மாதம் எங்களுக்கு ஒரு வெறி வரும். இரண்டு மாதத்திற்கு முன்பு பத்திரிக்கை, சென்ற மாதம் சன், இந்த மாதம் ராமர்.

லியோ - சன் டிவியால் உங்களுக்கு பிரச்சனையா?

முக - என் சன், அதாவது என் மகனுடைய டிவி கலைஞர் டிவி. அதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

லியோ - அரசியலில் நிரந்த எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்று சொல்வீர்களே? ராமர் நிரந்த எதிரியா அல்லது தற்காலிக எதிரியா.

முக - அட லியோ, நான் சானியா அம்மாவை குஷிப்படுத்த ஏதோ சொல்லிவிட்டேன்.

லியோ - சானியாவா? அவங்க டென்னிஸ் விளையாடறவங்க.

முக - வாய் கொழறிடுத்து. வயசாயிடுத்து இல்லையா? சோனியா அம்மாவா. இப்ப ராகுலை சந்தோஷப்படுத்த ஏதாவது சொல்லனும்.

லியோ - ராகுல் திராவிடையா?

முக - ஹா ஹா. பாத்தியா உனக்கே வாய் கொழறது. ராகுல் திராவிடை இல்லேப்பா, ராகுல் காந்தியை. அவர் தானே இப்ப தலைவரு.

லியோ - நீங்க எப்போதுமே குறிப்பிட்ட மதத்தை மட்டும் தாக்கறீங்களே?
மற்ற மதத்தை பேச கூட உங்களுக்கு பயமா?

முக - தெரியாது.

லியோ - தெரியாதா?

முக - அட நீ வேற மதங்களை பத்தி எதுவும் தெரியாது. நம்ம மதத்தை பத்தி பேசப் போய் இத்தனை பிரச்சனை. அதனால் ரிடையர் ஆன பிறகு நம்ம மதத்தை பத்தியாவது முழுசா தெரிஞ்சிக்கனும்.

லியோ - உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. அண்ணா பல்கலைகழகம் உங்களுக்கு இன்ஜினியர் பட்டம் கொடுக்கப் போறாங்களாம்.

முக - எதுக்குப்பா இன்ஜினியர் பட்டம். ஏற்கனவே டாக்டர் பட்டம் இருக்கு. கிராமத்துலேர்ந்து வர தொண்டர்கள் எல்லாம் ஐயா வயுத்து வலிக்கு என்ன பண்ணலாம்னு கேக்கறாங்க.

லியோ - இல்லை சார். எதிர்கால சந்ததியினர் சென்னையில் மேம்பாலம் கட்டியது கருணாநிதி. அவர் என்ன இன்ஜினியரா அப்படின்னு கேட்க கூடாது இல்லையா. அதுக்கு தான்.

முக - ஓ. அப்படியா சந்தோஷம்.

லியோ - சந்தோஷம் என்பது பிற மொழிச் சொல்.

முக - அட விடுப்பா. மக்களே நான் உட்ற பீலாவை ஏத்துக்கறாங்க. நீ என்னமோ. சரி சரி. மகிழ்ச்சி. இப்ப நீ இடத்து காலி பண்ணு.

லியோ - இந்த எடைக்கு எடை.......

முக - அட போப்பா. அடுத்த பதிவுல எழுது அதை பத்தி.

ஜெயாஸ்தா
28-09-2007, 06:56 AM
என்ன கிட்டு சார்...ஆட்டோஅனுப்பனுமா? இல்லை உங்கள் அலுவலம் முன் மறியல் செய்யணுமா? (அன்பாகத்தான்), என் நண்பர் உதயசூரியன் இன்னும் இந்த திரிக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். அவர் வந்தால்தான் இந்த திரி களைகட்டும்.

lolluvathiyar
28-09-2007, 07:34 AM
முக வை பற்றி நன்றாக நக்கல் பன்னுகிறீர்களே, இருங்க உதய சூரியன் வரட்டு. நிச்சயம் முக இந்த பேட்டியை படித்தால் மனம் திறந்து பாராட்டுவார்.

சிவா.ஜி
28-09-2007, 07:42 AM
மோகன் கலக்கிட்டீங்க.ரொம்பத்தான் தைரியம் உங்களுக்கு(இன்ஸ்யூரன்ஸ் வெச்சிருக்கீங்களா)ஓவ்வொரு கேள்வியும் 'நச்' மிக ரசித்தேன் மோகன்.பாராட்டுக்கள்.

மலர்
28-09-2007, 08:02 AM
மோகன் அண்ணா...
சிவா அண்ணா சொல்வதுதான் எனக்கும் சரியா படுது.. எதுக்கும் இன்ஸ்யூரன்ஸ் பண்ணியிருங்கோ.....
ஒரு பேட்டிக்கு ஒரு பேட்டி சும்மா டாப் கியர்ல போகுது.....
பாராட்டுக்கள் அண்ணா.....

க.கமலக்கண்ணன்
28-09-2007, 08:13 AM
அருமையாக இருக்கு மோகன்

அடுத்த பகுதியையும் தொடருங்கள்

அன்புடன் படிக்க பாததிருக்கிறோம்...

leomohan
28-09-2007, 02:21 PM
என்ன கிட்டு சார்...ஆட்டோஅனுப்பனுமா? இல்லை உங்கள் அலுவலம் முன் மறியல் செய்யணுமா? (அன்பாகத்தான்), என் நண்பர் உதயசூரியன் இன்னும் இந்த திரிக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். அவர் வந்தால்தான் இந்த திரி களைகட்டும்.

ஹா ஹா நன்றி ஜேஎம்.

அவரு தமிழ் நாட்டுக்கு 750 கோடி ரூபாய் நஷ்டம் கொண்டு வரப்போகும் பந்திற்கு தயாராகி கொண்டிருக்கிறார்.

leomohan
28-09-2007, 02:22 PM
முக வை பற்றி நன்றாக நக்கல் பன்னுகிறீர்களே, இருங்க உதய சூரியன் வரட்டு. நிச்சயம் முக இந்த பேட்டியை படித்தால் மனம் திறந்து பாராட்டுவார்.

அவரா. நல்லா சொன்னீங்க போங்க. போலி பெயரில் லியோவை திட்டி கவிதை எழுதிவிடுவார்.

leomohan
28-09-2007, 02:23 PM
மோகன் கலக்கிட்டீங்க.ரொம்பத்தான் தைரியம் உங்களுக்கு(இன்ஸ்யூரன்ஸ் வெச்சிருக்கீங்களா)ஓவ்வொரு கேள்வியும் 'நச்' மிக ரசித்தேன் மோகன்.பாராட்டுக்கள்.

தலைக்கு மட்டும் காப்பீடு வைத்திருக்கிறேன்.

leomohan
28-09-2007, 02:23 PM
மோகன் அண்ணா...
சிவா அண்ணா சொல்வதுதான் எனக்கும் சரியா படுது.. எதுக்கும் இன்ஸ்யூரன்ஸ் பண்ணியிருங்கோ.....
ஒரு பேட்டிக்கு ஒரு பேட்டி சும்மா டாப் கியர்ல போகுது.....
பாராட்டுக்கள் அண்ணா.....

நன்றி மலர்.

leomohan
28-09-2007, 02:24 PM
அருமையாக இருக்கு மோகன்

அடுத்த பகுதியையும் தொடருங்கள்

அன்புடன் படிக்க பாததிருக்கிறோம்...

நன்றி கமல். விரைவில்.

மனோஜ்
28-09-2007, 02:37 PM
போட்டா போட்டி பேட்டி சூப்பர் மோகன் சார்