PDA

View Full Version : பழுதான குறுவட்டை நகலெடுக்க ...பாரதி
27-09-2007, 10:32 AM
பழுதான குறுவட்டை நகலெடுக்க:

அன்பு நண்பர்களே,
நாம் கணினியில் குறுவட்டை இயக்கிப்பார்க்கும் போது அல்லது பிறிதொரு குறுவட்டை உருவாக்க (நகலெடுக்க) முயற்சிக்கும் போது சில வேளைகளில் "CRC error" என்றோ அல்லது "cannot read from source destination" என்றோ பிழைச்செய்திகள் வருவதைக் கண்டிருக்கிறோம் அல்லவா..? இது பொதுவாக எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆயினும் அந்தக் குறுவட்டிலிருந்து சில பகுதிகளை நாம் மீட்டெடுக்க முடியும். முதலில் குறுவட்டை எடுத்து அது பழுதடைந்திருக்கிறதா என்பதைக் காண வேண்டும். அது அழுக்காக இருப்பின் மிக மெல்லிய துணியைக் கொண்டு உட்புறத்திலிருந்து வெளிப்பக்கமாக துடைத்து எடுக்க வேண்டும். கறை ஏதேனும் இருப்பின் சுத்தமான நீரில் கழுவலாம். கழுவிய பின் அதை நிழலில் நன்கு உலர வைக்க வேண்டும். பின் அதை அதே கணினியிலோ அல்லது வேறு கணினியிலோ இயங்குகிறதா என்று சோதனை செய்து பார்க்கலாம். அப்போதும் பலனளிக்கவில்லை எனில் ஐஎஸோ பஸ்டர் - ISOBuster என்னும் மென்பொருளை உபயோகித்து, குறுவட்டில் பதியப்பட்டிருக்கும் மென்பொருளின் பழுதான பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளை மீட்டெடுக்க முடியும். இதைப்போன்ற மேலும் ஒரு மென்பொருள் அன்ஸ்டாப்பபிள் காப்பியர் என்பதாகும். இது இலவச மென்பொருளாகும். இது பழுது பட்டிருக்கும் பகுதிகளைத் தவிர்த்து, மற்றபகுதிகளை தொடர்ந்து 'காப்பி' செய்வதற்கு உதவும். ஆனால் இது *.exe வகையில் அமைந்த கோப்புகளை மீட்பதற்கு உகந்த மென்பொருளல்ல. ஆனால் அசைபடங்கள் அடங்கிய கோப்புகளை மீட்க உதவியாக இருக்கும்.

இந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்வதற்கு
1. ISOBuster - www.isobuster.com
2. Unstoppable Copier - www.roadkil.net/unstopcp.html
சுட்டிகளைத் தட்டுங்கள்.

நன்றி:பிசிவேர்ல்ட் இதழ்

அமரன்
27-09-2007, 10:34 AM
மிகவும் பயனுள்ள தகவல்ப் பகிர்வு. நன்றி அண்ணா.

aren
27-09-2007, 10:35 AM
நல்ல விஷயம் பாரதி. பல சமயங்களில் நமக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. நிச்சயம் உங்கள் பதிவு கைகொடுக்கும்.

ஜெயாஸ்தா
27-09-2007, 10:38 AM
இதில் ஏற்னெவே ISOBUSTER நான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மன்ற மக்களுக்கு பயன்படும் நல்ல உபயோகமான பதிப்பு.

அக்னி
27-09-2007, 10:40 AM
புதிய, பயனுள்ள தகவல் எனக்கு...
நன்றி பாரதி அண்ணா...

சிவா.ஜி
27-09-2007, 11:46 AM
மிகவும் பயனுள்ள தகவல் பாரதி..இதேபோல பழுதான..அதாவது பொருத்தியபின்னும் திறக்க முடியாத பென் டிரைவ்-ஐ சரி செய்ய முடியுமா?
format செய்த பின்னும் கணிணியில் பொருத்தினால் வந்து வந்து போகிறது...

க.கமலக்கண்ணன்
27-09-2007, 01:17 PM
நன்றி

நண்பா இது போல HDD யையும்

நகல் எடுக்க மென் பொருள் இருக்கா..

praveen
27-09-2007, 03:01 PM
நல்ல தகவல், அதிக அளவில் CD / DVD புழங்குவதால் மேலும் அது VCD\DVD பிளேயர்களில் அதிக அளவில் போட்டு பின் எடுத்து அந்த பிளேயர்கள் மேலேயே ஒன்றுடன் ஒன்று உராய விடுவதால் ஸ்கிராட்ச் ஆவதை மறு பேக்கப் எடுக்க உதவும்.

நான் cdrunner என்ற மென்பொருள் பயண்ப்படுத்துகிறேன்.


நன்றி

நண்பா இது போல HDD யையும்

நகல் எடுக்க மென் பொருள் இருக்கா..

இருக்கு, எனக்கு தனிப்பட்டு மின்னஞ்சல் செய்யுங்கள், இந்த பீல்டில் இருந்து கொண்ட இந்த கேள்வி கேட்கும், நீங்கள் ரொம்ப குறும்பு.

பாரதி
27-09-2007, 04:45 PM
கருத்துகளுக்கு நன்றி ஆரென், ஜே.எம், அக்னி,சிவா.ஜி, கமலக்கண்ணன், அஷோ.

அன்பு கமலக்கண்ணன்,
வன் தகட்டை நகலெடுக்க பல மென்பொருட்கள் உண்டு என்று முன்பே படித்திருக்கிறேன். ஆனால் எதையும் பயன்படுத்தியது இல்லை. நீங்கள் கேட்டதால் கூகிளில் தேடியதில் கீழுள்ள சுட்டிகள் கிடைத்தன. உங்களுக்கு உதவினால் மகிழ்ச்சி.

http://www.snapfiles.com/get/hdclonefree.html

http://www.bestfreewaredownload.com/freeware/t-free-easeus-disk-copy-freeware-ideccxqt.html

http://www.filebuzz.com/fileinfo/35427/CopyWipe.html

மன்மதன்
28-09-2007, 01:29 PM
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி பாரதி..

பாரதி
29-09-2007, 01:26 AM
நன்றி மன்மதன். வேறு மென்பொருட்களை உபயோகிக்கும் நண்பர்களும் அதை தெரிவிக்கலாமே..?

மாதவர்
29-09-2007, 03:45 AM
நல்ல தகவல்

க.கமலக்கண்ணன்
29-09-2007, 07:29 AM
மிக்க நன்றி பாரதி

மனோஜ்
30-09-2007, 02:08 PM
மிக்க நன்றி பாரதி அண்ணா

பூந்தோட்டம்
15-10-2007, 09:24 PM
மிகவும் பயனுள்ள விடயம்

பாரதி
22-03-2008, 08:00 AM
கருத்தளித்த அனைவருக்கும் நன்றி.

அனுராகவன்
30-04-2008, 06:04 AM
நல்ல பயனுள்ள தகவல்கள்!!
மிக்க நன்றி!!!
தொடர்ந்து தாங்க..

மாதவர்
01-05-2008, 10:33 AM
மிக நல்ல தகவல்!

விகடன்
01-05-2008, 11:28 AM
நல்லதொரு தகவல் அண்ணா.
பல குறுவெட்டுக்களை குப்பைத்தொட்டியுள் போட்டுள்ளேன். காரணம் மேற்படி தாங்கள் கூறிய அந்த பிழைச் செய்தி வந்தமைதான். இனிமேல் எறிந்த அந்த குறுவெட்டுக்களை தேடி எடுக்க முடியாது.!!!
ஆனால், இனிமேற்கொண்டு அப்பிழைச் செய்தி வரின் முடிந்தளவு போராடி எடுக்கும் வரையிலான தகவல்களை எடுக்கலாம்.

வெற்றி
21-11-2008, 12:26 PM
நன்றி..நன்றி ..மிக்க பயனுள்ள திரி மற்றும் நல்ல மென்பொருளும் கூட

anna
21-11-2008, 03:52 PM
நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி

sunson
03-12-2008, 05:36 AM
நீங்களே தேடி பல பயனுள்ள மென்பொருளை எமக்கு அறிமுகப்படுத்துவதால், எமக்கு இணையத்தில் வீணாக அலையும் நேரம் மிச்சம். அந்த புண்ணியம் உங்களைச் சேரும். நன்றி!

rajkulan
24-04-2012, 02:52 PM
நன்றி, மிகவும் பயனுள்ள தகவல்.

அனுராகவன்
03-08-2012, 03:06 PM
என்னுடைய குறுந்தடு பளு நீங்கியது...