PDA

View Full Version : முறையோ இது முறையோ...?



ஜெயாஸ்தா
27-09-2007, 07:35 AM
பகர்தல் முறையோ
வீணன வதந்திகளை...!
பகிர்தல் முறையோ
தீயான மதவெறியை...!
நுகர்தல் முறையோ
கேடான போதைப்பொருளை...!

பணித்தல் முறையோ
தொண்டர்களை வன்முறைக்கு...!
ஜனித்தல் முறையோ
பயமாய் வாழ்வதற்கு...!
மரணித்தல் முறையோ
அர்த்தமில்லா காதலுக்கு...!


மௌனித்தல் முறையோ
அநீதிகளைக் கண்டு...!
'கவனித்தல்' முறையோ
அதிகாரிகளை லஞ்சம் கொண்டு...!
பயணித்தல் முறையோ
இலக்கில்லா பயணத்தில் இன்று....!


முறையற்ற செயல்களுக்கு
முடிவு கட்ட....
திரும்பி வா... இளைஞனே...
திருந்தி வா... இளைஞனே...
எதிர்மறை வாதமெல்லாம் -இனி
கதிர்கண்ட பனியாய் மறையும்...!

(நம் மன்றத்து கவிச்சமரில் கலந்துகொள்வதில் அலாதி ஆர்வம் எனக்கு. சில நேரங்களில் ஒரு கவிதை படித்துமுடித்து அதன் முடிவைக்கொண்டு அடுத்த கவிதையை ஆரம்பித்து, யோசித்து எழுதி அதை நான் பதிப்பிப்பதற்குள் நம் மன்றக்கவிகள் மின்னல் வேகத்தில் பல கவிதையைப் படைத்துவிடுகிறார்கள். அவர்களோடு போட்டியிடமுடியாமல் எழுதிய என் கவிதைகள் என் கணிணியிலே தூங்கிவிடுகிறது. இந்த கவிதைகூட அப்படித்தான்.


என்றும் உனக்கே
நானிருப்பேன் என்று
நின்றே தவம் செய்தாய்..
நன்று சொல்லி சரி என்றேன்
இன்றோ...
சென்று விடு வாழ்வை விட்டு
என்று பகர்தல் முறையோ??


பூமகளின் கவிதைக்கு சமராட நினைத்து எழுதிய கவிதை. இதை அப்படியே விடாமல் பதிப்பித்தால் நலமோயென தோன்றியதால்தான் இந்த தனிதிரி.)

Narathar
27-09-2007, 07:39 AM
முறை கெட்ட மானிடர்க்கு
முறை சொல்லும் உங்கள் கவிதை
முறையாக இருக்கிறது
முறையான வாழ்த்துக்கள்!!!!

அக்னி
27-09-2007, 10:27 AM
முறையில்லா முறைகள்...
மறையவேண்டிய முறைகேடுகள்...

அருமை... ஜே.எம்...
அழகிய கவிதை... கருத்தான விதை... நிச்சயம் வளரும்...

பி.கு:
கவிச்சமரில், இப்படியான கவிதைகள் இடம்பெற்றால், பலர் நுகர மாட்டார்கள்.
எனவே, இப்படியான பெருங்கவிதைகளை தனித்திரியில் பதிவேற்றுங்கள்.
உங்கள் கணினியை களஞ்சியமாக்காதீர்கள். மன்றத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சிறிய கவிதைகளை, நீங்கள் வேகத்தில் பிந்திப் போனாலும், கவிச்சமரில் இட்டுவிடுங்கள்...
கவிச்சமர்... பலரின் பன்முக உணர்வின் சங்கமம்...
என்றாவது கவிதைத் தொகுப்பாக வரலாமல்லவா...

மிகுந்த பாராட்டுக்கள்...

aren
27-09-2007, 10:40 AM
அருமையான கவிதை ஜே.எம். இந்த மாதிரியான பெரிய கவிதைகளை தனித்திரியாக இங்கே பதிவு செய்வதே சிறந்தது. இதை மக்கள் படித்து சந்தோஷப்படுவார்கள். ஆகையால் இங்கேயே பதிவு செய்யுங்கள்.

கவிச்சமரில் மக்கள் வேகம் மிகவும் அதிகம். நான் எழுதிய பல பதிவு செய்யமுடியாமல் பின்னர் கொஞ்சம் திருத்தப்பட்டு இங்கே பதித்திருக்கிறேன். இதுமாதிரி பலருக்கும் வந்திருக்கலாம். கவலை வேண்டாம், மீண்டும் கவிச்சமரில் முயற்சி செய்யுங்கள், வெற்றி உங்களுக்கே.

அமரன்
27-09-2007, 10:46 AM
பகர்தலும் பகிர்தலும்
போதை தருமெனில்
பகிஸ்கரிப்பு அவசியம்
நுகர்வோர் எம்மிடம்.

ஜனனமும் மரணமும்
எல்லையிட்ட பயணத்தில்
தேவை அச்ச நாட்டம்
மனசாட்சிக்கு மட்டும்.

வாழ்க்கை முறையை
வாழ்வாதார சுருதியை
சொன்ன கவிதைக்கு
நன்றி நவில்கிறேன்.

சிவா.ஜி
27-09-2007, 10:49 AM
கவிதை பிரமாதம் ஜே.எம்.நல்ல கருத்துக்களை "முறை"யாக சொல்லியிருக்கிறீர்கள். இதை எல்லோரும் முறையாகச் செய்தால் இன்னொரு முறை சொல்லவேண்டியத் தேவையில்லாமிலிருக்கும்.

எதிர்மறை வாதமெல்லாம் -இனி
கதிர்கண்ட பனியாய் மறையும்...!

இந்த வரிகள் மிகப்பிடித்திருக்கிறது.வாழ்த்துக்கள்.

ஜெயாஸ்தா
27-09-2007, 11:52 AM
தங்களின் நிறைவான விமர்ச்சனத்திற்கு நன்றி நாரதரே....!

கவிச்சமருக்கு தகுந்த ஆலோசனை அளித்தது வாழ்த்திய தோழர்கள் அக்னி மற்றும் ஆரெனுக்கும் நன்றி.

கவிதைக்கே கவியால் வாழ்த்திய அண்ணன் அமரனுக்கும், முறை பற்றி முறையாய் சொன்ன சிவாஜிக்கும் நன்றி.

இலக்கியன்
27-09-2007, 04:22 PM
முறையோ முறையோ என்று முறையாக கவிதை படைத்தீர்கள் வாழ்த்துக்கள்

ஜெயாஸ்தா
27-09-2007, 04:24 PM
;) நன்றி இலக்கியன்...! ;)

ஓவியன்
29-09-2007, 05:51 AM
முறைமையும் முறமையின்மையும் சில இடங்களிலே பிரித்தறிவது கொஞ்சம் சிக்கலான விடயம். ஏனென்றால் ஒரு இடத்தில் முறையாக இருப்பது இன்னொரு இடத்திலே முறையில்லாமற் போக சந்தர்ப சூழ் நிலமைகள் வழி வகுத்து விடும்.

ஆனால் இங்கே ஜே.எம் கையாண்ட கவிக்கரு அத்தனையும் மனிதம் என்பதற்கு ஒவ்வா முறைமையே....

அதனைச் சாடிய விதம் அருமை ஜே.எம்....

தொடர்ந்து உங்கள் சமூகக் கவிதைகளைத் தவழ விடுங்கள் ஜே.எம்...
கவிச்சமர் ஒரு களம் அதனை நல்ல முறையிலே பாவித்து வரும் உங்களைப் போன்றோருக்கு என்றும் மன்றத்தின் ஊக்கம் கிடைக்கும்...

தொடருங்கள் நண்பரே, தொடந்து வருவோம் நாங்களும்.......

பூமகள்
30-09-2007, 05:35 AM
ஆஹா... எனது கவிதையின் ஒரு சொல்லை வைத்து... இவ்வளவு அழகான சமூகக் கவியா?? அசத்தல் சகோதரரே...!!
மிகுந்த நன்றிகள்...!!
முறையில்லா விடயங்களைத் தேர்ந்த வார்த்தைக் கோவையில் பகிர்ந்த உமது திறன் வியப்பில் ஆழ்த்துகிறது..!!
தொடர்ந்து இம்மாதிரியான கவிதைகளை... தாருங்கள்...!!
கவிச்சமரில் சிறிய கவிதைகளைப் பகிருங்கள்.
பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள் ஜே.எம்.

ஜெயாஸ்தா
30-09-2007, 06:32 AM
பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள் ஜே.எம்.
மிக்க நன்றி பூமகள்.... தங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும்.... (அப்பாட ஒரு வழியாக பி.எம் அனுப்பி பூமகளையும் இந்ததிரிக்கு வரவழைச்சாச்சி...! ஜே.எம்.-ன் மனசாட்சி : 'யேய்... ஜே.எம், இதெல்லாம் ஒரு பொழப்பாடா.... பாரட்டுங்கிறது தானா கிடைக்கணும்.... நீ என்னடான்னா இந்தத்திரியைப் இன்னும் பார்க்கவில்லையான்னு பி.எம். அனுப்பி அப்புறம் பராட்டு வாங்குற..... இரு உன்னைப் பற்றியும் ஒரு கவிதை எழுதி கிழிச்சாத்தான் சரிபட்டுவரும்...!)

ஜெயாஸ்தா
30-09-2007, 06:34 AM
தொடர்ந்து உங்கள் சமூகக் கவிதைகளைத் தவழ விடுங்கள் ஜே.எம்...
கவிச்சமர் ஒரு களம் அதனை நல்ல முறையிலே பாவித்து வரும் உங்களைப் போன்றோருக்கு என்றும் மன்றத்தின் ஊக்கம் கிடைக்கும்...

தொடருங்கள் நண்பரே, தொடந்து வருவோம் நாங்களும்

நன்றி ஓவியன் தங்களின் தீர்க்கமான விமர்ச்சனம் இன்னும் எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது.

பூமகள்
30-09-2007, 06:47 AM
(அப்பாட ஒரு வழியாக பி.எம் அனுப்பி பூமகளையும் இந்ததிரிக்கு வரவழைச்சாச்சி...! ஜே.எம்.-ன் மனசாட்சி : 'யேய்... ஜே.எம், இதெல்லாம் ஒரு பொழப்பாடா.... பாரட்டுங்கிறது தானா கிடைக்கணும்.... நீ என்னடான்னா இந்தத்திரியைப் இன்னும் பார்க்கவில்லையான்னு பி.எம். அனுப்பி அப்புறம் பராட்டு வாங்குற..... இரு உன்னைப் பற்றியும் ஒரு கவிதை எழுதி கிழிச்சாத்தான் சரிபட்டுவரும்...!)
அன்பு ஜே.எம் அன்பரே...!!
நிமிடத்திற்கு பல பதிவுகள் வந்தவண்ணம் இருக்கையில் எல்லாரின் பதிவுகளையும் பார்க்க இயலாது. சில அழகான பதிவுகள் கவனத்தில் இருந்து தவறிவிடுவது இயல்பே..! அவ்வண்ணம், நான் உங்களது பதிவை பாராமல் விட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.:icon_rollout:
அத்தகைய நேரம் தனிமடலில் கவனத்திற்கு கொண்டு வந்து சரியான உதவியை செய்வது மிகுந்த நற்செயல் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.:icon_b:
தொடர்ந்து கவிதைகளில் அசத்துங்கள். வாழ்த்துகள்.

இளசு
30-09-2007, 07:01 AM
பலமுறை பாராட்டவேண்டிய முறையில் அமைந்த
மனநிறைவளிக்கும் கவிதை!

பாராட்டுகள் ஜே.எம்.

கிரியாயூக்கி பூமகளின் கவிதைக்கும் பாராட்டுகள்!


கவிச்சமர் வேகம் நான் அறிந்ததே!
ஏறமுடியா படுவேகம் அந்தக்கவித்தொடர் வண்டிக்கு!

ஜெயாஸ்தா
30-09-2007, 07:20 AM
கவிச்சமர் வேகம் நான் அறிந்ததே!
ஏறமுடியா படுவேகம் அந்தக்கவித்தொடர் வண்டிக்கு!
அனைவருமே இந்த அனுபவத்தை உணர்ந்திருக்கிறீர்களோ... நான் எனக்கு மட்டும்தான் அப்படியோன்னு நெனெச்சேன்...!


அத்தகைய நேரம் தனிமடலில் கவனத்திற்கு கொண்டு வந்து சரியான உதவியை செய்வது மிகுந்த நற்செயல் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.:icon_b:
தொடர்ந்து கவிதைகளில் அசத்துங்கள். வாழ்த்துகள்.

தங்களுக்கு பி.எம். அனுப்பிய பிறகு எனக்கு மனதில் ஒரு சிறு உறுத்தல் இருந்தது. தங்களின் பதில் கண்டு அது நீங்கி விட்டது. நன்றி நட்பே...!