PDA

View Full Version : இ-காதல்!!!



aren
26-09-2007, 05:15 PM
உன் நினைவுகள்
இன்னும் என் நெஞ்சில்
நிலைத்து நிற்கிறது!!!

நினைத்தாலே
அமிர்தமாக
அழகாக
அற்புதமாக
ஆணித்தரமாக
இன்னும் பலவாறாக
இன்றும் இருக்கிறது!!!

நீ எங்கே இருக்கிறாய்
நீ எப்படி இருக்கிறாய்
ஒரு சுவடும் தெரியாமல்
நான் இங்கே தவிக்கிறேன்!!!

உன் யாஹூ முகவரி மட்டும்
என் கையில்
பதில் வராத தவிப்பில் நான்!!!

யார் நீ
எங்கிருந்தோ வந்தாய்
என் இதயத்தை திருடிச் சென்றாய்!!!

வந்த சுவடு தெரியாமல்
எங்கே சென்றாய்!!!

தவிப்புடன்
கணினியின் எதிரில் நான்!!!

அக்னி
26-09-2007, 05:18 PM
கணினியில் கண்ணி வைத்த
கன்னியே...
என் கண்ணெதிரில்
வாராயோ
என்றெண்ணியே...
எத்துணை இதயங்கள்
விம்மியே... துடிக்கின்றன...

பாராட்டுக்கள் ஆரென் அண்ணா...

aren
26-09-2007, 05:22 PM
நன்றி அக்னி.

ஆரம்பித்த பொழுது வேறு மாதிரியாக முடிக்க நினைத்தேன் ஆனால் எழுதும்பொழுது வேறு விதமாக மாறியது. ஏதோ சொதப்பிவிட்டேனோ என்று நினைத்தேன். நன்றாக வந்திருந்தால் சந்தோஷமே.

நன்றி வணக்கம்
ஆரென்

அக்னி
26-09-2007, 05:32 PM
நன்றாகவே உள்ளது...
முறிந்தது போல எனக்குத் தெரியவில்லை...
கவிப்புயல்கள் வரட்டும் கண்டு கொள்வோம்...

இனியவள்
26-09-2007, 05:38 PM
ஆரென் அண்ணா
கவிதை அழகு

வாழ்த்துக்கள் அண்ணா

ஹீம் அவங்கள் உங்க
யாஹீ ஜடியை தொலைத்து விட்டு
தேடி தேடி அலையிறாவோ யாருக்கு
தெரியும் அண்ணா :)

அக்னி
26-09-2007, 05:42 PM
இ-காதல்...
இழக்கபட்ட காதல்...
இளிச்சவாய்க் காதல்...
இப்படியும் சொல்லலாமோ..???

aren
26-09-2007, 05:43 PM
நன்றாகவே உள்ளது...
முறிந்தது போல எனக்குத் தெரியவில்லை...
கவிப்புயல்கள் வரட்டும் கண்டு கொள்வோம்...

நீங்களே நல்லாயிருக்குன்னு சொல்லிட்டீங்களே. அப்புறம் வேறென்ன வேண்டும் எனக்கு.

aren
26-09-2007, 05:43 PM
ஆரென் அண்ணா
கவிதை அழகு

வாழ்த்துக்கள் அண்ணா

ஹீம் அவங்கள் உங்க
யாஹீ ஜடியை தொலைத்து விட்டு
தேடி தேடி அலையிறாவோ யாருக்கு
தெரியும் அண்ணா :)


நன்றி இனியவள். இப்படி உண்மையெல்லாம் வெளியே சொல்லக்கூடாது.

aren
26-09-2007, 05:44 PM
இ-காதல்...
இழக்கபட்ட காதல்...
இளிச்சவாய்க் காதல்...
இப்படியும் சொல்லலாமோ..???

அப்படியும் சொல்லலாமே. இதுவும் நல்லாயிருக்கே.

எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் காதலி காதில் விழாமல் இருந்தால் சரிதான்.

இனியவள்
26-09-2007, 05:45 PM
இ-காதல்...
இழக்கபட்ட காதல்...
இளிச்சவாய்க் காதல்...
இப்படியும் சொல்லலாமோ..???

இ-காதல்
இன்று தொடங்கியது
எனக்கும் உனக்கும்
இடையில்

என்று முடியும்
உயிர்ப் பந்தமாய்
இல்லவிடில் குடித்து
விடுமா உயிரை

இப்படியும் வரலாம் வராமலும் இருக்கலாம்
வந்தும் வராமலும் இருந்தால் நான் பொறுப்பல்லா
ஆரென் அண்ணா அடிக்க வாரதுக்குள்ளை விடபோறன்
ஜீட்

இனியவள்
26-09-2007, 05:47 PM
எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் காதலி காதில் விழாமல் இருந்தால் சரிதான்.

அய்யய்யோ நினைக்கவே சோக்கா இருக்கே
அக்னி கட்டாயம் அனுப்புங்க இதை உங்கள்
காதலிக்கு பிறகு அக்னி வாய்களில் இருந்து
அய்யோ அம்மா தான் :D:D:D:D:D:D:D

aren
26-09-2007, 05:47 PM
இனியவள், நீங்கள் எழுதியதும் நல்லாயிருக்கே. அக்னி அவர்களுக்கு மாற்றும் பவர் இருக்கிறது. அவரையே மாற்றிவிடச் சொல்லலாமே.

aren
26-09-2007, 05:48 PM
அய்யய்யோ நினைக்கவே சோக்கா இருக்கே
அக்னி கட்டாயம் அனுப்புங்க இதை உங்கள்
காதலிக்கு பிறகு அக்னி வாய்களில் இருந்து
அய்யோ அம்மா தான் :D:D:D:D:D:D:D

வாயிலிருந்து ஒரே அக்னிக் குழம்பா வரும்னு சொல்லுங்க.

இனியவள்
26-09-2007, 05:50 PM
வாயிலிருந்து ஒரே அக்னிக் குழம்பா வரும்னு சொல்லுங்க.

அஃதே அண்ணா

அக்னிய நினைச்சால் :traurig001::traurig001: அழுகை அழுகையாய் வருது

aren
26-09-2007, 05:52 PM
அஃதே அண்ணா

அக்னிய நினைச்சால் :traurig001::traurig001: அழுகை அழுகையாய் வருது

உங்க அழுகையை கடனாக கேட்கப்போகிறார், அக்னி குழம்பை ஆற்றிடவேண்டுமே.

அன்புரசிகன்
26-09-2007, 05:57 PM
உன் யாஹீ முகவரி மட்டும்
என் கையில்
பதில் வராத தவிப்பில் நான்!!!


என்னிடம் இருப்பது
சில பல:icon_ush:
நீபேசுவது ஏத
யார் நீ
சொல்லு அத முத :p:p:p

நீ இருப்பது ஸ்பாம்:eek:
இன்னும் முயன்றால்
உனக்குத்தேவை ஜண்டுபாம். :D

ஷீ-நிசி
27-09-2007, 04:03 AM
ஓவரா யாகூ சாட்ல இருக்கீங்க போல,:)

ஆரெனாரே, கவிதையாக இருந்தது வரிகள். சூப்பர் வாழ்த்துக்கள்!:icon_b:

அக்னி
27-09-2007, 10:04 AM
ஏம்பா ஏன்...
அக்னிய இப்பிடி :sport-smiley-013: பந்தாடுறீங்க...
வலிக்குது... :medium-smiley-100::medium-smiley-045::medium-smiley-100:

இனியவள்
27-09-2007, 10:06 AM
ஏம்பா ஏன்...
அக்னிய இப்பிடி :sport-smiley-013: பந்தாடுறீங்க...
வலிக்குது... :medium-smiley-100::medium-smiley-045::medium-smiley-100:

அக்னி நீங்கள் பந்தோ
நாங்கள் பந்தாடுவதற்கு
சொல்லவேய் இல்லை
வெளியிலை சொல்லிப் போடதையுங்க
உதைப்பந்தாட்டம் போல உதைக்க போறினம்
உங்களை :D :icon_rollout:

பூமகள்
27-09-2007, 10:12 AM
"கதைகள் பல கதைத்து
கணினியில் கண் விழித்து
காலை வணக்கம் சொல்லும்
உன் செய்தி எங்கே?

காத்திருந்து ஓய்ந்துவிட்டு
காளை இவன்
கலைத்துவிட்டான்...

மீண்டும் அந்த
செல்லுலாய்டு சின்னகுயில்
பாடிடுமோ இவன்
சாட்டில்??"

நல்ல கவி அரென் அண்ணா. வாழ்த்துக்கள் .....!!:icon_rollout:

(ஆமாம்... உங்க யாகூ ஐடி என்ன??? ஹீ ஹீ...!!:D)

அமரன்
27-09-2007, 10:14 AM
கணினி தந்த வரம்
முகங்காணா உறவுச்சரம்
அதிலொன்றுதான் காதலும்..

தூதுவனின் துணையுடன்
இரகசியங்களைப் பரிமாறும்
கணினியுக தந்திரம்
தத்தளிப்பில் தள்ளுகிறது..

அப்பப்போ துண்டிக்கபடும்
இணைய இணைப்பைப் போல
பாராட்டுக்கள் அண்ணா..

அக்னி
27-09-2007, 10:16 AM
இனியவள், பூமகள், அமரன்
கவிதைகளும் மிகவும் அசத்தலாக உள்ளன பாராட்டுக்கள்...

இலக்கியன்
27-09-2007, 04:05 PM
கணனி மூலம் கன்னியவள் காதல் தூது விட்டாளே
வாழ்த்துக்கள் ஆரென்

ஓவியன்
29-09-2007, 05:41 AM
ஆகா ஆரென் அண்ணா, நீங்க இப்போதெல்லாம் அடிக்கடி கணினி முன் இருப்பதன் காரணம் இதுதானா...? :D

அப்பச் சரிங்க....! :D