PDA

View Full Version : விமான இறக்கையில் சிறுவன்



அறிஞர்
26-09-2007, 02:44 PM
விமான இறக்கையின் மீது அமர்ந்து 1,300 கி.மீ. பயணம் செய்த சிறுவன்


மாஸ்கோ, செப்.26: விமான இறக்கையின் மீது மைனஸ்-50 டிகிரி வெப்ப நிலையில் ஒரு சிறுவன் அமர்ந்து 1,300 கி.மீ. தூரம் பயணம் செய்த அதிசயம் ரஷ்யாவில் நடந்துள்ளது.

அந்த 15 வயது சிறுவனின் பெயர் ஆண்டிரி. இவனது தந்தை குடிபழக்கம் உடையவர். தாயார் தந்தைக்கு ஆதரவாக இருந்தார். அதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த ஆண்ட்ரி அருகில் உள்ள தனது தாத்தா ஊருக்கு சென்றான். அங்கு இருந்து ஒரு வாகனத்தில் ஏறி 220 கி.மீ. தூரத்தில் இருந்த பெர்ம் நகருக்குச் சென்றான்.
அங்குள்ள விமான நிலையத்துக்குச் சென்றான். அங்கு மாஸ்கோ புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கை மீது யாருக்கும் தெரியாமல் ஏறி அமர்ந்து கொண்டான். அந்த போயிங்-737 விமானம் மாஸ்கோ புறப்பட்டது. அப்போது அந்த பகுதியில் கடுமையான குளிர் வாட்டி எடுத்தது. தண்ணீர் பனிக் கட்டியாக உறையும் வெப்ப நிலை. மைனஸ்-50 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.

காற்றின் வேகத்தையும் குளிரின் கடுமையையும் ஆண்டரி தாங்கிக் கொண்டு விமானத்தின் இறக்கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் 1,300 கி.மீ. தூரம் பறந்த பிறகு அந்த விமானம் மாஸ்கோ விமான நிலையத்தில் தரை இறங்கியது. 2 மணி நேர பயணத்தில் விமானத்தின் இறக்கையோடு ஆண்ட்ரி ஒட்டிக் கொண்டான்.

விமானம் நின்ற பிறகுதான் அதன் இறக்கை மீது சிறுவன் சுருண்டு கிடப்பதை விமான நிலைய ஊழியர்கள் கவனித்தனர். அப்போது சிறுவன் மயக்கம் அடைந்து இருந்தான். அவனை கீழே இறக்கினர். அவன் உடல் ஐஸ் கட்டியாக உறைந்து போய் இருந்தது. அவனது சட்டை, ஷக்களை கூட உடலில் இருந்து பிரிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஒட்டி இருந்தது.

உடலில் பனிக்கடி காயங்கள் இருந்தன. உடனடியாக அவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான் அவனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறும்போது, மைனஸ்-50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 2 மணி நேரம் தாக்குப் பிடித்து உயிரோடு இருப்பது மருத்துவ உலகில் அதிசயம் என்றார்.

அவனது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் மாஸ்கோ வந்தனர். சிறுவன் ஆண்டரி யாருக்கும் தெரியாமல் எப்படி விமானத்தின் இறக்கை மீது ஏறி அமர்ந்தான், மைனஸ்-50 டிகிரி குளிர் நிலையை எப்படி தாங்கினான் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

− தினகரன்

சிவா.ஜி
26-09-2007, 02:54 PM
அப்பப்பா ஆச்சர்யம் மட்டுமல்ல அதிசயமாகவும் இருக்கிறது.-50 டிகிரி என்பது மிகக்கடுமையான குளிர்.அதுவுமில்லாமல் 900 கி.மீ.வேகத்தில் பறந்த விமானத்தின் மீதென்றால்.....மிக மிக ஆச்சர்யம்தான்.
சில வருடங்களுக்குமுன் ஒரு செய்தித்தாளில் போட்டிருந்த படத்தைப்பார்த்தே அதிசயித்தேன்.மைனஸில் இருந்த கடுங்குளிரில் மேல் சட்டையில்லாமல் ஒரு ரஷ்யன் வீதியில் படுத்திருப்பதை படமாகப் போட்டிருந்தார்கள்.அவனாவது வோட்காவின் துணையோடு தாக்குப்பிடித்தானென்றாலும்...இந்த சிறுவன் எப்படித்தான் தாங்கினானோ...
தகவலுக்கு நன்றி அறிஞரே.

leomohan
26-09-2007, 02:56 PM
பாதுகாப்பு ஓட்டை

சிறுவன் பிழைத்தது விந்தையிலும் விந்தை.

அக்னி
26-09-2007, 02:57 PM
Superman இன் அவதாரமோ..?
இளங்கன்று பயமறியாது என்று அறியாமலா சொல்லிவைத்தார்கள்..?
நல்லவேளை.., உயிராபத்து இல்லாமல் சென்றடைந்த வரையில் கொடுத்துவைத்த சிறுவன்...
விமானநிலையப் பாதுகாப்பு, மற்றும் புறப்படும் முன்னரான முற்காப்புக்கள் 100% சரியாக இருக்கவேண்டும் என்பதற்கு இதை ஒரு அனுபவமாகக் கொள்ள வேண்டும்.

தகவலுக்கு நன்றி அறிஞரே...

அக்னி
26-09-2007, 03:01 PM
மைனஸில் இருந்த கடுங்குளிரில் மேல் சட்டையில்லாமல் ஒரு ரஷ்யன் வீதியில் படுத்திருப்பதை படமாகப் போட்டிருந்தார்கள்.அவனாவது வோட்காவின் துணையோடு தாக்குப்பிடித்தானென்றாலும்...இந்த சிறுவன் எப்படித்தான் தாங்கினானோ...
தகவலுக்கு நன்றி அறிஞரே.

சிவா.ஜி...
புலம் பெயர்ந்து ஐரோப்பா நோக்கி வரும்பொழுது, அதே மைனஸ் குளிரால், இரு உறவுகள் உயிரைத் தொலைத்தன, கண்முன்னே...
அவர்களுக்கு அர்ப்பணித்த கவிதை கூட மன்றத்தில் எழுதி வைத்துள்ளேன். அப்படியான பயணத்தின் கடுமைகளை "பசுமை நாடிய பயணங்கள்" என்ற திரியில் எழுதத் தொடங்கினேன். நேரப் பிரச்சினையால் அதனை தொடர முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்தும் எழுதி முடிப்பேன்.

aren
26-09-2007, 03:04 PM
நம்பமுடியாத அதிசயங்கள் சில சமயம் நடைபெறும், அது இப்பொழுது நடந்திருக்கிறது.

ஓவியன்
26-09-2007, 03:07 PM
அதிசயமான செய்தி, ஆனால் அந்த சிறுவன் அந்தக் குளிரிலே எப்படித் தாக்குப் பிடித்திருப்பான்...?
எவ்வளவு சிரமத்தை அவன் தாங்கியிருப்பான்....?
ஆனாலும் கீழே எங்கும் விழாமல் சிறுவன் காப்பாற்றப் பட்டமை சந்தோசமே....

ஜெயாஸ்தா
26-09-2007, 03:10 PM
செய்தியைப் படிக்கும் போது ஒரு பக்கம் வியப்பு ஏற்ப்பட்டாலும், இன்னொரு பக்கம் அவனை பொறுப்புடன் கவனிக்காத அவனுடைய தந்தை, பாதுகாப்பு குறைபாடுஉள்ள விமானநிலைய ஊழியர்கள் மீது வெறுப்புதான் வருகிறது.

அறிஞர்
26-09-2007, 03:17 PM
எனக்கு இந்த செய்தியை படித்ததும் ஆச்சரியம் தான்... மேலும் தகவல் திரட்டமுடியுமா எனப்பார்ப்போம்.. படம் கிடைத்தால் போடுங்கள்..

அறிஞர்
26-09-2007, 03:19 PM
ஆதாரமாக ரஷ்ய நாட்டு செய்திதாள்

http://www.en.rian.ru/russia/20070924/80694850.html

சூரியன்
26-09-2007, 03:40 PM
ஆச்சரியமாக விசயமாக உள்ளது 1300கீ.மீ எப்படிதான் அந்த சிறுவன் தாங்கினானோ? அதிசயம்தான்...

அறிஞர்
26-09-2007, 03:41 PM
ஆச்சரியமாக விசயமாக உள்ளது 1300கீ.மீ எப்படிதான் அந்த சிறுவன் தாங்கினானோ? அதிசயம்தான்...

உங்களை வேணா ஏத்திவிட்டுருவோமா....

lolluvathiyar
27-09-2007, 05:47 AM
நம்ப முடியவில்லை. ஆனால் இது போன்ற அபூரவ சம்பவங்கள் இந்த உலகில் அவ்வபோது நடந்து கொண்டு தான் இருகிறது.
ஏதொ ஒரு மனதிடமும் தெய்வபக்தியும் அந்த சிறுவனிடம் இருந்திருக்க வேண்டும், அதனால் தான் உயிருடன் இருகிறான்

மன்மதன்
28-09-2007, 02:02 PM
என்ன கொடுமை சார் இது.. ஹாலிவுட் பட கிராபிக்ஸில் மட்டுமே சாத்தியமானது இது.. மிராக்கிள்..!!

அறிஞர்
28-09-2007, 02:04 PM
என்ன கொடுமை சார் இது.. ஹாலிவுட் பட கிராபிக்ஸில் மட்டுமே சாத்தியமானது இது.. மிராக்கிள்..!!

நீங்க படம் எடுத்தால்... இந்த சீனை போட்டுவிடலாம்...

மனோஜ்
28-09-2007, 02:09 PM
ஆச்சரியமான உண்மை அதிசயம் தான்

பென்ஸ்
28-09-2007, 02:14 PM
-50 டிகிரி நிலை
900 கிமீ வேகம்..
2 மணி நேரம்..
போர்ஸுட் கன்வேக்சன்...
இம்பாசிபிள்..

ஆனால்

மிரக்கிள்...

அறிஞர்
28-09-2007, 04:03 PM
-50 டிகிரி நிலை
900 கிமீ வேகம்..
2 மணி நேரம்..
போர்ஸுட் கன்வேக்சன்...
இம்பாசிபிள்..

ஆனால்

மிரக்கிள்...

அந்த பையனின் விரல்களும், கைகளும் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளதாம். அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை தயங்குகிறதாம். இந்த செய்தி உண்மை தான் என்கிறார்கள்... செய்தி உண்மையென்றல் விரைவில் பூரண சுகமடைய வேண்டுவோம்.


http://en.rian.ru/russia/20070926/80987468.html

http://newsfromrussia.com/society/stories/25-09-2007/97676-boeing-0