PDA

View Full Version : என்று இணைவோம்



இனியவள்
26-09-2007, 11:26 AM
எனக்கு உயிர் அளித்துக்
கொண்டிருக்கிறது நாம்
பழக்கிய நாட்கள்...

இருமனம் இணைந்து
திருமணம் முடிந்த போது கூட
நான் நினைக்கவில்லையே
எமக்காய் ஒரு நீண்ட
அஞ்ஞாதவாசம் காத்துக்கிடப்பதை...

எதிர்காலத்தைத் தேடி
நிகழ்காலத்தைத் தொலைத்து
வாழ்கின்றேன் இங்கு நான்
தனிமையில் உன் நினைவுகளோடு...

முட்கள் மீதான -இந்த
நரக வாழ்க்கையில் இருந்து
உன்னோடு நான் வாழப்போகும்
வசந்த வாழ்க்கைக்காய்
நகர்த்திக் கொண்டிருக்கின்றேன்
கடிகார முட்களை வேகவேகமாய்...

விடியும் ஓவ்வொரு நாட்களும்
நீ என்னை வந்தடைவாய் என்ற
நற்செய்தியைக் கேட்க என் ஓவ்வொரு
அணுக்களும் துடித்துக் கொண்டிருக்கின்றன...

தவிக்கிறேன் அன்பே எதிர்கால
வாழ்வைச் சிந்தித்து நாம் பூண்டிருக்கும்
இந்த வனவாசம் எம் நிகழ்கால வாழ்வை
சுக்குநூறாச் சிதறடித்துவிடுமென...

வனவாசம் கலைத்து உன் வாசல்
தீண்டவே என் மனம் துடிக்கிறது
எதிர்காலம் என்ற கோடு என்னைத்
தடுக்கிறது...

நாளை விடியும் விடியலாவது
என்னிடம் உன்னைச் சேர்க்கட்டும்
கனவுகளோடும் நினைவுகளோடும்
இனியும் என்னால் நகர்த்த முடியாது
கடினமான இந்த வாழ்க்கையை...

(எதிர்கால வாழ்வுக்காய் கணவரைப் பிரிந்து வாழும் தோழியின் வேதனைகள் கண்டு மனம் துடிக்கிறது சீக்கிரம் கணவரோடு என் தோழி சேர்வதற்கு பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே )

க.கமலக்கண்ணன்
26-09-2007, 11:33 AM
எதிர்காலத்தைத் தேடி
நிகழ்காலத்தைத் தொலைத்து
வாழ்கின்றேன் இங்கு நான்
தனிமையில் உன் நினைவுகளோடு...

- என்னை சிலிர்க்க வைத்த வரிகள்...

பாசத்தின் பிணைப்பை அன்பை அளித்தரும் அந்த

பாக்கியம் பெற்றவர் கொடுத்து வைத்தவர்தாம்

பாருங்கள் விரைவில் உங்கள் தோழி அவருடை கணவனிடத்தில்

பாதம் தொட்டு ஐக்கியம் அடைய பிரார்த்தனை செய்கிறேன்... இனியவள்...

சிவா.ஜி
26-09-2007, 01:03 PM
உற்றவனைப் பிரிந்து உயிர் வாழ்தல் எத்தனைக் கொடுமை.
எதிர்காலத்துக்காக நிகழ்காலத்தை தொலைத்து நிற்கும் மனைவியின் பார்வையிலிருந்து பார்த்தாலும்,அன்பு இல்லாளைப் பிரிந்திருக்கும் கணவரின் பார்வையிலிருந்து பார்த்தாலும் வலியும் வேதனையும்தான் தெரிகிறது.
கூடிய விரைவில் இணைப்பு நிகழும்,பிணைப்பாய் அது தொடரும் என்று நம்புவோம்.வாழ்த்துக்கள் இனியவள்.

இனியவள்
26-09-2007, 06:18 PM
நன்றி கமல்க்
எழுதும் போது என்னையும்
கவர்ந்த வரிகள் அவைதான்

இனியவள்
26-09-2007, 06:19 PM
நன்றி சிவா
உங்கள் வாழ்த்துக்கு :)

அன்புரசிகன்
26-09-2007, 06:28 PM
நாளை விடியும் விடியலாவது
என்னிடம் உன்னைச் சேர்க்கட்டும்
கனவுகளோடும் நினைவுகளோடும்
இனியும் என்னால் நகர்த்த முடியாது
கடினமான இந்த வாழ்க்கையை...


விடியுமுன் வருவது தான் கனவு.
யுகங்கள் நாழிகையாக பிரார்த்திக்கிறேன்.

அமரன்
28-09-2007, 08:58 AM
அணுக்களின் பிணைப்பு
தற்காலிகமாக உடைகிறது
அக, புறக் காரணிகளால்..

அவற்றின் மீளிணைவு
சாத்தியமானது
அயலணுக்களின் சக்தியால்...

நல்லதே நடக்கும் இனியவள்.

ஓவியன்
30-09-2007, 07:14 PM
என்ன செய்ய இனியவள்...

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொருளாதார தேவைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இன்றைய கால கட்டத்தில் பல குடும்பங்களின் நிலை இது தான்....
காலத்தோடு தங்கள் இளமையையும் தொலைத்துக் காத்திருக்கின்றனர் தம்பதிகள்....

நல்ல கரு இனியவள், இன்னும் கொஞ்சம் நீங்கள் முயற்சி செய்திருக்கலாம் போலுள்ளது...

பாராட்டுக்கள் இனியவள்.....

இலக்கியன்
30-09-2007, 08:29 PM
விடியும் ஓவ்வொரு நாட்களும்
நீ என்னை வந்தடைவாய் என்ற
நற்செய்தியைக் கேட்க என் ஓவ்வொரு
அணுக்களும் துடித்துக் கொண்டிருக்கின்றன...

மிகவும் அழகாக சொன்னீர்கள் உணர்வுகளைப்பிழிந்து

நேசம்
30-09-2007, 08:46 PM
எதிர்காலத்தைத் தேடி
நிகழ்காலத்தைத் தொலைத்து
வாழ்கின்றேன் இங்கு நான்
தனிமையில் உன் நினைவுகளோடு...

ப*ண*ம் ச*ம்பாதிக்க வெளிநாடுக*ளுக்கு சென்ற*வ*ர்க*ளின் நிலைமை சொல்லும் க*விதை .புது மனைவியை பிரிந்து இருப்பவர்களின் மனநிலையை காட்டுகிறது.அருமையான கவிதை