PDA

View Full Version : காதலும் விட்டிலும்

இலக்கியன்
26-09-2007, 09:55 AM
விட்டில் பூச்சியே....
உனக்குத்தெரியமா?

நீ நேசிப்பது
நெருப்பின் ஒளியை
எரிந்து போவாய் என
அறியாமல்

என் காதலும் அப்படித்தான்
கடைசியில் எரிந்து போவது
ஆண்கள்தான் உன்னைப்போல

இனியவள்
26-09-2007, 09:59 AM
காதலில் எரிந்து போவது
நம்பிக்கையும் அன்பும்
இலக்கி ஆண்களுமல்ல
பெண்களுமல்ல

உயிரற்ற ஜடாமய் அலைவதை
சொல்றீங்களோ :sprachlos020:

இலக்கியன்
26-09-2007, 10:03 AM
காதலில் எரிந்து போவது
நம்பிக்கையும் அன்பும்
இலக்கி ஆண்களுமல்ல
பெண்களுமல்ல

உயிரற்ற ஜடாமய் அலைவதை
சொல்றீங்களோ :sprachlos020:

ஆம் சரியாக சொன்னீர்கள் தோழி உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி
இருபாலாருக்கும் பொருந்தும் வரிகள்

jpl
26-09-2007, 11:08 AM
என் காதலும் அப்படித்தான்
கடைசியில் எரிந்து போவது
ஆண்கள்தான் உன்னைப்போல
காதலே நெருப்புப் போல.இருப்பாலாரும் வீழ்ந்துபடுகிறார்கள்.
ஆம் அவர்கள் உணர்வதில்லையே...நெருப்பு என்பதை.

அமரன்
27-09-2007, 07:46 PM
இருக்கும் இடமறிந்து
தீபமாகவும் தீயாகவும்
நெருப்பின் நாக்குகள்
நர்த்தனம் ஆடுகின்றன...

இரண்டும் அறிவதில்லை
பாலும் பணமும்
ஜாதியும் மதமும்.
தொடருங்கள் இலக்கியன்..

இலக்கியன்
28-09-2007, 06:41 PM
காதலே நெருப்புப் போல.இருப்பாலாரும் வீழ்ந்துபடுகிறார்கள்.
ஆம் அவர்கள் உணர்வதில்லையே...நெருப்பு என்பதை.

உங்கள் பின்னூட்டக்கருத்துக்கு நன்றி

இலக்கியன்
28-09-2007, 06:42 PM
இருக்கும் இடமறிந்து
தீபமாகவும் தீயாகவும்
நெருப்பின் நாக்குகள்
நர்த்தனம் ஆடுகின்றன...

இரண்டும் அறிவதில்லை
பாலும் பணமும்
ஜாதியும் மதமும்.
தொடருங்கள் இலக்கியன்..

அழகான பின்னூட்டம் நன்றி அமரன் அண்ணா

ஓவியன்
29-09-2007, 11:56 AM
விட்டில்களைப் பற்றிய ஒரு உண்மை தெரியுமா இலக்கியன்..?

சூரிய ஒளியின் அடிப்படையில் தம் பாதையைத் தீர்மானிப்பதே விட்டில்கள், அவற்றுக்கு நாம் உருவாக்கும் செயற்கை வெளிச்சங்கள் இடையூறு தரவே அவை குழம்பிப் போயே விளக்கிலே வந்து வீழ்கின்றனவாம்...

நம் வாழ்க்கையிலே சூரியனைப் போல் வழி காட்டும் காதல்களும் உள்ளன, செயற்கை விளக்குகள் போல பாதை மாற்றும் போலிக் காதல்களும் உள்ளன. புரிந்து கொண்டு நடக்க வேண்டியது நம் பொறுப்பு.

இலக்கியன்
14-10-2007, 05:23 PM

நன்றி ஓவியன் உங்கள் சிறப்பான பின்னூட்டத்துக்கு நண்பரே

பூமகள்
14-10-2007, 06:54 PM
விட்டில் கொண்டு பாடிய காதல் கவி அருமை..!!
ஆனால் வீழ்வது ஆண்களானாலும் வலி என்னவோ பெண்களுக்குத் தான் எப்போது இலக்கியரே..!!
கவிதைக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
ஓவியரின் பின்னூட்டம் மேலும் விட்டில் பற்றி அறியச்செய்தது. நன்றிகள் ஓவியரே...!!

lolluvathiyar
18-10-2007, 08:21 AM
காதல் தோல்யுற்றால் எரிந்து போவது காதலர்கள்
வெற்றி பெற்றால் அது எரிய வைப்பது
சில இடங்களில் அவர்களின் பெற்றோர்களை