PDA

View Full Version : ஊர்வலம்சிவா.ஜி
26-09-2007, 05:06 AM
இரண்டு ஊர்வலங்களில்
நான் ஆணாயிருந்தும் அழுதேன்..!

ஒன்று தாரைத்தப்பட்டையோடு..
மற்றொன்று மேளதாளத்தோடு..

முந்தையதில்
அன்னை பிணமாகிப் போனாள்!
பிந்தையதில்
காதலி மணமாகிப் போனாள்!

க.கமலக்கண்ணன்
27-09-2007, 01:07 PM
அந்த ஆணுடைய சூழ்நிலையை மிக

அருமையாக சில வரிகளில் கவிதையாய்

அள்ளிவிட்டு இருக்கிறீர்கள். அருமை நண்பா...

தளபதி
27-09-2007, 01:12 PM
என்ன கொடுமை சிவாஜி இது??

ஊர்வலம் என்று
உல்லாசமாய் உள்ளெ வந்தால்
உயிருக்கு உலை வைப்பது போல்
உருக்கும் ஒரு கவிதை.

கவிதையில் கரு கனம் இரண்டும் அதிகம். வலிக்கும்.

சுகந்தப்ரீதன்
27-09-2007, 01:18 PM
சிவா.... அசத்தல் ஆரம்பமாகி அழுமூஞ்சியாக்கிட்டீங்களே... சுருங்க சொல்லியிருக்கீங்க சோகத்த... வாழ்த்துக்கள் நண்பா...!

ஓவியன்
27-09-2007, 01:26 PM
முன்னையது உங்களை ஊட்டி வளர்த்த உறவு..
பின்னையது உங்களை ஊட்டி வளர்க்கவிருந்த உறவு...
இரண்டு பிரிவுகளுமே கொடுமைதான்....
அதில் அழுகையைக் கட்டுப்படுத்த ஆணாலும் முடியாதுதான்...

குறுங்கவிதைகள் "நச்" இரகமாக இருந்தாலே படிப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். அப்படி அமைய தேர்ந்த வார்த்தைப் பிரயோகங்கள் முக்கியம்...
இங்கே உங்கள் கவிதையில் தேர்ந்த வார்த்தைப் பிரயோகங்கள் மின்னி கவிதையை ஜொலிக்க வைக்கின்றன...

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சிவா.ஜி!.

ஜெயாஸ்தா
27-09-2007, 01:49 PM
ஊர்வலத்தில் உறவுகளை தொலைத்த சேகத்தை கவிதை நன்றாகவே வெளிப்படுத்துகிறது. அன்னையின் மறைவும் காதலியின் பிரிவும் சமமாய் மதிப்பிட தோன்றவில்லை. அன்னையின் பிரிவுதான் அதிக துயரத்தை தரும். (காதலிக்கு திருமணமென்றால் அந்த திருமணத்திலேயே வேறொருத்திக்கு காதல் தூண்டில் போட்டு பிடித்துவிடமாட்டோம்.)

அல்லிராணி
27-09-2007, 02:02 PM
இரண்டு ஊர்வலங்களில்
நான் ஆணாயிருந்தும் அழுதேன்..!

ஒன்று தாரைத்தப்பட்டையோடு..
மற்றொன்று மேளதாளத்தோடு..

முந்தையதில்
அன்னை பிணமாகிப் போனாள்!
பிந்தையதில்
காதலி மணமாகிப் போனாள்!


காதலி மணமாகிப் போனாள்
ஊர்வலத்தில்
கண்ணீருடன் காதலன்
ஆணாய்த்தானா?:icon_rollout:

அமரன்
27-09-2007, 02:08 PM
காதலி மணமாகிப் போனாள்
ஊர்வலத்தில்
கண்ணீருடன் காதலன்
ஆணாய்த்தானா?:icon_rollout:
சந்தேகம்தான்...:icon_rollout:

அல்லிராணி
27-09-2007, 02:10 PM
சந்தேகமா
அவனுக்குத் தேவைப்பட்டது
Some தேகமா?

பூமகள்
27-09-2007, 02:15 PM
ஊர்வலம் என்றதும் ஏதோ மண ஊர்வலம், கட்சி ஊர்வலம் என்று கற்பனை செய்து வந்த எனக்கு.... கனமான சோகத்தை மனத்தில் அப்பியது உங்களது கவி சிவா அண்ணா.
தாயுக்கு பின் தாரம் என்பார்கள்.
இங்கே தாயும் போகிறாள்... தாரமும் இல்லையென்று ஆகிறாள். எத்தகைய மீளமுடியா துயர் அந்த ஆணுக்கு... அழுகை வராமல் இருக்க அவர் என்ன கல் நெஞ்சு கொண்டவரா??
மன வலியை உண்டாக்கியது கவிதை..!
அருமையான வார்த்தைக் கோர்வை... கரு ஆழமானது.
பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் சிவா அண்ணா.

அமரன்
27-09-2007, 06:11 PM
அருவத்துடன் போராட
ஆயுதம் இல்லையெனும்
ஆற்றாமை கரைக்க
அழுது தீர்க்கிறானோ?

முன்செல்லும் பிணத்துக்கு
பின் செல்லும் மனிதன்

உள்ளக்கிடக்கையை சொன்ன கவிக்கு
பரிசாகக் கிடைக்கிறது கரகோசம்.

சிவா.ஜி
28-09-2007, 05:20 AM
மிக்க நன்றிகள் கமலக்கண்ணன்.
நன்றி குமரன்.பாதிப்பை எழுதும்போது படிப்பவர் உணர்ந்தால் படைத்தவனுக்கு மகிழ்ச்சி.அந்த வகையில் உங்களால் எனக்கு மகிழ்ச்சி.
நன்றி சுகந்தப்ரியன்.
மிக்க நன்றி ஓவியன்.மிக அருமையான பின்னூட்டம்.நீங்கள் சொல்வதுபோல சிறிய கவிதைகள் அதிகம் படிக்கப்படுகிறது.
ஆஹா...வெகு நாட்களுக்குப் பிறகு கவிதைச் சக்ரவர்த்தினி அல்லிராணியின் பின்னுட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி.அதுவும் உங்கள் அந்த பஞ்ச் someதேகம் சூப்பர்.மிக்க நன்றி.
நன்றி ஜே.எம். சரிதான் அன்னையின் இழப்பு ஈடு செய்யமுடியாததுதான். கடைசியில் குறும்பைக்க்காட்டிவிட்டீர்களே(நல்ல அனுபவம் போலிருக்கிறது)
நன்றி தங்கையே.தாய்க்குபின் தாரம்தான் வாழ்வின் ஆதாரம்...அதுவே இல்லையென்று ஆகும்போது அழத்தானே முடியும்.
நன்றி அமரன்.மிகவும் ஆழமான பின்னூட்டம்.உங்கள் அழகு தமிழில் படிக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது.