PDA

View Full Version : காத்திருக்கிறாள்-சிறுகதை



இனியவள்
25-09-2007, 09:51 PM
அதிகாலை நேரம் சூரியன் தனது கதிர்களை விரித்து இருண்ட வானத்திற்கு ஒளிபரப்பிக்கொண்டிருந்தான்.துவண்டிருந்த செடிகள் எல்லாம் தலை நிமிர்ந்தன. நிசப்தமாய் இருந்த உலகம் ஆர்ப்பாரிக்கத் தொடங்கின கீச்சிடும் குருவிகள்,மெட்டுக்கள் பூக்காளாய் மாறி பூக்கள் கனிகளாய் மாற்றம் பெற்றுக்கொண்டிருந்த அழகிய காலை நேரம்.உலகமே விழித்தெழ வீசிய தென்றல் காற்றில் சிலிப்புற்று இன்னும் போர்வையை இறுக்கிப் பிடித்தவாறு கண்கள் திறக்க மனமற்று இன்னும் உறக்கத்தை உள்வாங்கிக்கொண்டிருந்தது ஒரு ஜீவன்.

துறுதுறுவென்ற கண்கள் எப்பொழுதும் எதாவது செய்து கொண்டே இருக்கும் அவளது கரங்கள் ஓய்வின்றி ஓடோடி திரியும் கால்கள் சூரியன் விழிக்கும் முன்னே விழித்திடும் விழிகள் இன்று விடியலைப் பார்க்க மனமின்றி மூடிய போர்வைக்குள் மூடிய விழிகளாய் உறக்கத்தில் கழித்தது காலைப் பொழுதை."காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்" என வானொலியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பாடலை காதுகள் செவிமடுக்க அவள் மனமோ கடந்த கால நினைவுகளை நோக்கி படையெடுத்தது...

ரேகா தாய் தந்தையற்று சிறுவயது முதல் ஓர் ஆசிரமத்தில் படித்து வளர்ந்து இன்று ஒரு நல்ல நிலையில் இருப்பவள். சிறுவயது முதலே அன்பிற்காய் ஏங்கிய அவளின் உள்ளத்திலே குடி கொண்டான் ராகுல்.
ஒரே இடத்தில் வேலை செய்யும் இருவருக்கும் நட்பு மலர்ந்தது. தான் சிறுவயது முதலே ஏங்கித் தவித்த அன்பு அவனிடத்தில் கிடைக்க நட்பாக இருந்த அவர்கள் உறவு காதலாக உருப்பெற்றது...

அவனுடைய அன்பில் இந்த உலகையே மறந்து வானில் சிறகடித்துப் பறந்தால் ரேகா.. இந்த பூலோகத்தில் அவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மறைந்து போயினர் மாயமாய்.சிறு கற்கள் கூட சிற்பமாய் சிறு கோடுகள் கூட அழகிய ஓவியமாய் உருப்பெற்றது அவள் கண்களுக்கு காதல் தந்த போதையில் வேலையை மறந்தாள் உலகை மறந்தாள் ராகுலே உலமென நினைத்தாள் சிறுவயது முதல் தான் அனுபவித்து வந்த வேதனைகளை இவன் அன்பில் கரைத்தாள்..

ராகுல் வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம் வாங்கியவனாய் அந்த நற்செய்தியை இவளுக்கு தெரிவிக்க காற்றை விட வேகமாய் பறந்தான் இருசக்கர வண்டியில் (மோட்டர் சைக்கிள்) இவனை விட வேகமாய் எமன் இவனைத் தொடர்வதை அறியாமல் அவன் வேகமே அவன் வாழ்வை முடித்திட அவன் மரணித்ததை ஏற்க மறுத்த இவள் இதயம் காத்துக்கிடக்கிறது அவன் வருகைக்காய்...!

முற்றும்

(என் முதல் கதை என்றோ உருப்பெற்ற கரு இன்று கதையாகி)
நன்றி
இனியவள்

சுகந்தப்ரீதன்
26-09-2007, 04:25 AM
கவிதை பக்கமிருந்து கதை பக்கம் வந்துவிட்டீர்களா..? வாழ்த்துக்கள்!

"திருட்டுபோன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும்"− இப்படிதான் நிறைய காயப்பட்ட உள்ளங்கள் எதார்த்தத்தை ஏற்க மறுத்து ஏங்கி தவிக்கிறது ரேகாவை போல தினம்தினம்... எதிர்பார்ப்புகள் தானே வாழ்வில் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.... இருந்தும் இந்த மனிதமனம் ஏனோ அதை ஏற்க மறுக்கிறது...

ஆரம்பம் அழகாய் இருந்தது... முடிவு கனமாயிருக்கிறது...!

இனியவள்
26-09-2007, 10:49 AM
நன்றி சுகந்

ஒரு சிறு முயற்ச்சி செய்து பார்த்தேன்

வாழ்ந்த்துக்கு நன்றி தோழரே

அமரன்
26-09-2007, 12:22 PM
இனியவளும் கதைகளத்தில் குதித்தாச்சா...ரசித்துச் சுவைக்கும் அமைதியான சூழ்நிலை இல்லை..கருத்து அப்புறம். இப்போது முதல் கதைக்கு வாழ்த்துகள்..

lolluvathiyar
26-09-2007, 12:52 PM
இனியவளே முதல் முதலில் கதை எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.. நல்ல முயற்ச்சி. முயற்ச்சிக்கு மட்டுமே பாராட்டுகள். கதைக்கு அல்ல.

நீங்கள் இந்த கதை எழுதும் போது இன்னும் கவிதை உனர்விலிருன்து கதை உனர்வுக்கு வரவில்லை என்று தெரிகிறது.

கவிதையில் இருக்கும் பாராகளை ஒட்டி கதை போல காட்டி விட்டீர்களா? அதுக்கு கூட ஒரு திறமை வேனும். சமாஸ்
விடாமல் முயற்ச்சியுங்கள்

மலர்
26-09-2007, 01:23 PM
முத்தான முதல் கதையை அழகாக கொடுத்துள்ளீர்கள்...
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அன்புத்தோழிக்கு....

என்ன முடிவு தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு....



நீங்கள் இந்த கதை எழுதும் போது இன்னும் கவிதை உனர்விலிருன்து கதை உனர்வுக்கு வரவில்லை என்று தெரிகிறது.

உங்களுக்கும் அப்படி தோணிச்சா....எனக்கும் கொஞ்சம் அதே..
ஆனால் இயற்கையை நிறைய ரசித்துள்ளதாக தெரியுது..
துறுதுறுவென்ற கண்கள் ஓடோடி திரியும் கால்கள் சூரியன் விழிக்கும் முன்னே விழித்திடும் விழிகள் என்று ஒவ்வொன்றையும் நல்லா வர்ணனையாகத்தான் கொடுத்தது போல இருக்கு....


இவனை விட வேகமாய் எமன் இவனைத் தொடர்வதை அறியாமல் அவன் வேகமே அவன் வாழ்வை முடித்திட அவன் மரணித்ததை ஏற்க மறுத்த இவள் இதயம் காத்துக்கிடக்கிறது அவன் வருகைக்காய்...!

வார்த்தையை கோர்வையாய் கொடுப்பது என்றால் இதுதானோ..

இனியவள்
26-09-2007, 05:00 PM
இனியவளும் கதைகளத்தில் குதித்தாச்சா...ரசித்துச் சுவைக்கும் அமைதியான சூழ்நிலை இல்லை..கருத்து அப்புறம். இப்போது முதல் கதைக்கு வாழ்த்துகள்..

நன்றி அமர்

இனியவள்
26-09-2007, 05:01 PM
நீங்கள் இந்த கதை எழுதும் போது இன்னும் கவிதை உனர்விலிருன்து கதை உனர்வுக்கு வரவில்லை என்று தெரிகிறது.
கவிதையில் இருக்கும் பாராகளை ஒட்டி கதை போல காட்டி விட்டீர்களா? அதுக்கு கூட ஒரு திறமை வேனும். சமாஸ்
விடாமல் முயற்ச்சியுங்கள்

நன்றி வாத்தியாரே

ஊக்கப்படுத்தும் கருத்துக்கள் :)

இனியவள்
26-09-2007, 05:02 PM
[QUOTE=மலர்;276569]முத்தான முதல் கதையை அழகாக கொடுத்துள்ளீர்கள்...
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அன்புத்தோழிக்கு....
QUOTE]

நன்றி தோழியே
உங்கள் ஆக்கப்பூர்வனமா கருத்துக்கும்
வாழ்த்துக்கும் :)

அமரன்
27-09-2007, 08:09 AM
கவித்துவமான நடையில் ஒரு கதை. படித்து,பார்த்துப் பழக்கப்பட்ட கதை என்றாலும் சுவாரசியமாகவே உள்ளது. சோகமான முடிவு மன பாரத்தை ஏற்படுத்தலாம். இருந்தாலும் எனது மனப்பாங்குக்கு ஒத்தவில்லை. மனதில் இதமாக ஒட்டவுமில்லை. இருக்கும் வரை மகிழ்வாக வாழ்ந்து, மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியமானது..எமது ஒவ்வொரு அடியையும் எதார்த்தம் புரிந்து எடுத்துவைக்க வேண்டும். பாராட்டுகள் இனியவள்.

மயூ
30-09-2007, 03:50 PM
கதை எழுதும் ஆற்றல் உங்களுக்கு உள்ளது... குறிப்பாக வர்ணனை செய்யும் ஆற்றல் உள்ளது..

கதை எழுதும் போது.. புதிதாக எழுதுங்கள்... மற்றவர்கள் எதிர்பாராதவாறு திருப்பங்கள் கொடுங்கள், அதைவிட ஒரு சம்பவத்தை பின்னிப் பின்னி எழுதுங்கள்... வாசிப்பவர் மனதில் ஒரு உணர்வுக் கிளறலை உருவாக்குங்கள்...

இவற்றில் சில உங்கள் கதையில் உள்ளன.. தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்!!!

இனியவள்
30-09-2007, 04:03 PM
நன்றி மயூ

பூமகள்
30-09-2007, 07:26 PM
இனியவள் கவிதையில் அசத்தி இன்று கதையில் அசத்த வந்தாச்சா?? கலக்குறீங்க போங்க...!! வாழ்த்துகள்..!!
அழகான காலை வர்ணனை.. ரசிக்கவைத்தது. கொஞ்சம் கூட கதையை விளக்கியிருக்கலாம். முடிவு உடனே தந்துவிட்டது போன்ற உணர்வு. வசனங்களே இல்லை. ஆனாலும் கவித்துவத்தோடே கதை நகர்கிறது.
இன்னும் எதார்த்தமாய் இருந்திருக்கலாம்.
முதல் கதை அருமை. முடிவு தான் சோகத்தில் ஆழ்த்திவிட்டிருக்கிறது.
பாராட்டுக்கள் இனி..!!

அமரன்
30-09-2007, 08:08 PM
பாராட்டுக்கள் இனி..!!
தொடரும் என நம்புவோம்...

இனியவள்
01-10-2007, 05:08 PM
நன்றி பூ

முதல் கதை சிறு சிறு இல்லையில்லை
பெரிய பெரிய தவறுகள் இருக்கின்றன..

பேனாவின் கைபிடித்து கதை என்னும்
காகிதத்தில் உயிரெழுத்து பழகுகின்றேன்
நடை பயிலும் குழந்தையாய்
கூடிய சீக்கிரம் தேறிவிடுவேன்

நன்றிகள் தோழி

எழுதும் போது பெருசா தெரிஞ்சது
பதிவை பதிந்த பிறகு சிறுசா போயிற்று :icon_rollout:

பூமகள்
01-10-2007, 07:38 PM
பேனாவின் கைபிடித்து கதை என்னும்
காகிதத்தில் உயிரெழுத்து பழகுகின்றேன்
நடை பயிலும் குழந்தையாய்
கூடிய சீக்கிரம் தேறிவிடுவேன்

இனி...! நானும் அதே நிலையில் தான் இருக்கிறேன். ஆனால் உங்களின் வளர்ச்சி அபாரம். அடுத்த கதையும் தயாரித்து வழங்கிய வேகம் அருமை.
உண்மையில் பாராட்டுக்கள் இனி..! தொடருங்கள் இனிமேலும் இதே போல் வெற்றிநடையில்...!!

எழுதும் போது பெருசா தெரிஞ்சது
பதிவை பதிந்த பிறகு சிறுசா போயிற்று :icon_rollout:
பரவாயில்லை இனி.... அப்படி பெரிதாகத் தோன்றினால் திருப்பம் வைத்து முடித்து இரு பாகமாக வெளியிடுங்கள்..! இது நான் என் முதல் கதையில் செய்தது தான்.
வாழ்த்துக்கள் இனி..!!

இனியவள்
02-10-2007, 02:04 PM
ஆஹா பூ நீங்கள் வேற
இங்கு தவறு செய்தாலும்
மண்டையில் குட்டி தட்டிக்கொடுக்கும்
தோழர்களும் ஆசன்களும் உண்டு :icon_rollout:
அந்த தைரியத்தில் தான் மனதில்
தோன்றியதை கவிதையாகவும் கதையாகவும்
எழுத முடிகிறது வேகமாய்...:p

aren
02-10-2007, 04:33 PM
அழகான கதை. கதையில் வரும் கதாநாயகன் ஓட்டும் வண்டியைவிட வேகமாய் போகிறது. பாராட்டுக்கள் இனியவள். இங்கேயும் உங்கள் கை ஓங்கட்டும்.

அடுத்து பூமகளும் இங்கே வருவார்கள், வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

இனியவள்
02-10-2007, 07:36 PM
நன்றி ஆரென் அண்ணா

பூமகள் முன்னே இனியவள் பின்னே

ஆரென் அண்ணா
இனியவள் கால்த்தடம் பதிச்சுட்டா
ஏற்கனவே :icon_rollout:


வாழ்த்துக்கு நன்றி அண்ணா

தென்னவன்
05-10-2007, 03:08 PM
அருமையாக இருந்தது ஆரம்பத்தில்...
இறுதி முடிவு தான் கலங்கடித்தது என் மனதை..
இது கதைக்கு மட்டும் இருக்க வேண்டுகிறேன்!!!!:traurig001::traurig001:

மலர்
07-10-2007, 02:30 PM
இவனை விட வேகமாய் எமன் இவனைத் தொடர்வதை அறியாமல் அவன் வேகமே அவன் வாழ்வை முடித்திட அவன் மரணித்ததை ஏற்க மறுத்த இவள் இதயம் காத்துக்கிடக்கிறது அவன் வருகைக்காய்...!

வார்த்தையை கோர்வையாய் கொடுப்பது எப்படி என்று சொல்லலையே,,,?

இணைய நண்பன்
07-10-2007, 09:00 PM
முதல் முயற்சி என்றாலும் கதைக்கரு -கதை நன்றாக இருக்கிறது.கொஞ்சம் கதையை நீட்டினால் இன்னும் நன்றாக வரும்.நல்ல காதாசிரியராக மாறுவீர்கள்.வாழ்த்துக்கள்

மனோஜ்
08-10-2007, 11:28 PM
முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள்
கதை அருமை முடிவு கொடுமை வாழ்த்துக்கள் இனி
இனி தொடர்ந்து எழுத

அக்னி
15-10-2007, 12:49 PM
முதலில், முதல் கதைக்கு பாராட்டுக்கள்...

வர்ணனைகள் அழகு. கவிதையில் கலக்கிய உங்களுக்கு இது இலகுதான்.
ஆனால், வர்ணனைகளின் அளவிற்கு கதையின் பரிமாணம் காணாதது போலுள்ளது.
ரசிக்க வைக்கும் வசனநடை உங்களிடம் உள்ளது.
உரையாடல்களையும், திடீர் திருப்பங்களையும் கதையில் இளைக்கும்போது, மிக்க அழகு பெறும்.
சம்பவங்களை இன்னமும் காட்சிப்படுத்துங்கள்...
மயூ அவர்களின் கருத்தை, கருத்திற்கொள்ளுங்கள்...

தொடர்ந்தும் எழுதுங்கள்... சிறந்த கதாசிரியர் என்ற புகழ் கிடைக்கவும் வாழ்த்துகின்றேன்.

முதற்கதைக்காக மனமுவந்து 500 iCash.

நேசம்
15-10-2007, 08:40 PM
முதல் க(வி)தை க்கு எனது வாழ்த்துக்கள். பின்னூட்டங்களை கண்டு அதற்கு ஏற்ற மாதிரி பல படைப்புகளை தாருங்கள்.