PDA

View Full Version : குயில்கள்..



சூரியன்
25-09-2007, 04:26 PM
கண்ணயர்தேன்
காக்கை கூட்டினில்
நிற வேறூபாடற்ற நிலம்
அங்கும் வேற்றுமை குயிலிலிருந்து
சற்று உணவு பிரச்சனைதான்
ஆனாலும் பகிர்ந்து கொண்டோம்
பகுத்தறிவில்லாமல்,!
நிலத்தில் வீடுகட்ட
நிறைய செலவாகும்
மரத்தில் கூடு கட்ட
குச்சிகளே செலவாகியது
காணி நிலம்
வேண்டும்மனிதர்களுக்கு
காணும் இடமெல்லாம்
மரம் வேண்டும்
அது எங்களுக்கு!
ஒரு வழியாய் உருபெற்றேன்
அதுவும் நிலையாய் பெற்றேன்...

சாராகுமார்
25-09-2007, 04:40 PM
அருமையான கவிதை.மரம் வெட்டுவதால் இனி குயிலுக்கும் கூடு கட்ட இடம் கிடைக்காது.

பாராட்டுக்கள்.

jpl
26-09-2007, 12:07 AM
ஆனாலும் பகிர்ந்து கொண்டோம்
பகுத்தறிவில்லாமல்,!

காணும் இடமெல்லாம்
மரம் வேண்டும்
அது எங்களுக்கு!
ஒரு வழியாய் உருபெற்றேன்
அதுவும் நிலையாய் பெற்றேன்...
முகத்திலறையும் உண்மைகள்.நன்று உரைத்தனை சூரியன்.சூரியனல்லவா சுட்டெரிக்கின்றது.

ஷீ-நிசி
26-09-2007, 04:27 AM
நிலத்தில் வீடுகட்ட
நிறைய செலவாகும்
மரத்தில் கூடு கட்ட
குச்சிகளே செலவாகியது

சூரியன் கவிதை ரொம்ப நல்லாருக்கே... ஆச்சரியமாகவும் இருக்கிறது. ஏன் உங்களிடமிருந்து கவிதைகள் வருவதில்லையென்று...

தொடருங்கள்! அருமை!

சிவா.ஜி
26-09-2007, 04:52 AM
மிக வித்தியாசமான சிந்தனை.அழகான வரிகளில் அசத்தும் கருத்து.கண்டபடி மரங்களை வெட்டி அநீதி விளவிக்கும் இந்த மனித ஜாதிக்கு மரவாழிகளின் சிரமம் புரிவதில்லை.அயல்மனிதன் வாழும் வீடிடிக்கும் இவர்களுக்கு கூடு கலைப்பது விளையாட்டு.திருந்த வேண்டும்.
பறவைகள் இன்னும் இவர்களுக்கு எத்தனைதான் பாடமெடுப்பது.....
அருமையான கவிதை சூரியன்.வாழ்த்துக்கள்.

ஓவியன்
29-09-2007, 10:45 AM
சூரியன்!!!

சின்னக் கரு ஆனால் ஆழமானது...
உங்கள் வார்த்தையாடல்கள் பிரமாதம்...

இன்னும் இன்னும் நிறைய எழுதுங்கள் நண்பரே...


ஆவலுடன்...
ஓவியன்!.

சூரியன்
29-09-2007, 04:07 PM
ஓவியன், சாராகுமார், சிவா.ஜி, ஷீ-நிசி, jpl
விமர்சனமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..

இளசு
30-09-2007, 09:33 AM
பட்சி சாதி நீங்க - எங்க
பகுத்தறிவாளரைப் பாக்காதீங்க..
பட்சமா இருங்க
பகிர்ந்துண்டு வாழுங்க
பழக்கத்தை மாத்தாதீங்க...

பராசக்தி பாடல் நினைவுக்கு வந்தது..

மிக சுருக்கமாக பல சேதிகள் சொல்லியிருக்கிறார் சூரியன்..


காக்கைக் கூட்டினில் குயில்கள்!
நிறம் ஒன்றென்றாலும் இரைப் பிரசினை!
இடம் அமைந்தது இறுதியாக - நிலையாக!

புலம் பெயர்ந்தது புள்ளினம் மட்டுமா?
உவமைக்குள் இன்னோர் உண்மை புதைந்ததா?


வாழ்த்துகள் சூரியன்!

சூரியன்
30-09-2007, 09:34 AM
பட்சி சாதி நீங்க - எங்க
பகுத்தறிவாளரைப் பாக்காதீங்க..
பட்சமா இருங்க
பகிர்ந்துண்டு வாழுங்க
பழக்கத்தை மாத்தாதீங்க...

பராசக்தி பாடல் நினைவுக்கு வந்தது..

மிக சுருக்கமாக பல சேதிகள் சொல்லியிருக்கிறார் சூரியன்..


காக்கைக் கூட்டினில் குயில்கள்!
நிறம் ஒன்றென்றாலும் இரைப் பிரசினை!
இடம் அமைந்தது இறுதியாக - நிலையாக!

புலம் பெயர்ந்தது புள்ளினம் மட்டுமா?
உவமைக்குள் இன்னோர் உண்மை புதைந்ததா?


வாழ்த்துகள் சூரியன்!


தங்களின் ஆழமான விமர்சனத்திற்கு நன்றி அண்ணா..!

க.கமலக்கண்ணன்
30-09-2007, 09:41 AM
இனியாவது மரத்தை வெட்டுவது குறையுமா

இன்புற்று வாழ வமது வாழ்வில் பல மரங்களை

இனி வளர்திடுவோம். அருமையான கவிதை நண்பா