PDA

View Full Version : உன்னை மாத்திடுவேன்!!!



aren
25-09-2007, 04:04 PM
மாத்திடுவேன்
உன்னை மாத்திடுவேன்
என்றாள்!!!

என்னை நல்லவனாக
மாத்திவிடுவாள்
என்று நினைத்தேன்!!!

ஒரு நாள்
என்னையே மாத்திவிட்டு
வேறொவனுடன் சென்றாள்!!!

அமரன்
25-09-2007, 04:11 PM
என்னமா காட்டுறாங்க சினிமா? ரொம்ப விவரமாத்தான் இருக்க வேண்டும் போல...

உண்மையிலேயே நீங்கள் மாறிட்டீங்கண்ணா...
உங்கள் கவிபூக்கள் மலரும் வேகம் பிரமிக்க வைக்கிறது..
பராட்டுகள்..தொடருங்கள்..

சூரியன்
25-09-2007, 04:14 PM
இப்பவாது புரிஞ்சுதே பாத்து இருந்துக்கங்க...கவிதை நன்றாக இருக்கிறது அண்ணா...

இனியவள்
25-09-2007, 04:15 PM
ஆரென் அண்ணா
என்னங்கண்ணா இப்படி சொல்லிப்போட்டியள் :eek:

மனதை மாற்றியவள் மாறட்டும்
மாறாமல் காத்திருப்பவர்களிடம்
ஓப்படைத்திடுங்கள் வாழ்வை :D

அண்ணா கவிதையின் வேகம்
கூடட்டும் குறையாமல்

குறைஞ்சால் பிச்சுப்போடுவன் பிச்சு

Narathar
25-09-2007, 04:16 PM
உண்மையிலேயே நீங்கள் மாறிட்டீங்கண்ணா...
உங்கள் கவிபூக்கள் மலரும் வேகம் பிரமிக்க வைக்கிறது..
பராட்டுகள்..தொடருங்கள்..

அவள் மாற்றியதால் தான்
அரேன் கவிஞ்சராக மாறினாரோ?
வாழ்த்துக்கள் - கவிதைக்கு சொன்னேன்

சாராகுமார்
25-09-2007, 04:24 PM
மாத்திடுவேன்
உன்னை மாத்திடுவேன்
என்றாள்!!!

என்னை நல்லவனாக
மாத்திவிடுவாள்
என்று நினைத்தேன்!!!

ஒரு நாள்
என்னையே மாத்திவிட்டு
வேறொவனுடன் சென்றாள்!!!

அருமை ஆரென் அவர்களே.அருமையான வரிகள்.பாராட்டுக்கள்.

என்னவன் விஜய்
25-09-2007, 07:57 PM
நன்றாக உள்ளது ஏமாற்றம்.....
நன்றி

ஷீ-நிசி
26-09-2007, 04:21 AM
மாத்திடுவேன் என்பதற்கு பதிலாய் மாற்றிடுவேன்.. என்று வார்த்தையினை உபயோகபடுத்துங்கள் ஆரெனாரே, சொல் வழக்கிலே எழுதுவது கவிதைக்கு அவ்வளவாய் அழகு தராது....

மாற்றிடுவேன்! மாற்றிடுவேன்!
என்றுரைத்தாயே!

நானுந்தான் நினைத்தேன்,
என் பழக்க வழக்கங்களை
மாற்றிடுவாயென்று..

பின்னர்தான் தெரிந்தது -நீ
என்னையே (ஏ)மாற்றிவிட்டாய் என்று!

மயூ
26-09-2007, 04:30 AM
ஹா. ஹி.. ஹி...
என்னை மாத்துவேன்
என்று சொல்லி விட்டு
மாறுதியில் ஏறி மாறிவிட்டாள்!!!!

ஓரே ஜோக்குத்தான் போங்க...

aren
26-09-2007, 12:06 PM
என்னமா காட்டுறாங்க சினிமா? ரொம்ப விவரமாத்தான் இருக்க வேண்டும் போல...

உண்மையிலேயே நீங்கள் மாறிட்டீங்கண்ணா...
உங்கள் கவிபூக்கள் மலரும் வேகம் பிரமிக்க வைக்கிறது..
பராட்டுகள்..தொடருங்கள்..


நன்றி அமரன். உங்களையெல்லாம் கொஞ்சம் பயமுறுத்தலாம் என்று நினைத்ததால்தான் பல திரிகள் தொடர்ந்து வருகின்றன.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
26-09-2007, 12:06 PM
இப்பவாது புரிஞ்சுதே பாத்து இருந்துக்கங்க...கவிதை நன்றாக இருக்கிறது அண்ணா...

நான் பார்த்துத்தான் இருக்கிறேன் சூரியன், அவங்களும் பார்க்கனுமே. அங்கேதானே பிரச்சனை.

aren
26-09-2007, 12:08 PM
ஆரென் அண்ணா
என்னங்கண்ணா இப்படி சொல்லிப்போட்டியள் :eek:

மனதை மாற்றியவள் மாறட்டும்
மாறாமல் காத்திருப்பவர்களிடம்
ஓப்படைத்திடுங்கள் வாழ்வை :D

அண்ணா கவிதையின் வேகம்
கூடட்டும் குறையாமல்

குறைஞ்சால் பிச்சுப்போடுவன் பிச்சு

நன்றி இனியவள். என்ன செய்வது அதைத்தானே செய்யவேண்டும்.

வெள்ளை எழுத்தில் எழுதி இப்படி பயமுறுத்தவேண்டுமா?

நான் ரொம்பவும் நல்லவங்க.

aren
26-09-2007, 12:09 PM
அவள் மாற்றியதால் தான்
அரேன் கவிஞ்சராக மாறினாரோ?
வாழ்த்துக்கள் - கவிதைக்கு சொன்னேன்

நன்றி நாரதர். நீங்கள் எனக்கு வாழ்த்து சொல்லமாட்டீர்கள் என்று தெரியும்.

aren
26-09-2007, 12:10 PM
அருமை ஆரென் அவர்களே.அருமையான வரிகள்.பாராட்டுக்கள்.


நன்றி சாரா. உங்களுக்கும் அனுபவம் இருக்கிறது போலிருக்கு.

aren
26-09-2007, 12:11 PM
நன்றாக உள்ளது ஏமாற்றம்.....
நன்றி

ஏமாற்றம் உங்களுக்கு நன்றாக இருக்கிறது. ஹீம், என்ன செய்வது உங்களை.

aren
26-09-2007, 12:12 PM
மாத்திடுவேன் என்பதற்கு பதிலாய் மாற்றிடுவேன்.. என்று வார்த்தையினை உபயோகபடுத்துங்கள் ஆரெனாரே, சொல் வழக்கிலே எழுதுவது கவிதைக்கு அவ்வளவாய் அழகு தராது....

மாற்றிடுவேன்! மாற்றிடுவேன்!
என்றுரைத்தாயே!

நானுந்தான் நினைத்தேன்,
என் பழக்க வழக்கங்களை
மாற்றிடுவாயென்று..

பின்னர்தான் தெரிந்தது -நீ
என்னையே (ஏ)மாற்றிவிட்டாய் என்று!


மாற்றிடுவேன் என்றுதான் முதலில் எழுதினேன் ஷீ. ஆனால் அது கொஞ்சம் ஒட்டாதது மாதிரி இருந்தது, அதான் மாத்திவிட்டேன்.

கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கவேண்டும் என்று விரும்பியதால், படிப்பவர்கள் கொஞ்சம் நெருங்கிவர இந்தமாதிரி மாத்திவிட்டேன் என்று எழுதினேன்.

aren
26-09-2007, 12:13 PM
மாத்திடுவேன் என்பதற்கு பதிலாய் மாற்றிடுவேன்.. என்று வார்த்தையினை உபயோகபடுத்துங்கள் ஆரெனாரே, சொல் வழக்கிலே எழுதுவது கவிதைக்கு அவ்வளவாய் அழகு தராது....

மாற்றிடுவேன்! மாற்றிடுவேன்!
என்றுரைத்தாயே!

நானுந்தான் நினைத்தேன்,
என் பழக்க வழக்கங்களை
மாற்றிடுவாயென்று..

பின்னர்தான் தெரிந்தது -நீ
என்னையே (ஏ)மாற்றிவிட்டாய் என்று!

உங்கள் கவிதை படிக்க அழகாக இருக்கிறது. ஆனால் நமக்கெல்லாம் இப்படி எழுதத்தெரியாதப்பா. ஞானம் குறைவு.

aren
26-09-2007, 12:14 PM
ஹா. ஹி.. ஹி...
என்னை மாத்துவேன்
என்று சொல்லி விட்டு
மாறுதியில் ஏறி மாறிவிட்டாள்!!!!

ஓரே ஜோக்குத்தான் போங்க...


நீங்களாவது இதை ஜோக் என்று ஒத்துக்கொண்டீர்களே. நகைச்சுவையாக ஏதாவது எழுதவேண்டும் என்று நினைத்தேன். அதை நீங்கள் ஒருவராவது புரிந்துகொண்டீர்களே, சந்தோஷம்.