PDA

View Full Version : இதயமரணம்!!டாக்டர் அண்ணாதுரை
25-09-2007, 09:48 AM
நீ உதிர்த்த சொல்லில்
உதிர்ந்ததடி நெஞ்சம்,
ஓரவிழியில்......
உத்திரமாக உதிரச் சொல் படிகங்கள்,
பகல் சுருங்கிய வேகத்தில்
இருள் படர்ந்த இதயத்தில்
நீண்ட இரவுகளின் தாக்குதலில்
துவண்டதடி தூக்கம்!
சேர்த்து சேர்த்து வைத்த
காதல் தேகம்....
காலத்தின் கோலத்தில்
வரை தாண்டிய
விதி வகுத்த சதியின்
சகதியில் புரண்டு புரண்டு அழுகிறதே.....
பார்த்து பார்த்து சிவந்த கண்களில்
ஈரமாக கசியும்
உன் எழில் ஓவிய வண்ணங்கள்,
அவலத்தின் உச்சியில்
காதல் கசிந்து காணாமல் போகிறதே.....
காதலின் காப்பியத்தில்
பழிவாங்கும் படலத்தில்
பரிதாப கதாமாந்தர்களா நாம்?
சுவாசக்குழாயில் காதலே நஞ்சாய்.....
போதுமடி இந்த இறுக்கம்,
இதயம் சுறுங்கி அழுகின்ற வேதனை......
நரகத்தின் வாசலில்
மரணங்களின் சேர்க்கையா?
காதலே...
உன்னைக் காதலித்ததற்காகவா இந்த இதய மரணம்?

ஷீ-நிசி
25-09-2007, 09:51 AM
நல்ல கவிதை!!
தலைப்பு கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும் நண்பரே!

இதயமரணம் என்று இருந்தால் நலமாக இருக்கும்.

தளபதி
25-09-2007, 09:53 AM
அழகான வார்த்தை ஜாலங்கள், காதலில் கனிந்து கசிந்து இருக்கிறது. பாராட்டுக்கள்.

இதயம்
25-09-2007, 09:58 AM
அறிவிப்பு: இதயம் மரணம்!!

அடப்பாவிகளா..! தலைப்பை படிச்சிட்டு நானே கொஞ்சம் ஆடிப்போயிட்டேன்..!! ஷீ சொன்ன மாதிரி தலைப்பை மாத்திடுங்க. இல்லேன்னா எனக்கு மலர்வளையம் வர ஆரம்பிச்சிடும்..!:D

கவிதை நன்றாக இருக்கிறது..! பாராட்டுக்கள்..!!

அன்புரசிகன்
25-09-2007, 09:58 AM
நண்பரே... உங்கள் தலைப்பை மாற்றியுள்ளேன். சற்றே சங்கடமான தலையங்கம். பதிந்த உங்களில் எந்த வித பிழையும் இல்லை.

பொறுத்தருள்க பெருந்தகையே...

jpl
25-09-2007, 10:11 AM
உன்னைக் காதலித்ததற்காகவா இந்த இதய மரணம்?
மரணித்த இதயத்திலிருந்த வந்தது..அற்புதக் கவி ஒன்று.
ஒ மரணமே இதற்காகத்தான் இக்கவியின் இதயத்தைக் கொண்டாயோ!!!

ஷீ-நிசி
25-09-2007, 10:17 AM
அறிவிப்பு: இதயம் மரணம்!!

அடப்பாவிகளா..! தலைப்பை படிச்சிட்டு நானே கொஞ்சம் ஆடிப்போயிட்டேன்..!! ஷீ சொன்ன மாதிரி தலைப்பை மாத்திடுங்க. இல்லேன்னா எனக்கு மலர்வளையம் வர ஆரம்பிச்சிடும்..!:D

கவிதை நன்றாக இருக்கிறது..! பாராட்டுக்கள்..!!

நிஜமாவே நான் ஆடிப்போயிட்டேன்ப்பு...

தலைப்பில் அறிவிப்பு என்பதையும் நீக்கினால் நலமாக இருக்கும்.;)

டாக்டர் அண்ணாதுரை
26-09-2007, 01:34 AM
அன்பிற்கினிய நண்பர்களே,
கவிதையின் வழி வெகு நாட்களுக்குப் பிறகு அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நண்பர் 'இதயம்' அவர்களே மன்னியுங்கள்........
அன்புரசிகரே, தலைப்பை 'இதயம்' மகிழ மாற்றியதற்கு நன்றி.
இதய மகிழ்வோடு.....

சுகந்தப்ரீதன்
26-09-2007, 03:33 AM
அருமையாக உள்ளது ஆனந்த் உங்களின் கவிதை... காதலின் வலியை காட்சிபடுத்திய விதம் வித்தியாசமாக இருக்கிரது எனக்கு... வாழ்த்துக்கள் நண்பரே...

அமரன்
28-09-2007, 09:33 AM
ஓவியங்களின் கரைவில்
இதயங்கள் கதறும்
இதயங்களின் கதறல்
காவியங்களாக மாறும்..

ஆனந்தம் வரும்வரை
மூச்சு விடும் இதயம்..
வரும்வேளையில்
மரணித்து இருக்கும்.

பாராட்டுகள் ஆனந்த் அவர்களே.

இனியவள்
28-09-2007, 09:38 AM
கவிதையும் கவிதையாஇ அழகு படுத்தி இருக்கும்
வரிகளும் அழகு வாழ்த்துக்கள் ஆனந்

இலக்கியன்
28-09-2007, 07:21 PM
அழகான படைப்பு வாழ்த்துக்கள்

Mano.G.
29-09-2007, 01:38 AM
ஆகா!!! உங்களிடமிருந்து இன்னுமொரு கவிதை ,
உலகம் சுற்றி பல பணிகளூடே இந்த கவிதையை
நமக்கு படைத்தமைக்கு நன்றி
மேலும் பல கவிதைகளை படைத்து
சிறப்பு சேர்க்க வாழ்த்துக்கள்

மனோ.ஜி