PDA

View Full Version : புன்னகை.....!



வசீகரன்
25-09-2007, 07:35 AM
இதயங்கள் இணைவது எதனாலே...
இணக்கங்கள் கூடும் எதனாலே...

கதவுகள் திறப்பது எதனாலே....
கவலைகள் களைவது எதனாலே...

கனிவுகள் மலர்வது எதனாலே...
எதிரியும் இடர்வது இதனாலே....

ஏக்கங்களும் எடை குறையும் இதனாலே...
நண்பர்கள் நாடி வருவார் எதனாலே...

காதல்கள் மலர்வது இதனாலே
காதலர்கள் மலர்வதும் இதனாலே....
காயங்கள் மறைவதும் இதனாலே..

கவிதைகள் கடை வழிந்து வரும் தன்னாலே

இதயங்கள் இளகி விடும் இதாலே

இளையவர்களிடம் அழகு கூடும் இதனாலே...
ஈகையோரிடத்தில் தன்மை தெரியும் இதனாலே..

புன்னகை என்னும் பொன்னகை அணிவோம்....

புதுமலர் புணர்ந்திடும் அழகினை கொள்வோம்...

பூக்களாய் மலர்ந்து பூவியை நிரப்புவோம்...

புன்னகை எனும் மணம் பரப்பி யுத்த ரத்த சத்தமிலாத
புது உலகம் காண்போம்...!

kampan
25-09-2007, 07:44 AM
அழகான கவிதை வசீகரா. பாராட்டுக்கள்

உன் புன்னகையில் இருப்பது என்ன பொன்னகையா
பெண்கள் கண்களெல்லாம் உன் முன்னருகில்
உன் வார்த்தையில் இருப்பது என்ன வளையல்களா
பெண்களுக்கெல்லாம் பிடிக்கிறது

சிவா.ஜி
25-09-2007, 07:44 AM
ஒரு நூற்றாண்டு பகையையும் ஒரு புன்னகை போக்கிவிடும் என்பது சத்தியமான உண்மை.அதனாலேயே 'பொன்நகையை விட புன்னகை சிறந்தது'என்பார்கள்.
அழகாக சித்தரித்திருக்கிறீர்கள் வசீகரன்.வாழ்த்துக்கள்.

அமரன்
25-09-2007, 08:34 AM
மலையை அசைக்கும்
வலிமை ஆயுதம்
புன்னகை..!

அணுவை துளைக்கும்
துல்லியமான ஆயுதம்
புன்னகை

பாராட்டுகள் வசீகரன். இடம் அறிந்து போக்கும் சின்ன புன்னகையால் எதுவும் முடியும். தொடருங்கள்.

ஷீ-நிசி
25-09-2007, 09:15 AM
புன்னகை(க்கவைத்த) கவிதை

வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

இலக்கியன்
25-09-2007, 09:39 AM
புன்னைகக்கவிதை புன்னகைக்கின்றது வாழ்த்துக்கள் வசீகரன்

அக்னி
25-09-2007, 10:49 AM
சிந்தும் புன்னகை,
உறவுகளுக்குத் திறவுகோல்...

பாராட்டுக்கள் வசீகரன்..
புன்னகைக் கவிதை... கவிதைகளில் ஒரு பொன் நகை....

வசீகரன்
26-09-2007, 04:58 AM
நேற்று இந்த "புன்னகையை" மன்றத்தில் சமர்ப்பித்து விட்டு
எனது பணிகளை பார்க்க சென்று விட்டு.... மீண்டும் மன்றத்தை அணுகிய போது
கணினி என்னை ஊட்சென்று பார்க்க அனுமதிக்கவில்லை....! பாஸ்*வர்ட் தவறு
என்று....காட்டியது.... என்ன காரணம் என்று தெரியவில்லை... தற்போது சரியாகிவிட்டது
சரியான குறியீடு பயன்படுத்தியபோதும் இவ்வாறு ஆனது... என் என்று தெரியவில்லை...? நேற்று தங்கள் யாவரின் பின்னூட்டங்களையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது...! நண்பர்கள் மன்னிக்கவும்....!

என்றும் நட்புடன்
வசீகரன்

ஓவியன்
29-09-2007, 11:18 AM
பொன்னகைகளால் சாத்திக்க இயலாத எத்தனையோ விடயங்களை ஒரு சிறு புன்னகை சாதித்க்கும் திறன் படைத்தது....

பாராட்டுக்கள் வசீகரன்!!!

உங்கள் புன்னகை தொடந்து இங்கே சிந்தட்டும்....!! :)