PDA

View Full Version : வெட்டியாயிரு!!சிவா.ஜி
25-09-2007, 05:06 AM
வெட்டியாயிரு
வெறுப்புக்'களை'
வெட்டியாயிரு!

மடையனாயிரு
மான்புகளைத் தேக்கிவைக்கும்
'மடை'யனாயிரு!

பொறுக்கியாயிரு
பொல்லாததில் நல்லதைப் பொறுக்கும்
பொறுக்கியாயிரு!

கசுமாலமாயிரு
கசடு மாய்க்கும்
'கசு'மாலமாயிரு!

மூடனாயிரு
மூட பழக்கங்களுக்கு வாசல்
'மூட'னாயிரு

சோமாறியாயிரு
சோகம் மாற்றும்
'சோ'மாறியாயிரு!

அறிவிலியாயிரு
அழிவுண்டாக்கும்
'அறிவி'லியாயிரு!

பூமகள்
25-09-2007, 05:21 AM
அருமை சொல்லாடல்..:icon_b:
திட்டும் வார்த்தைகளுக்குள்ளும் ஓர் அழகிய புதிய அர்த்தம் கற்பித்த உங்களின் பாசிடிவ் அப்ரோச் (நேர்மறைச் சிந்தனை) உண்மையில் வியக்க வைக்கிறது.
வித்தியாசமான முயற்சி... அழகான கவிக் கோர்வை.
இனி யார் திட்டினாலும், எனக்கு உங்கள் கவிதை தான் நினைவுக்கு வரும்..!!:icon_rollout:
பாராட்டுக்கள் சிவா அண்ணா.

ஜெயாஸ்தா
25-09-2007, 05:24 AM
வஞ்சப்புகழ்ச்சி அணியிலும் வெளுத்துவாங்குறீங்க சிவா...! 23-ம் புலிகேசியில் வடிவேலுவைப் புகழ்ந்து இது மாதிரி ஒரு கவிதை வரும் அதை ஞாபகம்படுத்திவிட்டீர்கள். ஆனால் அதிலிருந்து இது வித்யாசப்படுகிறது. கலக்குங்க...!

lolluvathiyar
25-09-2007, 05:28 AM
ஆகா நெகடிவ் சொற்களை பாசிட்டிவாக காட்டி அற்புதம் நிகழ்த்தி விட்டீர்கள். சூப்பர் சிந்தனை

ஷீ-நிசி
25-09-2007, 05:31 AM
இம்சை அரசன் படத்தில் வடிவேலுவை புலவர் இப்படி கலாய்த்துவிட்டு பின் விளக்கம் கொடுப்பார்...

அது நினைவுக்கு வருகிறது...

சிவா... நல்ல வித்தியாசமான வார்த்தை விளையாட்டு கவிதை....

சிவா.ஜி
25-09-2007, 06:54 AM
[COLOR="DarkSlateGray"]
இனி யார் திட்டினாலும், எனக்கு உங்கள் கவிதை தான் நினைவுக்கு வரும்..!!:icon_rollout:


அதேதான் தங்கையே...இனி யாராவது திட்டினால்..அர்த்தம் புரியாம திட்டறதப்பாருன்னு...சிரிச்சிக்கிட்டே வந்துடலாம்...ஹா..ஹா..ஹா
மிக நன்றி பூமகள்.

சிவா.ஜி
25-09-2007, 06:56 AM
வஞ்சப்புகழ்ச்சி அணியிலும் வெளுத்துவாங்குறீங்க சிவா...! 23-ம் புலிகேசியில் வடிவேலுவைப் புகழ்ந்து இது மாதிரி ஒரு கவிதை வரும் அதை ஞாபகம்படுத்திவிட்டீர்கள். ஆனால் அதிலிருந்து இது வித்யாசப்படுகிறது. கலக்குங்க...!

ஆமாம் ஜே.எம் அந்த புலிகேசிதான் இன்ஸ்பிரேஷன்.மிக்க நன்றி.

சிவா.ஜி
25-09-2007, 06:57 AM
ஆகா நெகடிவ் சொற்களை பாசிட்டிவாக காட்டி அற்புதம் நிகழ்த்தி விட்டீர்கள். சூப்பர் சிந்தனை

சும்மா ஒரு வித்தியாசத்துக்குத்தான் வாத்தியாரே...ஷீ-நிசியின் பாட்டுக்கு பீட்டு எழுதும்போது லேசாக தோன்றியது பிறகு டெவலெப் செய்து விட்டேன்.நன்றி தலைவரே.

சிவா.ஜி
25-09-2007, 06:59 AM
இம்சை அரசன் படத்தில் வடிவேலுவை புலவர் இப்படி கலாய்த்துவிட்டு பின் விளக்கம் கொடுப்பார்...
அது நினைவுக்கு வருகிறது...
சிவா... நல்ல வித்தியாசமான வார்த்தை விளையாட்டு கவிதை....

சரியாகச் சொன்னால் நீங்கள் ஆரம்பித்த திரிதான் இதற்கு ஆரம்பம்..கூடவே அந்த புலிகேசி காட்சியும்தான்.மிக்க நன்றி ஷீ-நிசி.

அமரன்
25-09-2007, 08:29 AM
அட போட்டு திரும்பப் படிக்க வைக்கும் சொல்லாடல் மிகுந்த கவிதை.பாராட்டுகள் சிவா. சின்ன வயதில் எனது ஆசிரியர் சொன்னது ஞாபகத்தில் வருகிறது...சும்மா இரு என்று சொல்வதில் அவர் சொன்ன அர்த்தம்..

சு இல் இறுதி உ
ம் ஒரே எழுத்து ம்
மா இல் இறுதி ஆ

ஆ உ ம் தொடர்ச்சியாக உச்சரிக்க ஓங்கார ஒலி வரும்...மனதுக்கு இதம் தரும்.

சிவா.ஜி
25-09-2007, 08:49 AM
என்னையும் அட போட வைத்தது உங்களின் 'சும்மா'வுக்கான இலக்கண விளக்கம் அமரன்.நல்லாசிரியர் கிடைத்திருக்கிறார் உங்களுக்கு.(அதுதான் உங்கள் எழுத்து'கன'த்திலேயே தெரிகிறதே)மிக்க நன்றி அமரன்.

இனியவள்
25-09-2007, 08:52 AM
அட போட வைக்கிறது உங்கள்
கவிதை சிவா வாழ்த்துக்கள்

உன்னை அப்படிச் சொன்னால்
நீ இப்படி எடுத்துக்கொள் அர்த்தத்தை
எனி இப்படி திட்டீட்டாங்களே என்று
கோபப்பட்டுக் கொண்டு இருக்கத் தேவையில்லை :cool:

சிவா.ஜி
25-09-2007, 08:57 AM
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைக் கான்பதில் மகிழ்ச்சி இனியவள்.நலமா?படிப்பு எப்படி போகிறது? மிக்க நன்றிகள்.

அமரன்
25-09-2007, 09:01 AM
என்னையும் அட போட வைத்தது உங்களின் 'சும்மா'வுக்கான இலக்கண விளக்கம் அமரன்.நல்லாசிரியர் கிடைத்திருக்கிறார் உங்களுக்கு.(அதுதான் உங்கள் எழுத்து'கன'த்திலேயே தெரிகிறதே)மிக்க நன்றி அமரன்.
ஆம் சிவா. அவரிடம் நான் கற்றுக்கொண்டவை அதிகம். ஒருவர் சொல்வதை நேர்மறையாக சிந்தித்து உள்வாங்கிக்கொண்டால் உயரலாம் என்பதை எனக்கு ஊட்டிய புண்ணியமூர்த்தி அவர். அதே சிந்தனையை உங்கள் இக்கவியும் சொல்கிறது...மீண்டும் பாராட்டுகள்.

சிவா.ஜி
25-09-2007, 09:10 AM
மகிழ்ச்சியாக இருக்கிறது அமரன்.நாமெல்லாம் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.அப்படிப்பட்ட நல்ல ஆசிரியர்களை அடைந்ததற்கு.கடவுளுக்கு நன்றி.

இலக்கியன்
25-09-2007, 09:45 AM
கருத்துக்களை மாற்றி புதுமையாக கவி படைத்தீர்கள் நன்றி

அக்னி
25-09-2007, 10:26 AM
பாராட்டுக்கள் சிவா.ஜி...
வாழ்வியலின் எதிர்மறைகளை, எமக்குச் சார்பாகக் கொண்டால்
இயல்பு வாழ்வு எம்முடையதே..

ஏதோ நம்மால முடிஞ்ச சில...

துறவியாயிரு உலக ஆசைகளில்
மறதியாயிரு செய்த உதவிகளில்

கோழையாயிரு கொஞ்சும் மழலைகளில்
ஏழையாயிரு மிஞ்சும் தீமைகளில்

விரோதியாயிரு அக்கிரம வேளைகளில்
கபோதியாயிரு மூட நம்பிக்கைகளில்

சிவா.ஜி
25-09-2007, 12:30 PM
கருத்துக்களை மாற்றி புதுமையாக கவி படைத்தீர்கள் நன்றி

மிக்க நன்றி இலக்கியன்.

சிவா.ஜி
25-09-2007, 12:31 PM
ஏதோ நம்மால முடிஞ்ச சில...

துறவியாயிரு உலக ஆசைகளில்
மறதியாயிரு செய்த உதவிகளில்

கோழையாயிரு கொஞ்சும் மழலைகளில்
ஏழையாயிரு மிஞ்சும் தீமைகளில்

விரோதியாயிரு அக்கிரம வேளைகளில்
கபோதியாயிரு மூட நம்பிக்கைகளில்

ஆஹா...பிரமாதம் அக்னி.எல்லாமே அருமை.வாழ்த்துக்கள்+நன்றிகள்.

ஓவியன்
26-09-2007, 02:56 AM
அன்பு சிவா!

"வாழ்க்கையில் நாம் எதனைச் செய்கின்றோம் என்பது முக்கியமல்ல, அந்த விடயத்தை எதற்காகச் செய்கின்றோம் என்பதே முக்கியம்...."

இந்த அரிய தத்துவம் மீள உங்கள் வரிகளிளினாலே இடித்துரைக்கப்பட்டுள்ளது....

வார்த்தைகளை நீங்கள் கையாண்ட விதம் அருமை சிவா...
அது தான் இந்தக் கவிதையின் சிறப்புக் கூட.....

பாராட்டுக்கள் சிவா.....
தொடருங்கள் உங்கள் வித்தியாசமான முயற்சிகளை.....

சிவா.ஜி
26-09-2007, 04:36 AM
பாராட்டுக்கு மிக்க நன்றி ஓவியன்.எதையும் பாசிடிவ்-ஆக எடுத்துக்கொள்வது இப்போதைய டென்ஷனான காலக்கட்டத்தில் மனம் சஞ்சலப்படாமலிருக்க மிகவும் உதவும்.உங்கள் கருத்து மிக அருமை ஓவியன்.