PDA

View Full Version : மின்சாரக்கனவு..



rambal
16-06-2003, 12:35 PM
மின்சாரக்கனவு..

கை நீட்ட
மேக கைகுட்டை
அகப்பட்டு
கைதுடைத்து
தூக்கி எறிந்து..

நட்சத்திர கல் பொறுக்கி
வானக் குளத்தில்
தவக்களை விட்டு
பொழுது போக்கி..

ஈட்டியாய்
சிதறி ஓடும்
மின்னலை
எறிந்து பழகி...

வண்ணப்படம்
பார்க்க
வானவில்லுக்கு
தூதுவிட்டு..

குழந்தை நிலாவின்
கன்னத்தைக் கிள்ளி
வளர் மற்றும் தேய்
பிறைகளாக்கி..

பொழுது போக
பூமியை கால்பந்தாக்கி
உதைத்து
விளையாடி..

பிரபஞ்ச தேரில்
சிம்மாசனம் போட்டு
அமர்ந்திருந்த போதுதான்
கரண்ட் கட்டாகி
வியர்த்து கொட்ட..
வெறுப்போடு எழுந்தேன்!

prabha_friend
16-06-2003, 01:01 PM
என்ன ஒரு அருமையான கனவு . நல்ல வேளை கரண்ட் கட்டாகியது . இல்லையென்றால் நீங்களே ஒரு புது பிரபஞ்சம் உருவாக்கி இருப்பீர் .

நிலா
16-06-2003, 08:33 PM
நல்ல கற்பனை.பாராட்டுக்கள் நண்பரே!

Narathar
17-06-2003, 08:45 AM
ஆஹா! கனவில் எங்கள் உலகுக்கு ஒரு "விசிட்" அடித்திருக்கின்றீர்கள்
வாழ்த்துக்கள்