PDA

View Full Version : காதல் குளிர் - 1



gragavan
24-09-2007, 06:23 PM
காதல் குளிர் - 2 http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12549 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12549)

"ஏய் ப்ரகாஷா......லேப்டாப்புக்குள்ளயே போயிறாத. மண்டைய வெளியவும் நீட்டு. நான் நாளைக்கு டெல்லிக்குப் போறேன். அதான் சொல்லலாம்னு வந்தேன்."

ப்ரகாஷா என்று அழைக்கப்பட்டவன் நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தான். பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் சூர்யா போல இருப்பான். அதென்ன போல. சூர்யா என்றே வைத்துக் கொள்ளுங்களேன். உங்களுக்கும் கற்பனை செய்வதற்கு எளிதாக இருக்கும்.

"ஹே! ரம்யா....வா வா உக்கார். டெல்லிக்கு என்ன திடீர்னு ப்ரயாணம்?"

அவனைச் சூர்யா என்று சொல்லி விட்டோம். அப்படியானால் ரம்யா? அசின்....வேண்டாம். வேண்டாம். ஜோதிகா என்றே வைத்துக் கொள்வோமே.

இப்பொழுது புரிந்திருக்குமே. அவன் கதாநாயகன். அவள் கதாநாயகி. அடுத்து காதல்தான். அவ்வளவுதான் கதை. ஆனால் அது எப்படி நடக்கின்றது என்று கதை முழுக்க படித்துத் தெரிந்து கொள்வோமே.

ப்ரகாஷாவும் ரம்யாவும் பெங்களூரில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கின்றார்கள். இருவரும் லீட் பதவியில் இருப்பவர்கள். தமிழ் இலக்கணப்படி சொன்னால் அவர்கள் வேலை மேய்த்தலும் மேய்க்கப்படுவதும். இவர்களிடம் இவர்களது மேனேஜர்கள் வேலை வாங்குவார்கள். அது மேய்க்கப்படுவது. இவர்கள் இருவரும் தங்களுக்குக் கீழ் ஒரு சிறிய கூட்டத்தை வைத்து வேலை வாங்குவார்கள். அது மேய்த்தல்.

வழக்கமாக தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகன் தமிழாகவும் கதாநாயகி வேறு மொழியாகவும் இருப்பார்கள். ஆனால் காதல் குளிரில் வேறு மாதிரி. ப்ரகாஷா கன்னட மகா. ரம்யா தமிழச்சி.

வேலையில் சேரும் பொழுதுதான் முதற் பழக்கம். கடந்த நான்கரை வருடங்களில் இருவரும் இவ்வளவு தூரம் வேலையிலும் நட்பிலும் முன்னேறியிருக்கின்றார்கள். இருவரும் காதலிக்கின்றார்களா என்று கேட்டால்....ஆமாம் என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம்.

உள்ளுக்குள் காதல் உண்டு. ப்ரகாஷாவிற்குத் தன் காதல் புரிந்தது விட்டது. ரம்யாவிற்கு அது இன்னமும் தெளிவாகப் புரியவில்லை. அவ்வளவுதான் விஷயம். அதைப் புரிய வைக்கத்தான் ப்ரகாஷாவும் படாதபாடு படுகிறான்.

ரம்யா ப்ரகாஷாவின் க்யூபிக்கிளில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

"என்ன திடீர்னு டெல்லி?" திரும்பவும் ரம்யாவைக் கேட்டான்.

"அட. அதுவா...நம்ம ஹெச்.ஆர் இருக்காங்கள்ள.....அதாம்ப்பா நல்லாயிருக்குறவங்களையெல்லாம் நம்ம கம்பெனியில சேத்து அவங்க வாழ்க்கையப் பாழடிக்கிறாங்களே....அவங்க டெல்லியில இருக்குற பலரோட வாழ்க்கைய வீணடிக்கனும்னு அங்க இண்டர்வியூ வெச்சிருக்காங்களாம். அதுக்குப் போகனும்னு கேட்டு மெயில் அனுப்பீருந்தாங்க. நானும் சரீன்னு சொல்லீட்டேன். ஆனா ஒரு கண்டிஷனோட. அது என்னன்னு தெரியுமா?" கேட்டு விட்டு ப்ராகாஷின் முகத்தையே ஆவலோடு பார்த்தாள்.

"என்னது?" அமைதியாகப் புன்னகையோடு கேட்டான்.

"அப்படிக் கேளு. இண்டர்வியூ ஞாயித்துக்கெழமை. ஆனா எனக்கு வியாழக் கெழமை நைட்டே பிளைட் புக் பண்ணனும்னு கண்டிஷன். வெள்ளிக்கிழமை லீவு. அது ஏன்னு தெரியுமா?" திரும்பவும் ப்ரகாஷாவின் முகத்தையே ஆவலோடு பார்த்தாள்.

"ஏன்?" மறுபடியும் அமைதியாகப் புன்னகையோடு கேட்டான்.

"அப்படிக் கேளு. நொய்டால யாரு இருக்காங்க? சப்யாவும் சித்ராவும் இருக்காங்கள்ள. அவங்க ரெண்டு பேரும் நொய்டா போய் ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு. அதுக்கப்புறம் ஃபோன்ல பேசிக்கிறதோட சரி. மெயில் அனுப்புறதோட சரி. இந்த இண்டர்வியூவச் சாக்கா வெச்சுக்கிட்டுப் பாத்திரலாம்ல. அதான். வெள்ளியும் சனியும் அவங்களோட சுத்தீட்டு ஞாயித்துக்கெழம இண்டர்வியூ எல்லாம் எடுத்திட்டு திரும்பவும் பெங்களூர். எப்படிப் பிளான்?" முகத்தை பொம்மை போல வைத்துக் கொண்டு கேட்டாள்.

அவளுடைய முகத்தைப் பார்த்துக் கஜினி சூர்யா போல ஷார்ட் டெர்ம் மெமரி லாசுக்குப் போனான். அவனுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பீ.பி.ஸ்ரீநிவாஸ் பாடினார். "நின்ன கண்ண கண்ணடியல்லி கண்டே நன்ன ரூபா (உந்தன் கண்ணின் கண்ணாடியிலே கண்டேன் எந்தன் ரூபம்)"

"ஏய்...என்ன பாத்துக்கிட்டேயிருக்க.... பொறாமையா இருக்கா? நான் போய் சப்யாவையும் சித்ராவையும் பாக்கப் போறேன்னு? சரி....எனக்கு வேலையிருக்கு. இதச் சொல்லலாம்னுதான் வந்தேன். வர்ரேன்....." சொல்லி விட்டு பதிலை எதிர்பார்க்காமல் போனாள் ரம்யா.

யாரிந்த சப்யாவும் சித்ராவும்? இவர்களும் ரம்யா ப்ரகாஷாவோடு வேலைக்குச் சேர்ந்தவர்கள்தான். ச்ப்யாவின் முழுப்பெயர் சப்யாசாச்சி. பெங்காலிப் பையன். மிஸ்டர் அண்டு மிசஸ் ஐயர் படத்தில் நடித்த ராகுல் போஸ் போல இருப்பான். சித்ரா பெங்களூர் தமிழ். அதே மிஸ்டர் அண்டு மிசஸ் படத்தில் நடித்த கொன்கொனா சென் போல இருப்பாள். இனிமேல் இவர்களை அவர்களாகவே உருவகம் செய்துகொள்ளுங்கள். இருவரும் காதலித்துக் கல்யாணமும் செய்து கொண்டு நொய்டாவிற்குப் போய் விட்டார்கள். இருவர் வீட்டிலும் நிறைய பிரச்சனைகள் இருந்ததால் நொய்டாவில் வேலை தேடிப் போய் விட்டார்கள். இருவர் வீடுகளுக்குமே அது தொலைவுதான். அந்தத் தொலைவு இருவர் வீட்டாரிடமும் நன்றாகவே வேலை செய்தது. குழந்தை பிறந்ததும் இருவீட்டுப் பிரச்சனைகளும் தீர்ந்தும் போனது.

எப்பொழுதும் ஒன்றாகவே இருந்த கூட்டணி இப்பிடிப் பிரிந்து ஒன்று மத்திய அரசாங்கமாகவும் மற்றொன்று மாநில அரசாங்கமாகவும் மாறிப் போனது. ஆனாலும் கூட்டணி ஒப்பந்தப்படி ஃபோனிலும் மெயிலிலும் விடாத தொடர்பு. ஆனால் ரம்யாவும் சரி..ப்ரகாஷாவும் சரி...நொய்டா சென்று பார்க்கவேயில்லை. இப்பொழுது ரம்யாவிற்கு அலுவலகம் வழியாக ஒரு வாய்ப்பு. ஆகையால் அவளுடைய கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்.


தொடரும்...
காதல் குளிர் - 2 http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12549 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12549)

பாரதி
24-09-2007, 06:33 PM
வாங்க இராகவன், நலமா..?

இப்போதுதான் உங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். இங்கே உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது எல்லாம் மன்றத்திற்கு வாருங்களேன் இராகவன். கதையைப் பற்றி - முடிந்த பிறகு சொல்கிறேனே.. சரியா..? வாழ்த்துகள்.

அறிஞர்
24-09-2007, 06:38 PM
ராகவனிடமிருந்து ஒரு காதல் கதை....

காதலிக்கும்பொழுது... ஏற்படும் தடுமாற்றம் ரம்யாவுக்கு...

ப்ரகாஷ்.. ரம்யா காதல் இன்னும் வளரட்டும்....

gragavan
24-09-2007, 09:27 PM
வாங்க இராகவன், நலமா..?

இப்போதுதான் உங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். இங்கே உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது எல்லாம் மன்றத்திற்கு வாருங்களேன் இராகவன். கதையைப் பற்றி - முடிந்த பிறகு சொல்கிறேனே.. சரியா..? வாழ்த்துக்கள்.

நலம் நலமறிய ஆவல் :)

எப்படி இருக்கீங்க? பேசியே ரொம்ப நாளாச்சு.

நேரமின்மைதான் ஒரே காரணம். வேலைப்பளு அழுத்தித்தான் வலைப்பூ. மன்றம் எங்குமே ஒன்றும் பதியவில்லை. அதனால்தான் அடுத்த தொடரைத் தொடங்கியாகி விட்டது.

கதை முடிந்த பிறகு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். காத்திருக்கிறேன்.

gragavan
24-09-2007, 09:37 PM
ராகவனிடமிருந்து ஒரு காதல் கதை....

காதலிக்கும்பொழுது... ஏற்படும் தடுமாற்றம் ரம்யாவுக்கு...

ப்ரகாஷ்.. ரம்யா காதல் இன்னும் வளரட்டும்....
வளரட்டும் வளரட்டும் :)

lolluvathiyar
25-09-2007, 05:36 AM
அவன் கதாநாயகன். அவள் கதாநாயகி. அடுத்து காதல்தான். அவ்வளவுதான் கதை. ஆனால் அது எப்படி நடக்கின்றது என்று கதை முழுக்க படித்துத் தெரிந்து கொள்வோமே.


வலவல என்று இழுக்காமல் எடுத்தவுடனே கதையின் கருவை கூறி விட்டீர்கள். கதையில் கையாளபடும் யுக்தி யை மூலதனமாக வைக்கபோகிறீர்கள். இந்த தைரியம் யாருக்கும் எளிதில் வராது. சபாஸ் தொடருங்கள்

பூமகள்
25-09-2007, 05:40 AM
கலக்கிட்டீங்க ராகவன் அண்ணா.
எதார்த்தமான வசன நடை.. கதைக் களம்... கரு எல்லாம் எளிதில் விளங்கிய விதம் அருமை. கதாநாயகர், நாயகி அறிமுகம் ஆஹா..சூப்பர் அண்ணா.. கண் முன் நிற்கவைத்தது கதாபாத்திரங்களை..!!
அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

பென்ஸ்
25-09-2007, 05:52 AM
வாங்க ராகவன்...
இந்த பக்கம் கொஞ்ச நாளா காணோம்...
நீங்களும் கம்பியூட்டருகுள்ள புகுந்திட்டிங்களோ????

வழக்கம் போல் , கதையை முழுவதுமாக வாசிக்காமல் கருத்து சொல்ல விரும்பவில்லை... கடைசி பாகம் வரை வாசித்து கருத்து சொல்லுறேன் ராகவா...

சிவா.ஜி
25-09-2007, 07:23 AM
பிரமாதம் ராகவன் அவர்களே...கதை இளமைதுள்ளலோடு றெக்கை கட்டி பறக்கிறது.எழுத்துநடை அபாரம்.சின்னச்சின்ன நையாண்டிகளுடன் வெகு அழகாக நகர்கின்ற கதை படிக்க சுவாரசியமாக இருக்கிறது.தொடர்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

மதி
25-09-2007, 09:26 AM
நல்ல ஆரம்பம்...
தொடருங்கள்..ஆவலுடன் காத்திருக்கிறோம்..

மலர்
26-09-2007, 12:56 PM
ராகவன் அண்ணா...
இளமை புதுமை மாதிரி இளமை துள்ளலோடு கதை ஆரம்பம்...
அடுத்த பாகத்தை இப்போதே படிக்கும் ஆர்வம்.....

மேய்த்தலும் மேய்க்கப்படுவதும் - விளக்கம் நல்லாயிருக்கு...

அன்புரசிகன்
26-09-2007, 01:29 PM
அழகாக நகர்கின்றனர் கதாநாயகன் மற்றும் நாயகி....

காதல் பரிணமிக்கட்டும்.

Narathar
27-09-2007, 07:24 AM
சரி ராகவன் எப்போ தொடரப்போரீங்க............
நல்லா வந்திருக்கு கதை

amvijay
27-09-2007, 11:40 AM
GRagavan sir
நல்ல ஆரம்பம்.தொடர வாழ்த்துக்கள்

உள்ளுக்குள் காதல் உண்டு. ப்ரகாஷாவிற்குத் தன் காதல் புரிந்தது விட்டது. ரம்யாவிற்கு அது இன்னமும் தெளிவாகப் புரியவில்லை. அவ்வளவுதான் விஷயம். அதைப் புரிய வைக்கத்தான் ப்ரகாஷாவும் படாதபாடு படுகிறான்.


இப்படி நீங்கள் யாரையாவ்து காக்க வைக்கிறிங்களா? காக்க வைக்கப்படுள்ளீர்களா?

நன்றி

அமரன்
27-09-2007, 11:48 AM
GRagavan sir
நல்ல ஆரம்பம்.தொடர வாழ்த்துக்கள்
உள்ளுக்குள் காதல் உண்டு. ப்ரகாஷாவிற்குத் தன் காதல் புரிந்தது விட்டது. ரம்யாவிற்கு அது இன்னமும் தெளிவாகப் புரியவில்லை. அவ்வளவுதான் விஷயம். அதைப் புரிய வைக்கத்தான் ப்ரகாஷாவும் படாதபாடு படுகிறான்.
இப்படி நீங்கள் யாரையாவ்து காக்க வைக்கிறிங்களா? காக்க வைக்கப்படுள்ளீர்களா?

நன்றி

வணக்கம் அன்பரே!
மன்றம் வந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். மன்ற விதிமுறைகளை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11843)ப் படிக்க எனது அன்பான வேண்டுகோள்.
புரிதலுடனான உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

என்றும் உங்களுக்காக

அக்னி
16-10-2007, 03:28 PM
ஒருவரிடமிருந்து, நேரடியாக கதை சொல்லக் கேட்பதுபோல இருக்கிறது அறிமுகங்கள்...
மேலும் இயல்பான வசனநடை, நேரில் களத்தை காட்டுகின்றது...
அடுத்த பாகத்தில் சந்திக்கின்றேன்...
பாராட்டுக்கள் ராகவன் அவர்களே...

சூரியன்
16-10-2007, 03:37 PM
ராகவன் அண்ணா கதை சுவாரசியமாக இருக்கிறது..

அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்..

அமரன்
01-11-2007, 06:33 PM
குஷி திரைபடத்தின் ஆரம்பத்தில் கதை ஒரு சில வரிகளில் சொல்லிவிடுவார் இயக்குனர். அதை மறைத்து முடிவு எப்படி இருக்கும் என திக்திக்க வைத்து தனது திறமை நிலைநாட்டி இருப்பார். இங்கே ஆரம்பம் அப்படி..தொடர்நகர்வு எப்படி? சந்தேகமே வேண்டாம் இந்தக் கதை குஷியை விஞ்சி விறு விறுக்க வைக்கும். எழுதுவது இராகவன் அண்ணா ஆச்சே...!

ஆங்காங்கே நகைச்சுவை பட்டிழை ஓடுகிறது. பணிப்பயணத்துடன் தமது சுற்றுலா அளவலாவலையும் முடிக்கும் நடைமுறைப் பாத்திரங்களை ரம்யாவில் கோர்த்திருப்பது சிறப்பு. இப்படி இருப்பார், அப்படி இருப்பார் என்பதை வாசகர்களுக்கு விளக்குவதுக்கு பல்மொழி திரைப்படக் கலைஞர்களை துணைக்கு அழைத்திருப்பது இராகவன் அண்ணா பல்மொழித்திரைப்படப் பிரியரோ என்று எண்ண வைக்கின்றது. அதன் மூலம் அவர்தம் பன்மொழிப்புலமை பிரமிக்க வைக்கின்றது.

இளசு
18-11-2007, 08:50 PM
வாழ்த்துகள் ராகவன்.

இன்றுதான் அவகாசம் கிடைத்து முதல் பாகம் படித்தேன்.

உங்கள் முத்திரை அறிமுகம், வசனங்களில் அழகாக... பாராட்டுகள்!

இன்றைய தலைமுறைக்குக் கதை சொல்ல - அதிலும் நெடுங்கதை சொல்ல
தனித்திறமை வேண்டும். அது அதிகமுண்டு உங்களிடம் என்பதை
மீண்டும் சொல்ல ஒரு தொடர்..

நொய்டா என்றதும் கவனம் ( அந்த தொடர்கொலையால்) சிதறியது.

மன்மதன்
20-11-2007, 04:50 PM
ஆரம்பமே விறுவிறுப்பாகத்தான் செல்கிறது...நீதான் அங்கங்கே ட்விஸ்ட் வைப்பியே.. மற்ற பாகத்தையும் படித்துக்கொண்டே கருத்துகிறேன்..