PDA

View Full Version : 1000ஆவது பதிப்பு-"வழி மாறா பயணம்.!!(நிறைவு)

பூமகள்
24-09-2007, 05:48 PM
அன்பு மன்றத்து உறவுகளே...!!
உங்களின் அன்பு ஆசியுடன் அனைவரின் நண்பராகி ஆயிரமாவது பதிப்பை கதையாக தர விழைக்கிறேன்.
உங்களின் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
எனக்கு கதை எழுதி அனுபவமே இல்லை. இது தான் என் வாழ்வில் கதை எழுத எத்தனித்த முதல் முயற்சி.
எனக்கு ஊக்கமளித்த, ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைச் சமர்பிக்கிறேன்.:icon_rollout:
**********************************************************************************************************
வழி மாறா பயணம்.....!!

"எப்படித்தான் இப்படி இருக்கியோ??? சாப்பிடக் கூட நேரமில்லாம புத்தகமும் கையுமா??" என்று
காலையில் புத்தகப்பையை எடுத்து கால அட்டவணைப்படி அடுக்கிக் கொண்டிருந்த நந்தினிக்கு சேமியாவை ஊட்டிய வண்ணமே அம்மா வித்யா புலம்பிக்கொண்டிருந்தார்.

காலை உணவின் ருசியைக் கூட நாக்கு அறியும் முன் "லபக், லபக்" என்று முழுங்கிக் கொண்டிருந்தாள் நந்தினி. ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களைச் சேகரிப்பதிலேயே அவள் கவனம் இருந்தது.

8.45 மணிக்கு பள்ளி கூடிவிடும். வேகமாக நடையைக் கட்டினால் தான் ஒன்றரை கி.மீ தொலைவில் இருக்கும் பள்ளிக்கு வழிபாட்டுக்கு முன் குறித்த நேரத்தில் போய் சேர முடியும். வழிபாட்டு கூட்டத்தில் பாட முதலாய் ஒலிவாங்கி முன் நிற்கவேண்டுமே என்று நினைத்த வண்ணமே
பரக்க பரக்க கிளம்பினாள் "போதும் அம்மா..!!" என்று ஊட்ட வந்த கையை மறித்த படியே..!!

நந்தினி - துறுதுறுப்பும், அலாதி அறிவும், அழகிய குரல் சாரீரமும் கொண்ட நல்ல பெண். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் அரசு பள்ளி மாணவி.

பள்ளியின் "செல்ல இளவரசி" தான் நந்தினி. பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி இப்படி எல்லாவற்றிலும் முதலாய் வரும் நந்தினியை தலைமை ஆசிரியர் முதல் அனைத்து ஆசிரியருக்கும் பிடித்துப் போனதில் ஆச்சர்யம் இல்லை.

குடும்பத்தில் ஏற்பட்ட ஏழ்மை நிலை அவளை செதுக்கும் ஆயுதமான நேரம் அது.

வகுப்பாசிரியர் கங்கா டீச்சர் அழைத்தார். "நந்தினி, இன்னும் கொஞ்ச நாளில் அரையாண்டுத் தேர்வு வர இருக்கிறது. எப்போதும் போல் நீ பள்ளியில் முதலாவதாய் வர திட்டமிட்டுள்ளாயா? அதில் ஒரு போட்டியை அறிவிக்கப் போகிறேன். நீ தயாராக இரு. நம் வகுப்பிற்கும் ('அ' பிரிவு)அடுத்த வகுப்பில் (ஆ பிரிவு) இருக்கும் மாணவர்களுக்குமான போட்டி அது" என்று சொன்னார்.

நந்தினி ஆர்வமுடன், "என்ன போட்டி டீச்சர்?" என்றாள்.

கங்கா டீச்சர், "சொல்கிறேன்.. வகுப்பில் வந்து அனைவரின் முன்னும் சொல்கிறேன். நீ நன்றாக தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தாயா?" என்றார்.

நந்தினி, "ஆமா டீச்சர். ஆரம்பிச்சிட்டேன்." என்றாள். பின் அவரிடம் விடைபெற்று, ஆச்சர்யத்துடனே என்னவாக இருக்கும் என்று நினைத்தவண்ணமே வகுப்பை அடைந்தாள்.

இரண்டாவது பாடப்பிரிவு, ஆங்கிலம். வகுப்பாசிரியர் கங்கா வந்தார். ஆவலுடன் நந்தினி காத்திருந்தாள்.

கங்கா டீச்சர் ஆரம்பித்தார், "அன்பு மாணவர்களே, இன்னும் 15 நாட்களில் அரையாண்டுத் தேர்வு வர இருக்கிறது. அதில் ஒரு போட்டியை வைத்திருக்கிறேன். யார் மொத்த மதிப்பெண்ணில் பள்ளியில் முதலாவதாய் வருகிறார்களோ அவர்களுக்கு ஒரு பரிசு காத்துக் கொண்டிருக்கிறது." என்று ஆச்சர்யத்தை போட்டு உடைத்தார்.

அனைவரும் மகிழ்ச்சியுடன் கைதட்டினர்.

பின் மதிய உணவு இடைவேளையில் நந்தினியையும், மற்ற ஒன்பதாம் வகுப்பைச் சேர்ந்த அவள் போலவே படிக்கும் மாணவ மாணவிகளையும் வகுப்பாசிரியர் கங்கா அழைத்திருந்தார்.

பின் பேச ஆரம்பித்தார். "நீங்க எல்லாரும் நல்ல முறையில் படித்து இந்த தேர்வில் முதலாவதாய் வர உழைக்கனும். உங்களிடன் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவே இந்த போட்டி. இதில் பொறாமைகளுக்கு இடம் இருக்கக் கூடாது. எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்."

அனைவரும் சந்தோசத்தில் மகிழ்ந்து, பின் அப்படியே செய்கிறோம் என்று தலையசைத்துத் திரும்பினர்.

நந்தினி பின் வகுப்பிற்கு வெளியில் மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு மைதானத்தைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள். இன்னும் அரைமணி நேரம் இருக்கு வகுப்பு கூட.

அப்போது, அவளையே பார்த்த வண்ணம் இருந்தது அவளின் வலது பக்கத்தில் இருக்கும் ஒன்பதாம் வகுப்பின் 'ஆ' பிரிவு கதவருகிலிருந்து ஒரு ஜோடி விழிகள்.

(பயணம் இனிதே தொடரும்...!!)

நிறைவுப் பகுதி..!! (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=276144&postcount=17)

இனியவள்
24-09-2007, 05:57 PM
தோழியே கதைப் பயணத்தில் உங்கள்
முதல் காலடி வாழ்த்துக்கள் பூமகள்

அழகாய் ஆரம்பித்து இருக்கிறது
உங்கள் கதைப் பயணம் அழகாய்
தொடர வாழ்த்துக்கள்

பூமகள்
24-09-2007, 06:01 PM
உடன் ஊக்கம் தந்த அன்புத் தோழி இனியவருக்கு நன்றிகள் பல.
தொடர்ந்து விமர்சியுங்கள் தோழியே..!!

அறிஞர்
24-09-2007, 06:32 PM
வாழ்த்துக்கள் புதுக்கதாசிரியரே...

உம் கதைப்பயணம் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்....

ஜோடி விழிகளின் பார்வை எங்கு இழுத்து செல்லுமோ...

பூமகள்
24-09-2007, 06:37 PM
நன்றிகள் அறிஞர் அண்ணா. உங்களின் உடன் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி..!!

ஜோடி விழிகளின் பார்வை எங்கு இழுத்து செல்லுமோ...
அது தானே சஸ்பென்ஸ் அண்ணா. அடுத்த பதிப்பில் விடை தெரியும்..
காத்திருங்கள் ஆவலுடன்..!!

இணைய நண்பன்
24-09-2007, 06:46 PM
கவிதையில் தடம் பதித்த நீங்கள் முதல் முயற்சியாக கதை எழுதத்தொடங்கி இருக்கிறீங்க.முதல் முயற்சி என்றாலும் தரமான கதை எழுதும் ஆற்றல் உங்கள் முதல் படைப்பில் தெரிகிறது.ஆயிரமாவது பதிவை புது முயற்சியில் ஆரம்பித்த அன்புத்தோழி பூமகளை வாழ்த்துகிறேன்.உங்கள் இலக்கியப்பயணம் தொடரட்டும்

பூமகள்
24-09-2007, 06:54 PM
மிக்க நன்றிகள் அன்புத் தோழர் இக்ராம்.
உங்களின் ஊக்கமும் வாழ்த்துக்களும் கண்டு மகிழ்ச்சி..!!
தொடர்ந்து விமர்சியுங்கள்.

அமரன்
24-09-2007, 07:05 PM
கவிதைகளை கருவாக்கி
கருத்துகளை எருவாக்கி
உருவாகிய பூமகளே...!

மன்ற மதுரகவி நீ
உதிர்க்க ஆரம்பித்திருக்கும்
கதை மடல்களின்
மூலத்துக்கு வாழ்த்துகள்...

காலையில் ஆரம்பித்து
நெருங்கும் மதியத்தில்
விட்ட இடைவேளைவரை
அழகான பயணம்...

பாராட்டுகள் சொல்லி
திருப்பத்தை எதிர்பார்க்கும்
அன்பு அண்ணன்

பூமகள்
24-09-2007, 07:09 PM
கவி மூலமே கதை விமர்சனம் அருமை அமர் அண்ணா.
உங்களின் அன்பு ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் கோடி..!!
காத்திருங்கள் திருப்பம் வரும் வரை...!!

இளசு
24-09-2007, 07:34 PM
புதிய முயற்சியில் அடியெடுத்து வைத்தமைக்கு
அண்ணனின் அன்பான வாழ்த்துகள் பூமகள்!

சரளமான நடையில்... இலகுவாக கதை நகரும் பாணி
எளிமையான அழகு.. இனிமையான வாசிப்பு..

தொடர என் ஊக்கம்!

பூமகள்
25-09-2007, 04:57 AM
உங்களின் பின்னூட்ட விமர்சனம் கண்டு மட்டற்ற ஆனந்தம் இளசு அண்ணா.
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து இந்த தங்கைக்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.

ஷீ-நிசி
25-09-2007, 05:00 AM
முதல் கதையா என்று நம்ப இயலா வண்ணம் விளையாடியிருக்கிறீர்கள் கதையின் வரிகளில், தொடரட்டும் கதையும் உங்கள் கதைத் திறமையும்...

வாழ்த்துக்கள் பூமகள்!

சிவா.ஜி
25-09-2007, 05:04 AM
பிரமாதமான தொடக்கம் பூமகள்.வெகு இயல்பாக காட்சியைக் கண்முன்னே நிறுத்தியுள்ளீர்கள்.முதல் கதையிலேயே நல்ல தேர்ச்சியிருக்கிறது.கதைக் கட்டுடன் செல்கிறது.பாராட்டுக்கள் பூமகள்.

பூமகள்
25-09-2007, 05:07 AM
மிக்க நன்றிகள் அன்புத் தோழர் ஷீ-நிசி.
உங்களின் ஊக்கம் கண்டு அளவில்லா மகிழ்ச்சி. எனக்கு இன்னும் பொருப்பு கூடியிருக்கிறது.
தொடர்ந்து விமர்சியுங்கள்.

lolluvathiyar
25-09-2007, 05:26 AM
முதல் கதை எழுத ஆரம்பித்த எங்கள் கொங்கு நாட்டு தங்கமே, வாழ்த்துகிறேன் பூமகளை. கதை ஆரம்ப நிலையில் எந்த கருவை நோக்கி நகர்கின்றன என்று தெரியவில்லை. மீதி பாகங்களை எதிர்பார்த்து காத்திருகிறேன்

பூமகள்
25-09-2007, 05:32 AM
அன்பு வாத்தியாரிடமிருந்து பின்னூட்ட ஊக்கம் கண்டு மிக்க ஆனந்தம். நன்றிகள் வாத்தியார் அண்ணா.
கதையே இனிமேல் தான் ஆரம்பம் வாத்தியாரே..!!
பொறுமையோடு காத்திருங்கள்.. இன்று மதியம் போட்டு விடுகிறேன்.. கதையின் நிறைவுப் பகுதியை...!!

பூமகள்
25-09-2007, 09:19 AM
வழி மாறா பயணம்...!! - நிறைவுப் பகுதி

(ஒரு ஜோடி கண்கள் நந்தினியை உற்று நோக்கிய வண்ணம் இருந்தது.)

நந்தினி எதேச்சையாய்த் திரும்பியவள், அந்த கண்களின் ஈர்ப்பு விசையால் தள்ளப்பட்டு சட்டென்று திரும்பிக் கொண்டாள். "யார் இவன், ஏன் என்னை அப்படிப் பார்க்கிறான்..??!!" புரியாமல் தவித்தாள் நந்தினி.

எப்போது நந்தினி வெளிப்பட்டாலும் அந்த கண்களிடம் இருந்து அவளால் தப்ப முடியவில்லை. இரண்டு நாட்கள் இப்படியே ஓடின.

மூன்றாம் நாள் நந்தினிக்கு ஏதோ போல் இருந்தது. தம்மையே யாரேனும் உற்று நோக்கியவண்ணமே இருந்தால் யாருக்கும் சற்று சங்கடமாகத்தானே
இருக்கும்.
தன் தோழி சுஜாவிடன் கூறலாம் என்று எண்ணினாள் இடைவேளையில். அவள் சிரித்து தன்னை கேலிசெய்ய ஆரம்பித்துவிடுவாள் என்று பயந்தாள்.
பள்ளியில் ஏதேனும் தோழிகள் பேசிச் சிரிக்கும் போது கூட நந்தினியைச் சேர்த்துக் கொள்ள மறுப்பர். ஏனென்று கேட்டால், "நீ சின்ன குழந்தை. உன்னை வைத்துப் பேச மாட்டோம்" என்று கூறி இவளை ஒதுக்கிவிடுவர்.

படிப்பு தவிர உலகமே அறியாமல் அப்பாவி பெண்ணாய் இருந்தாள் நந்தினி. அப்படி இருக்கையில், இது பற்றி தோழியிடம் கூறினால் என்ன செய்வாளோ என்று நினைத்து, மறைத்துவிட்டாள்.

அவன் பெயர் கார்த்திக். அவனும் ஒன்பதாம் வகுப்பில் 'ஆ' பிரிவில் படிக்கும் மாணவன்.

நந்தினியைப் பள்ளியில் பார்ப்பது மட்டுமல்லாமல் பின் தொடரவும் ஆரம்பித்தான் மாலையில்.

வீட்டிற்கு நடந்தே தனியாய் செல்லும் நந்தினிக்கோ கார்த்திக் பின்னால் வருவது சிறிதும் பிடிக்கவில்லை. வேகமாக நடைபோட்டபடியே சென்றுகொண்டிருந்தாள் நந்தினி. சின்ன சாலையிலிருந்து பிரதான சாலையை நந்தினி அடையும் நேரம்.

கார்த்திக் திடீரென்று இவளின் மிக அருகில் வந்து சைக்கிளை நிறுத்தினான். நந்தினி கண்டுகொள்ளாதது போல் செல்ல முயன்றாள். "நந்தினி, ஒரு நிமிடம்..!" என்றான் கார்த்திக்.

படபடப்பு மேலோங்க, நந்தினி, "என்ன விசயம்? சீக்கிரம் சொல்? எதுக்கு என் பின்னாள் வருகிறாய்?" என்று ஆத்திரமும் படபடப்பும் கலந்த குரலில் கேட்டாள்.

"வந்து.. நந்தினி... உன்னை நான்...... காதலிக்கிறேன்...! I love you நந்தினி!" என்று போட்டு உடைத்தான் கார்த்திக்.

நந்தினி ஒரு கணம் நின்று முறைத்து விட்டு, பதில் ஏதும் பேசாமல் "விருட் "என்று சென்றாள் பிரதான சாலை நோக்கி...

கார்த்திக் மீண்டும் தொடர்ந்தான். நந்தினியிடம் பதில் வாங்காமல் விடுவதாய் இல்லை கார்த்திக்.

நந்தினி, கோபத்தின் உச்சத்திற்கே சென்றாள். கண்கள் சிவக்க, நந்தினியின் இதழ்கள் துடிதுடிக்க, ஏதோ சொல்ல வந்து வார்த்தைகளைக் கட்டுப்படுத்தி, பொறுமையாய்ச் சொன்னாள், "எனக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லை. எனது குறிக்கோள் வேறு. என்னை தொந்தரவு செய்யாதே..!"

கார்த்திக் அப்படியே சிலையாய் நிற்க, நந்தினி வீட்டினை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

நந்தினியின் மனவோட்டமோ, "ஊர் முழுக்க உறவினர் இருக்கின்றனரே... யாரேனும் நான் இவனோடு பேசுவதைப் பார்த்தால் என்னவாகும்?? என் நிலை அவ்வளவு தான்" என்று பயத்துடனோ நடந்த வண்ணம் இருந்தாள்.

நாட்கள் ஓடின. ஒரு வாரம் தொடர்ந்து இப்படியே கார்த்திக் தொடர்வதும், நந்தினி பொறுமையாய் மறுப்பதும் நடந்தது.

ஏழாவது நாள். மீண்டும் கார்த்திக். இன்று நந்தினிக்கு ஆத்திரம் உச்சத்தில் இருந்தது. அவன் வழி மறித்தான். கையில் காதல் கடிதம் படபடத்தது. நந்தினியிடன் நீட்டி, "இந்த நந்தினி, இதை பார்.. கடைசியாகக் கேட்கிறேன். ப்ளீஸ் என்றான்."

நந்தினி வாங்கினாள். அவன் முன்னமே பிரித்தாள்.

அதில் அவன் உள்ளத்தின் மூன்று வார்த்தைகளை அவனது குருதி வடித்திருந்தது. "I love you" என்று பேசியிருந்தது. நந்தினிக்கு கோபம் எரிமலையானது.

கடிதத்தை கிழித்து கீழே எறிந்தாள். கண்களில் கோபம் தெறிக்க, "உனக்கு சொன்னால் புரியாதா? ஏன் நான் சொல்வதையே கேட்க மாட்டேன்கிற?? எனக்கு இதிலெல்லாம் கவனம் இல்லை. எனக்கு படிப்பதில் மட்டுமே கவனம். என்னை தயவு செய்து இப்படி தொந்தரவு செய்யாதே. உன் ரத்தத்தை இப்படி வீண்டித்தால் நான் ஒத்துக் கொள்வேன் என்று முட்டாள் தனமாய் நினைக்காதே. பைத்தியமா நீ??" என்று ஆவேசமாய் பேசினாள்.

அவன் உடனே, தன் கையை பிளேடால் கீற முற்பட்டான். நந்தினி உடனே, "இந்த மாதிரி ஏதேனும் செய்திட்டு இருந்தீனா, நான் ஹெட் மாஸ்டர் கிட்ட புகார் சொல்லவேண்டியிருக்கும். உன் படிப்பு பாதிக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் இத்தனை நாள் உன்னிடம் பொறுமையாய் பேசினேன். போ என்னை ஃபாளோ பண்ணாதே...!" என்று கடிந்தாள்.

கார்த்திக் உடனே, "நீ யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக் கொள். எனக்கு கவலை இல்லை" என்றான்.

இன்னும் சில நாட்களே இருந்தன அரையாண்டுத் தேர்வுக்கு.

அடுத்த நாள் கார்த்திக் மீண்டும் பழைய படியே பின் தொடர்தல். நந்தினி பொறுமை இழந்தாள். மீண்டும் கோபத்தோடு முறைத்தாள்.

கார்த்திக் விடுவதாய் இல்லை.

நந்தினி முடிவெடுத்தாள் கண்டிப்பாய் நாளை பள்ளியில் சொல்லிவிடவேண்டும் என்று. அவளுக்கு மிகவும் பிடித்த வகுப்பாசிரியர் கங்கா டீச்சரிடன் சென்றாள். நடந்த எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தாள். தலைமை ஆசிரியருக்குத் தெரியாமல் எப்படியேனும் அவனை அழைத்து நல்லமுறையில் கண்டித்து தன்னைத் தொந்தரவு செய்யாத படி இருக்கச் சொல்லுங்கள் என்று உரைத்தாள்.

"அப்பாடா..!" என்று நந்தினி பெருமூச்சு விட்டு அதனை மறந்து படிப்பில் கவனம் செலுத்தலானாள்.

அரையாண்டுத் தேர்வு துவங்கியது. வழக்கம் போல் நந்தினியின் அசத்தலான பதிலகளால் கடும் போட்டிகளுக்கு நடுவே பள்ளியில் முதலிடம் வந்தாள். பரிசும் கிடைத்தது. ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை ஊக்கப் பரிசாய் ஆசிரியரிடமிருந்து வழிபாட்டுக் கூட்டத்தில் பெற்றாள் நந்தினி.

நாட்கள் உருண்டோடின. முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்தது. விடுமுறைகள் கொண்டாட்டமாய் அமைந்தன. நந்தினி அடுத்து பத்தாம் வகுப்பு ஆகவே,
விடுமுறையிலேயே பத்தாம் வகுப்புப் புத்தகங்கள் வாங்கி படிக்க ஆரம்பித்திருந்தாள்.

மீண்டும் வசந்தகாலம் ஆரம்பித்தது. பள்ளிகள் துவங்கின. பத்தாம் வகுப்பின் முதல் நாள். அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

கார்த்திக் மீது நந்தினி புகார் கூறியதால் தலைமை ஆசிரியர் கண்டித்திருக்கிறார். அவரிடம் எதிர்த்து பேசியதால், கோபமுற்று கார்த்திக்கை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டனர் என்று நந்தினி கேள்விப்பட்டாள். தன்னால் ஒரு மாணவரின் வாழ்வு வீணானதே என்று எண்ணி, கங்கா டீச்சரிடம் விளக்கம் கேட்கச் சென்றாள்.

கார்த்திக் சரியாக படிக்காத மாணவன். முழு ஆண்டில் தேர்ச்சி பெறாததால் அவனே எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பள்ளியை விட்டு நின்றுவிட்டதாக டீச்சர் கூறினார்.
எப்படியோ, தன்னால் அவன் வெளியேறவில்லை என்று உணர்ந்து நிம்மதி அடைந்தாள் நந்தினி.

பகலவனின் அக்னிக்கரங்கள் வானத்து உச்சியிலிருந்து வெயில் போர்வை விரித்துக் கொண்டிருந்தது. அதன் வெப்பம், நந்தினியின் மனத்திற்கு இதமாய் இருந்தது.

முற்றும்...!! பயணம் இனிதே முடிந்தது...!!

அமரன்
25-09-2007, 09:43 AM
அமர்க்களத்தில் கவனம் பிசகாமல்
இலக்கை நோக்கிபாயும் புரவி போல
வேகமான கதையும் கதை நாயகியும்.
அமர்க்களம் பண்ணிட்டீங்க பூமகள்.

காதலுக்கு தடா போட்ட நந்தினியின் முடிவு...
இலக்கை மறைக்கும் தடை அகற்றும் துடிப்பு...
கார்த்திக்கின் விலகலை விலக்கலாக நினைத்து...
எதிர்காலத்தை பறித்த வேதனைப் பதைபதைப்பு...
பெண்களுக்கே உரித்தான உள்ளுணர்வு விழிப்பு..
பல உணர்சிகளை கொண்ட சித்திரம் இக்கதை...

முடிவை ஆரம்பத்திலேயே ஊகிக்க முடிந்தது நுண்ணிய குறை.

இலக்கை அடைவதற்கு காதல் தடையாக இருக்குமா இல்லையா என்ற வேல்களை இங்கும் எதிர்பாக்கின்றேன்..

என்னைப் பொருத்தவரை காதல் முன்னேற்றத்தின் தடையா என்றால் அது அவரவர் ஆளுமையை பொறுத்தது என்பேன்..நந்தினியையையும் அப்படியே நினைக்கின்றேன்.

யதார்த்தமான நிகழ்வுகளை
தெளிவான நதியின் நளினத்துடன் சொன்ன
பூவுக்கு வாழ்த்துப் பூக்கள் பரிசாக.
என்றென்றும் மாறா அன்புடன்,

மயூ
25-09-2007, 11:56 AM
நல்ல எழுத்தோட்டம் உள்ளது மங்கை உங்கள் எதிர்காலத்தில் மேலும் மேலும் பல கதைகளை எழுதி உங்கள் கதை எழுதும திறனை விருத்தி செய்து கொள்ளுங்கள்....!!!

நிறைய சிறுகதைகள் வாசியுங்கள்....

பூமகள்
25-09-2007, 11:59 AM
அன்பு அமர் அண்ணா,
உங்களின் நேர்த்தியான விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள்.

இலக்கை அடைவதற்கு காதல் தடையாக இருக்குமா இல்லையா என்ற வேல்களை இங்கும் எதிர்பாக்கின்றேன்..
நிச்சயம் காதல் இலக்கை அடைய தடையாய் இருக்குமா என்றால் அது அவரவர் ஆளுமையைப் பொருத்தது தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அந்த வயது நந்தினி காதல் புரிய சரியான வயதாகக் கருதவில்லை. அதுவுமில்லாமல் அது அலைபாயும் பருவம் தானே..! அந்த வயதில் இந்த மாதிரியான எண்ணங்கள் நிச்சயமாய் கவனத்தை சிதறடிக்கத்தானே செய்யும் என்பது என் கருத்து அமர் அண்ணா.

சிவா.ஜி
25-09-2007, 01:08 PM
அதில் அவன் உள்ளத்தின் மூன்று வார்த்தைகளை அவனது குருதி வடித்திருந்தது. "I love you" என்று பேசியிருந்தது. நந்தினிக்கு கோபம் எரிமலையானது.

கடிதத்தை கிழித்து கீழே எறிந்தாள். கண்களில் கோபம் தெறிக்க, "உனக்கு சொன்னால் புரியாதா? ஏன் நான் சொல்வதையே கேட்க மாட்டேன்கிற?? எனக்கு இதிலெல்லாம் கவனம் இல்லை. எனக்கு படிப்பதில் மட்டுமே கவனம். என்னை தயவு செய்து இப்படி தொந்தரவு செய்யாதே. உன் ரத்தத்தை இப்படி வீண்டித்தால் நான் ஒத்துக் கொள்வேன் என்று முட்டாள் தனமாய் நினைக்காதே. பைத்தியமா நீ??" என்று ஆவேசமாய் பேசினாள்.

அவன் உடனே, தன் கையை பிளேடால் கீற முற்பட்டான். நந்தினி உடனே, "இந்த மாதிரி ஏதேனும் செய்திட்டு இருந்தீனா, நான் ஹெட் மாஸ்டர் கிட்ட புகார் சொல்லவேண்டியிருக்கும். உன் படிப்பு பாதிக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் இத்தனை நாள் உன்னிடம் பொறுமையாய் பேசினேன். போ என்னை ஃபாளோ பண்ணாதே...!" என்று கடிந்தாள்.

கார்த்திக் உடனே, "நீ யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக் கொள். எனக்கு கவலை இல்லை" என்றான்.

இன்னும் சில நாட்களே இருந்தன அரையாண்டுத் தேர்வுக்கு.
[/COLOR]

கதையின் ஓட்டமும் காட்சி விஸ்தரிப்பும் அருமை பூமகள்.முதல் கதை என்று சொல்லமுடியாதவாறு இருக்கிறது.
கதையை படித்துக்கொண்டு வரும்போது எனக்குள் தோன்றிய இந்தக் கதையின் இன்னொரு முடிவு.......

இன்னும் சில நாட்களே இருந்தன அரையாண்டுத் தேர்வுக்கு.
நந்தினியின் மனம் சஞ்சலத்திலிருந்தது.இந்த கார்த்திக் இப்படி பைத்தியமாக இருக்கிறானே..ஏதாவது செய்து கொள்வானோ...நம்முடைய நிராகரிப்பால் அவனுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால்....நினக்கவே பகீரென்றது.படிக்க அமர்ந்தால் மனம் ஒரு நிலையிலில்லை...புத்தகத்தின் பக்கங்களிலெல்லாம் அவனுடைய ரத்தமாகத் தெரிந்து திடுக்கிட வைத்தது...
சரியாக படிக்க முடியாத காரணத்தால் அந்த தேர்வை அவளால் ஒழுங்காக எழுத முடியவில்லை.எதிர்பார்த்திருந்த முதல் மதிப்பெண் கிடைக்கவில்லை.அன்று முழுவதும் கதறி அழுதாள் நந்தினி...எல்லாம் இந்த கார்த்திக் கடங்காரனால் வந்தது..நாளைக்கு அவனைப் பார்த்து மனசார திட்டினால்தான் ஆறும்..என்று நினைத்துக்கொண்டே உறங்கிவிட்டாள்.

அடுத்தநாள் பள்ளிக்குப் போனதும் அவளே ஆச்சரியப்படுமாறு கார்த்திக் இனிப்புடன் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான்.
"இந்தா நந்தினி ஸ்வீட் எடுத்துக்கோ" சொன்னவனை எதுவும் புரியாமல் அதே சமயம் சிறிய எரிச்சலுடன் பார்த்தாள்.
"உன் கோவம் புரியுது நந்தினி..உன்கிட்ட நான் அப்படி நடந்திருக்கக் கூடாதுதான்..ஆனா..நான் வேணுமின்னேதான் அப்படி நடந்துகிட்டேன்...அப்பதான் நீ டிஸ்டெர்ப் ஆகி பரீட்ச்சையை நல்லா எழுத மாட்டே..அப்புறம் நானே ஃபர்ஸ்ட் மார்க் வாங்கிடலான்னுதான் அப்படி செஞ்சேன். இது அரையாண்டு தேர்வுதானே...நீ நல்லா படிக்கிற பொண்ணு அதனால முழுப்பரீட்ச்சையில எப்படியும் நல்ல மார்க் எடுத்துடுவே..இப்ப நான் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குனதால எனக்கு அந்த ஆயிரம் ரூபாயும் கிடைக்கப்போகுது.சாரி நந்தினி" சொல்லிவிட்டு போகும் கார்த்திக்கை அதிர்ச்சி விலகாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

ஏதோ கதையென்று நானும் நாலுவரி கிறுக்குவதால் எனக்கு இப்படி தோன்றியது.
இன்னும் மென்மேலும் வளர்ந்து உயர என் வாழ்த்துக்கள் அன்பு தங்கையே.

ஷீ-நிசி
25-09-2007, 01:58 PM
பூமகளின் காட்சி விஸ்தரிப்புகள் அருமை. அப்படியே அந்த இடத்திற்கு நம்மை அழைச்சிட்டு போறாங்க.. பூமகளின் கதையைப் படிக்கும்போது எங்கே ட்விஸ்ட் வைக்கப்போறாங்கன்னு படிச்சிட்டே வந்தேன். ஆனால் கதையே முடிஞ்சிபோச்சு... டிவிஸ்ட் காணவே இல்ல...

முதல் முயற்சி இந்த கன்னி(யின்)முயற்சி...

தொடர்ந்து எழுத ஆரம்பித்தால் சீக்கிரம் பெரிய ஆள் ஆகிடுவீங்க அம்மணி!

சிவா எழுதிட்டாரு நான் எதிர்பார்த்த ட்விஸ்ட்....

மலர்
25-09-2007, 02:07 PM
ஆகா இத்தனை நாளாக கவிதாயினியாக இருந்தவள் இப்போது
கதை எழுதி கதாசிரியையாகவும் ஆகிவிட்டாய்.
உன்னுடைய கதை வித்தியாசமா இருந்தது

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அன்பு அக்காவுக்கு.....

மலர்
25-09-2007, 02:15 PM
சிவா அண்ணா... உங்கள் கதையின் முடிவும் வித்தியாசமா இருக்கு....
எண்ணங்கள் வேறுபடும் போது கதையின் முடிவும் மாறிட்டு...
வாழ்த்துக்கள்....
ச,,,மன்றத்துல சும்மா புகுந்து விளையாடுறாங்கப்பா.....

சிவா.ஜி
25-09-2007, 02:20 PM
ச,,,மன்றத்துல சும்மா புகுந்து விளையாடுறாங்கப்பா.....

ஏம்மா உனக்கு என்ன தடை..நீயும் புகுந்து விளையாட வேண்டியதுதானே...இம்புட்டு திறமையை வெச்சிகிட்டு...சும்மா இருக்கியேம்மா...சீக்கிரம் களத்துல இறங்கி ஒரு கை பாத்துட வேண்டியதுதானே..

பாரதி
25-09-2007, 05:05 PM
அன்பு பூமகள்,
உங்களுடைய முதல் முயற்சிக்கு பாராட்டுகள். காட்சிகளை கண்முன்னே கொண்டு வர வேண்டும் என்று நிறைய உழைத்திருக்கிறீர்கள் போலும்.
சிறப்பான முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

பூமகள்
25-09-2007, 05:07 PM
கதையின் ஓட்டமும் காட்சி விஸ்தரிப்பும் அருமை பூமகள்.முதல் கதை என்று சொல்லமுடியாதவாறு இருக்கிறது.
கதையை படித்துக்கொண்டு வரும்போது எனக்குள் தோன்றிய இந்தக் கதையின் இன்னொரு முடிவு.......

ஏதோ கதையென்று நானும் நாலுவரி கிறுக்குவதால் எனக்கு இப்படி தோன்றியது.
இன்னும் மென்மேலும் வளர்ந்து உயர என் வாழ்த்துக்கள் அன்பு தங்கையே.
அசத்தலான முடிவு தந்து அழகான திருப்பு முனையை ஏற்படுத்திட்டீங்க சிவா அண்ணா. எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை.
மிக்க நன்றிகள் சிவா அண்ணா.

பூமகள்
25-09-2007, 05:13 PM
நல்ல எழுத்தோட்டம் உள்ளது மங்கை உங்கள் எதிர்காலத்தில் மேலும் மேலும் பல கதைகளை எழுதி உங்கள் கதை எழுதும திறனை விருத்தி செய்து கொள்ளுங்கள்....!!!
நிறைய சிறுகதைகள் வாசியுங்கள்....
மிக்க நன்றிகள் மயூ அண்ணா. நிச்சயம் இனி நிறைய சிறுகதைகளை வாசித்து என் திறனை வளர்த்துக் கொள்வேன்.
உங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள்.

அன்புரசிகன்
25-09-2007, 05:15 PM
அழகாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இவ்வாறு பெண்கள் முடிவெடுத்தால் எவர் ஏமாற்றிவிடப்போகிறார்கள்...

சிவா.... உங்கள் கதையிலும் ஒரு சுவாரசியம் தெரிகிறது...

பூமகள்
25-09-2007, 05:17 PM
பூமகளின் காட்சி விஸ்தரிப்புகள் அருமை. அப்படியே அந்த இடத்திற்கு நம்மை அழைச்சிட்டு போறாங்க.. பூமகளின் கதையைப் படிக்கும்போது எங்கே ட்விஸ்ட் வைக்கப்போறாங்கன்னு படிச்சிட்டே வந்தேன். ஆனால் கதையே முடிஞ்சிபோச்சு... டிவிஸ்ட் காணவே இல்ல...
முதல் முயற்சி இந்த கன்னி(யின்)முயற்சி...
தொடர்ந்து எழுத ஆரம்பித்தால் சீக்கிரம் பெரிய ஆள் ஆகிடுவீங்க அம்மணி!
சிவா எழுதிட்டாரு நான் எதிர்பார்த்த ட்விஸ்ட்....

மிக்க நன்றிகள் ஷீ-நிசி. உங்களின் ஊக்கம் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.

ஆமாம்.. உண்மை..!

எனக்கு பதில் திருப்பத்தை என் பாசமிகு அண்ணன் சிவா வழங்கிவிட்டாரே...!:icon_rollout: எப்படியோ கலக்கிட்டோம்ல... சிவா அண்ணாவும் நானும் சேர்ந்து.....!! ஹீ ஹீ....!!:lachen001:

பூமகள்
25-09-2007, 05:22 PM
சிவா அண்ணா... உங்கள் கதையின் முடிவும் வித்தியாசமா இருக்கு....
எண்ணங்கள் வேறுபடும் போது கதையின் முடிவும் மாறிட்டு...
வாழ்த்துக்கள்....
ச,,,மன்றத்துல சும்மா புகுந்து விளையாடுறாங்கப்பா.....

மிக்க நன்றி அன்புத் தங்கை மலர். சிவா அண்ணாவும் கலக்கலா வித்தியாசமான முடிவு சொல்லி அசத்திட்டாங்க இல்ல..
சூப்பர் அப்பு...!
ஆமா.. மலர்... நீ மட்டும் விளையாட வரமாட்டியா? வந்து சும்மா கலக்கு மலர்.. அக்கா நான் இருக்கேன் உன் கூட...
சிவா அண்ணா சொன்னது போல் வந்து அசத்து மலர்...!!

பூமகள்
25-09-2007, 05:31 PM
அன்பு பூமகள்,
உங்களுடைய முதல் முயற்சிக்கு பாராட்டுகள். காட்சிகளை கண்முன்னே கொண்டு வர வேண்டும் என்று நிறைய உழைத்திருக்கிறீர்கள் போலும்.
சிறப்பான முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்.
மிக்க நன்றிகள் பாரதி அண்ணா. முதல் முயற்சி என்பதால் கொஞ்சம் கடினமாய் இருந்தது.
உங்களின் ஊக்கம் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.
நன்றிகள் அண்ணா.

பூமகள்
25-09-2007, 05:32 PM
அழகாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இவ்வாறு பெண்கள் முடிவெடுத்தால் எவர் ஏமாற்றிவிடப்போகிறார்கள்...
சிவா.... உங்கள் கதையிலும் ஒரு சுவாரசியம் தெரிகிறது...
மிக்க நன்றிகள் அன்புரசிகன் அண்ணா.
உங்களின் பின்னூட்ட ஊக்கம் கண்டு சந்தோசம்.
உண்மை தான்.. இப்படி பெண்கள் இருந்தால் நலமே..!!

அக்னி
25-09-2007, 05:36 PM
பூமகள்.., உங்களது தலைப்பை மட்டும் செம்மைப்படுத்தியுள்ளேன்.
சிதைந்து கிடந்தது...
கதையை வாசித்துவிட்டு பின்னர் பின்னூட்டமிடுகின்றேன்...
எனது உளவுப்பிரிவை, உண்மையாக்கியதற்கு நன்றி..!

சாராகுமார்
25-09-2007, 05:44 PM
அன்பு பூமகளுக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுகளும்.பரிசாக உங்களின் முத்தான முதல் கதைக்கு 200 இ பணம்.

கவிதையாய் இருந்த
பூமகள் இன்று
கதையாய்;சிறப்பாய்
அருமையாக
பதவி உயர்வு
பெற்றுள்ளார்.
1000த்துக்கு வாழ்த்துக்கள்.மேலும் மேலும் கவிதையாய்,கதையாய் மகிழ்விக்கவும்.

பூமகள்
25-09-2007, 05:52 PM
மிக்க நன்றிகள் அக்னி அண்ணா. நான் மாற்ற தவறிவிட்டேன். நீங்கள் தலைப்பை சரிசெய்தது கண்டு மகிழ்ச்சியே..!
உங்களின் வாக்கு எப்படி பொய்க்கும் அண்ணா.
பொறுமையாய் வாசித்து விமர்சியுங்கள்.

பூமகள்
25-09-2007, 05:54 PM
மிக்க சந்தோசம் சாரா அண்ணா.
என் முதல் கன்னிக் கவிக்குக் கிடைத்த முதல் பொற்கிழி 200 இ-பொற்காசுகள்.
நன்றிகள் கோடி அண்ணா.

மனோஜ்
25-09-2007, 06:12 PM
அன்பு பூமகள் தங்களின் 1000 மாவது பதிவுக்கு என்வாழத்துக்கள்
தங்களனி்ன் இந்த முயற்சி சிறப்பு கதையில் வரும் கரு மிகவும் சிறப்பானது பெண்களின் பதிலில் தான் அவர்கலின் வெற்றியும் தோல்வியும் உள்ளது சரியான வயதில் சரியான முடிவெடுத்தல் அவசியம் என்பதை கதையில் அருமையாக செல்லியுள்ளீர்கள்
வாழ்த்துக்கள் தொடர்ந்து கதைகளும் எழுத:icon_b:

ஓவியன்
25-09-2007, 07:18 PM
அன்புத் தங்கைக்கு......

முதலிலே உங்கள் சிறுகதை படைப்புக்களின் முதல் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.....
தொடர்ந்து எழுதுங்கள் அப்போது தான் மேன்மேலும் உங்கள் திறமை மெருகேறும்....

கதையினிடையே நீங்கள் வர்ணனைகளைக் கையாண்ட விதம்,
சிறுகதை எழுதும் பாதையிலே நீங்கள் வழிமாறாமல் அடியெடுத்து வைத்துள்ளீர்களெனக் கட்டியம் கூறி நிற்கின்றது.....

அதிலே ஒரு பெண்ணின் எண்ண ஓட்டங்களை தவழ விட்ட பாணி அழகு...
ஒரு பெண்ணென்பதால் உங்களால் அதனை இயல்பாக அமைக்க முடிந்துள்ளது போலுள்ளது.....
அந்த எண்ண ஓட்டம் கதைக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக அமைந்திருந்தது பாராட்டுக்கள் பூமகள்....

ஆனாலும் கதையின் முடிவு கொஞ்சம் கதையின் வேகத்தை, தரத்தைப் கொஞ்சம் பின்னுக்கு இழுத்து நிற்பது போன்ற ஒரு தோற்றப்பாடு என் மனதில் ஏற்படுவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.....

இதற்கு அமரன் கூறியது போன்றே முன்னரே ஊகிக்க முடிந்தமை பிரதான காரணமென நினைக்கின்றேன்....

ஒரு சிறுகதையைப் பொறுத்த வகையில் முடிவுகள் முத்தாய்ப்பாக அமைய வேண்டும்...... (சிவாஜி கூறியது போன்று...)

அப்போது தான் மனதை விட்டு அகலாமல் வாசகர் மனதிலே இடம் பிடிக்க முடியும், இதற்கு இந்த மன்றத்தின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான மயூரேசன் கூறியது போன்று நிறையப் படியுங்கள், நிறைய எழுதுங்கள் அப்போது உங்களது சிறுகதைகளும் சிகரத்திலேறும்.....

கவலை வேண்டாம் பூமகள் இது உங்கள் முதல் முயற்சி தானே.....
அந்த முதல் முயற்சியே அசத்தலாக இருந்தென்பது உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியே.......

அந்த வெற்றியை ஈட்டிய தங்கைக்கு பாராட்டுக்கள்.........
அத்துடன், இனித் தொடர்ந்து எழுத இருக்கும் சாதனைக் கதைகளுக்கு எனது முன் வாழ்த்துக்கள்.......

இதயம்
26-09-2007, 04:15 AM
அன்புத்தங்கை பூமகளின் 1000-வது படைப்பாக வந்திருக்கும் சிறுகதை இது. அது மட்டுமல்லாமல் பூமகள் எழுதிய முதல் சிறுகதையாம்.! ஆனால் நம்பமுடியவில்லை..!! காரணம், கதையின் வர்ணனை, கதாபாத்திரங்களின் அறிமுகம் மற்றும் உரையாடல், கோர்வையான சம்பவங்கள், அதை அழகாக நகர்த்திய தொனி ஆகியவை பூமகளுக்குள் ஒரு கைதேர்ந்த எழுத்தாளர் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.

கதையின் ஆரம்பம் ஒரு டீனேஜ் பெண்ணின் பள்ளிக்கூட அனுபவங்களை சொல்லப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பிற்கிடையில் நகரும் போது, முடிவில் ஒரு ஜோடி விழிகளின் பார்வை நிலைத்தலைச்சொல்லி முதல் பகுதியை சஸ்பென்ஸோடு முடித்ததில் கதையின் சிறந்த ஓட்டத்திற்கு திருப்பம் எவ்வளவு முக்கியம் என்பதை படைப்பாளர் புரிந்திருப்பதை உணர முடிகிறது. அதன் பின் கதைக்குள் காதல் நுழைகிறது. "ஒன்பதாவது படிக்கையில் காதலா.?" என்று யோசிக்கையில் இந்த நவீன காலம், அது கொடுத்திருக்கும் வேகமான வாழ்க்கை அந்த காதலை அல்ல.. அல்ல.. இனக்கவர்ச்சியை நியாயப்படுத்தி விடுகிறது. நாம் இந்த டீனேஜ் காதலை நியாயப்படுத்திக்கொண்டாலும், கதாநாயகி நந்தினி நியாயப்படுத்த தயாரில்லை. காரணம் அந்த வயதும், அப்போது தோன்றும் காதல் என்ற பெயரில் வரும் பருவ உணர்ச்சி, எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பிற்கு பொருத்தமானதல்ல என்பதை புரிந்ததன் மூலம் நந்தினி டீனேஜ் பெண்ணாக இருந்தாலும் கூட ஒரு முதிர்ந்த பெண்ணுக்குரிய பக்குவம், வாழ்க்கையின் புரிதல் வெளிப்படுகிறது. பள்ளிப்படிக்கும் காலங்களிலேயே பருவ உணர்ச்சிக்கு அடிமையாகி, படிப்பிழந்து, பண்பிழந்து வாழ்வை பாழ்படுத்திக்கொள்வோர் மத்தியில் தன்னுடைய நோக்கத்தில் உறுதியாக இருந்து வெற்றி பெற்று உயரும் நந்தினியின் பாத்திரப்படைப்பை நான் வெறும் கற்பனையாக மட்டும் பார்க்கவில்லை. அவள் இந்த கதையை படைத்த படைப்பாளியின் குண பிரதிபலிப்பாகவே உணருகிறேன்.

பூமகளின் படைப்புகளில் காணும் அனுபவ முதிர்ச்சி, மற்றவர்கள் சொல்ல தயங்கும் கருத்துக்களை தைரியமாக சொல்ல விரும்பும் அந்த துணிவு, கொண்ட கொள்கையில் உறுதி ஆகிய தன் குணங்களை தன் கதாநாயகியின் மூலம் சொல்ல முயன்றிருக்கிறார் என்றே தோன்றுகிறது. தன் மனதில் உறங்கிக் கிடக்கும் உறுதியான கொள்கையை அலங்கார கற்பனை அரிதாரம் பூசாமல் இயல்பாக சொன்னாதாலோ என்னவோ ஒரு விறுவிறுப்பான கதைக்கு தேவையான பரப்பரப்பு குறைவாக இருக்கிறது. ஆனால், இது இந்த கதைக்கு நிச்சயம் குறை அல்ல. காரணம், வெறும் பொழுது போக்கு என்ற நோக்கம் கடந்து அவசியமற்ற வயதில் தோன்றும் தொந்தரவான பருவ உணர்ச்சியை பக்குவமாக கையாளுதல், கொண்ட நோக்கத்தை மனதில் கொண்டு அதை நோக்கி உழைத்து அதை அடைதல் ஆகியவற்றை மையமாக கொண்டு எழுதப்பட்டதால் இதை ஒரு சாதாரண கதை என்பதை விட நந்தினியின் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் பெறும் வாழ்க்கையின் தோல்விகளை தடுக்கும் ஒரு பாடம் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இது ஒரு சிறப்பான கதையே..!

பெண்களின் மனக்கட்டுப்பாடு, திறமை, உழைப்பு, ஈடுபாடு, அதன் மூலம் கிடைக்கும் வெற்றி என்பது அவர்களுக்கு புதிதல்ல. அதனால் தான் அவர்கள் எந்த துறையில் நுழைந்தாலும் மிளிர்கிறார்கள். உதா. வருடாவருடம் பள்ளித்தேர்வுகளில் கூட எப்பொழுதும் அவர்களே முதலில் வந்து முன்னேறுகிறார்கள். இப்படிப்பட்ட சிறந்த குணங்களின் வெற்றிச்சிந்தனைகளைத்தான் இந்த கதை மென்மையாக பதிவு செய்திருக்கிறது. இந்த சிந்தனைகளை பின்பற்றி முன்னேறியவர்களுக்கு இது "வெற்றிப்பெற்றவர்களின் பயண அனுபவம்"..! இதை பின்பற்றி முன்னேற நினைப்பவர்களுக்கு இது "வெற்றி பெற ஒரு வழிகாட்டி..!!

கதை என்ற புது வடிவம் எடுத்து, தன் மனதில் உறைந்திருக்கும் உயர் கருத்துக்களை எண்ண உளி கொண்டு, மன்ற கோவிலில் நற்கருத்து சிலை வடிக்கும் பூமகளின் இந்த அற்புத பணி தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, அவரின் இந்த நற்பணிக்காக நான் அவரை மனமார வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் பூமகள்..!!

lolluvathiyar
26-09-2007, 12:06 PM
வாழ்வில் அனைத்து பள்ளி மானவிகளும் சந்திக்கும் ஒரு அனுபவத்தை, ஆரம்பத்தில் திகில் கதை போல தொடங்கி, பிறகு சற்று உனர்ச்சிகள் கூட்டி அறிவோடு முடித்து விட்டாய் பூமகளே.

ந*ன்ப*ர் சிவாஜியும் க*தை மாற்றி எழுதி வித்தியாசமாக காட்டி விட்டார்.

இந்த கதையில்

மூன்றாம் நாள் நந்தினிக்கு ஏதோ போல் இருந்தது. தம்மையே யாரேனும் உற்று நோக்கியவண்ணமே இருந்தால் யாருக்கும் சற்று சங்கடமாகத்தானே இருக்கும்.

இந்த வரி அனுபவித்து எழுதி இருகிறீர்கள். இதே என்னம்தான் சில சமயம் தடுமாற வைப்பதும்

பூமகள்
26-09-2007, 02:56 PM
அன்பு பூமகள் தங்களின் 1000 மாவது பதிவுக்கு என்வாழத்துக்கள்
தங்களனி்ன் இந்த முயற்சி சிறப்பு கதையில் வரும் கரு மிகவும் சிறப்பானது பெண்களின் பதிலில் தான் அவர்கலின் வெற்றியும் தோல்வியும் உள்ளது சரியான வயதில் சரியான முடிவெடுத்தல் அவசியம் என்பதை கதையில் அருமையாக செல்லியுள்ளீர்கள்
வாழ்த்துக்கள் தொடர்ந்து கதைகளும் எழுத:icon_b:
உண்மை தான் அண்ணா.
மிக்க நன்றிகள் மனோஜ் அண்ணா.:icon_rollout:

பூமகள்
26-09-2007, 02:59 PM
அன்புத் தங்கைக்கு......

முதலிலே உங்கள் சிறுகதை படைப்புக்களின் முதல் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.....

கவலை வேண்டாம் பூமகள் இது உங்கள் முதல் முயற்சி தானே.....
அந்த முதல் முயற்சியே அசத்தலாக இருந்தென்பது உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியே.......

அந்த வெற்றியை ஈட்டிய தங்கைக்கு பாராட்டுக்கள்.........
அத்துடன், இனித் தொடர்ந்து எழுத இருக்கும் சாதனைக் கதைகளுக்கு எனது முன் வாழ்த்துக்கள்.......
அன்பு ஓவியன் அண்ணா,
உங்களின் அழமான விமர்சனமும் ஆலோசனையும் கண்டு மிக்க மகிழ்ச்சி அண்ணா.
உங்களின் ஆலோசனைப் படியே செய்கிறேன்.
உங்களின் அன்பிற்கும், ஊக்கத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் அண்ணா.

பூமகள்
26-09-2007, 03:04 PM
அழகாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இவ்வாறு பெண்கள் முடிவெடுத்தால் எவர் ஏமாற்றிவிடப்போகிறார்கள்...
சிவா.... உங்கள் கதையிலும் ஒரு சுவாரசியம் தெரிகிறது...
உண்மை தான் அன்புரசிகன் அண்ணா. உங்களின் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.:icon_rollout:
மிக்க நன்றிகள் அண்ணா.

பூமகள்
26-09-2007, 03:14 PM
அன்புத்தங்கை பூமகளின் 1000-வது படைப்பாக வந்திருக்கும் சிறுகதை இது. அது மட்டுமல்லாமல் பூமகள் எழுதிய முதல் சிறுகதையாம்.! ஆனால் நம்பமுடியவில்லை..!! காரணம், கதையின் வர்ணனை, கதாபாத்திரங்களின் அறிமுகம் மற்றும் உரையாடல், கோர்வையான சம்பவங்கள், அதை அழகாக நகர்த்திய தொனி ஆகியவை பூமகளுக்குள் ஒரு கைதேர்ந்த எழுத்தாளர் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.

பள்ளிப்படிக்கும் காலங்களிலேயே பருவ உணர்ச்சிக்கு அடிமையாகி, படிப்பிழந்து, பண்பிழந்து வாழ்வை பாழ்படுத்திக்கொள்வோர் மத்தியில் தன்னுடைய நோக்கத்தில் உறுதியாக இருந்து வெற்றி பெற்று உயரும் நந்தினியின் பாத்திரப்படைப்பை நான் வெறும் கற்பனையாக மட்டும் பார்க்கவில்லை. அவள் இந்த கதையை படைத்த படைப்பாளியின் குண பிரதிபலிப்பாகவே உணருகிறேன்.

கதை என்ற புது வடிவம் எடுத்து, தன் மனதில் உறைந்திருக்கும் உயர் கருத்துக்களை எண்ண உளி கொண்டு, மன்ற கோவிலில் நற்கருத்து சிலை வடிக்கும் பூமகளின் இந்த அற்புத பணி தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, அவரின் இந்த நற்பணிக்காக நான் அவரை மனமார வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் பூமகள்..!!
ஆழமான அலசலுடன் கூடிய தங்களின் மிக நீண்ட விமர்சனம் கண்டு அளவில்லா ஆனந்தம் இதயம் அண்ணா.
உங்களின் எழுத்துக்கள் எனது எண்ணங்களை அப்படியே பிரதிபளிப்பதாய் இருந்தது.
மிக்க நன்றிகள் அண்ணா. உங்களின் ஊக்கமும் அன்பும் உண்மையான விமர்சனமும் என் எழுத்துக்களை இன்னும் மெருகேற்ற உதவும் என்பது திண்ணம்.
தொடர்ந்து இந்த தங்கை பூமகளுக்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.
அதனையே மன்றத்து அண்ணாகளிடம் எதிர்நோக்கியுள்ளேன் என்றும்.

நன்றிகளோடும் ஆனந்தத்தோடும்,

பூமகள்
26-09-2007, 03:18 PM
இந்த வரி அனுபவித்து எழுதி இருகிறீர்கள். இதே என்னம்தான் சில சமயம் தடுமாற வைப்பதும்
உண்மை தான் வாத்தியாரே...! அது தான் ஆக்சிலேசன்(அலைபாயும்) தருணம். அப்போது சரியாக முடிவெடுத்து தீர்கமாய் இருந்தால் பின் டீன் ஏஜ்ஜில் பிரச்சனையே வராது.
உங்களின் பின்னூட்ட ஊக்கத்திற்கு மிகுந்த நன்றிகள் வாத்தியார் அண்ணா.

இலக்கியன்
27-09-2007, 02:38 PM
கதை மிகவும் நன்றாக உள்ளது சொன்ன விதம் மிகவும் அழகு
காதல் என்பது இதமான உணர்வு இரு இதயங்களின் சங்க்மம்
நாயகன் காதல் என்னும் றோஜாவைப்பறிக்க கொடலி எனும் ஆயுதம் தரித்தான்
வன்முறைகள் பயனற்றவை காதலில் என்பது என் கருத்து அதேபோல அது மற்றவர் மீது திணிக்கப்படக்கூடாது. ஆனாலும் நாயகி கொஞ்சம் மனப்பக்குமானவராக காட்டியுள்ளீர்கள் அதனால் பாதை மாறவில்லை. வாழ்த்துக்கள் தோழி

பூமகள்
27-09-2007, 02:55 PM
மிக்க நன்றிகள் இலக்கியரே...!!
உங்களின் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சி.

க.கமலக்கண்ணன்
28-09-2007, 05:29 AM
எப்படி பூமகள் இப்படி அட்டகாசமாக கதை

எழுத முடியுது, 1000 வது பதிப்பு மிகவும்

எழுந்து நின்று விட்டது. மிகவும் அருமை பூமகள்...

அக்னி
28-09-2007, 11:22 AM
பூமகளின் கன்னிச் சிறுகதை...
மழலையின் முதல் அடி கண்டு தாய்மை மகிழ்வது போல, மன்றம் பெருமிதம் கொள்ளும்...

சிறுகதைகளை ரசிக்கத் தெரிந்த எனக்கு, விவரிக்கத் தெரியாது.
ஆனாலும்,

கதையின் ஆரம்பப் போக்கு அசத்தல். அதன் நகர்வு, விவரிப்புக்கள், முக்கிய பாத்திரங்களின் முக்கியத்துவங்கள் எல்லை மீறாது, சலிப்பைத் தராது உள்ளன.
இயல்பான வார்த்தைகள் கதையில் மெருகைச் சொல்கின்றன...

குடும்பத்தில் ஏற்பட்ட ஏழ்மை நிலை அவளை செதுக்கும் ஆயுதமான நேரம் அது.

ஒரு வரிச் சித்திரமாக, கதாநாயகியின் நிலையை தீட்டியது, அழகு...

"எப்படித்தான் இப்படி இருக்கியோ??? சாப்பிடக் கூட நேரமில்லாம புத்தகமும் கையுமா??" என்று
காலையில் புத்தகப்பையை எடுத்து கால அட்டவணைப்படி அடுக்கிக் கொண்டிருந்த நந்தினிக்கு சேமியாவை ஊட்டிய வண்ணமே அம்மா வித்யா புலம்பிக்கொண்டிருந்தார்.
உரையாடல்கள் முறியாமல் கதையின் போக்கோடு இயைகின்றன...

ஒரு ஜோடி கண்கள் நந்தினியை உற்று நோக்கிய வண்ணம் இருந்தது
ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, நிறைவடைந்த முதற்பகுதி, மனதை 100% எதிர்பார்க்க வைத்தது அதன் நிறைவுப் பகுதியை...
அதற்கு ஒரு சபாஷ்...

நிறைவுப் பகுதியில்,

நந்தினி எதேச்சையாய்த் திரும்பியவள், அந்த கண்களின் ஈர்ப்பு விசையால் தள்ளப்பட்டு சட்டென்று திரும்பிக் கொண்டாள். "யார் இவன், ஏன் என்னை அப்படிப் பார்க்கிறான்..??!!" புரியாமல் தவித்தாள் நந்தினி.

முதற்பகுதியின் கோர்வை சிறிதும் முறிவடையாத நேர்த்தி, எழுத்தாற்றலின் அழகிய வன்மை...
நாயகியின் மனவோட்டம், புதைந்த வரிகள், எமக்குள் அந்த காட்சியின் விம்பத்தை திரையிடுகின்றன...

பள்ளியில் ஏதேனும் தோழிகள் பேசிச் சிரிக்கும் போது கூட நந்தினியைச் சேர்த்துக் கொள்ள மறுப்பர். ஏனென்று கேட்டால், "நீ சின்ன குழந்தை. உன்னை வைத்துப் பேச மாட்டோம்" என்று கூறி இவளை ஒதுக்கிவிடுவர்.
படிப்பு தவிர உலகமே அறியாமல் அப்பாவி பெண்ணாய் இருந்தாள் நந்தினி.

இந்த வரிகள் கதையில் ஒட்டவில்லை.
அல்லது, நாயகி ஏன் குழந்தைத்தனம் மிக்கவள் என்பதற்கான காரணங்கள் வலுவாக இல்லை. இங்கே சிறிய தொய்வு.
ஒரு சிறந்த, ஆற்றல் மிக்க மாணவி, ஏன் குழந்தைத்தனம் மிக்கவளாக உருவகிக்கப்படுகின்றாள் என்று புரியவில்லை.
அவள் அவ்வளவு தூரத்திற்கு உலக அனுபவம் இல்லாதவளா அல்லது, புத்தகப்பூச்சி மட்டுமா அல்லது, சக மாணவர்களுடன் பழகுவதில் உள்ள குறைபாடா என்ற எப்படி நோக்கினும், நாயகியின் நிறைவு குறைவடைவதாக ஒரு எண்ணம் மனதில் ஏற்படுகின்றது.
அடுத்த வரி, அந்தக் குறைபாட்டை உறுதி செய்வது, நாயகியின் திறமைகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
இலட்சியம் நோக்கிய பாதையில், செவ்வனே பயணிக்க புத்தக அறிவு மட்டும் போதுமா, உலக அறிவு சற்றேனும் இல்லாவிட்டால், மனதைத் தடுமாற்ற வைப்பது சுலபம்.
எனவே, நாயகியின் இலட்சியப் பாதையில் வெற்றி பெற்றாள் என்ற முடிவு, கதையோடு ஒன்றிப்போகமையின் தள்ளாட்டம் இங்கேதான் ஆரம்பிக்கின்றது.

(இதன் தொடர்ச்சி முடியும்போது சிவா.ஜி அவர்களின் முடிவாக அமைந்திருந்தால் கதை சிறந்திருக்கும். பாராட்டுக்கள் சிவா.ஜி)

எனவே இவ்வரிகளைத் தவிர்த்திருக்கலாம்.
தவிர, நாயகி தனது பிரச்சினையை தோழியிடம் சொல்லலாமோ, சொன்னால், கேலி செய்வார்களோ என்ற நிலையை உணருகின்றாள். எனவே, அவளுக்கு உலக அறிவு சற்றும் இல்லை என்றால், இந்த உணரும் நிலையும் இருந்திருக்காதல்லவா..?
அடுத்து,
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து இறுதியாண்டு தேர்வுகள் வரையான காலப்பகுதி வரைக்கும், கார்த்திக்கின் நிலை பற்றி எந்த விவரிப்புக்களும் இல்லை. அல்லது நந்தினிக்குத் தெரியவில்லையா?
பிளேட்டால் தனது கையை அறுத்துக் கொள்ளும் அளவிற்கு காதல் கொண்டிருந்த அவன் தலைமையாசிரியரிடம் சொன்ன புகாரின் அடிப்படையில், உடனடியாக தனது மனதை மாற்றி விட்டான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அப்படி ஏற்றுக்கொள்ள முடியுமாயின், பாடசாலையை விட்டு நின்றபின்னராவது அவனது காதல் முயற்சிகள் தொடர்ந்திருக்கும்.

ஆயினும், முதற்கதை என்பதால் குறைகள் என்பதைத் தவிர்த்துப் பார்ப்போமேயானால்...
பூமகளின்,
முதல் முயற்சிக்கு, அந்த முயற்சிக்குக் கொடுத்த செயல்வடிவத்திற்கு, அந்த செயல்வடிவம் பெற்ற முழுமைக்கு...
எவ்வளவு பாராட்டினும் தகும்.
பாராட்டுக்கள் அன்புத் தங்கையே...

தவிர,
ஒரு படைப்பை உருவாக்குவதில் உள்ள கடினமும், விமர்சிப்பும்,
ஒரு தாய் குழந்தையை சுமந்து பெற்றபின், அந்தக் குழந்தையின் அழகை, அழகின்மையை சொல்லும் பார்வையாளர்கள் போன்றதே...

அந்தவகையில்,
மன்னிப்புக்கோரி வாழ்த்துகின்றேன்...

அன்பளிப்பாக 418 iCash. என்னிடம் அவ்வளவுதான் உள்ளது...

பூமகள்
28-09-2007, 03:55 PM
அன்பு கமல் அண்ணா,
உங்களின் வாழ்த்து கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
வாழ்த்திற்கு நன்றிகள் அண்ணா.

பூமகள்
28-09-2007, 04:05 PM
பூமகளின் கன்னிச் சிறுகதை...
மழலையின் முதல் அடி கண்டு தாய்மை மகிழ்வது போல, மன்றம் பெருமிதம் கொள்ளும்...

உரையாடல்கள் முறியாமல் கதையின் போக்கோடு இயைகின்றன...

ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, நிறைவடைந்த முதற்பகுதி, மனதை 100% எதிர்பார்க்க வைத்தது அதன் நிறைவுப் பகுதியை...
அதற்கு ஒரு சபாஷ்...

நிறைவுப் பகுதியில்,

முதற்பகுதியின் கோர்வை சிறிதும் முறிவடையாத நேர்த்தி, எழுத்தாற்றலின் அழகிய வன்மை...
நாயகியின் மனவோட்டம், புதைந்த வரிகள், எமக்குள் அந்த காட்சியின் விம்பத்தை திரையிடுகின்றன...

இந்த வரிகள் கதையில் ஒட்டவில்லை.
அல்லது, நாயகி ஏன் குழந்தைத்தனம் மிக்கவள் என்பதற்கான காரணங்கள் வலுவாக இல்லை. இங்கே சிறிய தொய்வு.

(இதன் தொடர்ச்சி முடியும்போது சிவா.ஜி அவர்களின் முடிவாக அமைந்திருந்தால் கதை சிறந்திருக்கும். பாராட்டுக்கள் சிவா.ஜி)

எனவே இவ்வரிகளைத் தவிர்த்திருக்கலாம்.

அடுத்து,

ஆயினும், முதற்கதை என்பதால் குறைகள் என்பதைத் தவிர்த்துப் பார்ப்போமேயானால்...
பூமகளின்,
முதல் முயற்சிக்கு, அந்த முயற்சிக்குக் கொடுத்த செயல்வடிவத்திற்கு, அந்த செயல்வடிவம் பெற்ற முழுமைக்கு...
எவ்வளவு பாராட்டினும் தகும்.
பாராட்டுக்கள் அன்புத் தங்கையே...

தவிர,
ஒரு படைப்பை உருவாக்குவதில் உள்ள கடினமும், விமர்சிப்பும்,
ஒரு தாய் குழந்தையை சுமந்து பெற்றபின், அந்தக் குழந்தையின் அழகை, அழகின்மையை சொல்லும் பார்வையாளர்கள் போன்றதே...

அந்தவகையில்,
மன்னிப்புக்கோரி வாழ்த்துகின்றேன்...

அன்பளிப்பாக 418 iCash. என்னிடம் அவ்வளவுதான் உள்ளது...
உண்மையான விமர்சனம்... அசத்தல் அலசல் அக்னி அண்ணா. :icon_b:
எழுதிப் பதித்த பின் என் எண்ணவோட்டமும் இந்த கருத்துக்களையே முன்வைத்திருந்தன. :icon_rollout:
சரியாக பாய்ண்டை பிடித்துக் கூறியிருக்குறீர்கள்... என் எழுத்துக்களின் வளர்ச்சிக்கு அது நன்றாய் உதவும்.. இதற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். :icon_b: :icon_rollout:
எதற்கு மன்னிப்பு எல்லாம் கேட்குறீர்கள்?? :sauer028::confused:

உங்களின் பாசத்திற்கும் வாழ்த்திற்கும் இ-பண அன்பளிப்பிற்கும் மிகுந்த நன்றிகள் அண்ணா.

ஓவியன்
28-09-2007, 08:37 PM
அழகான படைப்புக்களுக்கு ஆழமான விமர்சனங்கள் கிடைப்பதே அலாதி இன்பம் தான்....
இதயம் மற்றும் அக்னியின் விமர்சனங்களில் லயித்தேன் பாராட்டுக்கள் நண்பர்களே....!

மன்மதன்
30-09-2007, 01:27 PM
ஒரு மாணவியின் எண்ணஓட்டத்தை அப்படியே கதையாக வடித்திருக்கிறீர்கள்.. முதல் கதை..அருமையாக உள்ளது.. பாராட்டுகள் பூமகள்.

பூமகள்
30-09-2007, 01:33 PM
அழகான படைப்புக்களுக்கு ஆழமான விமர்சனங்கள் கிடைப்பதே அலாதி இன்பம் தான்....
இதயம் மற்றும் அக்னியின் விமர்சனங்களில் லயித்தேன் பாராட்டுக்கள் நண்பர்களே....!
உண்மை தான் ஓவியன் அண்ணா. பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிகள் அண்ணா.

பூமகள்
30-09-2007, 01:34 PM
ஒரு மாணவியின் எண்ணஓட்டத்தை அப்படியே கதையாக வடித்திருக்கிறீர்கள்.. முதல் கதை..அருமையாக உள்ளது.. பாராட்டுகள் பூமகள்.
மிக்க நன்றிகள் மன்மதன் அண்ணா. உங்களின் ஊக்கம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.

நேசம்
15-10-2007, 07:35 PM
முதல் முயற்சியெ முடிவு இல்லை.இது போன்று பல சிறுகதைகளை தரும்போது இன்னும் உங்கள் திறமை மேலூம் மெருகூட்டும்.வாழ்த்துக்கள் சகோதரி

பூமகள்
15-10-2007, 07:37 PM
நன்றிகள் சகோதரர் நேசன்.
உங்களின் ஊக்கம் கண்டு மகிழ்ச்சி.
அடுத்த முயற்சியையும் துவங்கிவிட்டேன்.
"பருவநட்சத்திரங்கள்" கதையை படியுங்கள் அண்ணா!!