PDA

View Full Version : உன் புன்னகை



இனியவள்
24-09-2007, 05:42 PM
உன் பூவிதழ் புன்னகை பார்த்து
கருமேகம் கண்டு தோகை
விரிக்கும் மயிலாய் - என்
இதயம் விறிக்கிறது இறக்கை

வாடிய மலர்கள் கூட
துளிர்க்கின்றன - உன்
உதட்டோரத்தில் துளிர்
விட்ட புன்னகையை கண்டு...

உன் புன்னகை கண்டு
பொறாமை கொண்ட
சந்திரன் மறைந்து கொள்கின்றான்
முகில்களின் இடைநடுவில்..

என் கண்கள் கண்ட அழகிய
காட்சி உன் புன்சிரிப்பு
என் உயிர் தொட்ட உயிர்
உன் புன்னகை - என்றும்
இருக்கட்டும் உன்னோடு
மலரும் மலர்கள் அனைத்தும்
உன் புன்னகை கண்டு மலரட்டும்

மேகங்கள் மழையாய் மாறி
விரைகின்றன உன் புன்னகையை
தரிசித்து விட...

உன் புன்னகையை மறக்கு
கூந்தலை விலக்கிவிட
படையெடுக்கின்றன தென்றல்

அழகிய இயற்கைக் காட்சியாய் - உன்
புன்னகை கண்டு பறந்தோடுகின்றது
சோகங்கள் அனைத்தும்...

(மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என் தோழியின் முகத்தில் அரும்பிய புன்னகையைக் கண்ட அடுத்த நொடி எனக்குள் உருப்பெற்ற கவி தவறுகள் இருந்தால் மன்னிக்க தோழர்களே )

அமரன்
25-09-2007, 08:38 AM
இருட்டுக் கட்டி இருந்த வானம்
தண்ணீர்ப் பூக்களை சொரியும்போது
ஏற்படும் பூரிப்பை விஞ்சியது
நட்பூவின் மலரும் புன்னகை இன்பம்..

சம்பவ தாக்கங்களை
வார்த்தகளால் கோர்வையாக்கி
ஆரமாக்கும் பாங்குக்கு
பாராட்டுகள் இனியவள்...

இலக்கியன்
25-09-2007, 09:15 AM
புன்னகை
பெண்களுக்கு
பொன் நகை

தோழியின்
இதழ்கள்
மலர்ந்த
மகிழ்வில் கவிதை பிறந்தனவோ வாழ்த்துக்கள் சகோதரி

இனியவள்
26-09-2007, 06:14 PM
நன்றி அமர்

>>><<<>>><<<>>><<<>>><<<>>><<<>>><<<>>><<<>>><<<>>><<<>>><


நன்றி இலக்கி

ஓவியன்
29-09-2007, 11:26 AM
மற்றவர் முகத்திலே நம் செயலால் புன்னகை அரும்புகையில் கிடைக்கும் இன்பமே அலாதியானது தான், உங்கள் கவிதையைப் போலவே.....

பாராட்டுக்கள் இனியவள்!.