PDA

View Full Version : சுத்திகரிப்பாளர்கள்..!?



அமரன்
24-09-2007, 02:56 PM
இலைகளைச் சிந்தும்
சாலையோர சோலைகளின்
கிளைகளை தறிக்கின்றனர்
நகர சுத்திகரிப்பாளர்கள்..!?

aren
24-09-2007, 03:00 PM
அவர்களுக்கு வேலை எளிதாகிவிடும் என்ற காரணத்தினாலேயா. ஆனால் மரங்கள் இல்லையென்றால் அவர்களுக்கு இருக்கும் வேலையே இல்லாமல் போய்விடும் என்று நினைத்தார்களா?

நல்ல கவிதை அமரன். தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

பூமகள்
24-09-2007, 03:06 PM
சாலையோரத்து கிளைகள் மட்டும் தறிக்கப்பட்டாலும்
மரங்கள் விட்டுவைக்கப்பட்டால்.. நலமே..!!

நல்ல கவிதை. பாராட்டுக்கள் அமர் அண்ணா.:icon_b:

சாராகுமார்
24-09-2007, 03:07 PM
இலைகளைச் சிந்தும்
சாலையோர சோலைகளின்
கிளைகளை தறிக்கின்றனர்
நகர சுத்திகரிப்பாளர்கள்..!?

வாழ்த்துக்கள் அமரன் அவர்களே.
நல்ல கவிதை.அழகு தமிழ் வார்த்தை.

aren
24-09-2007, 03:08 PM
சாலையோரத்து கிளைகள் மட்டும் தறிக்கப்பட்டாலும்
மரங்கள் விட்டுவைக்கப்பட்டால்.. நலமே..!!

நல்ல கவிதை. பாராட்டுக்கள் அமர் அண்ணா.:icon_b:

எங்கே விடுறாங்க. மொட்டையடித்து ஒரு நாள் மரத்தையே இல்லாமல் செய்துவிடுகிறார்கள். என்ன செய்வது.

அமரன்
24-09-2007, 04:16 PM
நன்றி ஆரென் அண்ணா...நன்றி பூமகள்...நன்றி சாரா.

அலுவலகத்தில் இருந்து தங்ககம் திரும்பும்போது மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றிக்கொண்டு இருந்தனர்..ஊரிலும் இதே போல் செய்வது ஞாபகத்துக்கு வந்தது..அப்போது பிறந்தது இந்தக் கவிதை. நகரத்தை சுத்திகரிப்பதில் இவர்களை விட மரங்களின் பங்கு எத்துணை அதிகம்?...

அப்போது தோன்றிய இன்னொன்று...

தெருவில் இறைந்திருந்த
கண்ணீர் குழைந்த துகள்கள்
யாருக்காக..?

அறிஞர்
24-09-2007, 04:45 PM
இயற்கை ரசிப்பதாலோ என்னவோ...
அமரனின் வரிகள் இயற்கையாக உள்ளது....
வாழ்த்துக்கள்.. அமரா....

இலையுதிர் காலத்தில் உம் வரிகளை ரசிக்கிறேன்.

அமரன்
24-09-2007, 05:13 PM
நன்றி அறிஞரே!
கவிதை இயற்கையை இரசிக்கக் கற்றுகொடுத்தது...
இப்போ இயற்கை கவிதையை பெற்றுத் தருகிறது..

இனியவள்
24-09-2007, 05:17 PM
இரு குறுங்கவியும்
இரு முத்துக்கள் அமர்

வாழ்த்துக்கள்

அமரன்
24-09-2007, 05:21 PM
இரு குறுங்கவியும்
இரு முத்துக்கள் அமர்
வாழ்த்துக்கள்
முத்திலும் மேலான இயற்கையை மையமாக கொண்டதால் அப்படி ஆனதோ?
நன்றி இனியவள்..

சிவா.ஜி
25-09-2007, 04:48 AM
இலையகற்ற சோம்பல் பட்டு கிளையகற்றும் பணியாளர்கள்.... மரமகற்றாமல் விட்டார்களே வாழ்க அவர்கள்.
காற்றோடான ஊடலில் ரோமமுதிர்த்த மரங்கள்
சாலையோரங்களில் இலைகளாய்....
இயற்கயை எத்தனைமுறை பாடினாலும்..அத்தனையும் அழகு.
வாழ்த்துக்கள் அமரன்.

ஷீ-நிசி
25-09-2007, 05:46 AM
நல்ல இயற்கை ரசனை...

இலையைப் பெற்றெடுக்கும் கிளைகள்..
சாலைக்கு இடையூறாய்...
இருப்பதால்...
வெட்டப்படுகின்றன..

இடையூறாய் இருக்கும்..
எல்லா களைகளும்,
இந்தக் கிளைகள் போல
அவ்வப்போது வெட்டபட்டால்!!

நாடு சுபிட்சமாகும்...
வெட்டப்பட்ட் விருட்சம் போல...

அமரன்
25-09-2007, 08:50 AM
நன்றி சிவா. அழகான ஒன்றைப் பாடும்போது அழகு அநாகரிகமாக குடி வருகின்றனது.
நன்றி ஷீ..னீங்கள் சொல்வது நியாயமானது,நிதர்சனமானது.

மயூ
25-09-2007, 12:22 PM
ம்... அழகான வரிகள் அமரன்.. கலக்குங்க!!!

சுகந்தப்ரீதன்
25-09-2007, 01:27 PM
சின்ன சின்ன விசயங்களா உத்துநோக்கி எழுதுறீங்க.. அருமையாக உள்ளது அமர்.ஜீ.. எப்ப ஜீ ஆனிங்க சொல்லவே இல்ல... வாழ்த்துக்கள்!

அமரன்
25-09-2007, 07:23 PM
நன்றி மயூ..ப்ரீதன்..
முன்னாடி இருக்கவேண்டியது பின்னாடி வந்துவிட்டது ப்ரீதன்...