PDA

View Full Version : சொந்தமடி நீ எனக்கு!!!



aren
24-09-2007, 02:18 PM
சொந்தமடி நீ எனக்கு
என்று இருமாப்புடன்
இருந்த எனக்கு
கிடைத்தது ஒரு ஆப்பு!!!

டாட்ட சுமோவுடன்
வந்த எதிர்வீட்டுப்
பையனுடன் சேர்ந்துகொண்டு
எனக்கு டாட்டா காட்டிவிட்டுப்போனாள்!!!

வெறும் சைக்களிளைத்
தள்ளிக்கொண்டு
என்ன செய்வது
என்று தெரியாமல் நான்!!!

சிவா.ஜி
24-09-2007, 02:22 PM
சந்தர்ப்பவாதிகளை இனம் கண்டுகொண்டதே நல்லதென்று..."அண்ணாமலை சைக்கிளு....." என்று சுத்திவரவேண்டியதுதான்.எந்த குஷ்பூவாவது கிடைக்காமலா போய்விடுவார்...எதார்த்தமான கவிதை ஆரென்.பாராட்டுக்கள்

aren
24-09-2007, 02:28 PM
குஷ்புன்னு சத்தமா சொல்லிடாதீங்க சிவா. சுந்தர். சி வேறு நம் தளத்தில் வேவு பார்த்துக்கொண்டிருக்கப் போகிறார். அப்புறம் வம்பாகிவிடும்.

சிவா.ஜி
24-09-2007, 02:30 PM
அதனாலத்தான் ஆரென் அந்த குஷ்பூன்னு சொல்லாம எந்த குஷ்பூவாவதுன்னு சொன்னேன்....நாங்க வெவரமானவுங்கல்ல....

aren
24-09-2007, 02:36 PM
அதனாலத்தான் ஆரென் அந்த குஷ்பூன்னு சொல்லாம எந்த குஷ்பூவாவதுன்னு சொன்னேன்....நாங்க வெவரமானவுங்கல்ல....

சரி சரி, வெவராமா இருந்தா சரிதான். தலைநகரம் ஸ்டில்லே வந்துடப்போறாங்க.

அமரன்
24-09-2007, 03:35 PM
இப்படியும் சிலர்...யதார்த்தம் புரிந்தவர்களா புரியாதவர்களா என்று தீர்மானிக்க முடியாத அளவுக்கு சாதகமான பாதகமான சம்பவங்கள் பல உள்ளன...இருபாலாருக்கும் பொருந்தக்கூடியது...பாராட்டுகள் அண்ணா..

மயூ
24-09-2007, 03:37 PM
ஹா.. ஹா.. நல்ல கவிதை...
இதோ உங்களுக்கு ஒரு டெடிக்கேசன்....
http://www.youtube.com/watch?v=8U1aG_yzpCU

மன்மதன்
24-09-2007, 06:53 PM
நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா
நீங்க மோட்டர் பைக்கையே பாப்பீங்க..
நாங்க மோட்டர் பைக்கிலே வந்தாக்கா
நீங்க மாருதிக்கு மாறுவீங்க..

என்ற பாடலை கேட்டுமா நீங்க ஏமாந்திட்டீங்க.. எதுகை மோனையுடன் கவிதை தூள்..

aren
25-09-2007, 12:28 AM
இப்படியும் சிலர்...யதார்த்தம் புரிந்தவர்களா புரியாதவர்களா என்று தீர்மானிக்க முடியாத அளவுக்கு சாதகமான பாதகமான சம்பவங்கள் பல உள்ளன...இருபாலாருக்கும் பொருந்தக்கூடியது...பாராட்டுகள் அண்ணா..

நன்றி அமரன். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பட்டியலிட்டால் அதில் ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஓவியன்
28-09-2007, 11:47 AM
ஹா, ஹா நல்லா வைச்சிட்டாங்க ஒரு ஆப்பு!

கவிதை சுப்பர், அதற்கு மயூவோட டெடிக்கேசனும் சுப்பர்...
ஏனோ மயூவோட டெடிக்கேசனைப் பார்கையிலே அவரோட ஞாபகம் தான் வருது....! :D