PDA

View Full Version : கு(றை)ழந்தைகள்....!



சிவா.ஜி
24-09-2007, 06:49 AM
http://i194.photobucket.com/albums/z250/sivag/shanthi012.jpg

தேவகுமாரன் தானம் கேட்டதால்
தேகமறுத்து கவச குண்டலமீந்தான்
அன்றைய கர்ணன்.....

தேவனே விரும்பி
எடுத்துக்கொண்டான்
தேக பாகங்களை
நான் இன்றைய கர்ணன்...

ஊறும் எறும்பையும்
உபத்திரவிக்க கால்களில்லை
ஆண்டவனுக்கு நன்றி..!

கடிக்கும் கொசுவையும்
அடிக்க கைகளில்லை
ஆண்டவனுக்கு நன்றி...!

பசித்தால் சோறூட்ட
பாசமுள்ள கைகளுண்டு
கழிவுக் கழுவிட
கருணையுள்ள கரங்களுண்டு!

எத்தனை வளர்ந்தாலும்(?)
எப்பவும் குழந்தைதான்,
அங்கம் சிறிது
குறைந்த குழந்தைதான்!

அய்யோபாவமும்,
பரிதாபப் பார்வையும்
தேவையில்லை எனக்கு...
உங்களோடு ஒருவனாய்
என்னையும் சேர்த்துக்கொள்ளும்
தோழமை கிடைக்குமா....?

lolluvathiyar
24-09-2007, 06:56 AM
ஐயோ என்ன கொடுமை இது,
இயற்கையின் மறுபக்கமோ
பிறந்தவுடன் கள்ளிபால் கொடுக்காமல்
உறுதியாக* வளர்க்கும் அந்த தாய் பாசம் பாராட்டகுறியது.

சிவா.ஜி
24-09-2007, 07:02 AM
இயற்கையின் மறுபக்கம்தான் வாத்தியாரே...ஆனாலும் இதில் ஒரு கொடுமையான விஷயம்...இவன் தன் தாயாலும் நிராகரிக்கப்பட்டவனே....இவர்களைப்போலுள்ளவர்களைப் பாதுகாக்க கிருஷ்ணகிரியில் ஒரு இல்லம் இருக்கிறது.அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்மனி அதனை நடத்திவருகிறார்.அந்த இல்லத்துக்கு நானும் போயிருந்தேன்...நம் மக்களிடமும் மனித நேயம் குறையவில்லையென்பதை அங்கு கண்டேன்.நிறையபேர் இவர்களுக்கு உதவ வருகிறார்கள்.இவனைப் போல பலர் அங்குள்ளார்கள்.

lolluvathiyar
24-09-2007, 07:20 AM
இதில் ஒரு கொடுமையான விஷயம்...இவன் தன் தாயாலும் நிராகரிக்கப்பட்டவனே

வருத்தமாக தான் இருகிறது. ஆனால் அன்த தாய் தந்தை ஏழைகளாக இருந்தால் அவர்கள் நிலையில் இருந்து சிந்தித்து பார்த்தால் வேறு மாதிரி தெரியும். இ ந்த குழந்தை அவர்கள் எப்படி வளத்தி சமூகத்தில் புலங்க வைக்க முடியும். அவர்களுக்கு பிறகு யார் இதை பார்த்து கொள்வார்கள். பாவம் என்ன செய்வார்கள் அதனால் இங்கு கொண்டு வந்து விட்டிருக்கலாம்.


இயற்கையின் மறுபக்கம்தான் வாத்தியாரே...


இயற்கையை திட்ட மணமில்லை. விலங்குகளில் கூட இது போன்ற ஊனத்துடன் பிறக்கும். அவற்றை பரமாரிக்க முடியாது தாய் விட்டு விட்டு சென்று விடும். பிறகு அந்த குட்டிகள் நரிகளுக்கு இரையாகிவிடும். தாய் எஞ்சிய குட்டிகளை வளர்க்கு கடமையை தொடர்ந்து விடும்.
இயற்கையின் மிக பெரிய தத்துவம் பிட்டஸ்ட் மஸ்ட் ஓன்லி சர்வைவ்.

செயற்கையாக வளர்க்க பட்ட நமக்கு நான் சொல்வது கேட்க நாரசமாக இருக்கும். ஆனால் இயற்கை உன்மையாகவே இருக்கும்.


மக்களிடமும் மனித நேயம் குறையவில்லையென்பதை அங்கு கண்டேன்.

மனித நேயத்தை பாராட்டுவதை விட கை எடுத்து கும்பிட வேண்டும்

ஷீ-நிசி
24-09-2007, 07:42 AM
ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க சிவா அவர்களே...

வரிகளில் எல்லாம் ஒரு நிறைவு காணப்படுகிறது...

எத்தனை வளர்ந்தாலும்(?)
எப்பவும் குழந்தைதான்,
அங்கம் சிறிது
குறைந்த குழந்தைதான்!

மிக மிக ரசிக்க வைத்தது...

வாழ்த்துக்கள் சிவா....

இப்படி நிராதரவான குழந்தைகளின் எதிர்காலம் சிரமம்தான் என்றாலும் அவர்களின் வைராக்கியம் நம்மைவிட அதிகமாய் இருக்கும்...

மனம் கனக்க செய்கிறது...

தொடருங்கள் சிவா...

அமரன்
24-09-2007, 07:50 AM
எத்தேசம் போனாலும் கலங்க வைப்போர்..படைப்பாளிமேல் கோபம் கொள்ள வைப்போர்...படைப்பாளிகளை தீவிரமாக கோபம் கொள்ள வைப்போர்..வளர்ந்த நாடுகள் பலவற்றில் சகல இடங்களிலும் இவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். கொடுப்பவர்களை நினைத்து மகிழ்ச்சியும் பெறுபவர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்று ஒருகணம் தோன்றும்போது தோன்றும் கனமான நிலையும் கலந்து சொல்லொணா உணர்வு நெஞ்சை அடைக்கும். பரிதாபம் மீறி வாழ வழி செய்கின்றனரே என்ற நினைப்பு என்பது மயிலிறகாய் வருடும்...எல்லாத் தேசத்திலும் அவர்களை தோழமையுடன் நோக்கும் நாள் வெகு விரைவில் வரவேண்டும்....அந்த மனப்பாங்கு எல்லோரிடத்திலும் ஓங்க வேண்டும்....எம்மாலும் வாழ முடியும் என்னும் வைராக்கியத்தை அவர்களுள் புகுத்தி வளர்க்க வேண்டும்...
உருகவைக்கும் கருவை அழகான வார்த்தைகளால் சீவி சிங்காரித்து கவிதையாக தந்த சிவாவுக்கு பாராட்டுக்கள்....

சிவா.ஜி
24-09-2007, 07:56 AM
இப்படி நிராதரவான குழந்தைகளின் எதிர்காலம் சிரமம்தான் என்றாலும் அவர்களின் வைராக்கியம் நம்மைவிட அதிகமாய் இருக்கும்...

மனம் கனக்க செய்கிறது...

தொடருங்கள் சிவா...
மிக சரியாகச் சொன்னீர்கள் ஷீ..அவர்களின் வைராக்கியம் உண்மையிலேயே ஆச்சர்யப்படுத்துகிறது.அதுதான் அவர்களை மனக்குறையின்றி வாழவும் வைக்கிறது.நன்றி ஷீ-நிசி.

சிவா.ஜி
24-09-2007, 07:59 AM
..எல்லாத் தேசத்திலும் அவர்களை தோழமையுடன் நோக்கும் நாள் வெகு விரைவில் வரவேண்டும்....அந்த மனப்பாங்கு எல்லோரிடத்திலும் ஓங்க வேண்டும்.......

கண்டிப்பாக இந்த மனப்பாங்கு இன்றைய இளைஞர்களிடம் உள்ளது அமரன். வெறும் பொழுதுபோக்கும்,ஊர்சுற்ரலும் மட்டுமல்ல எங்கள் வாழ்க்கை அதையும் தாண்டிய வேறொன்று இருக்கிறது என்று உணர்ந்திருக்கிறார்கள்.
நன்றி அமரன்.

வசீகரன்
24-09-2007, 08:14 AM
மனம் காணத்து போகிறது... படத்துடன் தந்திருக்கிறீர்கள்....
இன்பமும் துன்பமும் இரண்டற கலந்த உலகிது....!

வசீகரன்

சிவா.ஜி
24-09-2007, 01:02 PM
மனம் காணத்து போகிறது... படத்துடன் தந்திருக்கிறீர்கள்....
இன்பமும் துன்பமும் இரண்டற கலந்த உலகிது....!

வசீகரன்

கண்டிப்பாக வசீகரன்.இரண்டும் கலந்ததுதான் உலகமென்றாலும் இவர்களின் வாழ்வு.....என்றும் ஒரு கேள்விக்குறிதானே.....?

ஆதவா
05-10-2007, 03:22 AM
சபாஷ் சிவா.ஜி அண்ணா.

ஷீ-நிசி சொல்வது போல வரிகள் அனைத்திலும் ஒரு நிறைவு காணப்படுகிறது. அதேசமயம் கவிதை வரிகளால் வித்தியாசப்படுகிறது... வாழ்த்துக்கள். (கபாலி, வர வர நீங்க சரியாவே விமர்சனம் போடுவதில்லை.... இதெல்லாம் நல்லாயில்லை.... ஆமாம்.)

இன்றைய கர்ணன்...

தேகங்களின் ஊனம், ஒரு மன ஊனத்தை மறைத்துவிடலாம். அங்க வீனத்தை? பெரும்பாலான ஊனர்கள் (மன்னிக்க) பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டிருப்பது மனக்கஷ்டம். ஆனால் ஒருசில மக்களைக் காணுகையில் வியப்பு.. பல உதாரணர்கள் இருக்கிறார்கள். கையில்லையே காலில் ஓவியமிடும் அக்காக்கள், காலின்றி மென்பொருளின் ஆராயும் அண்ணாக்கள், இவ்வளவு ஏன், பீத்தோவனுக்கு அவ்வளவாக காது கேட்காது (சரியாகத் தெரியவில்லை. மறந்துவிட்டது. காது ஊனமா அல்லது மாலைக்கண் நோயா என்று தெரியவில்லை.). எனினும் சிம்பொனி இயற்றவில்லையா? வான் காப் கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் என்பது அனைவரும் தெரிந்த விஷயம். தாமஸ் ஆல்வா எடிசனுக்கு அவ்வளவாக காது கேட்காது, ஐன்ஸ்டீனுக்கு மறதி அதிகம்.... இவர்கள் பெரும் பிரபலர்கள். நான் கண்ட வரையில் எத்தனையோ அங்கவீனர்கள் சிறப்பாக வாழ்வதைக் கண்டிருக்கிறேன்...

ஒவ்வொரு வரிகளும் நிறைவு நிறைவாய் சொல்லுகின்றன. அவர்களின் இயலாமையை அழகாய் அடுக்குகின்றன.

எத்தனை வளர்ந்தாலும்(?)
எப்பவும் குழந்தைதான்,
அங்கம் சிறிது
குறைந்த குழந்தைதான்!

வரிகளின் நேர்த்தி கவிதையின் வெற்றி. வெட்டியெறிய வார்த்தைகளின்றி அடக்கமாய் உருக்கிய சிலையாக கவிதை.. வாழ்த்துக்கள் சிவா.ஜி./ கவிதை மட்டுமல்ல. கவி மாந்தனும் பேரழகே!

சிவா.ஜி
05-10-2007, 05:55 AM
அங்கஹீனம் உள்ளவர்களின் தன்னம்பிக்கை என்னை பல சமயங்களில் பிரமிக்க வைத்ததுண்டு.அப்படி தன்னம்பிக்கையோடு வாழ்பவர்கள் ஒருபோதும் பரிதாபம் தேடுவதில்லை,அவர்களுக்குத் தேவை அவர்களையும் தங்களில் ஒருவராக இணைத்துக்கொள்ளும் தோழர்கள்தான்.மிகச்சரியாக விமர்சித்துள்ளீர்கள்.

கவி மாந்தனும் பேரழகே!
இந்த ஒற்றை வரியில் தெரிகிறது உங்களின் உயர்ந்த சிந்தனை.நன்றி ஆதவா.

பூமகள்
05-10-2007, 07:19 AM
என்ன கொடுமை சிவா அண்ணா இது. படத்தைப் பார்த்ததும் பனிக்கும் கண்களை தடுக்கமுடியவில்லை.
உங்களின் தேர்ந்த வரிகள் இன்னும் மனத்தை கனக்க வைத்தது.
ஆனாலும் அச்சிறுவனின் தன்னம்பிக்கையை வாழ்த்தியே ஆக வேண்டும். அவரின் பெற்றோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அய்யோபாவமும்,
பரிதாபப் பார்வையும்
தேவையில்லை எனக்கு...
உங்களோடு ஒருவனாய்
என்னையும் சேர்த்துக்கொள்ளும்
தோழமை கிடைக்குமா....?
அசத்தல் கவி..! விமர்சிக்க வார்த்தைகளே இல்லை. பாராட்டுகள் சிவா அண்ணா.
தோழமையை மட்டுமே நாடும் அந்த குழந்தையின் கனவு நினைவாக இறைவனை பிராத்திக்கிறேன்.

சிவா.ஜி
05-10-2007, 07:26 AM
புரிதலுக்கு நன்றி பூமகள்.எங்கேனும் இப்படி யாரையேனும் சந்திக்க நேர்ந்தால் தோழமை கொடுப்போம்.

Narathar
05-10-2007, 07:26 AM
பசித்தால் சோறூட்ட
பாசமுள்ள கைகளுண்டு
கழிவுக் கழுவிட
கருணையுள்ள கரங்களுண்டு!

ஆண்டவனுக்கு நன்றி...!




இத்தனையை இழந்தபோதும்

பசித்தால் சோறூட்ட பாசமிக்க கைகளை தந்த இறவன் நன்றிக்குரியவன் இல்லையா?


கழிவை கழுவிவிட கருணைக்கரங்களை கொடுத்த கடவுளுக்கு நன்றியில்லையா???

சிவா.ஜி
05-10-2007, 07:32 AM
இத்தனையை இழந்தபோதும்

பசித்தால் சோறூட்ட பாசமிக்க கைகளை தந்த இறவன் நன்றிக்குரியவன் இல்லையா?


கழிவை கழுவிவிட கருணைக்கரங்களை கொடுத்த கடவுளுக்கு நன்றியில்லையா???

நிச்சயமாக அந்த கடவுளுக்கு நன்றிபாராட்டத்தான் வேண்டும்.அந்த கருனைக் கரங்களே இவனைப் பொறுத்தவரை ஆண்டவனின் பிரதிநிதிதானே..அதனால்தானே அவர்கலை என்றும் நினைவுகூர்கிறான்.

ஜெயாஸ்தா
05-10-2007, 08:28 AM
நெஞ்சை கனக்கவைத்த படம் மற்றும் கவிதை...!

எங்கள் ஊர் அருகே ஆய்குடி என்னும் ஊரில் 'அமர்சேவா' சங்கம் என்று ஒன்று உள்ளது. அவர்கள் ஊனமற்றவர்களுக்காக ஆற்றும் அரும்பணிகள் சொல்லிடங்கா. அங்கே 'PhysicallyHandicapped' என்பதற்கு பதில் 'Physically Challenged' என்று எழுதயிருந்தார்கள். நல்ல வார்த்தைதான் அல்லவா?

சிவா.ஜி
05-10-2007, 08:38 AM
மிகவும் நல்ல வார்த்தை ஜே.எம். உண்மையிலேயே அவர்களின் வாழ்க்கை ஒரு சவாலாகத்தானிருக்கிறது.இதில் பெருமைப்படவேண்டிய விஷயம்..அந்த சவாலை அவர்கள் மிகுந்த மன உறுதியுடன் சமாளிக்கிறார்களென்பதுதான்.
நன்றி ஜே.எம்.

தென்னவன்
05-10-2007, 08:40 AM
எத்தனை வளர்ந்தாலும்(?)
எப்பவும் குழந்தைதான்,
அங்கம் சிறிது
குறைந்த குழந்தைதான்!


அருமையான சிந்தனை சிவா!!!....கண்டிப்பாக தோழமை கொடுப்போம்... நெஞ்சே கனமாகி விட்டது!!! இரண்டும் அருமை!!!

சிவா.ஜி
05-10-2007, 08:43 AM
மிக்க நன்றி தென்னவன்.உங்களின் எனக்கான முதல் பின்னூட்டம்.தோழமைக் கொடுப்போம் என்ற மனதே மிகப் பெரியது.

sarcharan
05-10-2007, 08:52 AM
நெஞ்சை கனக்கவைத்த படம் மட்டுமல்ல நமது உணர்வுகளைத்தட்டும் படம்.
இவர்களை மாதிரியானவர்களுக்கு நம்மாலான உதவிகளைத் தயங்காமல் செய்யவேண்டும்.

சிவா.ஜி
05-10-2007, 08:54 AM
நெஞ்சை கனக்கவைத்த படம் மட்டுமல்ல நமது உணர்வுகளைத்தட்டும் படம்.
இவர்களை மாதிரியானவர்களுக்கு நம்மாலான உதவிகளைத் தயங்காமல் செய்யவேண்டும்.

கண்டிப்பாக சரன். இப்போதைய இளைஞர்களிடம் இந்த உதவும் மனப்பாங்கை நிறையவே பார்க்கிறேன். பெருமையாக இருக்கிறது இளம் சமுதாயத்தை நினைத்து.