PDA

View Full Version : நிறைமதி....!



வசீகரன்
24-09-2007, 06:14 AM
நிலை மறந்து நின்ற நேரங்கள்
நின்னில் காதல் கொண்ட நேரங்கள்...

நிஜம் கூட சுட்டது..... நிர்ப்பந்தங்கலான தருணங்கள்....

நினைவலைகளில் வீழ்ந்தது
நீ விட்டு சென்ற நேரங்களில் இடைவெளிகள்...

நிச்சயமற்று போனது நித்திரையும்
நித்திரை நிலை கொளாத நீண்ட இரவுகளும்....

ஆரிருளும் அடங்கித்தான் போகிறது...
என் உலகில் நிறைமதி என நீ நீங்கியிருப்பதில்......!

என்றும் நான்
வசீகரன்

பூமகள்
24-09-2007, 06:31 AM
நினைவலைகளில் வீழ்ந்தது
நீ விட்டு சென்ற நேரங்களில் இடைவெளிகள்...

நிச்சயமற்று போனது நித்திரையும்
நித்திரை நிலை கொளாத நீண்ட இரவுகளும்....

"சிந்தையின் சந்துகளில்
உந்தன் சித்திர ஞாபகங்கள்...

துயில் காணா துன்பப்பட்ட இரவுகள்
வெயிலாய்ச் சுடும் துயர் கொண்ட நெஞ்சம்..."

நல்ல வரிகள்... பாராட்டுக்கள் வசீகரன்.
வாழ்த்துகள்..!!:icon_b:
இன்னும் நிறைய படையுங்கள்.:icon_rollout:

வசீகரன்
24-09-2007, 06:34 AM
மிக்க நன்றிகள்.... மலர்மகளே.... தங்கள் வாழ்த்துக்களுக்கு

வசீகரன்

ஷீ-நிசி
24-09-2007, 06:52 AM
அவள் இல்லாத தருணங்கள்.. என் மனம் அடைந்த வேதனைகள்..
விழி மூடினேன் உறங்கிட அல்ல, அவள் நினைவுகளில் இறங்கிட...

விழி வழியே வழிந்தது அவளின் ஞாபகங்கள் கண்ணீராய்,

காதலி அருகில் இல்லாத நிமிடங்கள். எதுவுமே பிடிக்காததாய்...
அவள் இருக்கும்போதோ எல்லாமே பிடித்ததாய்..

இதயத்தில் ஏன் இத்தனை மாற்றங்கள்... காதலில் சிக்கியது இதயமா நானா...

உணர்வுகள் மிக அழகு வசீகரன்... வசீகரன் பெயரைப்போலவே உங்கள் கவிதையும் என் மனதை வசீகரித்தது. வாழ்த்துக்கள்....

வசீகரன்
24-09-2007, 07:06 AM
நன்றிகள் பல.....! தங்கள் பின்னூட்டம் அருமை.....
நிஷி அவர்களே..... ! மிக்க நன்றிகள்.....!

என்றும் நான்
வசீகரன்

சிவா.ஜி
24-09-2007, 07:08 AM
நிறைமதியாய் ஒருத்தி
உன்மதியில் இறங்கி
உறங்கவிடாமலாக்குகிறாள்..
காதல் கொண்ட நேரங்கள்
சுற்றிவந்து கும்மியடிக்க
நீண்ட இரவுகள்
சந்தோஷ தருணங்களாய்..

அழகான கவிச் சிந்தனை வசீகரன். வாழ்த்துக்கள்.

வசீகரன்
24-09-2007, 07:56 AM
நன்றி நண்பர் சிவா ஜி.....அவர்களே.... தங்களது கருத்துக்கு...

வசீகரன்

அமரன்
24-09-2007, 08:10 AM
சொற்ப நாட்களுக்கு வதைக்கும் பிரிவுத்துயர் கால ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படும்..புதிதாகப் பூக்கும் உறவுப் பூக்களை ஏற்கும் நிலையை மனம் எய்தும்...மாற்றீடு என்பது (ஓருசில சந்தர்ப்பங்கள் தவிர்த்து) மனித வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்ததுதானே...
வரியமைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் வசீகரம் இன்னும் கூடி இருக்கும்..பாராட்டுகள் வசீகரன்...

பக்கத்தில் அவளிருக்க
ஏக்கங்கள் ஏங்குகின்றன..
சொர்க்கத்தில் அவன்
முங்கித் திளைக்கிறான்..

அவள் தூரமாக
குறைகிறது
ஏக்கத்துக்கும் அவனுக்கும்
இடையான தூரம்......

தூக்கம் தொலைத்து-உலக
சமனிலை சிதைந்து
ஏக்கங்களுடன் அவன்.
சொர்க்கத்தை எதிர்பார்த்து...

சுகந்தப்ரீதன்
24-09-2007, 12:43 PM
ஆரிருளும் அடங்கித்தான் போகிறது...
என் உலகில் நிறைமதி என நீ நீங்கியிருப்பதில்......!

என்றும் நான்
வசீகரன்

அழகான வரிகள் வசீகரா... ஆனால் ஆரிருளின் அர்த்தம் என்னவென்று எனக்கு புரியவில்லை...! சொல்லுங்களேன்...

வசிகரமான வ்ரிகளின் சொந்தகாரர் ஆகிவிட்டீர்கள் வசிகரரே... எனது வாழ்த்துக்கள்...!