PDA

View Full Version : இலக்கணம் - றகர ரகரச் சொற்கள்



பாரதி
23-09-2007, 04:32 PM
றகர ரகரச் சொற்கள்

நம்மிடையே வழக்கமாக வரும் ஐயங்களை ஓரளவுக்காவது தீர்க்க இத்திரியில் வரும் சொற்கள் பயன்படும் என்று நம்புகிறேன். ஒரே முறையில் எல்லாச்சொற்களையும் தருவது கடினம் என்பதால் ஒவ்வொரு பதிவிலும் சில சொற்களைக் காண்போம்.

அரம் - ஓர் ஆயுதம்
அறம் - தருமம்

அரவு - பாம்பு
அறவு - நீக்கம், முடிவு

அரன் - சிவன்
அறன் - தருமம்

அரா - பாம்பு, சிவனே
அறா - நீங்கா, நீங்காத (அம்புறாத்துணி)

அரி - காய்களை சிறிதாயறு, பொருள்களைச் சிறிது சிறிதாக சேர், பயிர்களை அறு, எறும்பு போல் பொருள்களைத் தின், அரிக்கட்டு, திருமால்
அறி - தெரிந்து கொள்

அரு - வடிவில்லாதது, அரிய, அருமையான
அறு - நீங்கு, ஆறு

அருகு - பக்கம், குறைவாகு
அறுகு - ஒரு புல்

அரை - பாதி, இடை, மாவாக்கு, துவையலாக்கு
அறை - அடி, அரங்கு

ஆரை - ஒரு கீரை, சக்கரவுறுப்பு
ஆறை- ஆற்றூர் எனபதன் மரூஉ

இர - வேண்டு, பிச்சையெடு
இற - சா, அளவுகட

இரக்கை - பிச்சையெடுத்தல்
இறக்கை - சாதல், சிறகு

இரங்கு - அருள்கூர்
இறங்கு - கீழ்வா

இரப்பு - பிச்சையெடுத்தல்
இறப்பு - சாவு, இறவாணம்

இரவு - இரவு
இறவு - முடிவு

இரா - இரவு, இருக்கமாட்டா
இறா - இறால்

இராட்டு - கைராட்டினம்
இறாட்டு - இறால்

இரு - தங்கு, உட்கார், காத்திரு, வாழ்ந்திரு, இரண்டு
இறு - முடி, அறு, செலுத்து

இருக்கு - முதல் ஆரிய வேதம்
இறுக்கு - இறுகச்செய்

இரும்பு - ஓர் உலோகம்
இறும்பு - குறுங்காடு

நன்றி: மு. தேவநேயப்பாவாணர் எழுதிய உரைநடை இலக்கணமும் கட்டுரை எழுதும் முறையும் என்ற நூல்

karikaalan
23-09-2007, 05:23 PM
நன்றி பாரதிஜி.

நல்ல முயற்சி. முன்னொரு முறை ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் என்று ஒரு திரி இருந்ததாக நினைவு.. முத்துஜி துவக்கினார். பலரும் சேர்ந்துகொண்டனர்.

வளரட்டும்.

===கரிகாலன்

பூமகள்
23-09-2007, 06:32 PM
அன்பு பாரதி அண்ணா,
அருமையான கண்டிப்பாக அவசியமான திரி.
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இன்னும் தந்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
மிக நல்ல முயற்சி.:icon_b:
இன்னும் எதிர்பார்க்கிறோம் அண்ணா.
தொகுத்து பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள் அண்ணா.:icon_rollout:

ஓவியன்
23-09-2007, 06:45 PM
பயனுள்ள பதிவு அண்ணா...
றகர ரகர மயக்கங்களை தீர்த்து தெளிவு பெற நிச்சயமாக உதவும் திரி...
தொடர்ந்து இதே போன்று, லகர,ழகர,ளகர சொற்களையும் தந்தீர்களானால் பலருக்கும் பயனுள்ளதாக அமையும்....

leomohan
23-09-2007, 07:09 PM
நன்றி பாரதி.

பாரதி
23-09-2007, 11:28 PM
கருத்து தந்த அண்ணல்,பூமகள்,ஓவியன், மோகன் ஆகியோருக்கு நன்றி.

பாரதி
23-09-2007, 11:42 PM
இரை = விலங்குணவு
இறை = சிதறு, இழு, தெறி, சிறிது, வளைவு, முன்கை வரி, அரசன், கடவுள்

உரவு = வலிமை
உறவு = கலந்து வாழ்தல்

உரி = கழற்று, தோலுரி, தோல், அரைப்படி, ஒரு சொல்வகை உரிமை
உறி = பாத்திரம் வைக்கத் தூக்குங் கருவி

உரிஞ்சு = உரசு, தீண்டு
உறிஞ்சு = (வாயால்) உள்ளிழு

உரு = வடிவம். நிறம், பாட்டு, அச்சம், பொருள், மந்திரம்
உறு = பொருந்து, மிகுந்த

உருமு = இடி
உறுமு = நாய்போல் முறுமுறு

உருமி = புழுங்கு
உறுமி = ஒரு வகைப்பறை

உரை = சொல், உரசு, சொல், அருத்தம், புகழ்
உறை = இறுகு, தங்கு, மூடி

எரி = வேகு, காந்து, சின, நெருப்பு
எறி = எறிதல்

ஏரல் = பிராணிகள் ஊர்வதால் நிலத்தில் விழும் கோடு
ஏறல் = ஏறுதல்

ஒரு = ஒரு
ஒறு = தண்டி(தண்டனை கொடுத்தல்)

கர = மறை
கற = பீச்சு

கரகரப்பு = தொண்டையரிப்பு
கறகறப்பு = தொண்டையில் நீரொலித்தல்

கரம் = கை, மயம்
கறம் = வர்மம்

கரி = அடுப்புக்கரி, யானை, கருப்பாகு, தீ
கறி = தொடுகறி, இறைச்சி, புல்லைக்கடி

கரு = கருப்பாகு, முட்டை, கருப்பம், மூலம், கரிய
கறு = கோபி, கருப்பாகு

கருப்பு = கரிய நிறம்
கறுப்பு = கரிய நிறம், கோபம்

கரை = (திரவத்தில் அல்லது நீரில்) கரை, கத்து, அழை,அழு, அணை, எல்லை, பங்கு
கறை = களங்கம், இரத்தம்

கிரி = மலை
கிறி = இடும்பு, கிறுக்கு

-- தொடரும் --

அக்னி
23-09-2007, 11:59 PM
தமிழின் செம்மை வளர்க்கும் இத்திரி என்பதில் சந்தேகமில்லை...
நன்றி பாரதி அண்ணா...

aren
24-09-2007, 01:41 AM
பாரதி அருமையாக ஆரம்பித்திருக்கிறது. இந்தத்திரி என்னைப்போல் பலருக்கு உபயோகமாக இருக்கும் என்பது நிச்சயம். தொடருங்கள்.

இதை ஸ்டிக்கியாக்கலாமே.

பாரதி
24-09-2007, 08:04 AM
கருத்துக்களுக்கு மிக்க நன்றி அக்னி, ஆரென்.

குரம் = குளம்பு
குறம் = குறி சொல்லல், ஒரு வகைப்பிரபந்தம், ஒரு கலம்பக வுறுப்பு

குரவன் = பெரியோன்
குறவன் = ஒரு குலத்தான்

குரங்கு = ஒரு விலங்கு
குறங்கு = தொடை

குரவை = ஒரு கூத்து
குறவை = ஒரு மீன்

குரு = நிறம், ஆசிரியன், சிறு கொப்புளம்
குறு = கொய், குட்டையான (குறுகுறு = இரட்டைக்கிளவி)

குருகு = நாரை, கொக்கு, அன்னம்
குறுகு = கிட்டு, சுருங்கு

குருக்கு = ஒரு செடி
குறுக்கு = சுருக்கு, ஊடே, நடுமுதுகு

குருமா = ஒரு வகைக் குழம்பு
குறுமா = சிறு விலங்கு

குருமான் = குருவின் மகன், ஒரு குலம், விலங்கின் குட்டி
குறுமான் = சிறுமான், சிறுமகன்

குரும்பை = (தென்னை, பனை முதலியவற்றின்) பிஞ்சு
குறும்பை = ஓர் ஆடு

குரை = குலை, குலைத்தல், ஓர் அசைநிலை
குறை = சுருக்கு, நிரம்பாமை, குற்றம்

கூரை = முகடு
கூறை = பிண ஆடை, தேவை

சிரை = மயிர் வறண்டு
சிறை = தடு, காவற்கூடம்

சுரா = மதுபானம்
சுறா = ஒரு வகை மீன்

சூரை = ஒரு செடி
சூறை = கொள்ளை, சுழற்காற்று (சூறாவளி)

செரி = சீரணி
செறி = திணி, அடக்கு, நெருங்கு, ஓர் அணி

செரு = போர்
செறு = கோபி, அழி, நெருங்கு, நிறை, திணி, அடக்கு, வயல்

சொரி = பொழி
சொறி = பறண்டு, தினவு, தேய், ஒரு நோய், சுரசுரப்பு

-- தொடரும் --

அமரன்
24-09-2007, 08:13 AM
தமிழறிவை மேம்படுத்தும் நல்ல முயற்சி..
பலருக்குப் பயன் தரும் பிரகாசச் சுடர்...
பாரதி அண்ணாவுக்கு நன்றி கூறி..
சுடரை ஒட்டி ஆக்குகின்றேன்...
அன்புடன்

இலக்கியன்
24-09-2007, 08:15 AM
மிகவும் பயனுள்ளபதிவுகள் தொடரட்டும்

சிவா.ஜி
24-09-2007, 02:14 PM
மிக அற்புதமான,மற்றும் அவசியமான திரி.பயனடைவோர் பலரென்பதில் சந்தேகமில்லை.பாரதி அய்யாவுக்கு சிரம்தாழ்ந்த நன்றிகள்.

பாரதி
24-09-2007, 05:23 PM
கருத்துகளுக்கும் ஒட்டியதற்கும் மிக்க நன்றி அக்னி.

கருத்துகளுக்கு நன்றி இலக்கியன், சிவா.ஜி


பயனடைவோர் பலரென்பதில் சந்தேகமில்லை.பாரதி அய்யாவுக்கு சிரம்தாழ்ந்த நன்றிகள்.

அன்பு சிவா, நான் உங்களை விட வயதில் இளையவன். ஆதலால் அய்யாவெல்லாம் வேண்டாமே. நன்றி.

பாரதி
24-09-2007, 05:24 PM
தரி = அணி,தங்கு,பொறு
தறி = வெட்டு, கம்பம், முளை

தரிப்பு = கடுக்கன்
தறிப்பு = வெட்டுதல்

தரு = மரம், தருகிற
தறு = கட்டு, முடி

திரம் = உறுதி, ஒரு தொழிற்பெயர் விகுதி
திறம் = வலிமை, பக்கம், கூறுபாடு, வகை

திரை = மேலிழு, திறன் அலை போல் மேடுபள்ளமாகு, தோற்சுருக்கு, அலை
திறை = கப்பம்

துர = செலுத்து
துற = பற்றுவிடு, நீக்கு

துரு = அழுக்கு
துறு = நெருங்கு

துரை = பிரபு, வெள்ளைக்காரன்
துறை = நீர்நிலையில் இறங்குமிடம், துவைக்கும் இடம், கப்பல் நிலையம், பிரிவு

தெரி = தோன்று, அறி, (தெரிவு செய்தல்)
தெறி = இறைத்து விழு, தகர்ந்து விழு, விரலாற் சுண்டு

தெரு = வீதி
தெறு = அழி

தேரல் = ஆராய்தல்
தேறல் = தெளிதல், தேன், பரீட்சையில் தேறுதல்

நரை = மயிர் வெளு, வெண்மயிர், வெள்ளை
நறை = தேன்

நிரை = வரிசையாய் வை, வரிசை, மந்தை, ஒரு செய்யுள் அசை வகை
நிறை = நிரம்பு, நிரப்பு, கனம், நிறுத்தல், நிறைவு, மனவடக்கம்

நெரி = உடை, நொறுங்கு, நெருக்கு, நசுக்கு, விரல் சுடக்கு
நெறி = வழி, அண்டை, மதம், புருவத்தை வளை, மயிர்ச்சுருள்

பாரதி
24-09-2007, 07:32 PM
பர = விரி,பரவு,மற்ற
பற = பற(த்தல்)

பரவை = கடல், செவி வழக்கு, சுந்தரமூர்த்தியின் முதல் மனைவியின் பெயர்
பறவை = பட்சி

பரம்பு = பரவு, அடி (பரம்படித்தல் - உழுத நிலத்தைச் சமப்படுத்துதல்)
பறம்பு = பாரியின் மலை

பரி = இரங்கு, வருந்து, விரும்பு, அன்புகூர், ஓடு, ஒரு முன்னெட்டு, குதிரை
பறி = பிடுங்கு, அபகரி, தோண்டு, வலை, தோண்டல், பொன்

பரை = பார்வதி
பறை = சொல், மேளம், ஒரு குலம்

பாரை = கம்பி
பாறை = பெருங்கல், கல்நிலம்

பிர = ஒரு வடமொழி உபசர்க்கம்
பிற = தோன்று, உண்டாகு, மற்ற

பிரை = புளித்த மோர்
பிறை = குறைச்சந்திரன், சந்திரன்கலை

புரம் = ஊர், நகர், காப்பு
புறம் = பக்கம், முதுகு, பின்பு, வெளி, புறப்பொருள்

புரவு = காப்பு, ஆட்சி
புறவு = முல்லை நிலம், புறம்போக்கு, புறா

பெரு = பெரிய
பெறு = அடை, பிள்ளைபெறு, விலைபெறு, மதிப்புப்பெறு

இளசு
24-09-2007, 08:16 PM
அன்பு பாரதி

இந்த அரிய பணிக்காக
உன் கரங்களுக்கு என் அன்பு முத்தங்கள்..

சில சொற்களை சட்டென பழக்கமான செய்யுள்களிலே ( இன்னா செய்தாரை ஒறுத்தல்), அல்லது வழக்கமான செயல்களிலே ( காய் அரிந்து..) சட்டென பொருத்தி மனதில் இருத்திவைக்க முடிகிறது..

புழக்கமும் பழக்கமுமில்லாத சொற்கள் - இன்னும் ஒட்டாமல்
உருண்டோடிவிடும் ஆபத்து உணர்கிறேன்..

நினைவாற்றல் ஒரு மைதானம்..

புதிய அறிதல் அதில் விடப்பட்ட பலூன்..

காலம் என்பது காற்று..

நேற்று கற்றவை -
இன்று பார்த்தால் பாதி..
நாளை கால்வாசி
பிறகு - சில சதம் மட்டுமே..


நாற்பது முறை கற்றால் மனனம் ஆகலாம் -
ஆனாலும் புரிதல் உத்தரவாதம் இல்லை!

விழுங்கி சீரணிக்காமல் வாந்தியாய் ஒப்பிக்கப்படும் !

புதிய பலூன்களை ஏற்கனவே நாம் நன்கறிந்த தகவல் என்னும்
முளைக்குச்சிகளுடன் கட்டிப்போட்டுவதே
கற்றவை நினைவில் நிற்க நிலைக்க நல்வழி..

ஒவ்வொரு சொல்லுக்கும் அதைச் செய்துபார்க்கப் போகிறேன்..

சில சொற்கள் பரிச்சயம் இல்லை..பொருள் விளங்கவில்லை -
எடுத்துக்காட்டாய் ஆரை = சக்கர உறுப்பு எனப் பொருள் தந்தும் விளங்கவில்லை!

சாம்பவி
24-09-2007, 09:45 PM
சில சொற்கள் பரிச்சயம் இல்லை..பொருள் விளங்கவில்லை -
எடுத்துக்காட்டாய் ஆரை = சக்கர உறுப்பு எனப் பொருள் தந்தும் விளங்கவில்லை!

சக்கரத்தின் நடுவே செல்லும் கம்பிகள்.
தேசிய கொடி வரையும் போது நடுவில் நீல நிறத்தில், அஷோக சக்கரத்தில் வரைவோமே.. 24 கோடுகள்.. அவை... 24 ஆரைகள்.
ஆங்கிலத்தில்... SPOKES



.

இளசு
25-09-2007, 06:02 AM
நல்ல விளக்கம். இதிலிருந்துதான் ஆரம் என்ற சொல் வந்திருக்கவேண்டும்.

நன்றி ''காளியாத்தா'' அவர்களே!

( நட்போடு அழைக்க இந்தப்பெயர் வசதியாக இல்லையே நண்பரே!
கூடுதலாய் கூழு, பாலு ஊத்துடான்னு பயமுறுத்தல் வேறு...):)

பென்ஸ்
25-09-2007, 06:08 AM
வாசித்தேன்....
ஒரே நாளில் அனைத்தையும் மூளையில் ஏற்றும் அளவுக்கு உரவு இல்லை :)

நன்றி பாரதி....

எனக்கு மிகவும் பயனளிக்கும் பகுதி...

பாரதி
25-09-2007, 04:20 PM
அன்புள்ள அண்ணா..
உங்கள் அருமையான கருத்துகளுக்கு மிக்க நன்றி.
பொதுவாக பிழை என்று அறிந்தும் செய்பவர்கள் குறைவே.
அறியாமல் செய்யும் பிழைகளை குறைப்பதற்கான ஒரு சிறிய முயற்சிதான் இது. இதில் வரும் பெரும்பாலான சொற்கள் நானும் அறியாதவை!!
ஆனாலும் இப்படிப்பட்ட பழம் வார்த்தைகளை ஒரு சிலரேனும் கையாளுவார்கள் எனில் அதுவே பிறரைக் கற்க வைக்கத்தூண்டும்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

சரியான விளக்கத்தைக் கொடுத்த காளியாத்தாவிற்கு நன்றி.

கருத்துகளுக்கு மிக்க நன்றி பென்ஸ்.
ஒரே நாளில் கற்றுக்கொள்வதற்கு வலிமை தேவையில்லை. கொஞ்சம் விடாமுயற்சி மட்டுமே போதுமானது.பிழையின்றி எழுதுவதற்கு துணை போவதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அண்ணன் சொன்னது போல், சொற்களை வாக்கியங்களில் அமைத்து பழகுவதுதான் மறக்காமல் இருக்க உதவியாக இருக்கும். நண்பர்களுக்கு இந்தத்திரி உதவினால் அதுவே அனைவருக்கும் பேருவகை அளிக்கும்.

பாரதி
25-09-2007, 04:22 PM
பொரி = தானியம் வறு, பொரிபோலெழும்பு, தீ, வறுத்த தானியம்
பொறி = தீட்டு, எழுது, செதுக்கு, தீத்துகள், எழுத்து, புலனுறுப்பு, இயந்திரம், பிடிகருவி

பொரு = ஒப்பாகு, பொருத்து, போர் செய்
பொறு = சும, சகி, காத்திரு

பொருக்கு = சோற்று வடு
பொறுக்கு = ஒவ்வொன்றாயெடு, தெரிந்தெடு

பொருப்பு = மாலை
பொறுப்பு = உத்தரவாதம்

மர = கடினமாகு, உணர்ச்சியறு, மரத்தாலான
மற = நினைவறு, மறக்குல, வீர

மரம் = விருட்சம்
மறம் = வீரம், பாவம், ஒரு குலம்

மரல் = ஒரு பூண்டு
மறல் = வீரம், பாவம், சினம்

மரி = இற
மறி = தடு, மடக்கு, திரும்பு, ஒரு வகை ஆடு, சில விலங்குகளின் பெண்பால்

மரு = பொருத்து, வாசனை, ஒரு பூண்டு, மணமகனுக்குப் பெண் விருந்து வீட்டில் செய்யும் முதல் விருந்து
மறு = மறு(த்தல்),குற்றம், களங்கம், மற்ற

மருகு = மருக்கொழுந்து
மறுகு = மயக்கு, வீதி

மரை = ஒரு வகை மான், விளக்குக்காய், திருகுச்சுரை, தாமரை
மறை = ஒளி, ஒளிவு, இரகசியம், வேதம், மறுத்தல்

மாரன் = மன்மதன்
மாறன் = பாண்டியன், பகைவன்

முருகு = வாசனை, இளமை, அழகு, முருகன், ஒரு காதணி
முறுகு = திருகு, பதங்கடந்து வேகு

முருக்கு = ஒரு மரம்
முறுக்கு = திருகு, அதட்டு, அச்சுறுத்து, ஆரவாரி, திருக்கு, ஒரு பலகாரம்

வரம் = வரம்
வறம் = வறட்சி

வரை = வரை(தல்), நீக்கு, பொருந்து, வரி, கணு, மூங்கில்,மலை, அளவு
வறை = பொறித்த காய்கறி

விரகு = தந்திரம்
விறகு = எரிக்குங்கட்டை

விரல் = விரல்
விறல் = வெற்றி, வல்லமை, மெய்ப்பாடு, சமத்துவம்

விரை = விதை,வேகமாகு
விறை = கடினமாகு, நீள், இறந்துடம்பு நீள், குளிரால் நடுங்கு

வெரு = அச்சம்
வெறு = பகை, நிரம்பு, ஒன்றுமில்லாத, தனியான

சூரியன்
25-09-2007, 04:24 PM
பயனுள்ள பதிவை தந்தமைக்கு நன்றி பாரதி அண்ணா..

தொடருங்கள் உங்கள் படைப்புகளை...

பாரதி
26-09-2007, 04:23 PM
கருத்துக்கு நன்று சூரியன்.

-----------------------------------------------------------------

சில சொற்கள் ரகற றகர வேறுபாடின்றி எழுதப்படும். அவையாவன:

காரல், காறல்
சுரண்டு, சுறண்டு
சுரீர், சுறீர்
சுருக்கென்று, சுறுக்கென்று
கருத்து, கறுத்து
சுருசுருப்பு, சுறுசுறுப்பு
தருவாய், தறுவாய்
புரந்தர, புறந்தர
முரி, முறி


தவிர, தவற என்னுஞ் சொற்களை ஒன்றோடொன்று மயக்கக்கூடாது.
தவிர = தவிர்+அ(except)
தவற = தவறு+அ(to fail)

சில சொற்களில் வருபவை ரகரமா, றகரமா என்னும் ஐயப்பாட்டை, அச்சொற்களின் மூலத்தையேனும் பகுதியையேனும் அறிந்து அகற்றிக்கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டு:
உருக்கு என்பது உருகு என்னுந் தன்வினையின் பிறவினை.
பொறாமை என்பது பொறு என்னும் வினையடியாய்ப் பிறந்த எதிர்மறைத் தொழிற்பெயர்.

- முற்றும் -

நன்றி : ஞா. தேவநேயப்பாவணர்

சாம்பவி
26-09-2007, 07:39 PM
கருத்துக்கு நன்று சூரியன்.

-----------------------------------------------------------------
சில சொற்கள் ரகற றகர வேறுபாடின்றி எழுதப்படும். அவையாவன:

கருத்து, கறுத்து


கருத்து, கறுத்து இரண்டும் வேறு வேறு பொருள் படுபவை இல்லையோ...! :confused: :confused:

கருத்து = ஆங்கிலத்தில் ஒப்பீனியன்
கறுத்து = கறுமையான

:confused::confused::confused:

சாம்பவி
26-09-2007, 07:49 PM
கருத்துக்கு நன்று சூரியன்.

-----------------------------------------------------------------

சில சொற்கள் ரகற றகர வேறுபாடின்றி எழுதப்படும். அவையாவன:

தருவாய், தறுவாய்



என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இவையும் கூட பொருள் வேறுபட்டவை.

தருவாய் = கொடு , அளி
தறுவாய் = நேரம்


தங்களின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது.
.

பாரதி
26-09-2007, 08:18 PM
இவையும் கூட பொருள் வேறுபட்டவை.
தருவாய் = கொடு , அளி
தறுவாய் = நேரம்

அன்பு சாம்பவி,

அகமகிழ்ந்தேன்.

இங்கு நான் சொற்களைத் தந்ததால் மட்டுமே நான் பாராட்டப்பட வேண்டியவன் அல்ல. பாராட்டுக்கள் எல்லாம் 1944-ஆம் வருடத்திலேயே இவற்றைக் குறித்த தமிழ்மேதை தேவநேயப்பாவணர் அவர்களுக்கே பொருந்தும். இதில் உள்ள சொற்களும் அவருடைய புத்தகத்தில் உள்ளவையே.

நானும் தமிழைப் பொறுத்த வரை ஒரு மாணாக்கனே. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல. உங்கள் அரும்பணி தொடர வேண்டும்.

சுகந்தப்ரீதன்
21-01-2008, 11:09 AM
ளகர ழகர வேறுபாடுகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12470) திரியில் பின்னூட்டம் இடுகையில் எனக்கு அரிய தொகுப்பு என்று எழுதிய இடத்தில் சிறுதடுமாற்றம் ஏற்பட்டது.. அரிய என்பதா இல்லை அறிய என்பதா என்று..!

சிறிது யோசனைக்கு பிறகு சரியாக எழுதிவிட்டாலும் உங்களிடம் சொல்லி அடுத்து 'றகர ரகரச் சொற்கள்' தொகுத்து ஒரு திரி ஆரம்பிக்க சொல்லவேண்டுமென்று எண்ணி வெளியே வந்தால்.. அதன் கீழேயே இந்த திரி அமைந்திருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சி..!

தங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி பாரதி அண்ணா..!

செல்வா
21-01-2008, 12:32 PM
அருமையான தொகுப்பு... பகிர்தலுக்கு நன்றி பாரதி அண்ணா.

சாம்பவி சுட்டிய பிழைகள் சரி என்றே எனக்கும் படுகிறது.

கருத்து - கறுத்து
இரண்டும் ஒன்று அல்ல....
கறுத்து என்றால் - கறுப்பான, கறுப்பு நிறமுடைய
கருத்து - ஒரு விசயத்தைப் பற்றிய உங்கள் "கருத்தை"ச் சொல்லுங்கள்... கனிமொழி உருவாக்கிய "கருத்து" அமைப்பு குறிப்பிடத்தக்கது.

Vanambadi
17-02-2008, 06:31 AM
அப்படியே, வல்லினம் எங்கு பயன்படுத்த வேண்டும், மெல்லினம் எங்கு, இடையினம் எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள்!

அனுராகவன்
03-05-2008, 02:31 AM
நன்றி பாரதி அவர்களே!!
ம்ம் தமிழ் அறிய அதுவும் இலக்கணம்..
தொடர்ந்து எழுதுங்க..

poornima
28-12-2008, 04:52 AM
நல்ல உபயோகமான பதிவு.. தாமதாகப் பார்த்தமைக்கு வருந்துகிறேன்..

றகர-ரகத்தில் பயன்படுத்தாத சொல்கள் இன்னும் இருப்பில்(Reserve) நிறைய இருக்கின்றன. காட்டாக

நிறம் - நிரம் ( இந்த வார்த்தையை தனியாக இன்னும் பொருள் கொள்ள ஏதுவான
வார்த்தைகள் வரவில்லை.. ஒரு வினைத்தொகையுடன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ( நிரம்பிய)
நிறம்ப - ?

சரம் நமக்கு தெரியும் - தொகுத்திருப்பது
சறம்=?

உரம் தெரியும் = உறம்..?

பூரம் - தெரியும் பூறம்=?

இதெல்லாம் கொஞ்சம்.. இப்படிப் பார்க்க பார்க்க தன்னேரில்லாத தமிழில்
இன்னும் பயன்படுத்தவியலா ஆயிரக்கணக்கான வார்த்தைகள்
இருக்க கூடும்..

கேளடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் 3 லட்சம்..
மீதம் எத்தனை லட்சம்.. ? :-)

======
இந்த இழைப் படிக்கையில் ஒரு அரதப்பழசான கடியும் நினைவுக்கு வந்ததை
தவிர்க்க முடியவில்லை

"சார் தகறாருக்கு சின்ன ர போடுறதா பெரிய ற போடுறதா? "

"சின்ன தகராறா இருந்தா சின்ன ரா போடு.. பெரிய தகராறா இருந்த பெரிய றா போடு"

தீபா
28-12-2008, 05:37 AM
கருப்பு = கரிய நிறம்
கறுப்பு = கரிய நிறம், கோபம்


இந்த சந்தேகம் எனக்குள்ளும் உண்டு..

கறுப்பு - Black
கருப்பு ??

கருப்பு என்பது கரிய நிறத்தைக் குறிக்காது... ஆனால்... "கருநிறம்" என்று சொல்கிறோம்.. "கறுநிறம்" என்று சொல்வதில்லை..

கருமை... கருநிறம், கருத்த.... ...... எல்லாம் சரி..

கருப்பு ??? - காத்து கருப்பு என்கிறார்களே,. அதற்கு என்ன அர்த்தம்?

தமிழ் லெக்ஸிகன் சொல்வது :

கருப்பு karuppu : (page 760)

கருப்பிணி karuppiṇi

, n. < garbhiṇī. Pregnant woman. See கர்ப்பிணி.
கருப்பு karuppu

, n. < கரு-மை. [T. karuvu.] Famine, dearth, scarcity; பஞ்சம். மழையின்றிப் பசையில் கருப்புவர (சேதுபு. வேதாள. 20).

குழப்பம்தான்....

தீர்த்து வைக்க யாரேனும் வருவார்களா என்ன?

poornima
28-12-2008, 12:22 PM
கருப்பு - கர்ப்பிணிக்கு ஈடாய் பொருள் கொள்வது சரிதான் தென்றல்
கரு - கருப்பு- இவை எல்லாம் அப்படி வரக்கூடியதே
கரு - theme..
கரு - Concept - கருப்பொருள்..


பொறுப்பு - கடமை
பொருப்பு - மார்பு

பறவை - உயிரினத்தில் ஒன்று
பரவை - ஊர், பரம் என்பது உலகம்.. அல்லது இடம்

பாரதி
28-12-2008, 01:07 PM
பலரைப்போல நானும் இப்போதுதான் கற்றுக்கொண்டிருக்கிறேன். உங்களது சந்தேகங்களுக்கு விடை கிடைப்பின் இங்கு பதிக்கிறேன் நண்பர்களே. சுகந்தப்ரீதன், செல்வா, வானம்பாடி, அனு, பூர்ணிமா, தென்றல் ஆகியோரின் பின்னூட்டங்களுக்கு நன்றி.