PDA

View Full Version : பெண்ணின் பார்வையில்

aren
23-09-2007, 01:07 PM
சுதந்திரம்
பறி போகிறது!!!

தன்மானம்
பறி போகிறது!!!

தனிமை
பறி போகிறது!!!

புன்னகை
பறி போகிறது!!!

சம்பளகவர்
பறி போகிறது!!!

பாங்க் பாலன்ஸ்
பறி போகிறது!!!

தாயின் பாசம்
பறி போகிறது!!!

தந்தையின் கம்பீரம்
பறி போகிறது!!!

தந்தையின் சொத்து
பறி போகிறது!!!

நாளை என் கழுத்தில்
தாலி ஏறுகிறது!!!

aren
23-09-2007, 01:07 PM
மக்களே என்னை அடிக்க வராதீர்கள்.

kampan
23-09-2007, 01:15 PM
பறிபோகும் உங்கள் பரிதாபக் கவிதை கண்டு எத்தனை பெண்கள் மனம் பறிபோகுமோ தெரியவில்லை.

இலக்கியன்
23-09-2007, 01:15 PM
எல்லாம் பறி போய் விட்டதோ
கணவனின் சுகந்திரமும் பறி போய்விடுமே

aren
23-09-2007, 01:21 PM
எல்லாம் பறி போய் விட்டதோ
கணவனின் சுகந்திரமும் பறி போய்விடுமே

நன்றி இலக்கியன். நான் இதற்கு தலைப்பே, பெண்ணின் பார்வையில் என்றுதானே வைத்திருக்கிறேன். அவர்கள் கணவரின் சுதந்திரம் பற்றி ஏன் பேசவேண்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
23-09-2007, 01:22 PM
பறிபோகும் உங்கள் பரிதாபக் கவிதை கண்டு எத்தனை பெண்கள் மனம் பறிபோகுமோ தெரியவில்லை.

நன்றி கம்பன். பெண்கள் மனம் ஏன் பறிபோகிறது. அவர்கள் இதற்கு நிச்சயம் பின்னூட்டம் இடுவார்கள் சப்போர்ட் செய்து என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
23-09-2007, 01:30 PM
தாலி ஏறுவதில் பல பறிபோவதாந்தான் தாலியுடன் கயிறை சேர்க்கிறார்கள் போலும்..சில இடங்களில் கருத்து முரண் இருந்தாலும் இல்லறத்தில் நன்மை தீமை இரண்டும் சேர்ந்து உள்ளது என்பதை கவிமூலம் அறிய முடிகிறது..பாராட்டுக்களும் நன்றியும்.

aren
23-09-2007, 01:32 PM
நன்றி அமரன். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யுங்கள் என்றார்கள் முன்னோர்கள். ஆனால் இத்தனை இழக்கவேண்டியிருக்கிறது அதனால்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
23-09-2007, 01:34 PM
ஒரு பொய்யே பலவற்றை பறித்து விடும் சக்தி மிக்கது..ஆயிரம் பொய் சொன்னால்....எமது மூதாதையர் எம்மைக் கெடுப்பதற்காகவே இதைச் சொல்லி இருக்கார்கள் போலும்....(இப்படித்தான் சொல்லி இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் சொல்கின்றேன்.)

aren
23-09-2007, 01:37 PM
அப்படி பொய் சொல்லவில்லையென்றால் பலருக்கு கழுத்தில் தாலியே ஏறியிருக்காது அமரன். என்ன செய்வது. பலவற்றை இழந்தாலும் தாலி என்ற புனிதமான விஷயத்தை பெண்கள் உயிர் உள்ளளவும் கழுத்தில் இருப்பதையே விரும்புவார்கள். அதனால் எந்த துயரம் வந்தாலும் தாங்கிக்கொண்டு இன்னும் இல்லறத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அன்புரசிகன்
23-09-2007, 01:43 PM
நான் பறிபோகிறேன் என சுருக்கமாக ஒரு கவிதை எழுதியிருக்கலாம். :D
ஜூப்பருங்கோ..

பூமகள்
23-09-2007, 02:29 PM
ஆஹா...:shutup: இப்படிச் சொல்லி பயமுறுத்துகிறீர்களே ஆரென் அண்ணா??:icon_shok:
ஆனாலும் எல்லாமுமாய் கணவர் வருகிறாரே..??!!:icon_blush::icon_wink1: அது போதும் தானே அண்ணா??:smartass:

சாராகுமார்
23-09-2007, 02:40 PM
கவிதை அருமை.வாழ்த்துக்கள் ஆரென்.

பெண்ணுக்கு பறி போவது பல
அதனால் கிடைப்பது வாழ்க்கை
பின்னர் கிடைப்பது இனிய பிறப்பு
குழந்தை.

aren
23-09-2007, 02:47 PM
நான் பறிபோகிறேன் என சுருக்கமாக ஒரு கவிதை எழுதியிருக்கலாம். :D
ஜூப்பருங்கோ..

நன்றி அன்புரசிகன். அப்படியே செய்யலாம் ஆனால் மக்கள் படிக்கவேண்டுமே.

aren
23-09-2007, 02:48 PM
கவிதை அருமை.வாழ்த்துக்கள் ஆரென்.

பெண்ணுக்கு பறி போவது பல
அதனால் கிடைப்பது வாழ்க்கை
பின்னர் கிடைப்பது இனிய பிறப்பு
குழந்தை.

நன்றி சாராகுமார். ஆமாம் அதற்காகத்தான் அவர்கள் பல இன்னல்களையும் பொருத்துக்கொண்டு இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

arsvasan16
23-09-2007, 03:15 PM
இல்லற வாழ்க்கை வழ பல பெண்கள் இதை கொடுத்து தான் வாழுகிறார்கள்..........

ஆனால் இப்போது இல்லை.................

காலம் மாறிவிட்டது இப்போழுது மனம் ஒன்று பட்டால் வாழ்க்கை இல்லையென்றால் விவாகரத்து தான்.......

ஆனாலும் காலம் கடந்து வந்தாலும் கலக்கல் கவிதை........

உங்களின் இந்த கவிதை தான் நான் படிக்கும் முதல் கவிதை........

இந்த தமிழ்ன்றத்தில்.........

வாழ்க வளமுடன்............
நட்புடன் என்றும்...........

aren
23-09-2007, 03:19 PM
நன்றி வாசன்.

ஆனால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய பதிவை முதல் முதலில் படித்திருக்கிறீர்கள். ஓடிவிடாதீர்கள். பலர் இங்கே மிகவும் சிறப்பாக கவிதை எழுதுகிறார்கள். அவர்கள் கவிதைகளை படித்துப் பாருங்கள், நம் மன்றத்தின் சிறப்புகள் தானாகவே புரியும் உங்களுக்கு.

நன்றி வணக்கம்
ஆரென்

இனியவள்
23-09-2007, 03:28 PM
ஒன்று பறிபோகின்றது
இன்னொன்று கிடைப்பதற்காய்

ஓன்று பறிபோவதால் கிடைப்பது
நிம்மதி எனில் பறிகொடுப்பதில்
இன்பம்

அதே பறிபோவதில் கிடைப்பது
துன்பம் என்றால் பறிகொடுக்காமல்
இருப்பது நல்லது

இதில் ஆரென் அண்ணா சொல்வது
எந்த ரகம் :confused:

aren
23-09-2007, 11:42 PM
நன்றி இனியவள்.

அனைவரும் ஒன்றை பறிகொட்டுத்துத்தான் இன்னொன்றைப் பெருகிறார்கள். அதனால் ஒரு சிலருக்கு இன்பம் இருக்கிறது என்பது உண்மையே. அதனாலேயே பலர் அதில் விழுகிறார்கள்.

அக்னி
24-09-2007, 12:14 AM
திரு மணம் சிறக்கும்..,
திருமதி மனம் மரக்காதவரை...

பாராட்டுக்கள் ஆரென் அவர்களே..

சிவா.ஜி
24-09-2007, 04:56 AM
இதை அப்படியே உல்டா பண்ணி ஆணுக்குப் பார்த்தாலும் சரியாக பொருந்தும்.
பாதிக்கப்பட்ட ஆண்கள் சங்க உறுப்பினர்
சிவா.ஜி

lolluvathiyar
24-09-2007, 05:43 AM
அற்புதமான கவிதை. தேர்ந்தெடுக்கபட்ட வார்த்தைகள். இதை நான் சற்று மாற்றி இயற்ற அனுமதியுங்கள்.
அதே வரிகள் கடைசி வரி மட்டும் சில மாற்றம்

நாளை என் கழுத்தில்
தாலி ஏறுகிறது!!!

இந்த் வரியை இப்படி மாற்றி போட்டாலும் பொருந்து அல்லவா

நாளை நான் தாலி
கட்ட போகிறேன்

aren
24-09-2007, 05:54 AM
அற்புதமான கவிதை. தேர்ந்தெடுக்கபட்ட வார்த்தைகள். இதை நான் சற்று மாற்றி இயற்ற அனுமதியுங்கள்.
அதே வரிகள் கடைசி வரி மட்டும் சில மாற்றம்

இந்த் வரியை இப்படி மாற்றி போட்டாலும் பொருந்து அல்லவா

நாளை நான் தாலி
கட்ட போகிறேன்

நன்றி வாத்தியார் அவர்களே.

ஆனால் இழ்கண்ட வரிகள் மாறவேண்டும் நீங்கள் சொல்கிறபடி நடக்க, இல்லையா.

தாயின் பாசம்
பறி போகிறது!!!

தந்தையின் கம்பீரம்
பறி போகிறது!!!

தந்தையின் சொத்து
பறி போகிறது!!!

aren
24-09-2007, 05:55 AM
இதை அப்படியே உல்டா பண்ணி ஆணுக்குப் பார்த்தாலும் சரியாக பொருந்தும்.
பாதிக்கப்பட்ட ஆண்கள் சங்க உறுப்பினர்
சிவா.ஜி

நன்றி சிவா. பல வரிகள் பொருந்தினாலும், கீழ்கண்ட வரிகள் பொருந்தாது.

தாயின் பாசம்
பறி போகிறது!!!

தந்தையின் கம்பீரம்
பறி போகிறது!!!

தந்தையின் சொத்து
பறி போகிறது!!!

aren
24-09-2007, 05:56 AM
திரு மணம் சிறக்கும்..,
திருமதி மனம் மரக்காதவரை...

பாராட்டுக்கள் ஆரென் அவர்களே..

நன்றி அக்னி. திருமணம் நிச்சயம் சிறக்கும், திருமதி மனம் மறக்காததினால்.

நன்றி வணக்கம்
ஆரென்

lolluvathiyar
24-09-2007, 06:12 AM
ஆனால் இழ்கண்ட வரிகள் மாறவேண்டும் நீங்கள் சொல்கிறபடி நடக்க, இல்லையா.

தாயின் பாசம்
பறி போகிறது!!!

கிடையாது, மனைவி வந்தவுடன் தாயின் பாசம் பறி போகாது ஆனால் தாய் மீது இருக்கும் பாசம் பறிபோகும் அல்லவா. ஆகையால் தாயின் பாசத்தின் பயன் இல்லாமால் போய் விடும்.

தந்தையின் கம்பீரம்
பறி போகிறது!!!

இப்ப எங்கீங்க கூட்டு குடித்தனம். அந்த வயசனவர் தனியா எதையாவது செய்து கொண்டு இருப்பாரு. நாமள தான் நம்ம தனி குடித்தனம் கூட்டீட்டு வந்துருவாங்கல்ல.

தந்தையின் சொத்து
பறி போகிறது!!!

என்ன ஆரேன் சொல்லரீங்க. மகளுக்கு கல்யானம் பன்னினா சொத்துல கொஞ்சம் தான் போகும். ஆனா மகனுக்கு அத்தனையு தந்து விட்டு முதியோர் இல்லத்துக்கு அல்லவா போகனும். பரம்பரை சொத்தா இருந்தா மருமக வந்த பின்னாடி தான் பங்கு நியாயம் ஆரம்பிக்குது

இலக்கியன்
24-09-2007, 08:31 AM
நன்றி இலக்கியன். நான் இதற்கு தலைப்பே, பெண்ணின் பார்வையில் என்றுதானே வைத்திருக்கிறேன். அவர்கள் கணவரின் சுதந்திரம் பற்றி ஏன் பேசவேண்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

நான் ஆண்கள் பார்வையில் பார்த்தேன் அவ்வளவுதான்:D .நன்றி:

இலக்கியன்
24-09-2007, 08:34 AM
தாயின் பாசம்
பறி போகிறது!!!
கிடையாது, மனைவி வந்தவுடன் தாயின் பாசம் பறி போகாது ஆனால் தாய் மீது இருக்கும் பாசம் பறிபோகும் அல்லவா. ஆகையால் தாயின் பாசத்தின் பயன் இல்லாமால் போய் விடும்.
தந்தையின் கம்பீரம்
பறி போகிறது!!!
இப்ப எங்கீங்க கூட்டு குடித்தனம். அந்த வயசனவர் தனியா எதையாவது செய்து கொண்டு இருப்பாரு. நாமள தான் நம்ம தனி குடித்தனம் கூட்டீட்டு வந்துருவாங்கல்ல.
தந்தையின் சொத்து
பறி போகிறது!!!
என்ன ஆரேன் சொல்லரீங்க. மகளுக்கு கல்யானம் பன்னினா சொத்துல கொஞ்சம் தான் போகும். ஆனா மகனுக்கு அத்தனையு தந்து விட்டு முதியோர் இல்லத்துக்கு அல்லவா போகனும். பரம்பரை சொத்தா இருந்தா மருமக வந்த பின்னாடி தான் பங்கு நியாயம் ஆரம்பிக்குது

வாத்தியார் மிகவும் சரியாக சொன்னீர்கள் நீங்கள் மிகவும் நல்ல அனுபவசாலி என்பதை இந்தப்பதிவு காட்டி நிற்கின்றது :icon_b:

ஷீ-நிசி
24-09-2007, 08:42 AM
பெண்களை பயந்துடபோறாங்க ஆரெனாரே... திருமணத்தை நினைத்து...

ரொம்ப எளிமையா பெண்ணின் பார்வையில் பேசியிருக்கிறார் ஆரெனார்...

சிவா.ஜி
24-09-2007, 01:28 PM
நான் சொல்ல நினைத்ததை மிகச் சரியாக வாத்தியார் சொல்லிவிட்டார்.நீங்கள் குறிப்பிட்ட அந்த மூன்றுமே ஆண்களுக்கும் பொருந்தும் ஆரென்.தாயும் நம்மீது அதிகம் பாசம் காட்ட முடியாது.திருமணத்திற்கு பிறகு தாய் சாப்பாடு பரிமாறினால்கூட சில மனைவிகளுக்கு பிடிப்பதில்லை.அம்மா சாப்பிட்டார்களா என்று கேட்டால் கூட"ஏன் நீங்க போய் ஊட்டிவிடபோறீங்களா என்று இரக்கமின்றி கேட்பார்கள்.தந்தை கூட இருந்தாலோ...அவ்வளவுதான்...இந்த கிழத்துக்கு வேற மகன்களும் இருக்காங்கல்ல அங்க போறதுதானே" இப்படி பேசி கம்பீரமான அந்த மனிதரை துறும்பாக்கிவிடுவார்கள்.
தந்தை சொத்து...இப்போது ஆண்களைப்போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு கிடைகிறது(சொத்து இருந்தால்...?)

சூரியன்
24-09-2007, 01:37 PM
கடைசியில் அந்த மண்மகனின் மொத்த சுதந்திரமும் பறிபோக போகிறது..

ஆரென் அண்ணா கவிதை அருமை..

aren
24-09-2007, 02:49 PM
தாயின் பாசம்
பறி போகிறது!!!

கிடையாது, மனைவி வந்தவுடன் தாயின் பாசம் பறி போகாது ஆனால் தாய் மீது இருக்கும் பாசம் பறிபோகும் அல்லவா. ஆகையால் தாயின் பாசத்தின் பயன் இல்லாமால் போய் விடும்.

தந்தையின் கம்பீரம்
பறி போகிறது!!!

இப்ப எங்கீங்க கூட்டு குடித்தனம். அந்த வயசனவர் தனியா எதையாவது செய்து கொண்டு இருப்பாரு. நாமள தான் நம்ம தனி குடித்தனம் கூட்டீட்டு வந்துருவாங்கல்ல.

தந்தையின் சொத்து
பறி போகிறது!!!

என்ன ஆரேன் சொல்லரீங்க. மகளுக்கு கல்யானம் பன்னினா சொத்துல கொஞ்சம் தான் போகும். ஆனா மகனுக்கு அத்தனையு தந்து விட்டு முதியோர் இல்லத்துக்கு அல்லவா போகனும். பரம்பரை சொத்தா இருந்தா மருமக வந்த பின்னாடி தான் பங்கு நியாயம் ஆரம்பிக்குது

வாத்தியார் அவர்களே, நீங்கள் அனுபவஸ்தர் நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
24-09-2007, 02:49 PM
வாத்தியார் மிகவும் சரியாக சொன்னீர்கள் நீங்கள் மிகவும் நல்ல அனுபவசாலி என்பதை இந்தப்பதிவு காட்டி நிற்கின்றது :icon_b:

அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது இலக்கியன்.

aren
24-09-2007, 02:50 PM
பெண்களை பயந்துடபோறாங்க ஆரெனாரே... திருமணத்தை நினைத்து...

ரொம்ப எளிமையா பெண்ணின் பார்வையில் பேசியிருக்கிறார் ஆரெனார்...

பெண்கள் பயப்பட்டால் நல்லதுதானே ஷீ.

நன்றி ஷீ.

aren
24-09-2007, 02:52 PM
கடைசியில் அந்த மண்மகனின் மொத்த சுதந்திரமும் பறிபோக போகிறது..

ஆரென் அண்ணா கவிதை அருமை..

நன்றி சூரியன். மணமகனின் சுதந்திரம் பறிபோய்விடும் என்று நினைக்கிறீர்களா?

ஓவியன்
28-09-2007, 11:36 AM
ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் ரொம்பவே தெளிவாக இருக்கின்றார்கள், தமக்கு வேண்டியவற்றை தாமாகவே கேட்கிறார்கள்....

இப்போதுதான் அனுபவப் படத் தொடங்கி இருப்பதால் கூறுகிறேன்.... :D

ஆரென் அண்ணா உங்கள் கவிதையால் இங்கே பலரது உள்ளக்கிடக்கைகள் வெளியே வந்து விட்ட மாதிரி தெரிகிறதே....:D

மன்மதன்
28-09-2007, 12:09 PM
வீட்டு நிர்வாகத்தை நடத்துறாங்க.. சம்பள கவர் நம்மிடமிருந்துதான் பறிபோகும் ஆரென்ஜி...

ஓவியன்
28-09-2007, 12:25 PM
வீட்டு நிர்வாகத்தை நடத்துறாங்க.. சம்பள கவர் நம்மிடமிருந்துதான் பறிபோகும் ஆரென்ஜி...

அடடே அதெப்படி குடும்பஸ்தரான ஆரென்ஜிக்குத் தெரியாமல் போச்சோ...??? :D