PDA

View Full Version : வெடிவேலு..வாழ்வு கொடுத்த கமலஹாசன்.



alaguraj
23-09-2007, 11:19 AM
வந்துட்டேன்யா... வந்துட்டேன்யா! வணக்கமுங்க!

ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம் பாங்க. அப்படி ஒரு ஆளுதானப்பு நானு!

பட்டிக் காட்டுப் பய. நாலு காசு பொழங்டகுற வீடு இல்ல. சொத்து சொகம்னு எதுவுமே கிடையாது. பட்டணத்து நாகரிகமும் பழக்கமில்ல. தஸ்ஸ புஸ்ஸனு இங்கிலீஷ் பேசத் தெரியாது. அதுனால என்ன... அனுபவம் இருக்கே... அதுவுமில்லாம நானெல்லாம் மதுரக்காரன்ல!
இன்னிக்டீ மெட்ராஸ்ல காமெடி நடிகனா வண்*டியோடுது. ஆனா, இப்பவும் நமக்கு அட்ரஸ் மதுரதாண்ணே. இப்போ நம்ம பொழப்பு தலப்பு பத்தி பேசுவோம். சந்தன கூத்தா நடந்திருக்கு நம்ம வாழ்க்கையில!

மாரியம்மன் கோயில்ல மஞ்சத் தண்ணி ஊத்தினதும், ஆடு ஒரு சிலுப்பு சிலுப்பும் பாருங்க, தீபாவளின்னா அப்படி மனசு சிலுத்துக்கும்.

நமக்க்கு எல்லாமே நம்ம கூட்டாளிகதான்! அவிங்களோட வெள்ளந்தியா சுத்திக்கிட்டுத் திரியற துல ஒரு சுகம். ஆகா... அது ஒரு வாழ்க்கை!


தீபாவளின்னா ஒரு மாசத்துக்கு முன்னாலயே மனுஷனுக்கு அருளேற ஆரம்பிச்சிரும். புதுத் துணி, வேட்டு, வெளாட்டு, கறிச்சோறு, சினிமானு ராத்திரி எல்லாம் கனவு வர ஆரம்பிச்சிரும்ல.
நடராஜப் பிள்ளை.... எங்கப்பா. எங்களுக்காகவே வாழ்ந்த மனுஷன். சுத்துப்பட்டு ஏரியாவுல, கண்ணாடி வெட்டுறதுல கில்லாடியாம் அந்த ஆளு.

அவரு வேலை திறமையைப் பார்த்துப்புட்டு, கொடைக்கானல்ல வெள்ளைக்காரன் பங்களாவுக்கே வேலைக்டீக் கூப்பிட்டான்னா பாத்துக்கங்க.

பிரீமியர் சக்ரவர்த்தி வேட்டி ஒண்ணு அப்போ பாப்புலர். அது வேணும்னு மூஞ்சியைத் தூக்கி வெச்சிக்கிட்டுத் திரிவேன்.

கொள்ளத்துட்டு சொல்வானேடான்னு மறுகிப்புட்டு, மகனுக்கு பிடிச்சதுன்னு ராத்திரி எங்கேயோ புடிச்சுக் கொண்டாந்து, ஓரத்துல மஞ்சத்தடவி வெச்ச மனுஷன மறக்க முடியுமா?

தீபாவளிக்கு மொதநாளு ராத்திரி டவுனு பக்கம் கௌம்புவோம். கையில மஞ்சப்பை இருக்குமே தவிர, பையில சல்லிக்காசு இருக்காது. ரோட்டுல பனியன், ஜட்டி,
செருப்புனு ஆரம்பிச்சு அம்புட்டு அயிட்டமும் மானாவாரியா குமிச்சுப்போட்டு விப்பாங்க. திருவிழாக் கூட்டம் திரியும்.

நாம ஒரு நேக்கா, அப்பயே போற போக்டீல ரெண்டு செருப்பு, நாலு கர்ச்சீப்னு கையில சிக்குனதையெல்லாம் லவட்டிருவோம்ல.
வேட்டை முடிஞ்சதும், வைகையாத்துப் பக்கம் ஓரமா ஒக்காந்து வசூல கரெக்டாப் பங்குபோட்டுப் பிரிப்போம்.

வீரப்பனைப் பிடிக்க அதிரடிபடை ஆபீஸருக கூடிபேசின மாதிரி, மக்காநாளு என்ன பண்ணப்போறோம்னு அம்புட்டையும் பேசி முடிவு பண்ணிப்புட்டுத்தேன் கலைவோம்.


வீட்ல உரல்ல மறுநாளு இட்லிக்கு மாவரைக்க ஆரம்பிச்சுட்டா, அப்பயே குளுந்துபோகும் மனசு. பொழுது விடியுதோ இல்லையோ... சட்டி
எண்ணெயைத் தலையில கவுத்து, கைப்புடி சீயக்காயை அள்ளிக் கொறகொறனு தேஞ்ச்சிக் குளிச்சிப்புட்டு, புதுத்துணியை எடுத்து ஒதறிப் போட்டா திருநாளு தொடங்கிரும். வெள்ளாட்டுக் கறியை ஆத்தா பஞ்சு மாதிரி வறுத்து வெச்சு, பதினஞ்சு இட்லியைக் கொட்டி, நடுவுல குழிவெட்டிக் கோழிக் குழம்பை ஊத்தி சாப்டா. அட.... அட... அடடா!....
உக்காந்து ஒரு வெட்டு வெட்டுனோம்னா, காங்கிரீட் செட் போட்ட மாதிரி கரெக்டா இருக்கும்.

முடிச்சு மொழங்கை வரைக்கும் நக்கிக்கித்டுத்தான் எந்திரிப்போம். ஆத்தா அப்பன் கையில கால்ல விழுந்து முப்பது நாப்பது ரூபாயைப் புடுங்கிக்கிட்டு பொறப்பட்ருவோம்ல.
கூட்டாளிக வந்திருவானுங்க. ஒரே அலப்பறைதேன். ஆளுக்கொரு சைக்கிளை எடுத்தோம்னா, மதுர கிழியும். தங்கம், சென்ட்ரலு, ரீகலு, சிந்தாமணி, நியூ சினிமானு ஊர்வலம் கௌம்பிருவோம். எம்.ஜி.ஆர். படம் பாக்கலேன்னா அது என்னா தீபாவளி? அன்னிக்கு டிக்கட் வாங்கறது கஷ்டம்னு சொல்வாங்க.

முத நாளு ராத்திரியே அவனவன் க்யூவுல நிப்பான். நாமதான் தரையில நடக்கறதில்லியே.. அவிங்க தலை மேல நடந்து டிக்கெட் வாங்கற சாதியாச்சே. எங்க கூட்டத்துல ஒரு டஜன் பேரு இருப்பாஞ்ங்க. முருகேசன்தான் தலைவன். காசடிசிட்டு வர்றதுல அவன் ஒரு கபர்சிங்கு. தீபாவளின்னா நிச்சயமா ரெண்டு படம் பாத்தாகணும். இதுக்கிடையில வெடி வெக்கறதே தனித் திருவிழாதேன். வின்னர் பட கைப்புள்ள கணக்கா நெசத்துலயும் நாம சவடால் பார்ட்டிதென்!

அதுவும் ஏதாவது பொட்டப்புள்ளைக கண்ணுல பட்டுட்டா, நாம மிலிட்டரி ரேஞ்சுக்கு பிக்கப் ஆயிருவோம்.

நொட்டாங் கையிலயே வெடிப்போம்லேன்னு உதாரா வேட்டு விடுவோம். அது சனியன், கொளுத்தித் தூக்கிப் போடற நேரம் பாத்து, எக்குத்தப்பா வெடிச்சுத் தொலைக்கும். வலிக்குந்தேன்... எரியுந்தேன்... அழுகையே வருந்தேன். ஆனாலும் அடுத்த தெரு போற வரைக்கும் ஒரு நேக்குல சமாளிச்சு நடக்கணும். இல்லேன்னா மானம் போயிரும்ல. உள்ளங்கை யில ஊதா மை ஊத்தாம ஒரு தீபாவளியும் முடிஞ்ச தில்லை. வீரதீர சாகசங்கள்ல ஈடுபடறப்போ விழுப்புண்ணு சகஜம்தானப்பு!

கழுதை வால்ல சரம் கட்டறது, கெழவன் வர்றப்போ வெ போட்டு தெறிக்க விடறதுனு அங்கங்க நாலு பேரைப் பயந்து அலறி ஓடவிட்டு, அவன் திட்டிக்
கிட்டே போவான்ல... மனுஷப்பயலுக்கு அதுல ஒரு சந்தோஷம்.


தீபாவளிக்கு நாடகமும் போடுவோம். வேட்டியை விரிச்சுக் கட்டி, அரிக்கேன் விளக்கைப் பின்னால வெச்சு, டிராமா நடக்கும். அடே வவேலு, ஆனாலும் ரொம்ப ஆட்டம்டா! ன்னு கெழவி கத்தும். ஆத்தா ஒண்ணும் சொல்லாது. அப்பாவோ அன்னிக்கும் கடையில் உக்காந்து கண்ணாடி வெட்டுவார்!

ஒரு தீபாவளியை மறக்க மாட்டேன். வேலைக்குப் போன அப்பா, நெஞ்சு வலிக்துன்னு வீட்ல வந்து படுத்தார். ஆஸ்பத்திரிக்கு அள்ளிட்டு ஓடுனோம். டாக்டர்கள் பாத்துட்டு, காப்பாத்திரலாம்பா. ஒரு லட்ச ரூபா ரெடிபண்ணிருன்னு சொன்னாங்க. லட்சத்துக்கு எத்தனை சைபர்னுகூடத் தெரியாதே!

கண்ணு முன்னால அப்பா செத்துப்போனாருங்க. குடும்பமே கொலைஞ்சு போச்சு. அதோட முடிஞ்சுது அத்தனை ஆட்ட மும். கூட்டாளி களோடு சேர்ந்து திரிய முடியலை. தம்பி, தங்கச்சிங்க என் பூஞ்சியைப் பாத்து நிக்குது. நாலு பக்கமும் தவிச்சு நின்னு பாத்தேன். அதுக்கப்புறம் ரெண்டு மூணு தீபாவளிக்கு வீட்டுல உரல் சத்தம்கூட இல்லை. அப்புறந்தேன் மெட்ராசுக்கு நான் வண்டி
யேறின தெல்லாம்.

இப்ப காசு கையில இருக்கு. அப்பா இல்லை!

அதுக்கப்புறம் குடும்பத்தை எந்தக் குறையுமில்லாமப் பாத்துக்கறேன். தீபாவளின்னா பொட்டி
யைத் தூக்கிட்டு, மதுரைக்குக் கௌம்பிருவேன். தம்பி, தங்கச்சி, ஆத்தானு அத்தனை பேரும் கூடிக் கும்மிடியச்சா தானப்பு தீபாவளி தீபாவளி மாதிரியிருக்கும்.


அப்பு வர்ட்டா? ....


நன்றி: பழய ஆவி

என்னவன் விஜய்
23-09-2007, 11:26 AM
ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம் பாங்க. அப்படி ஒரு ஆளுதானப்பு நானு!

அடங்கொய்யல இது நம்ம ஆளு இல்ல........

சிவா.ஜி
23-09-2007, 11:34 AM
எவ்வளவு எதார்த்தமான எழுத்து.மனிதர் படத்திலும் அப்படியிருப்பதால்தான் அவரை எல்லோருக்கும் மிகப் பிடிக்கிறது.அந்த வெள்ளந்தியான பேச்சும்,செயலும் அடடா...அபாரம்...வடிவேலு வடிவேலுதான்.....படித்ததுதானென்றாலும்,மீண்டும் படிக்க சுவாரசியமாகத்தான் இருக்கிறது.நன்றி அழகுராஜ்.

அமரன்
23-09-2007, 11:47 AM
ஆனந்தவிகடனில் படித்த நியாபகம். மீட்கச்செய்த அழகுக்கு நன்றி.
யதார்த்த நகைச்சுவைகள் பலவற்றை வெளிப்படுத்த கிராமத்து வாசனை மிக்க அவசியமானது என்பதற்கு சான்றாக இன்னொன்று.

alaguraj
23-09-2007, 11:49 AM
நான் மெட்ராஸ் வந்த கதை தெரியுமுங்களா?

மதுரையில ஒரு கல்யாணம். ராஜ்கிரண் வர்றார்னு சொன்னாங்க. அடிச்சுப் பிடிச்சு அவரைப் பார்க்க ஓடுனேன். வெளுத்த வேட்டி
கட்டுன செவத்த சிங்கம் மாதிரி இருந்தாரு. என்ன தெரியும்? ன்னு கேட்டாரு.

சட்டுப் புட்னு நாலு காமெடி பிட்டுகள எடுத்துவிட்டேன். அங்கிட்டும் இங்கிட்டும் பல்டியடிச்சுப் பாடுனேன்.

சரி சரி... ஊருக்கு வந்து பாருன்னு சொல்லிப்புட்டு காருல ஏறிப் போயிட்டாரு!


மெட்ராஸ் எந்தப் பக்கம் இருக்குனுகூடத் தெரியாது. நாம பாக்ற கலெக்டர் வேலைக்கு கையில துட்டு கெடையாதே. சுத்திமுத்தி அத்தன பேர்ட்டயும் கையேந்துறேன்... , சுத்திச் சுத்தி காலு தொவண்டு போச்சு, முழி பிதுங்கிப் போச்சு. அப்புறம் வட்டிக்கு ரெண்டு சட்டியை வெச்சேன். 100 ரூபாஞ்க்டகு 20 ரூபா பிடிச்சுக்கிட்டு 80 ரூபா குடுத்தாங்க. ஆத்தாவுக்கோ அம்புட்டு வருத்தம். அது சரி, பாண்டிய
மன்னன் இப்புடிபஞ்சம் பொழைக்க போறானேனு நெனைச்சுச்சோ என்னவோ, இதை யாச்சு தின்னுட்டு போடா னு ஒரு பொட்டலம் காராசேவு கட்டிக் குடுத்துச்சு. அப்பயே அது கால்ல விழுந்து, துண்ணூறு பூசிபுட்டு பொறப்பட்டேன்.

மாட்டுத்தாவணி பக்கம் ஒரு லாரிக்காரன் வந்தான். அப்போ, கையில காசு ரெம்பக் கிடையாது. மெட்ராஸ் போணும். தாம்பரத்தில இறக்கிவிட்டா போதும். ஒத்தாசை பண்ணுங்க னேன். டிரைவர் பக்கத்துல ஒக்காரணுன்னா 25 ரூபா, லாரி மேலே படுத்துக்கிட்டா 15 ரூபா னாங்க. 10 யூபா மிச்சம் பண்ணலாம்னு ஏறிப்போயி, தார்ப்பாய் மேல படுத்துட்டேன். மேலூர் தாண்டறதுக்டகுள்ள குளிர் தாங்கல. சட்டைப் பையில வெச்சிருந்த காசைக் கெட்டியாப் பிடிச்சிக்கிட் டேன். வாழ்க்கையில ஜெயிக் கணும். இல்லேன்னா மெட்ராஸ்லயே செத்துரணும் . அது ஒண்ணுதான் மனசுல நிக்குது.
சமயபுரம் பக்கம் லாரி ராத்திரிச் சாப்பாட்டுக்கு நிக்குது. லாரிக்காசை வழியில வாங்கிக்கிறேன்னு சொல்லி இருந்தாரு டிரைவர். நான் ஏதோ யோசனையில அப்பியே அசதியில திரும்பிப் படுக்க, எதிர்காத்துல சரசரன்னு என் சட்டைப்பை யில இருந்த அத்தனை ரூபா நோட்டும், கண்ணு முன்னாபறக்டீது. எக்கிப் புடிக்க நினைச்சா, நானு சொட்டிர்னு கீழே விழுந்து, பரலோகத்துக் டிக்கெட் வாங்கிரு வேன். அய்யோ, அய்யோன்னு கத்துறேன். அழுகையா வருது.
சமயபுரம் வந்துருச்சு. துட்டு கேப்பாங்களேனு எனக்கு கண்ணுல தண்ணி கட்டிக்கிச்சு. அண்ணே, பணம் பறந்து போச்சுண்ணேனு சொன்னா, பகபகனு சிரிக்கிறாங்க. அடடா, நம்பலையேன்னு இன்னும் கண்ணீர் பெருகுது. கக்கத்துல மஞ்சப் பையோட, பாவமா நின்னேன். டிரைவர் நிதானமா என்ன பாத்தாரு. என்ன நினச்சாரோ, வாடா, சாப்பிட லாம் னாரு. இல்லண்ணேன்னு தயங்டகுனேன். அடச்சீ...வாடா னு பக்கத்து இலையில ஒக்கார வெச்சு புரோட்டா வாங்கிக் குடுத்தாரு. விடியக் காலையில தாம்பரத்துல இறக்கிவிட்டப்போ, கையில அஞ்சு யூபா குடுத்து அனுப்பி வெச்சாரு. இறங்கி நிக்கிறேன். அப்பியே கரகரனு கண்ணுல தண்ணி ஊத்திருச்சு.
இன்னிக்டீ யோசிச்சுப் பாத்ததாலும், மனசு நடுங்குது. அந்த *
ரைவரு மட்டும் இப்போ எங்கியாச்சு தட்டுபட்டார்னா, அவரு கால்ல விழுது கும்பிடணுங்க. முன்னப் பின்னே தெரியாத என்மேல கருணை காட்டுன அந்த மனசு, பக்குவம் இம்புட்டு வசதி வந்தும் எனக்கெல்லாம் வரலியேனு வருத்தமா இருக்கு!

சிவா.ஜி
23-09-2007, 11:56 AM
இதுதாங்க நம்ம சனங்களோட கொணம்..சட்டுனு கண்ணுல தண்னிவுட்டுடுவாங்க. அந்த டிரைவர் எதை எதிர்பார்த்து அந்த நேரத்தில் அந்த உதவியை செய்தார்...பின்னாளில் இந்த பையந்தான் வடிவேலுன்னு தெரியாம போயிருக்குமா...தெரிஞ்சும் ஏன் போய்ப் பாக்கல...அவந்தான் மனிதன்.....கையெடுத்து கும்பிடத்தோணுகிறது.

பூமகள்
23-09-2007, 12:26 PM
அருமையான பதிப்பு. எனக்கு இதனைப் படிக்கும் வாய்ப்பை அளித்த சகோதரர் அழகுராஜ் அவர்களுக்கு என் நன்றிகள்.

alaguraj
24-09-2007, 06:44 AM
அப்படியே பொடிநடையா ராஜ்கிரண் சார் ஆபீஸசுக்குப் போயிட் டேன். ஒருவழியா செட்டாயிட்டேன். அங்கே நாந்தான் பபூன், ஜோக்கரு எல்லாமே. போடற சோத்தை தின்னுப்புட்டு, சொல்ற வேலை எல்லாத்தையுஞ் செஞ்வேன். டி வாங்கிட்டு வருவேன். கூட்டிப்பெருக்குவேன். சோறு வடிப்பேன். காஞ்கறி வெட்டுவேன். அப்பிடியே சினிமாவையும் கொஞ்சம் வேடிக்கை பார்ப்பேன். கொஞ்சம் கஷ்டந்தேன். பத்து ரூபாய்க்கு இட்லி வாங்கிப் பத்துப் பேர் தின்போம்.

அப்பத்தான் ராசாவின் மனசிலே ஆரம்பிச்சார் ராஜ்கிரண். அவரோடயே திரிவேன்.

இளைய ராஜா அண்ணன் பாட்டு போட்டுத் தாக்குறாரு... போடா போடா புண்ணாக்குன்னு. கேக்கும்போதே உடம்பு தன்னால ஆடுது. ஆனா, அந்தப்படடுதுக்கு என்னை செலெக்ட் பண்ணலை. வேற ஒருத்தர் நடிக்கிறதா இருந்துச்சு.

திடிர்னு அவருக்கு உடம்பு சரியில்லாமப்போக, என் பக்கம் பாத்தார் ராஜ்கிரண். ஆரம்பிச்சிருச்சு நம்ம ஆட்டம். திறந்திருக்கும் கேட்டு, அது என்னுடைய ரூட்டு... வெடிக்குதொரு வேட்டு, அது பாவலரு பாட்டுன்னு பாடி ஆடறேன். அது உலகம் பூரா போகுது. படம் பிச்சிக்கிச்சு.
ரோட்ல போனா, என்னையும் ஒரு புழு பூச்சியா மதிச்சு ஜனங்க திரும்பிப் பாக்குது.

மதுரைக்கு போயிட்டேன். ஒரு தந்தி வருது... மெட்ராசுக்கு உடனே புறப்பட்டு வான்னு. தந்தியச்சவர் பெயர் நடராஜன்னு போட்டிருக்கு. செத்துப்போன எங்கப்பாவோட பேரு.

மெட்ராசுக்குப் போடான்னு எங்கப்பாவே சொன்ன மாதிரியிருந்துச்சு. ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் சார் ஆபீஸ்ல டைரக்டர் ஆர்.வி. உதயடீமார் சார் இருந்தாரு.

படம் பாத்தேன். உன்கிட்டே ஏதோ இருக்குடான்னு சின்ன கவுண்டர்ல விஜயகாந்து சாருக்கு கொடை பிடிக்கிற பண்ணையாள் வேஷம் குடுத்தார்.

உதயகுமார் அண்ணன் தான் பிரபு, கார்த்திக், கமல்னு என்னை பெரிய மனுஷங்களுக்கெல்லாம் அறிமுகம் செஞ்சு வெச்சாரு. அவரு எனக்கு ரெண்டாவது சாமி.

என் வாழ்க்கையைப் புடிச்சு, திருப்பி நல்ல திசை காமிச்சது கமல் சார்தாங்க. சிங்கார வேலன் படம் சூட்டிங்
டைமு. அவர் பக்கத்துல நானும் ஒரு காமெ வேஷம். என்னைப் பாத்துக்கிட்டே இருக்கார்.

அப்பயடியொரு ஆகிருதி யான ஒரு ஆளை நெருங்கவே மனசு கூசுது. அப்ப நான் ஒரு சின்னப்பயதான... ஒரு நடிகரு என்னை சும்மா சும்மா அடிச்சு மிதிச்சுக்கிட்டே இருந்தாரு.

கமல் சார் டைரக்டரைக் கூப்பிட்டு இது என்ன சீன்? ஏன் அவர் இப்படி பண்றார்? ஒரு டைரக்டரா இதை எப்ப அனுமதிக்கிறீங்க?னு கோபமாக் கேட்டாரு. அவரு அப்படிதான் சார்னு ஏதோ பதில் சொல்றார் டைரக்டர்.

கொஞ்ச நேரந்தேன்... கமல் சார் என்னைக் கூப்பிட்டாரு... உனக்கு என்னென்ன தெரியும்?ன்னு என்று மூஞ்சியப் பார்த்தார். ஆட்டம், பாட்டம் எல்லாமே கேள்வி ஞானந்தேன் சார்.

சும்மா குழாய்ல பாட்டுக் கேட்டு அப்பியே ஆடுறது பாடுறதுனு திரிவேனுங்க ன்னேன். ஒரு செகண்டு சிரிச்சார். நான் ஒரு படம் பண்றேன். அதுல இசக்கின்னு ஒரு காரெக்டர் வெச்சிருக்கேன். போஞ் ஆபீசுக்கு போய் செக் வாங்கிக்கங்கன்னார். நான் என் வாழ்க்கையில வாங்குன மொத செக்.

தேவர் மகன் படத்துல இசக்கின்னு ஒரு காரெக்டர் குடுத்து என்னை ரசிச்சுப் பாத்த மகா மனுஷன். இந்த ஜென்மத்துக்டீ அந்த ஒரு படம் போதும்டா சாமிங்கற மாதிரி ஒரு வேஷம். கலவரத் துல கையை வெட்டிப்புடுவாஞ்ங்க.

ஆஸ்பத்திரியில படுத்துக் கெடப்பேன். கமல் சார் பாக்க வந்ததும், என் வேதனையைக் காட்டிக்காம சிரிச்சிக்கிட்டே பேசுவேன் பாருங்க... என்னா இனிமே கழுவுறது இதே கையிலதேன், திங்கிறதும் இதே கையிலதேன் னு, அந்த ஒரு வசனந்தேன் என் வாழ்க்கைக்கே விளக்கேத்தி வெச்சுச்சு.


தேவிகலாவில் படம் பிரிமியர் ஷோ போட்டாங்க. சிவாஜி சார் படம் பாக்கு றார். பக்கத்துல இருந்த கமல்சார்கிட்டே இவன் யார்றா?ன்னு ஸ்கிரீன்ல என்னையைக் காட்டிக்
கேட்டாரு. வடிவேலுன்னு... மதுரைக்காரன்பா!னு சொல்றார் கமல். இவன் வெறும் காமெடியன் மட்டும் இல்லடா... காரெக்டர் ஆர்ட்ஸ்ட். என்னையவே கொஞ்சம் ஆட வைச்சிட்டாண்டான்னார்.

ஓரமா ஒளிஞ்சு ஒக்காந்திருந்த என் கண்ணுல தாரைதாரையாக் கண்ணீரு வழியுது. கீத்துக்
கொட்டகையில மண்ணைக் குமிச்சு, சிவாஜி படத்தைப் பாத்து வளர்ந்த பய நானு. அவர் வாயில இப்பிடி ஒரு வார்த்தை வருது.

என்ன புண்ணியஞ் செஞ்சேனோ எஞ்சாமி!

மன்மதன்
24-09-2007, 07:31 PM
மனுசன் நன்றி மறக்கக்கூடாது .. அந்த விசயத்தில் வடிவேல் இம்சைக்கு மட்டுமல்ல நன்றிக்கும் அரசன்....

ஜெயாஸ்தா
25-09-2007, 02:27 PM
ம்...வடிவேலு வாழ்க்கையும் நல்ல சுவரசியமாத்தான் இருக்கு. வடிவேலுக்கு நல்ல நேரம்... வாழ்க்கையில் சிரமப்பட்டாலும் முன்னேறிவிட்டார். ஆனால் இன்னும் சிலர் ஆரம்பித்தில் எப்படியிருந்தார்களோ அப்படியேத்தான் இருக்கிறார்கள். சினிமா ஆசையில் சென்னை போய் சீரழிந்தவர்களும் உண்டும். அந்த வகையில் வடிவேலு தப்பித்துவிட்டார். கடவுளின் கருணைப் பார்வை வடிவேலுவின் மேல் சற்று அதிகமாகவே இருக்கிறது.

alaguraj
26-09-2007, 11:54 AM
நன்றி...அடுத்த பகுதி நேரமின்மை காரணமாக உடனே பதிய முடியவில்லை. நாளை பதிய முயற்ச்சிக்கிறேன் நண்பர்களே...நன்றி

உதயசூரியன்
26-09-2007, 02:33 PM
தேவிகலாவில் படம் பிரிமியர் ஷோ போட்டாங்க. சிவாஜி சார் படம் பாக்கு றார். பக்கத்துல இருந்த கமல்சார்கிட்டே இவன் யார்றா?ன்னு ஸ்கிரீன்ல என்னையைக் காட்டிக்
கேட்டாரு. வடிவேலுன்னு... மதுரைக்காரன்பா!னு சொல்றார் கமல். இவன் வெறும் காமெடியன் மட்டும் இல்லடா... காரெக்டர் ஆர்ட்ஸ்ட். என்னையவே கொஞ்சம் ஆட வைச்சிட்டாண்டான்னார்.

ஓரமா ஒளிஞ்சு ஒக்காந்திருந்த என் கண்ணுல தாரைதாரையாக் கண்ணீரு வழியுது. கீத்துக்
கொட்டகையில மண்ணைக் குமிச்சு, சிவாஜி படத்தைப் பாத்து வளர்ந்த பய நானு. அவர் வாயில இப்பிடி ஒரு வார்த்தை வருது.

என்ன புண்ணியஞ் செஞ்சேனோ எஞ்சாமி!
உண்மையில்.. கலங்கினேன்...
போராடி வென்ற வடி வேலுவிற்க்கும்... அந்த நன்றி மறக்காத செயலுக்கும் வாழ்த்துக்கள்...

எனக்கும் நன்கு தெரியும்... சிங்கார வேலன்..
தேவர் மகன்....
மகராசன்...
இந்த முன்றிலும் வரிசையாக சான்ஸ் கொடுத்து.. வடிவேலுவை தூக்கி விட்டது..கமல்.
இது அனைவருக்கும் தெரியும்...
ஆனால்..
அதை வடிவேலு சொல்வாரா.. என்று பார்த்தேன்..
பரவாயில்லை...
வடிவேலு.. வென்று விட்டார்...

இன்னும் நிறைய வடிவேலுக்கள் இருப்பார்கள் தான்..
அவர்களும் முன்னேற எனது வாழ்த்துக்கள்..

இக்கட்டுரையை இங்கே தந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்