PDA

View Full Version : கனவில் வந்தவளே



இலக்கியன்
22-09-2007, 04:25 PM
http://img225.imageshack.us/img225/6251/naamloosxk2.png (http://imageshack.us)

குயிலே பாட மறுக்கின்றதே
அன்பே அன்பே...
உன் இனிய குரல் கேட்டதினாலே
பெண்ணே பெண்ணே...

மயில்கூடா நடைபயில
நானுகின்றதே...
உன் நடைஅழகைக் கண்டதினாலே
கண்ணே கண்ணே...

என் பார்வை நான் இழந்தேன்
என்னவளே...
உன் பார்வை என் மீது
பட்டதினாலே...

என் மூச்சை நானும் இங்கே
இழந்தேன் இழந்தேன்...
உன் மூச்சு என் மீது
பட்டதினாலே...

உன் கூந்தல் மலர் வாசம்
என்றேன் என்றேன்...
உன்கூந்தல் வாசம் தனில் எனை
இழந்த்தினாலே...

கறுப்பும் அழகு என்றேன்
பெண்ணே பெண்ணே...
உன்னை நான் கண்டதினாலே
அன்பே அன்பே...

என்னை நான் இழந்து உன்னைத்
தேடுகின்றேன்...
காணவில்லை என்னவளே
நீயும் எங்கே எங்கே....

கனவில் வந்த தேவதையோ
பெண்ணே பெண்ணே...

பூமகள்
22-09-2007, 04:27 PM
அழகுப் பெண் அழகுக்கவி போலவே...!!
ஆமாம் இலக்கியரே...!! யாரந்தப் பெண் இலக்கியரே...??? எனக்கு மட்டும் சொல்லுங்களேன்... ஹீ ஹீ ஹீ....!!

இலக்கியன்
22-09-2007, 04:50 PM
அழகுப் பெண் அழகுக்கவி போலவே...!!
ஆமாம் இலக்கியரே...!! யாரந்தப் பெண் இலக்கியரே...??? எனக்கு மட்டும் சொல்லுங்களேன்... ஹீ ஹீ ஹீ....!!

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றிகள் பூமகள்
அவள் கனவில் வந்தவர்யாராச்சே அதனால் சரியாக பெயர் சொல்ல முடியவில்லை:D

ஓவியன்
22-09-2007, 07:44 PM
ஆகா இலக்கியன் கனவில் வந்த தேவதையை இந்தளவுக்கு ஞாபகம் வைத்து கவி வரைந்துள்ளீர்களே........:)

வழமைபோல் உங்கள் வர்ணனையில் இலயித்தேன் இலக்கியா....
பாராட்டுக்கள்......

இணைய நண்பன்
22-09-2007, 10:18 PM
கனவில் வந்த தேவதை எல்லாவற்றையும் மாற்றி அமைத்து விட்டாளே..நல்ல கவிதை வாழ்த்துக்கள்

என்னவன் விஜய்
22-09-2007, 11:06 PM
இலக்கியன்
உங்கள் கவிதை நன்றாக இருந்தது..
உங்கள் கனவில் வந்த கனவுப்பெண் என் கனவில் வர பிரியப்படுகிறேன்

lolluvathiyar
23-09-2007, 09:09 AM
வர்னிப்பதில் கில்லாடி ஐயா நீங்கள்
(அனுபவம் அதிகமாக இருக்கும் போல இருக்கு)

வரிகள் இனிமையாக இருந்தன. ஆனால் உங்கள் இந்த பாட்டு ஏனோ மெட்டு சரியாக அமைய* வில்லையே

அமரன்
23-09-2007, 01:27 PM
கனவில் வந்த தேவதையின் சாகுபடியின் விளைவான இயற்கை சிதைவுறலின் நெடிய பயணங்களை கண்டுள்ளோம்....நேரில் வந்து நிதம் வதை தரும் விதைகளை பெறும் வரம் தரும் வரை இது தொடரும்..நீங்களும் தொடருங்கள்.

aren
23-09-2007, 01:30 PM
கனவில் வந்தவள்
இப்பொழுது
உங்கள் நினைவில்
வருவாள்
உங்கள் எதிரில்
கூடியவிரைவில்!!!

காத்திருங்கள்
நினைத்தது
கைகூடும்!!!

நல்ல கவிதைவரிகள் இலக்கியன். கலக்குங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இலக்கியன்
09-12-2007, 10:34 AM
பின்னூட்டக்கருத்து தந்த கள நண்பர்களுக்கு என் நன்றிகள்