PDA

View Full Version : புதையல்..!



அமரன்
22-09-2007, 10:53 AM
தும்பை தூரிகையால்
தீட்டிய ஓவியத்தை
ஆழப் புதைத்தேன்
கெடாமல் இருக்க.!?

பாறை பிளக்கும்
பாரை வீரியத்துடன்
வண்ண சிதிலங்கள்
தோண்டி எடுக்க..

இடுக்குகள் எங்கும்
ஆக்கிரமித்த மதுவங்கள்
கூர்போதை வீச்சுடன்
பால்வாழ்வைப் பாழாக்க

விழிபிதுங்க மூச்சிரைக்கும்
குழுமத்தில் ஒருவனாக
இதமற்ற பாதைகளில்
பதநீர் தேடிக்கொண்டு...

என்றுதான் முடியுமோ
இந்நெடிய ஊர்வலம்?

சிவா.ஜி
22-09-2007, 01:00 PM
இது முடிவில்லா தேடல்.எதிரே இருப்பதைப்போலத்தெரியும்...அடுத்த பிறவியிலும் கைகூடாது.ஊர்வலம் போவது தனியனாய் இருப்பின் ஆறடியில் முடிந்துவிடும்,அழுக்குகளையும்,அவலங்களையும்,அழுகிய பிணங்களாய் தோளில் சுமந்து நடப்பதால் தொட்டுவிடும் தூரமும் தொலைவாய்ப் போய்விடுகிறது.அழுக்ககன்று.அவலங்கள் கழுவ அந்தம் அருகில் தெரியும்....அழிவில்லா ஆனந்தம் தொடரும்.சிந்திக்க வைக்கும் கணமுள்ள வரிகள்..பாராட்டுக்கள் அமரன்.

சூரியன்
22-09-2007, 01:01 PM
யதார்தம் நிறைந்த கவிதை..
வாழ்த்துக்கள் அமரன்..

ஓவியன்
22-09-2007, 01:36 PM
தும்பை தூரிகையால்
தீட்டிய ஓவியத்தை
ஆழப் புதைத்தேன்
கெடாமல் இருக்க.!?

பொன்னைப் புதைத்தால் கெடாதிருக்கும்..
தீட்டிய ஓவியத்தைப் புதைத்தால்...
ஒரு இடத்திலே சரியாக இருப்பது
இன்னொரு இடத்தில் தப்பாகும்
என்பதை உணர்த தேர்ந்தெடுத்த வரிகள்
பாராட்டுக்கள் அமரன்.....


பாறை பிளக்கும்
பாரை வீரியத்துடன்
வண்ண சிதிலங்கள்
தோண்டி எடுக்க..

"எறும்படிக்க இரும்பு உலக்கையா ?" என்றொரு பழமொழி உண்டு...
அதாவது எந்த ஒரு விடயத்தையும் நாம் பாவிக்கும் போது,
பாவிக்கும் இடம், பொருள், ஏவல் அறிந்து பாவிக்க வேண்டும்...


இடுக்குகள் எங்கும்
ஆக்கிரமித்த மதுவங்கள்
கூர்போதை வீச்சுடன்
பால்வாழ்வைப் பாழாக்க

இங்கே மதுவங்கள் என்பது என்னைக் கொஞ்சம் குளப்புகிறது அமரா..
"மது" என்பதைக் குறிக்கவா நீர் அந்த சொல்லைப் பாவித்தீர்...?
இல்லை வேறு ஏதாவதா..?
ஏனெனின் ஒரு வகை சிறிய உயிரினங்களை மதுவக் கலங்கள் அல்லது மதுவங்கள் என்று பாவிப்பார்கள்....

மது என்று எடுத்துக் கொண்டால் நேரடியான பொருள் தருகிறது, அதாவது பால் போன்ற வாழ்வை பாழ் ஆக்குவதாக.....


விழிபிதுங்க மூச்சிரைக்கும்
குழுமத்தில் ஒருவனாக
இதமற்ற பாதைகளில்
பதநீர் தேடிக்கொண்டு...

இதமற்ற பாதைகளிலே பத நீர் தேடுகிறான் ஒருவன் எங்கிறீர்கள்...
பதநீர் என்பதை கள்ளைக் குறிக்க பயன் படுத்துகிறீர்களென நினைக்கின்றேன்...
ஆனால் பதநீர் நிறத்திலும் குணத்திலும் ஏன் மணத்திலும் கள்ளை விட வேறுபட்டதல்லவா..???


என்றுதான் முடியுமோ
இந்நெடிய ஊர்வலம்?

மதுவுக்காக கண்கண்ட பாதைகளில் பயணிக்கும் ஒருவனின் பயணத்தை கவி வரிகளாக்கி இருப்பதாகப் படுகிறது எனக்கு...

இத்தகைய பாதை முடிவடைய வேண்டுமெனின் அவன் தன் குடும்பத்தையும் சூழலையும் மனதார நினைத்தால் போதும், முடிந்து விடும் இந்த நெடிய ஊர்வலம் நொடிப் பொழுதிலே....

பாராட்டுக்கள் அமரரே, இப்போதெல்லாம் உங்கள் வரிகளின் உள்ளார்ந்த அர்த்தத்தை வெளிக்கொணர்வது மிகச் சிரமமான விடயமாகப் படுகிறதெனக்கு...

இணைய நண்பன்
22-09-2007, 10:25 PM
கருத்துக்கள் நிறைந்த கவிதை.வாழ்த்துக்கள் அமரன் அவர்களே

என்னவன் விஜய்
22-09-2007, 11:01 PM
அமரன்
கவிதை நன்றாக இருந்தது.இதில் நீங்கள் பாவித்த சொற்கள் புதிதாக இருந்தது.ஓவியனின் கருத்தை பார்த்தபின்புதான் எல்லாம் நினைவில் வருகின்றன்.......
நன்றி

jpl
23-09-2007, 02:05 AM
விழிபிதுங்க மூச்சிரைக்கும்
குழுமத்தில் ஒருவனாக
இதமற்ற பாதைகளில்
பதநீர் தேடிக்கொண்டு...
தென்பகுதிகளின் ஒரு சாராரின்
வாழ்வு நிலை கண்முன் படர்கின்றது.

அறிஞர்
23-09-2007, 02:21 AM
இடுக்குகள் எங்கும்
ஆக்கிரமித்த மதுவங்கள்
கூர்போதை வீச்சுடன்
பால்வாழ்வைப் பாழாக்க

விழிபிதுங்க மூச்சிரைக்கும்
குழுமத்தில் ஒருவனாக
இதமற்ற பாதைகளில்
பதநீர் தேடிக்கொண்டு...

என்றுதான் முடியுமோ
இந்நெடிய ஊர்வலம்?
புதுமையான* வ*ரிக*ள்.....
முடிய* வேண்டிய* ஊர்வ*ல*த்தை குறித்து அங்க*லாய்ப்பு.....

அருமை அமரா....

lolluvathiyar
23-09-2007, 09:05 AM
புரியாமல் தான் இருந்தது ஆனால் ஓவியன் விளக்கத்தை பார்த்த பிறகு நன்றாக புரிந்து பிரமித்து போனேன். வார்தைகளை எத்தனை அழகாக கையாண்டு இருக்கிறீர்கள்.
எதை தேடுகிறீர்கள் என்று தெரியாமல் தேடுவதால இது முடிவில்லா ஊர்வலம் தான்

பூமகள்
23-09-2007, 10:01 AM
பாராட்டுக்கள் அமரரே, இப்போதெல்லாம் உங்கள் வரிகளின் உள்ளார்ந்த அர்த்தத்தை வெளிக்கொணர்வது மிகச் சிரமமான விடயமாகப் படுகிறதெனக்கு...

உண்மை தான் அண்ணா. எனக்கும் சிரமமாக இருக்கிறது அமர் அண்ணாவின் ஆழ்கருத்தை புரிந்து கொள்ள... இன்னும் வளர வேண்டும் என் தமிழறிவு என்பது போய் தமிழறிவு சுத்தமாகவே இல்லையோ எனக்கு என்று ஐயம் கொள்ள வைக்கிறது அவரின் எழுத்துக்கள்..!!

அருமை அமர் அண்ணா பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்.
அசத்தலான அலசலுடன் கூடிய ஓவியரின் பின்னூட்டம் மிகவும் அருமை.
பாராட்டுக்கள் ஓவியரே..!!

aren
24-09-2007, 06:06 AM
அருமையான கவிதை அமரன். உங்கள் தமிழ்ச் சொற்கள் பல புரிந்துகொள்ள முடியவில்லை, காரணம் என்னுடைய தமிழறிவு அவ்வளவே. ஆனால் மக்களின் பின்னுட்டங்களைப் படித்தபின்பு அர்த்தம் நன்றாக விளங்குகிறது.

பாராட்டுக்கள் அமரன்.

நன்றி வணக்கம்
ஆரென்

இலக்கியன்
24-09-2007, 08:41 AM
மிகவும் அரிதாக பயன்படுத்தும் சொற்கள் கொண்டு கவி படைத்திர் வாழ்த்துக்கள்

அமரன்
24-09-2007, 04:53 PM
மேலான பின்னூடங்களால் கவிதைக்கு சிறப்புச் சேர்த்த அனைவருக்கும் எனது நெஞ்சு நிறைந்த நன்றி...

ஒவியன்....
பதனீர் மதுவத்தின் சித்து விளையாட்டால் கள்ளாகிறது...பதனீர் ஆரோக்கியம் தருவது...கள் போதை தருவது...

அமரன்
24-09-2007, 05:08 PM
இது முடிவில்லா தேடல்.எதிரே இருப்பதைப்போலத்தெரியும்...அடுத்த பிறவியிலும் கைகூடாது.ஊர்வலம் போவது தனியனாய் இருப்பின் ஆறடியில் முடிந்துவிடும்,அழுக்குகளையும்,அவலங்களையும்,அழுகிய பிணங்களாய் தோளில் சுமந்து நடப்பதால் தொட்டுவிடும் தூரமும் தொலைவாய்ப் போய்விடுகிறது.அழுக்ககன்று.அவலங்கள் கழுவ அந்தம் அருகில் தெரியும்....அழிவில்லா ஆனந்தம் தொடரும்.சிந்திக்க வைக்கும் கணமுள்ள வரிகள்..பாராட்டுக்கள் அமரன்.

தூய்மையானவை சில பலதரப்பட்ட காரணிகளால் ஆழ் மனதில் புதைக்கப்படுகிறன..அக, புற விசைகளால் அவை வெளிகொணரப்படும்போது சில புதையல்களாவும், சில வீரியம் மிக்க மதுசாரமாகவும் மாறுகின்றன...புதையலெனில் பிரச்சினை இல்லை..மதுசாரமெனில் படும் பாடு சொல்லி மாளாது...அழுக்குகளை நிறைத்து துர் நாற்றத்தை பரவச் செய்யும்....எடுக்கப்படும் வற்றையும் புதையலாக்கும் வல்லமை கொண்ட அழுக்கு அகற்றிப் பொக்கிஷம் நம்மிடமே உள்ளது..அதை மீட்கும் வரை இந்த தேடல் ஊர்வலம் தொடரும்...

இனியவள்
24-09-2007, 05:15 PM
கவிதை சிறப்பு அமர்

கொஞ்சம் புரிந்து கொள்ளக்
கடினமாக இருந்தது :eek:

ஓவியரின் உதவி கொண்டு
அழகிய கவிதையை அழமாய்
தெரிந்து கொண்டேன்

வாழ்த்துக்கல் அமர்

அமரன்
24-09-2007, 05:18 PM
நன்றி இனியவள். கடினத்தன்மையை குறைக்க முயல்கின்றேன்..

இனியவள்
24-09-2007, 05:45 PM
நன்றி இனியவள். கடினத்தன்மையை குறைக்க முயல்கின்றேன்..

அமர் கடினம் இருந்தால்
அதில் நளினம் இருக்கும்

உங்களுடைய கவிப்பணியிலே
தொடருங்கள் விரைவில்
எங்கள் கவித்திறனும் வளரும்
உங்கள் கவித்திறனூடாக :)

ஓவியன்
28-09-2007, 11:05 AM
அன்பு அமரா என்ன கவிதை தேடலாக இருந்து புதையலாக மாறி விட்டது...?
இந்தக் கவியின் உண்மைக் கருவை நான் இன்னமும் தொடவில்லையோ என்றொரு எண்ணம், அடிக்கடி இந்த திரிக்கு வர வைக்கின்றது...
நீங்களும் அமைதி காக்கின்றீர்கள், மன்றத்து பெரியவர்களும் இன்னும் கவிக்கருவை வெளிக் கொணரவில்லை.... :frown:

மீனாகுமார்
28-09-2007, 03:57 PM
விரியும் சிந்தனையை சொற்களுக்குள் கட்டிப் போடப்பட்டிருக்கிறது. ஓவியனின் விளக்கங்கள் அருமை... மீண்டும் மீண்டும் வாசித்தால் நன்கு புரிகிறது.

அமரன்
28-09-2007, 04:47 PM
நன்றி மீனாகுமார்...கட்டிப்போட்டால் புரிந்துகொள்வது கடினம்தான்..

அமரன்
28-09-2007, 07:11 PM
அன்பு அமரா என்ன கவிதை தேடலாக இருந்து புதையலாக மாறி விட்டது...?
இந்தக் கவியின் உண்மைக் கருவை நான் இன்னமும் தொடவில்லையோ என்றொரு எண்ணம், அடிக்கடி இந்த திரிக்கு வர வைக்கின்றது...
நீங்களும் அமைதி காக்கின்றீர்கள், மன்றத்து பெரியவர்களும் இன்னும் கவிக்கருவை வெளிக் கொணரவில்லை.... :frown:
உங்க பார்வையும் சரியானது. முதலில் செய்வதை மையப்படுத்தி இருந்த தலைப்பு இப்போது செய்யப்படுபொருளை மையப்படுத்தி மாற்றியுள்ளேன்...:icon_rollout::icon_rollout: