PDA

View Full Version : குட்டிச்சுவர் குட்டிக் குருப்jpl
22-09-2007, 01:18 AM
சென்னைத் தமிழ் என்றால் கஸ்மாலம்,இஸ்த்துகின்னு,ஜல்பு,வூண்டண்டா
என்பது தான் என்று அறிவோம்.கொஞ்சம் நல்ல தமிழுக்கும் சென்னைத் தமிழுக்கும் இடைப்பட்ட தமிழும் உண்டு.அது கல்லூரிமாணவ தமிழ்.

பச்சைப்பன் கல்லூரியின் முன்,குறிப்பாக சுவரின் முன் நின்ற சில மாணவர்களின் முன் நம் மன்ற நிருபர்(நான்தான்)பேட்டி எடுக்கிறார்.
நிருபர்;-நான் தமிழ் மன்றத்திலியிருந்து உங்களை பேட்டி எடுக்க வந்துயிருக்கிறேன்.உங்கள் கொள்கை என்ன?எதற்காக இவ்வாறு பெயர் வைத்திருக்கிறீர் என்ற விளக்க முடியுமா?
சம்பத்;-இதோடா ஔவையார் சுடிதார் போட்டு வந்திருக்கு போல...
நிருபர்;-என்னடா கலாய்கிறீங்க
சுந்தர்;-பின்ன என்னக்கா பாருங்க எங்க பசங்க மெர்ஜாயிட்டாங்க.தமில்ல பேசுங்க.
நிருபர்;-அக்காவா
சுந்தர்;-மேடம் மாம் எல்லாம் கூப்பிட மாட்டோம் யாரயிருந்தாலும் யக்காதான்.
நிருபர்;-சரிடா,தமிழ் தமிழ்ன்னீரிங்க பெயர ஏன்டா குருப்ன்னு வைச்சியிருக்கீங்க?
மகேஷ்;-அது தமில் இல்லையா
தனஸ்;-நாங்க வைச்சுருக்கோமில்லை அது தமில்தான்.
நிருபர்;-க்ளாஸூக்கு போகமா இங்க நின்னு என்னடா செய்றீங்க?
விஜி;-க்ளாஸூக்கு போன ப்ராபளத்த எப்படி சால்வ் பண்ணறது
நிருபர்;-ப்ராபளத்த சால்வ் பண்ண லேப்புக்கு,மாத்ஸ் க்ளாஸ்குல்ல போகனும்.இங்க நின்னு எப்படிடா?
கிளி விஜி;-மாம்ஸ் யாரப் பாத்து என்ன கேள்வி கேட்குறாக பாத்தியா?
சுந்தர்;-ஊர் நாட்டுல படிச்சா இப்படித்தான் ஒன்னும் தெரியாது.கோவிக்கதா மச்சி.பாவம் தெரியாமத்தான கேட்குறங்க.நீ சொல்லு மாம்ஸ்
நெட்ட சங்கர்;-வர ரூட்ல மத்த காலேஜூ பசங்க மாப்பு,கெத்து,பிலிமு காட்டிட்டு வந்தா நாங்க சும்மாவா யிருக்க முடியும்.அது என்னன்னு பார்க்க தாவல.
இடையிடையே தலை நீ சொல்லவே இல்லை.நீ கேட்கவே இல்லை என்ற
வசனத்தை எங்கு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஜெயாஸ்தா
22-09-2007, 03:17 AM
ரசிக்கதக்கவிதமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நீளமாக எழுதியிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும். பெரும்பாலான கல்லூரித் தமிழ் இதுதான்.

aren
22-09-2007, 03:28 AM
தமில்ல பேசுனாம்னா இப்டி பேசாம எப்டி பேசுறது. இதாவிட்டுட்டு நீ என்னமோ போ, சொல்டன் ந்நான்.

அன்புரசிகன்
22-09-2007, 03:57 AM
ம். இதுவும் தமிழோ.........

வாழ்க தமிழ். :D

jpl
22-09-2007, 05:18 AM
நன்றி ஜே.எம்,ஆரென்,அன்பு ரசிகன்...
இன்னும் உண்டு..நீளமானது தான்..தொடரும்.......

சிவா.ஜி
22-09-2007, 05:26 AM
பசங்களாண்ட மாட்டிகினு பேஜார் ஆயீடாதீங்கக்கா...வுட்டா கலாய்ச்சிகினே இருப்பாங்க...கலாய்ப்பு அருமை ஜே.பி.எல் மேடம்.

ஷீ-நிசி
22-09-2007, 07:09 AM
அய்ய! யக்கா.. இன்னா நீ மைக்க தூக்கினு புள்ளையாண்டானுங்கள கலாய்க்க வந்துட்டியா... சர்தான்.. மிச்ச இருக்குற பேட்டியும் போடு யக்கா....

-காசிமேடு கபாலி

அமரன்
22-09-2007, 07:27 AM
ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹா....சிரிப்பு தாங்க முடியல...தொடருங்கள்.


ம். இதுவும் தமிழோ.........
வாழ்க தமிழ். :D
ரசிகரே...அனுபவம் இல்லாத மாதிரிப் பேசுறீங்க..:D

ஓவியன்
22-09-2007, 07:27 AM
ஆகா!!!

லதா அக்கா இந்த போடு போடுறாங்களே........:)
ஆவலுடன் இன்னும் எதிர்பார்கின்றேன்......

lolluvathiyar
22-09-2007, 07:48 AM
அடுத்த தமிழ் மொழியை கண்டுபிடித்த நன்பர் வாழ்க*
நல்ல நகைசுவையாக இருந்தது. தொடரலாமே

அன்புரசிகன்
22-09-2007, 01:12 PM
ரசிகரே...அனுபவம் இல்லாத மாதிரிப் பேசுறீங்க..:D

அடக்கி வாசியுங்க.... ஆதவன் அடிக்க வந்திடப்போறாரு... :D:lachen001:

சூரியன்
22-09-2007, 01:17 PM
இந்த மொழி நல்லா இருக்குதே!

அறிஞர்
22-09-2007, 05:29 PM
அருமை புஷ்பா மேடம் (அக்கா)....
இன்னும் நீளமா தொடருங்கள்...

எதிர்காலத்தில்... நல்ல தமிழை சென்னையில் காண்பது அரிது என ஆகிவிடும்.

(முன்பு நண்பர்கள் சென்னை தமிழில்.... ஒரு பதிவு கொடுத்திருந்தார்கள்.. எங்கு என கண்டுபிடிக்கனும்)

என்னவன் விஜய்
22-09-2007, 06:01 PM
நன்றாக இருக்கு...
இந்ததமிழை எங்கே பேச / படிக்க பழகலாம்............

மன்மதன்
22-09-2007, 10:18 PM
இப்போல்லாம் சென்னைத்தமிழ யாரு கண்ணு பேசுறா.. ஆட்டோக்காரர்கள் வாயில்தான் வாழுது அது..இன்னாங்கிறே..

jpl
23-09-2007, 11:57 PM
சிவா.ஜி,ஷீ-நிசி,அமரன்,ஓவியன்,லொள்ளு வாத்தியார்,அன்புரசிகன்,அறிஞர்,
என்னவன் விஜய்,மன்மதன் அகிய அனைவருக்கும் நன்றி.

jpl
24-09-2007, 12:03 AM
பேட்டி தொடர்கிறது.
நிருபர்;-அதானே ஏன்டா எப்ப பாத்தாலும் யார் கூடயாவது சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க?
சுந்தர்;-இப்பதக்கா கரீக்டா மேட்டருக்கு வந்திருக்கீங்க.அது சண்ட இல்லக்கா போராட்டம். அக்கா காலேஜ் கட்டி 164 வருஷமாச்சி.அப்ப என்ன நடந்தத்து சுதந்தர போராட்டம்.அதில எங்க காலேஜூம் கலந்துகிடுச்சு.அப்போர்க்கொத்த வீரப் பரம்பர எங்க பரம்பர.பழச மறக்காமா மெயின்டென் பண்ணறோம்.
நிருபர்;-சரிடா,எதுஎதுக்குடா போராடுவீங்க
சுந்தர்;-பிரின்ஸி,ஹெஓடி இவங்களுக்கு எதிரா போராடுவோம்.
நிருபர்;எதுக்குடா?
சுந்தர்;-அப்பக்கி அப்ப எதாச்சு மேட்டர் கிடைக்குக்கா தியாட்டரில் ஒண்ணா டிக்கெட்டு கிடைக்கலேனா,செக்கிங் இன்ஸ்பெக்கடருக்கு போலீஸூக்கு எதிரா,எங்களுக்கு போராடிச்சக்கூட போராடுவோம்.அட அது ஏங்ககா உங்களுக்கு எதிராவும் பண்ணுவோமுல்ல.
நிருபர்;எனக்கு எதித்தா?
சுந்தர்;பின்னே உங்களுக்குத்தான் வேலைவெட்டி இல்லாம எங்ககிட்ட வந்து பேட்டி எடுக்கிறேனு வெட்டி பொழது போக்கிறீங்கனா, நாங்க என்ன உங்களை மாதிரி வேலை வெட்டி இல்லாதா பசங்களான்னு கூட போராடுவோம்.

அக்னி
24-09-2007, 12:47 AM
ஆமா... லதா அக்கா...
இந்த மொழிக்கு அகராதி இருக்குங்களோ..???
தந்தா இலகுவா புரிஞ்சுப்பேனே...

பாராட்டுக்கள்... மேலும் வளர்த்திடுங்கள் (தமிழை)....

அன்புரசிகன்
24-09-2007, 05:19 AM
அப்போ போராட்டம் பண்ணுறவங்களுக்கெல்லாம் வேல வெட்டி இல்லியா....

தொடருங்க அக்கா...

பென்ஸ்
24-09-2007, 05:44 AM
லதா...

உன்மையிலையே நான் இதை புரிந்து கொள்ள சிரமபட்டேன்... எங்கள் ஊரில் மரியாதையான சுத்த தமிழ் பேசுவதால் இந்த சிரமம்... நீங்கள் சென்னையா, உடனையே புரிந்து கொண்டீர்களே....
சுவரிசியமாக செல்கிறது.. தொடருங்கள்....

மன்மதா... எப்படி நீங்கள் "ஆட்டோ"வை விடலை... சேரன் சென்னை வந்தார என்ன???

சிவா.ஜி
24-09-2007, 05:51 AM
பசங்க லதா மேடத்துக்கு எதிராவே போராட்டம் பண்ணப்போறதா சொல்லிட்டாங்களே....யக்கா இன்னா பண்ணப் போறீங்கோ.....ஜகா வாங்கிக்கினு ஜூட் வுடறதுதான் ரைட்டு....இல்லன்னா பேஜார் ஆயிடும்...அக்காங்...

ஓவியன்
24-09-2007, 07:21 AM
லதா அக்கா!
எப்படி உங்களுக்கு மட்டும் இது சாத்தியமாகிறது?

தமிழின் இலக்கண அடிப்படைகளுக்குட்பட்டு இலக்கிய இரசனைகளை வெளியே கொண்டு வரும் அதே வேளை,
இவ்வாறான நகச்சுவைப்படைப்புக்களையும் ஒரே தருணத்தில் தரும் உங்கள் திறமை என்னை விழிகள் விரிய வைக்கின்றன...

மனதாரப் பாராட்டுகிறேன்...
தொடர்ந்து அசத்துங்க....

lolluvathiyar
24-09-2007, 07:34 AM
காலேஜ் மானவர்களை பற்றி கலக்கலா எழுதரீங்க.
மானவர்கள் வருங்கால தூன்கள்

மன்மதன்
24-09-2007, 08:32 PM
தொடர்ந்து கொடுங்க லதா அக்கா..

jpl
25-09-2007, 02:09 AM
நிருபர்;-எனக்கு எதித்துன்ன இணைய உலகமே திரண்டு வீறு கொண்டெழுந்து வரும்.
தன்ஸ்;-மச்சி இப்ப இவங்க என்னதாப்பா சொல்றாங்க?
சுந்தர்;-இல்லடா மாம்ஸ்,இண்டர்நெட்டல என்னத்தையோ எழுதிக்கிட்டு அலையுது ஒரு கூட்டம்.கவிதை,கதையின்ற பெயரல நேரத்தை வீணடிச்சிக்கிட்டு இருக்காங்க.அவங்க இவங்களுக்காக வருவாங்களாம்..
க்கா அவங்களுக்கு எங்கள மாதிரி ரூட் அடிக்கத் தெரியுமா?பொருள் போடத் தெரியுமா?
தன்ஸ்;-எது நம்ப மெயிலு பாஸ் பண்ணுவோமே அதிலேயா?பெண்ணுங்க கூட சாட் பண்ணுவோமே அதிலேயா?
சுந்தர்;=ஆமாம் மாம்ஸ்..நம்ப அதில வேல கீல தேடலாமின்னு நினைச்சுக்கிட்டு இருக்கோமில.இவங்க இப்படி கிளம்பியிருக்காங்க.
தன்ஸ்;-ஆமாடா மச்சான் உனக்கு எப்படிடா இதெல்லாம் தெரியும்?
சுந்தர்;-டேய் மாம்ஸ் இவங்க பையன் தாண்டா நம்ப சிவா.அவன் சொன்னான்.இவங்வளுக்கு எல்லாம் வேற பொழப்பு இல்லடா.இண்டர் நெட்டிலேயே குடியிருக்காங்கலாமா...
நிருபர்;-(வேகமாக பேச்சை மாற்றி),ரூட்,கீட்டு பேசிக்கிறீங்களே என்னடா அது?
சுந்தர்;- நல்ல கொஸ்டின் க்கா.வீட்டல இருந்து நம்ம பசங்கள்ளாம் கிளம்பி பஸ்ஸை பிடிச்சி ஒரு இடத்தில அசெம்பிள் ஆயிருவாங்க.100,150 அப்பிடியே மாஸா கிளம்பி பஸ்ஸில மோளம்
அடிச்சிகிட்டு,புட்போர்டுல தொங்கிட்டு போறது தான் ரூட்அடிக்கிறது
பிராட்வே ரூட்,பெரம்பூர் ரூட்டுன்னு ஏகப்பட்ட ரூட் இருக்குக்கா.
நிருபர்;-இந்த ரூட்டுல தான் உங்களுக்குள்ள சண்ட வருமாடா?
குணா;-அப்படியும் சொல்லாம்.இல்லையென்றும் சொல்லாம்.
நிருபர்;-என்னடா குழப்புறீங்க
சிவா;-தெளிவா நா சொல்றேக்கா
தெளிவு பின்னர்.

jpl
25-09-2007, 02:16 AM
அக்னியின் கூற்று:

ஆமா... லதா அக்கா...
இந்த மொழிக்கு அகராதி இருக்குங்களோ..???
தந்தா இலகுவா புரிஞ்சுப்பேனே...

பாராட்டுக்கள்... மேலும் வளர்த்திடுங்கள் (தமிழை)....
தெரியாத வார்த்தைகளை கேளுங்கள் அக்னி.

அன்புரசிகனின் கேள்வி:

அப்போ போராட்டம் பண்ணுறவங்களுக்கெல்லாம் வேல வெட்டி இல்லியா....

தொடருங்க அக்கா...
கல்லூரி மாணவர்களைப் பொறுத்த வரை அப்படித்தான்.
நிஜத்திலும் பெரும்பாலான போராட்டங்களின் நிலையும் அது தான்.
100 ரூபாயும்,பிரியாணிப் பொட்டலமும் கொடுத்து போக்குவரத்து ஏற்பாடு
பண்ணி விட்டுங்கள் அன்பு.
எத்தனை பேர் வேண்டும்?நான் அனுப்பி வைக்கிறேன் நீங்கள் சொல்லுமிடத்திற்கு.

jpl
25-09-2007, 02:22 AM
பென்ஸின் கூற்று:

உன்மையிலையே நான் இதை புரிந்து கொள்ள சிரமபட்டேன்... எங்கள் ஊரில் மரியாதையான சுத்த தமிழ் பேசுவதால் இந்த சிரமம்... நீங்கள் சென்னையா, உடனையே புரிந்து கொண்டீர்களே....
சுவரிசியமாக செல்கிறது.. தொடருங்கள்....
நன்றி பென்ஸ்.
கல்லூரி மாணவர்களின் பேச்சினை உற்று கவனிப்பேன்.
அவ்வளவு தான் பென்ஸ்.

சிவா.ஜியின் பயம்:

பசங்க லதா மேடத்துக்கு எதிராவே போராட்டம் பண்ணப்போறதா சொல்லிட்டாங்களே....யக்கா இன்னா பண்ணப் போறீங்கோ.....ஜகா வாங்கிக்கினு ஜூட் வுடறதுதான் ரைட்டு....இல்லன்னா பேஜார் ஆயிடும்...அக்காங்...
அப்படி என்றால் புறமுதுகிட்டு ஒடியதாக உலகம் நம்மை தூற்றாதா சிவா.ஜி?
எதுவாக இருந்தாலும் பார்த்துவிடுவோம் ஒரு கை.:icon_b:

jpl
25-09-2007, 02:25 AM
லதா அக்கா!
எப்படி உங்களுக்கு மட்டும் இது சாத்தியமாகிறது?

தமிழின் இலக்கண அடிப்படைகளுக்குட்பட்டு இலக்கிய இரசனைகளை வெளியே கொண்டு வரும் அதே வேளை,
இவ்வாறான நகச்சுவைப்படைப்புக்களையும் ஒரே தருணத்தில் தரும் உங்கள் திறமை என்னை விழிகள் விரிய வைக்கின்றன...

மனதாரப் பாராட்டுகிறேன்...
தொடர்ந்து அசத்துங்க....
ஓவியனுக்கு நன்றி.

காலேஜ் மானவர்களை பற்றி கலக்கலா எழுதரீங்க.
மானவர்கள் வருங்கால தூன்கள்
லொள்ளு வாத்தியாருக்கும் நன்றி.

jpl
25-09-2007, 02:26 AM
தொடர்ந்து கொடுங்க லதா அக்கா..
விடுவதாக இல்லை மன்மதன்.

jpl
26-09-2007, 01:01 AM
பேட்டி தொடர்கிறது.
சிவா;-அவன் உங்களை மாதிரி கவித,கீவிதனு கிறுக்குவக்கா.அதான் அப்படி குழப்புறான்.
நிருபர்;-டேய் நா எழுதறது கிறுக்கலா?
சுந்தர்;-புரியற மாதிரி ஏதாவது எழுதுறீங்களா அப்புறம் கிறுக்கல் சொல்லாம வேற எப்படி சொல்லறது.
நிருபர்;-ரூட்டை பிடிடா
சிவா;-மச்சி, அக்கா நம்ம ரூட்டுக்கு வந்துட்டாங்கடா
நிருபர்;-டேய் உதப்பன்டா
சிவா;-அது வந்துக்கா எங்களுக்குள்ள உட்கட்சி பூசல் இருந்தாலும் வெளிய விவாகாரமுன்னு வந்துச்சுன்னா நாங்க எல்லாரும் ஒண்ணாயிருவோம்.குணா அதை தா சொல்றான்.
நிருபர்;-சரிடா இங்க குட்டி யாருடா
சுந்தர்;-குட்டின்னு யாருமில்ல அக்கா.டி.ராஜேந்திரன் அடுக்கு வசனம் மாதிரி கு.கு.கு அவ்வளவுதானக்கா
நிருபர்;-டேய் சுந்தர் நீ தலைவன் செயலாளர்,பொருளார் யாருடா
சுந்தர்;-செயலாளர் சிவா தான்.ரூட்ட கூப்பிட்டு போறது,கானா பாட்டு ரெடி பண்ணறது,ப்ரச்னை சால்வ் பண்ணறது,ப்ரச்னை இல்லன்ன உண்டு பண்ணறது,மோளம் அடிக்க பஸ்ஸை சரி பண்ணறது இப்படி பல வேலைக்கா செயலாளருக்கு.
நிருபர்;-பொருளாளர்டா
சுந்தர்;பொருள் வைச்சுருக்கிறவன் பொருளாளனக்கா ஐட்டம்* அக்கா
நிருபர் பயந்து பேட்டியை நா முடிச்சுகிறேன்டா என்று கூறி விட்டு அங்கு வந்த பஸ்ஸில் வேகமாக ஏற,
குட்டி குருப்பினரும் பின்னாலே ஓடி வந்து பஸ்ஸில் தொத்தி உள்ளே
வந்து பஸ்ஸின் பக்கச்சுவரில் தட்டி பாட ஆரம்பித்தார்கள்.
கானா பாட்டும் நிஜமும் பின்னர்.
*-கத்தி,கையில்,விரலில் மாட்டிக் கொள்ளும் முள்ளு மாதிரி ஏதோ ஒன்று(பெயர் தெரியவில்லை.)இன்னும் என்னவோ..(துப்பாக்கி போன்றவை இல்லை.)சைக்கிள் செயினையும் சேர்த்துக் கொள்ளலாம்.டூ வீலர் செயின் சின்னதாகப் பார்க்க அழகாக இருக்கின்றது.இது போன்ற பல பொருள்கள் தான் ஐட்டம்,பொருள்.

சுகந்தப்ரீதன்
26-09-2007, 04:14 AM
நிருபர்;-.
நிருபர்;-இந்த ரூட்டுல தான் உங்களுக்குள்ள சண்ட வருமாடா?
குணா;-அப்படியும் சொல்லாம்.இல்லையென்றும் சொல்லாம்.
நிருபர்;-என்னடா குழப்புறீங்க
சிவா;-தெளிவா நா சொல்றேக்கா
தெளிவு பின்னர்.

யக்கோவ்.. படா பேஜாராகிது போ... ஒன்னுமே விளங்கல...

மலர்
26-09-2007, 02:13 PM
ஆகா திரும்பிய திசை எங்கும் சென்னை தமிழ்...
பேட்டியை படித்தால் கல்லூரியிலேயே இருப்பது போல ஒரு உணர்வு....
வாழ்த்துக்கள் லதா அக்கா......

jpl
29-09-2007, 03:23 PM
மிகப் பெரிய ஜாம்பவான்கள் படித்த பெருமை பெற்ற கல்லூரி இது.
முரசோலி மாறன்,இறையன்புI.A.S,பெரியார்தாசன்,திரை கலைஞர்கள்
நா.முத்துக்குமார்,அருண்பாண்டியன்,ராம்ஜி,வைரமுத்து,இயக்குனர் செல்வா,டி.இமான் என ஒரு நீள் பட்டியல் ஆகும்.
கலைத்துறை மாணவர்களே இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.
மற்ற துறை மாணவர்கள் பெரும்பாலும் இவ்வாறு நடந்து கொள்ளுவது இல்லை.
இதோ பஸ்ஸில் பகிரங்கமாக பாடும் ஒரு கானாபாடல்.

நினைத்த பெண்ணை மடித்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
மடித்த பெண்ணை மணந்து கொண்டால் வாழ்வில் அமைதி என்றுமில்லை

ஆயிரம் பிகர்கள் வருவார் அதில் எனக்கொரு பிகர்தான் மடிவாள்
அவள்தான் பார்வதி அவள்தான் கோமதி என்பது ராணிக்குத் தெரியாது

(நினைத்தப் பெண்ணை)

பார்வதியை மடித்துவிட்டாள் பாருக்கு கூட்டிச் செல்வாள்
கோமதியை மடித்துவிட்டாள் கோவளம் கூட்டிச் செல்வாள்
பள்ளிக்கு போகும் கமலா,காலேஜ் படிக்கும் விமலா
பஸ்ஸினில் வருவாள் பர்ஸினை தருவாள் பள்ளியில் படிக்கும்
பானுமதி
(நினைத்தப் பெண்ணை)
முற்றும்............

சிவா.ஜி
29-09-2007, 03:28 PM
ஆஹா...கலக்கலான உல்டா பாட்டு.பச்சையப்பாஸ்ன்னாலே இப்படித்தான்.
ரொம்ப சிரத்தையோடு சேகரித்துத் தரும் லதா மேடத்துக்கு பாராட்டுக்கள்.

மன்மதன்
30-09-2007, 04:03 PM
கானா பாடல் கலக்குதே...

jpl
01-10-2007, 05:45 AM
சுகந்த ப்ரீதன்.மலர்,சிவா.ஜி,மன்மதன் ஆகிய அனைவருக்கும் நன்றி.
அத்துடன் பார்வையிட்ட அனைவருக்கும் நன்றி.

இளசு
01-10-2007, 07:10 AM
அன்பு லதா

சங்க காலத்திலிருந்து சரேலென நிகழ்காலத்துக்கு இறங்கி
குட்டிச்சுவர், மாநகரப் பேருந்து என உலாவி
இந்தக்கால 'இலக்கியத்தை' சிந்தாமல் பதிவுசெய்யும் திறமை..

உங்கள் தனிச்சிறப்பு..

கானா சுரங்கம் ஒன்று உங்கள் கைவசம் இருக்கும் என நம்புகிறேன்..

வேர்கள் பழமையிலும், இலைகள் இப்படி நவீன மாசுக்காற்றிலும்..
தமிழ் மரம் தழைத்தபடிதான்...

அப்பால... வேற எத்னாச்சும் கண்ல கண்டுக்கினாலும் கபால்னு
புட்ச்சு இங்கே கொணாந்து குடுங்க..
ராங் சைட்ல எவனாச்சும் வந்தா, மன்ரத்துக்கு விசில் குடுங்க...

ஷோக்கான ஐட்டத்துக்கு சலாம் மேடம்!

jpl
12-05-2013, 08:16 AM
அன்பு லதா

சங்க காலத்திலிருந்து சரேலென நிகழ்காலத்துக்கு இறங்கி
குட்டிச்சுவர், மாநகரப் பேருந்து என உலாவி
இந்தக்கால 'இலக்கியத்தை' சிந்தாமல் பதிவுசெய்யும் திறமை..

உங்கள் தனிச்சிறப்பு..

கானா சுரங்கம் ஒன்று உங்கள் கைவசம் இருக்கும் என நம்புகிறேன்..

வேர்கள் பழமையிலும், இலைகள் இப்படி நவீன மாசுக்காற்றிலும்..
தமிழ் மரம் தழைத்தபடிதான்...

அப்பால... வேற எத்னாச்சும் கண்ல கண்டுக்கினாலும் கபால்னு
புட்ச்சு இங்கே கொணாந்து குடுங்க..
ராங் சைட்ல எவனாச்சும் வந்தா, மன்ரத்துக்கு விசில் குடுங்க...

ஷோக்கான ஐட்டத்துக்கு சலாம் மேடம்!

விசில் குடுத்தா போச்சு..