PDA

View Full Version : யார் வரவுக்காகவோ



இனியவள்
21-09-2007, 07:06 PM
முகில்களை போர்வையாக்கி
உறக்கம் கொள்ளத் துடித்த
சூரியக் கதிர்கள் மறைந்து
மழைத்துளிகள் விரைகின்றன
நிலவின் கறையைத் துடைக்க..

நிலவின் மடியில் இரவு
துயில் கொள்ள - தென்றல்
துணைகொண்டு இலைகள்
வெண்சாமரம் வீசுகின்றன...

உலகமே உறங்க - உறங்கா
விழியுடன் இதயத்தின் வலியுடன்
ஒரு ஜீவன் துயில் கலைந்து
வாழ்விழந்து காத்துக்கிடக்கிறது
யார் வரவுக்காகவோ..:confused:

இளசு
21-09-2007, 07:19 PM
தனிமை.. இரவு...
இருள்... சோகம்..
விழிப்பு... ஏக்கம்..

உறக்கம் வருமா என
நினைக்கத் தொடங்கினாலே
வாரேன் என பரமபதம் ஆடும்
இரவுகள் கொடுமையானவை..

காலைப் பறவைகள் சத்தமிடும்வரை
இரவோடு விழித்துக் கழித்தல் கொடுமை..


கவிதைக்குப் பாராட்டுகள் இனியவள்..

அன்புரசிகன்
21-09-2007, 07:20 PM
உலகமே உறங்க - உறங்க
விழியுடன் இதயத்தின் வலியுட
ஓர் ஜூவன் துயில் கலைந்து
வாழ்விழந்து காத்திக்கிடக்கின்றது
யார் வரவுக்காகவோ..:confused:

காத்திருப்பில் உள்ள சுகம் காக்க வைப்பதில் இல்லை. ஆகவே வந்திடுவார் அந்த யாரே....:D

வலியின் வரிகள் அருமை இனியவளே..

arun
21-09-2007, 07:32 PM
கவிதை அருமை பாராட்டுக்கள்

இலக்கியன்
21-09-2007, 07:44 PM
வந்திடுவார் வந்திடுவார்
கத்திருங்கள் கைப்பிடிப்பார்
வண்ணத்து சித்திரமாய் உனை
கன வந்துடுவான்
கவிதை மிகவும் நன்றாக உள்ளது பாராட்டுக்கள்

அமரன்
21-09-2007, 08:18 PM
நிசப்தமில்லா நிசியில்
இயற்கையின் துணையுடன்
இயற்கை சயனிக்க
இயற்கை கலைந்த ஜீவன்
ஜீவன் ஒன்றின் ஜனனத்துகாய்
காய்கின்றது
தனிமையின் துணையுடன்...

என்னமோதெரியவில்லை..
கற்சிலையில் மட்டுமே
அழகாக இருக்கிறாள் மீரா..!

என்னவன் விஜய்
21-09-2007, 08:48 PM
கவலை வேண்டாம்.
வருவான் - வந்து
உனை ஆழ்வான்

உங்கள் கவிதை நன்றாக இருந்தது.........
சந்தர்ப்பதுக்கு நன்றி

ஓவியன்
21-09-2007, 09:14 PM
நடவாது என்று
அறிந்த பின்னரும்
ஆசை கொண்ட
குற்றத்திற்காக
நடக்குமா என்ற
ஏக்கத்துடன்
ஊண், உறக்கம்
மறந்து காத்திருப்பதே
காதலிலேயே
கொடுமையானது இனியவள்!!.

ஓவியன்
21-09-2007, 09:15 PM
கவிதை அருமை பாராட்டுக்கள்

வாங்க, வாங்க அருண்!
எங்கே போயிருந்தீங்க?
நீண்ட நாட்களாகக் காணவில்லையே..?

மனோஜ்
21-09-2007, 09:29 PM
காரணங்கள் காற்றில்
கதலாய் பறக்க
காத்திருக்கும் மனதிற்கு
அமைதியில்லை ஏனே
அமைதியை இனிமையாக்க
முயற்சியூங்கள் இனியவள்

lolluvathiyar
23-09-2007, 11:36 AM
காத்திருப்பது தவறில்லை. ஆனால் காத்திருப்பதற்க்கும் ஒரு எல்லை உண்டு.

aren
24-09-2007, 06:03 AM
காத்திருத்தலின் வலி அதிகம், ஆனால் காத்திருந்தவன் வந்தவுடன் அந்த வலிகள் அனைத்தும் நொடியில் பறந்துபோகும். உங்களுக்கு உங்கள் வலிகள் நொடியில் பறந்துபோக வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

பூமகள்
24-09-2007, 06:23 AM
வசந்தத்தை எதிர்பார்த்து
வாடுகிறதோ இம்மலர்..??!!
விரியாமலே உதிருதோ
வாசமிக்க பூவிதழ்???

காத்திருத்தலின் நீளம் - காலம்
சொல்லும் அன்பின் ஆழம்...!!

வந்திடுவார்... சகோதரி...
இன்று வலியிருந்தாலும் பின் வசந்தம் நிச்சயமே..!

நல்ல கவி.. வாழ்த்துகள்.. மற்றும் பாராட்டுக்கள்..!!:icon_rollout:

இனியவள்
25-09-2007, 08:38 AM
நன்றிகள் தோழர்களே :)