PDA

View Full Version : வெள்ளை நிலவு.. சிறுகதை..rambal
15-06-2003, 06:17 PM
வெள்ளை நிலவு.. சிறுகதை..

"வெள்ளை நிலவு ரெடியா?"
"ரெடியா இருக்கு சார்.."
"நாளைக்கு முடியுமா?"
"இப்ப சொன்னாலும் ரெடி.."
"இல்லை இல்லை இப்ப வேணாம்.. நாளைக்கு சாயங்காலமா.."
"சரி சார். வழக்கமான இடம்தானே?"
"ஆமா.."
"சார் இந்ததடவை கொஞ்சம் அதிகமாயிடுச்சு"
"பரவாயில்லை.. ஏன்னா இது முக்கியமான புள்ளிக்காக..."
"சரி சார்"
"ஓகே.. அப்ப நாளைக்கு சாயங்காலமா பார்க்கலாம்.."
இத்துடன் அந்த தொலைபேசி உரையாடலை முடித்துவிட்டு சந்தானம் திரும்ப அங்கு அவரது மனைவி தனம்
நின்று கொண்டிருந்தாள்.
"என்ன?"
"டெலிபோன் டிபார்ட்மெண்ட்லருந்து வந்திருக்காங்க.."
"சரி"
என்று கூறிக் கொண்டே வாசலுக்கு வந்தார். அங்கு ஒரு மூன்று பேர் கொண்ட குழு நின்று கொண்டிருந்தது.
"வணக்கம் ஐயா"
"ஆ.. வணக்கம் வணக்கம்.. என்ன விஷயம்?"
"அது வந்து.."
"சும்மா சொல்லு"
"நம்ம ஏரியாவுக்கு பைபர் ஆப்டிக்ஸ் கேபிள் வருது.."
"நல்ல விஷயம்தானே.."
"அது இல்லையா..."
"பின்ன"
"வாசல்ல இருக்கிற முருங்கை மரத்தை வெட்டணும்.. அதுக்கு உங்க உத்தரவு வேணும்.."
"இவ்வளவுதான.. இதுக்கு போய் என்னயைக் கேட்டா எப்படி.. நான் வெட்டிக் கொடுக்கணுமா?"
"ஐயோ அதெல்லாம் இல்லீங்க ஐயா.. அத நாங்களே வெட்டிக்கிறோம்.. உங்க அனுமதிக்காகத்தான் வந்தோம்.. ரொம்ப நன்றீங்க ஐயா"
அந்த கும்பல் கலைந்தது..
"அதெப்படிங்க அந்த மரத்தை வெட்ட விடுரீங்க?"
"அதுக்கென்ன இப்ப?"
"அதுல இப்பதான் பூவிட்டு பிஞ்சு ஒன்னு விட்டிருக்கு.. இது சமைஞ்ச பொண்ணு மாதிரி இல்லையா.."
"அதுக்காக.. டெலிபோன் ஆளுங்களோட சண்டை போட சொல்றியா?"
"இல்லை. நீங்க ஒரு வார்த்தை சொன்னா கேப்பாங்கல்ல"
"இங்க பாரு.. அந்த ஒரு முருங்கை மரத்துக்காக ஏரியா மக்கள் பாதிக்கப்படணுமா?"
"இருந்தாலும் இது நியாயமாப்படலை.."
"எது இப்ப நியாயம்னு சொல்லவற்ற? இடத்துக்கு இடம்.. சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நம்ம வசதிக்கு மாத்திக்கிறதுதான்
நியாயம் எல்லாம்.. ரொம்ப குழம்பாத.."
இத்தோடு இந்த பேச்சுவார்த்தைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

அடுத்த நாள்.
அந்த அறையில் அவரும் அந்த புள்ளியும் இருந்தனர்.
"என்னைய்யா சந்தானம்.. ஏதோ முக்கியமா பேசணும்னு சொல்லிட்டு இப்படி ஊத்திகிட்டே இருந்தா எப்படி?"
"வற்றேன்.. வற்றேன்.. அதுக்காகத்தான வந்தேன்.. அந்த ரோடு காண்ட்ராக்ட் எனக்கே கிடைக்கணும்.."
"சரி உனக்கு கிடச்சா எனக்கு என்ன கொடுப்ப?"
"வழக்கம் போல"
"அதெல்லாம் வேணாம்.. விசேசமா வேற ஏதாவது இருந்தா கொடு.."
"இப்படி கேப்பீங்கன்னு தெரிஞ்சுதான் வெள்ளை நிலவுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்.."
"அதென்னைய்யா வெள்ளை நிலவு?"
"என்ன இது கூட தெரியாமலா?"
"அட மெய்யாலுமே தெரியாதுயா?"
"சரி.. சொல்றேன்.. தேன் நிலவு தெரியுமா?"
"ஆமா.. அதுக்கும் இதுக்கும் என்னயா சம்பந்தம்?"
"இருக்கு.. வெள்ளை நிலவுங்கிறதுல வெள்ளை நிறத்துல படுக்கை.. இப்ப நீங்க உட்கார்ந்திருக்குறீங்களே.. இது..
கன்னி கழியாத பெண்.. கன்னி கழிஞ்சா ரத்தம் தெரித்து வெள்ளை படுக்கை சிகப்பாகும்..
வயசுக்கு வந்து பதினாறே நாள் ஆன பெண்ணை ஏற்பாடு பண்ணி இருக்கேன்.. அனுபவிங்க.."
அவர் சொல்வதற்கும் அந்த பெண்ணை ஒருவன் அழைத்து வருவதற்கும் சரியாய் இருந்தது.
அதன்பின் அந்தக் கதவை மூடிவிட்டு
அந்த இடத்தைவிட்டு அவர் வெளியேறினார்.

rambal
15-06-2003, 06:18 PM
அதிகபட்ச அலுவல்களுக்கு இடையில் இந்தக் கதையை கிடைத்த பேப்பரில் மூன்று கோணங்களில் எழுதிப்பார்த்தேன்..
1. அந்தப் பெண் கோணத்தில்.. இந்த விசேசத்திற்கு அவள் எப்படி தயாராகிறாள்?
2. ஏற்கனவே பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணை எதிர்பாராவிதமாக சந்திக்கும் ஒருவன்.. அவனுடைய மனநிலையில்..
3. இதுதான் இங்கு எழுதி இருப்பது..

முதல் இரண்டு முறைகளிலும் வெளியிட்டிருந்தால் மௌர்யன் சொன்ன கதையை விட அதிக டிக்காசனாய் இருந்திருக்கும். அந்த அளவிற்கு பதிக்கும் பொழுது ஒரு சிலர் பாதிக்கப்படுவர் என்பதால் அதை விடுத்து இந்த முறையில் எழுதி பதித்திருக்கிறேன்.

பின்குறிப்பு:
இது இன்றளவும் மதுரையில் தொடரும் அவலம். எத்தனையோ தடவை எவ்வளவோ பேர் முயற்சி எடுத்தும் முடியாத தொடர்கதை.. ஆகையால், முடிந்தவரை உண்மையைத்தான் எழுதி இருக்கிறேன்.

poo
15-06-2003, 06:32 PM
ஆக... முழுத்திருப்தியுடன் முடிக்கப்படாத கதை?!!...

கஷ்டப்பட்டு கலாச்சார பின்னணிக்கு ஏற்றபடி பின்னியிருக்கும் ராம்க்கு பாராட்டுக்கள்!!!

lavanya
16-06-2003, 12:30 AM
சற்றே மனதை சங்கடப்படுத்திய கதை.... இந்த கோணத்தில் உங்களிடமிருந்து
கதையை எதிர்பார்க்கவில்லை.... உங்கள் முருங்கை மர உவமைக்கு எனது
பாராட்டுக்கள்.

நிலா
16-06-2003, 05:52 AM
கதையையோ,அதன் கருத்தையோ விமர்சனம் செய்யயியலா அளவிற்கு முந்தைய கதையில் விளக்கங்கள் கொடுத்துவிட்டீர்கள் நண்பரே!
எனினும் இது இந்த மன்றத்தில் பதிக்கப்படக்கூடியதா என கேள்விக்குறி மட்டுமே என் நினைவில்!

karikaalan
16-06-2003, 08:23 AM
மதுரையில் மட்டுமல்ல, அநேகமாக எல்லா ஊர்களிலுமேதான். தன்னை ஆண்மையுள்ளவனாகக் கருதுகிறார்கள்.

கதை நன்றே! வாழ்த்துக்கள் ராம்பால்ஜி!

===கரிகாலன்

பாரதி
16-06-2003, 04:16 PM
சிறுகதையா.. இல்லை தொடரும் துயரக்கதை.

Narathar
14-07-2003, 09:19 AM
இன்று எத்தனை எத்தனை வெள்ளை நிலவுகள்
கருப்புப்பண முதலைகளால் விழுங்கப்படுகிறது!

தஞ்சை தமிழன்
16-07-2003, 09:26 AM
வெள்ளை நிலவில் களங்கத்தை உண்டாக்கும் அல்லது அதற்கு உடந்தையாக இருக்கும் மனிதர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

முற்காலத்தில்
கடவுள் சேவைக்காக தன்னை அர்பணித்து கொண்டார்கள்- (தேவரடியாள்)
இன்று
காசுள்ளவர்கள் சேவைக்காக தன்னை அன்பளித்து கொள்கிறார்கள்-

இந்த நிலை என்று மாறுமோ?

சகுனி
16-07-2003, 01:56 PM
இது ஒரு உண்மைச்சம்பவமாகவே தெரிகிறது. நல்ல வெளிப்படையான கதை.

karavai paranee
16-07-2003, 03:12 PM
மனதை கொஞ்சமல்ல நிறையவே நோகடிக்கவைத்துவிட்டீர் இந்த வெள்ளைநிலவால். . . .

இப்படியான பணமுதலைகளை என்ன செய்வது என்று படைத்த இறைவனிற்கே தொ¢யவில்லை

Vandhiyathevan
30-07-2003, 11:55 AM
பொருத்தமான தலைப்பு இட்டு இந்தக் கதைக்கு ஒரு கூடுதல் அழுத்தம் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது..

சோகம் மனதைத் தொட்டது..

மன்மதன்
20-06-2004, 07:44 AM
கடைசியில் கதையை முடிக்கும் போது உங்களுக்கு உடன் படாத மாதிரி தெரியுது.. இப்படி சப்பென்று முடித்தது ஏன்.. முருங்கை மரம் , வெள்ளை நிலவு ஏதோ சம்பந்தம் இருக்கிறது..

அன்புடன்
மன்மதன்

MURALINITHISH
18-08-2008, 09:45 AM
முருங்கை மரத்திற்கு கொடுக்க படும் மதிப்பு கூட பெண்மைக்கு இல்லை என்ன செய்வது காலத்தின் கொடுமை