PDA

View Full Version : சொந்தங்கள் சேராது



துளித்துளியா
21-09-2007, 03:28 PM
கவிதைகளை கண்ணுற்றேன்
வரிவரியாய் வாசித்தேன்

வனப்புள்ள வாசகங்கள்
தித்தித்த திகட்டல்கள்

அத்துனையும் அருமைதான்
ஆனாலும் ஒரு ஏக்கம்

என்னத்த நான்
சொல்லுவது
சொல்லுவதை சொல்லிவிட்டால்
சொந்தங்கள் சேராது!

அன்புரசிகன்
21-09-2007, 03:33 PM
என்னத்த நான்
சொல்லுவது
சொல்லுவதை சொல்லிவிட்டால்
சொந்தங்கள் சேராது!

என்னத்த சொல்லி என்னத்த பண்ணி.... என்பது போல் உங்கள் வரிகளில் ஒரு ஏக்கம் தெரிகிறது...
அணைத்துவிடுங்கள் அனைத்தையும். ஏக்கங்கள் அணைந்துவிடும். பாராட்டுக்கள் துளி...

பூமகள்
21-09-2007, 03:38 PM
துளித்துளியாய் உங்களின் ஏக்கம் மேலோங்கியிருப்பது தெரிகிறது.
சொல்லுவதைச் சொல்லாவிட்டாலும் சொந்தங்கள் சேராது சகோதரரே..!
உணர்வுப் பகிர்தல் மூலமே சொந்தங்கள் கிடைக்கும்.
தொடர்ந்து எழுதிப் பகிருங்கள்.
வாழ்த்துக்கள்.

அமரன்
21-09-2007, 03:49 PM
முள்ளும் மலரும் சேர்ந்தது சொந்தம். பகிரல் முள்ளை தோற்றுவிக்கும் எனும் தடங்கலே முள்ளாகும் நிகழ்தகவு அதிகம். பரிவர்த்தனை சொந்தங்களின் பிணைப்புக்கு ஆதாரம் என்பது அப்பட்டமான உண்மை. தொடருங்கள் உங்கள் விருந்தை.

ஜெயாஸ்தா
21-09-2007, 03:58 PM
மருந்து கசக்கத்தான் செய்யும். நோய் தீர வேண்டுமானால் நாம் கொடுத்துத்தானே ஆக வேண்டும். நாம் சரியென்று நினைத்ததை சொல்லித்தான் தீர வேண்டும். அதிலொன்றும் தப்பில்லை. சொல்வதை நீங்கள் சொல்லுங்கள். அப்படி விலகினாலும் காலம் கடந்த பின் உணர்ந்த சொந்தம் வருந்தும். மீண்டும் உங்களோடு உறவாடும்.

சூரியன்
21-09-2007, 04:13 PM
அர்த்தமுள்ள வரிகள்..
உங்கள் ஏக்கங்கள் தீரும் நண்பரே...

சிவா.ஜி
22-09-2007, 05:02 AM
அடைத்து வைக்கும் ஏக்கங்கள் ஆபத்தானவை.பகிரப்பட்டால் மனம் லேசாகும்,ஜே.எம்.அவர்கள் சொன்னதைப் போல கசப்புமருந்தானாலும் கொடுத்துத்தானே ஆக வேண்டும்.உணர வைக்கும் வரிகள்.வாழ்த்துக்கள் நன்பரே.