Log in

View Full Version : நட்பு தொடரும்

இணைய நண்பன்
21-09-2007, 02:05 PM
நட்பு தொடரும்

காயப்பட்ட நெஞ்சை
கனிவான அன்பால்
ஆற்றிட என்னிடம்
வந்த உன்னை
காதல் சொல்லி
காயப்படுத்தி விட்டேனா?

அன்பிற்கு அர்த்தம்
நட்புக்குள் காதல் என்று
தூய நட்பில் நான்
துவேசம் செய்துவிட்டேன்

நாம் காதலித்தால்
அது நிலையற்ற அன்பு
நாம் நட்பு கொண்டால்
இது நிலையான அன்பு

கலங்கிய என்னை
உன் வார்தைகளால்
புரியவைத்தாய்
நான் தெளிந்துவிட்டேன்

என் தடுமாற்றத்தில்
ஏற்பட்ட தப்பிற்கு
என்னை மன்னித்து விடு
என் நட்பு தொடரும்

ஜெயாஸ்தா
21-09-2007, 02:15 PM
பெண்களிடம் நட்பு கொள்ளும் போதுதான் இந்த பிரச்சனை. நட்பின் முதிர்ச்சி தான் காதல். அவள் தனக்கே சொந்தமாக வேண்டும் என்று நினைத்தால்தான் பிரச்சனை. காதல் தப்பில்லை. எல்லா உயிர்களையும் காதலிக்கலாம். ஆதலினால் காதல் செய்வீர்.

அமரன்
21-09-2007, 02:22 PM
காதலை தட்டிக்கழிக்க நாகரிகமான ஆயுதமாக நட்பு பலரால் பயன்படுத்தப்படுகிறது. நட்பைக் கொச்சைப்படுத்தும் நாசகார ஆயுதமாக அறிந்தும் அறியாமலும் காதல் கையாளப்படுகிறது. எதிரினப்பால் உறவுகளில் இரண்டும் சகஜம். புரிந்துணர்வு இருந்தால் ஆயுத பயன்பாடுத் தீவிரம் குறைக்கப்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

அன்பு அழிவில்லாதது. அன்பின் மறுவடிங்களே காதலும் நட்பும்.....
பாராட்டுகள் இக்ராம்.. தொடருங்கள்.

சாராகுமார்
21-09-2007, 02:44 PM
நட்பு காதலாக மாறுவது இயற்கை
காதல் நட்பாக மாறுவது செயற்கை.

இக்ராம் கவிதை அருமை.பாராட்டுக்கள்.

பூமகள்
21-09-2007, 03:29 PM
நல்ல கவிதை இக்ராம்.
நட்புடன் வந்தவளிடம் காதல் சொல்லி பின் தெளிந்து மன்னிப்பு கேட்பதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும்.
பாராட்டுக்கள்.

இனியவள்
21-09-2007, 06:55 PM
நட்போடு சேர்ந்த கரங்கள்
காதலில் என்னும் ஆதீத
வளர்ச்சி காண்கையில்
எதிர்பார்ப்போடு வருவது
காதல் எதிர் பார்ப்பின்றி
இருப்பது நட்பு என்றும்
நாம் எதிர்ப்பார்புக்களின்றி
தூய அன்பை இறுதிவரை
பரிமாறிக் கொள்வோம் என
சொல்லாமல் சொல்கிறது உங்கள்
கவி வாழ்த்துக்கள் இக்ராம்

இலக்கியன்
21-09-2007, 07:42 PM
நட்போடு பழகி
காதல் மலர்ந்தும்
காதல் பாவையவள்
மறுதலித்து சென்றாளோ
காத்திருங்கள்
காதல் கன்னியவள்
கனிவோடு வந்திடுவாள்
கைப்பிடிக்க வாழ்த்துக்கள்

என்னவன் விஜய்
21-09-2007, 09:32 PM
நாம்
இங்கு புலம்பெயர் நாடுகளில் எங்கலினப்பெண்களை பார்ப்பது அரிது.அப்படி பார்த்து பழகும் பொழுது எனக்கே சிலசமயம் மனம் சஞ்சலம் அடைந்து இருக்கிறது
என்னவென்று சொல்ல...........

மனோஜ்
21-09-2007, 09:38 PM
எதிர் காந்தமென்றால் இழித்து கொள்ளும் இது இயல்பு
அதை இனைதுருவமாக்குவது கடினம் முயற்சிகள் என்றும்
மனதை புண்படுத்தும் விலகிடல் சிறந்தது என்றாயினும்
புரிந்துனர்வு இயல்பாக்கிடும்

ஓவியன்
22-09-2007, 07:40 PM
ஆண் பெண் நட்புக்கும் காதலுக்கும் இடையே ஒரு நூலிழை இடைவெளியே இருப்பதுண்டு.....
தடை தாண்ட இதயங்கள் வரிந்தாலும்....
புத்தி எட்டி உரைக்கும் தப்பென்று....
அது அழகான நட்பின் அடையாளம் கூட.....

த்டைதாண்டியபோதும் தன் நட்பை தளம்ப விடாது புத்தி சொன்னாளே அவள் உண்மையிலேயே பெரியவள்.....
அவள் மீது கொண்ட நட்பு காலத்தின் பரிசு.....
காதலை விட எத்தனையோ மடங்கு மேலானது........

பாராட்டுக்கள் இக்ராம் அழகான நடைமுறைக் கவிதை ஒன்றுக்கு......

இணைய நண்பன்
22-09-2007, 09:54 PM
பெண்களிடம் நட்பு கொள்ளும் போதுதான் இந்த பிரச்சனை. நட்பின் முதிர்ச்சி தான் காதல். அவள் தனக்கே சொந்தமாக வேண்டும் என்று நினைத்தால்தான் பிரச்சனை. காதல் தப்பில்லை. எல்லா உயிர்களையும் காதலிக்கலாம். ஆதலினால் காதல் செய்வீர்.

காதலுக்கு கண் இல்லை.ஆனால் காதலில் தூய அன்பு இருக்க வேண்டும்.காதலித்தால் அன்பில் கலங்கம் ஏற்படும் என்று புரிந்தால் அதில் இருந்து ஒதுங்கி தூய நட்பில் ஈடுபடுவதே மேல்

காதலை தட்டிக்கழிக்க நாகரிகமான ஆயுதமாக நட்பு பலரால் பயன்படுத்தப்படுகிறது. நட்பைக் கொச்சைப்படுத்தும் நாசகார ஆயுதமாக அறிந்தும் அறியாமலும் காதல் கையாளப்படுகிறது. எதிரினப்பால் உறவுகளில் இரண்டும் சகஜம். புரிந்துணர்வு இருந்தால் ஆயுத பயன்பாடுத் தீவிரம் குறைக்கப்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

அன்பு அழிவில்லாதது. அன்பின் மறுவடிங்களே காதலும் நட்பும்.....
பாராட்டுகள் இக்ராம்.. தொடருங்கள்.

ஆம்.இன்றைய உலகில் அது தான் நடைபெறுகிறது...காதலோ நட்போ அதில் உண்மை தூய்மை இருக்க வேண்டும்.உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்

நட்பு காதலாக மாறுவது இயற்கை
காதல் நட்பாக மாறுவது செயற்கை.

இக்ராம் கவிதை அருமை.பாராட்டுக்கள்.

நன்றி சாராகுமார்.

நல்ல கவிதை இக்ராம்.
நட்புடன் வந்தவளிடம் காதல் சொல்லி பின் தெளிந்து மன்னிப்பு கேட்பதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும்.
பாராட்டுக்கள்.

நன்றி பூமகள்

இணைய நண்பன்
22-09-2007, 10:04 PM
நட்போடு சேர்ந்த கரங்கள்
காதலில் என்னும் ஆதீத
வளர்ச்சி காண்கையில்
எதிர்பார்ப்போடு வருவது
காதல் எதிர் பார்ப்பின்றி
இருப்பது நட்பு என்றும்
நாம் எதிர்ப்பார்புக்களின்றி
தூய அன்பை இறுதிவரை
பரிமாறிக் கொள்வோம் என
சொல்லாமல் சொல்கிறது உங்கள்
கவி வாழ்த்துக்கள் இக்ராம்

எதிர்பார்ப்புக்கள் இல்லாத அன்பு நட்புத்தான்.அழகிய பின்னூட்டத்திற்கு நன்றி

இரு மனம் ஒரு மனமானால் காதல்.அவள் மறுதலித்து செல்லவில்லை.
என்றும் நட்பெனும் வட்டத்திற்குள் பிரியாமல் அன்பு மழை பொழிய வேண்டும் என்கிறாள்.நன்றி

நாம்
இங்கு புலம்பெயர் நாடுகளில் எங்கலினப்பெண்களை பார்ப்பது அரிது.அப்படி பார்த்து பழகும் பொழுது எனக்கே சிலசமயம் மனம் சஞ்சலம் அடைந்து இருக்கிறது
என்னவென்று சொல்ல...........

மனம் என்பது ஊஞ்சல் ...புரிந்து நடந்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்

எதிர் காந்தமென்றால் இழித்து கொள்ளும் இது இயல்பு
அதை இனைதுருவமாக்குவது கடினம் முயற்சிகள் என்றும்
மனதை புண்படுத்தும் விலகிடல் சிறந்தது என்றாயினும்
புரிந்துனர்வு இயல்பாக்கிடும்

புரிந்துணர்வு எல்லோரிடமும் இருந்தால் உலகில் ஏது பிரச்சினை.என்றும் சாந்தி சமாதானம் தான்.அந்த நல்ல மனசு எல்லோருக்கும் வர வேண்டும்.நன்றி மனோஜ்

ஆண் பெண் நட்புக்கும் காதலுக்கும் இடையே ஒரு நூலிழை இடைவெளியே இருப்பதுண்டு.....
தடை தாண்ட இதயங்கள் வரிந்தாலும்....
புத்தி எட்டி உரைக்கும் தப்பென்று....
அது அழகான நட்பின் அடையாளம் கூட.....

த்டைதாண்டியபோதும் தன் நட்பை தளம்ப விடாது புத்தி சொன்னாளே அவள் உண்மையிலேயே பெரியவள்.....
அவள் மீது கொண்ட நட்பு காலத்தின் பரிசு.....
காதலை விட எத்தனையோ மடங்கு மேலானது........

பாராட்டுக்கள் இக்ராம் அழகான நடைமுறைக் கவிதை ஒன்றுக்கு......

அருமையான பின்னூட்டம்.உண்மைதான் இது விலை மதிக்க முடியாத காலத்தின் பரிசு.நன்றி ஓவியன்

lolluvathiyar
23-09-2007, 09:17 AM
தோழியிடம் காதல் என்ற வார்த்தை களங்கமோ துவேசமோ அல்ல.
நட்பில் ஆரம்பித்து தான் காதல் தொடரும். எடுத்தவுடன் காதலில் ஆரம்பிக்க வேண்டுமென்றால் நடக்குமா. காதல் மறுக்க பட்டால் மீண்டும் நட்பை தொடரும் மணபக்குவம் பாராட்டகுறியது