PDA

View Full Version : நல்ல மனிதனாக வேண்டும்!!!



aren
21-09-2007, 03:14 AM
இன்புற்று வாழ
நல் இதயம் வேண்டும்!!!

பகட்டாக வாழ
பணம் நிறைய வேண்டும்!!!

பகுத்தறிவுடன் வாழ
படிப்பு வேண்டும்!!!

பண்போடு வாழ
நல்ல மனது வேண்டும்!!!

இவையெல்லாம் கலந்துவற
நல்ல மனிதனாக வேண்டும்!!!

இறைவா நான்
நல்ல மனிதனாக வேண்டும்
நல்ல மனிதனாகும் வரத்தை
எனக்குக் கொடுப்பாயா!!!

இளசு
21-09-2007, 05:31 AM
சில கலவைகள் -
ஒவ்வாமை பீடிக்கும் சாபம் உள்ளவை!

வரமாய்க் கேட்டால்?

கடவுளுக்குக் கலவரம்!

வாழ்த்துகள் அன்பின் ஆரென்!

வசீகரன்
21-09-2007, 05:40 AM
சிந்தனையில் சிறப்பிருந்தால்
சிகரம் தொடலாம்....!
உற்சாகம் உடன் இருந்தால்
உலகையே உலா வரலாம்...!
உங்கள் படைப்பில்.... சிறப்பும்
தெளிவான உரைநடை உற்சாகமும் விளங்குகிறது
ஆலோசகர் அவர்களே....! அருமையான போதனை கவி....
பாராட்டுக்கள்.....

வசீகரன்

ஜெயாஸ்தா
21-09-2007, 06:13 AM
சில கலவைகள் -
ஒவ்வாமை பீடிக்கும் சாபம் உள்ளவை!

வரமாய்க் கேட்டால்?

கடவுளுக்குக் கலவரம்!

வாழ்த்துகள் அன்பின் ஆரென்!

மிகச் சரியாக சொன்னீர்கள் இளசு...பணமும் நல்இதயமும் ஒன்றோடொன்று ஒட்டாதவை...மிக அரிதாக சேர்ந்திருக்கும். மீண்டும் ஆரொனிடமிருந்து ஒரு நல்ல கவிதை...!

சாராகுமார்
21-09-2007, 06:46 AM
நல்ல மனித கவிதை.

கடவுள் நமக்கு நல்ல திறமையும்,நல்ல படிப்பும்,நல்ல இதயமும்,நல்ல பண்பும் தந்துள்ளான்.ஆனால் நாம்தான் நல்ல மனிதனாக மாறவில்லை.

ஆரென் அவர்களே,அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.

அமரன்
21-09-2007, 07:14 AM
நல்லிதயம், பணம், (பகுத்)அறிவு, பண்பு மனிதர்களுக்கு தேவையான நாற்குணங்கள். மனிதனுக்கு மனிதன் இவற்றின் குறைவுத்தன்மை வேறுபடுகின்றது. எல்லாம் கூடி வந்தால் கோடி நலம் உலகுக்கு...பாராட்டுக்கள் ஆரென் அண்ணா.

aren
21-09-2007, 07:22 AM
சில கலவைகள் -
ஒவ்வாமை பீடிக்கும் சாபம் உள்ளவை!

வரமாய்க் கேட்டால்?

கடவுளுக்குக் கலவரம்!

வாழ்த்துகள் அன்பின் ஆரென்!

எப்படி கடவுளுக்கு கலவராகும் இளசு அவர்களே.

உங்களிடம் பன்பும் இருக்கிறது, பணமும் இருக்கிறது, படிப்பும் இருக்கிறது. நீங்கள் நல்ல மனிதனாக இருக்கவில்லையா?

இது உங்களைப் பார்த்ததில் வந்த பாதிப்பே.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
21-09-2007, 07:28 AM
சிந்தனையில் சிறப்பிருந்தால்
சிகரம் தொடலாம்....!
உற்சாகம் உடன் இருந்தால்
உலகையே உலா வரலாம்...!
உங்கள் படைப்பில்.... சிறப்பும்
தெளிவான உரைநடை உற்சாகமும் விளங்குகிறது
ஆலோசகர் அவர்களே....! அருமையான போதனை கவி....
பாராட்டுக்கள்.....

வசீகரன்

நன்றி வசீகரன் அவர்களே. உங்களுடைய பின்னூட்டம் அருமை.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
21-09-2007, 07:29 AM
மிகச் சரியாக சொன்னீர்கள் இளசு...பணமும் நல்இதயமும் ஒன்றோடொன்று ஒட்டாதவை...மிக அரிதாக சேர்ந்திருக்கும். மீண்டும் ஆரொனிடமிருந்து ஒரு நல்ல கவிதை...!


நன்றி ஜே.எம். அவர்களே.

அரிதாக பலரிடம் இருக்கிறது. நம் மன்றத்திலேயே பலர் அப்படி இருக்கிறார்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
21-09-2007, 07:33 AM
நல்ல மனித கவிதை.

கடவுள் நமக்கு நல்ல திறமையும்,நல்ல படிப்பும்,நல்ல இதயமும்,நல்ல பண்பும் தந்துள்ளான்.ஆனால் நாம்தான் நல்ல மனிதனாக மாறவில்லை.

ஆரென் அவர்களே,அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.

நன்றி சாராகுமார் அவர்களே.

எல்லாம் இருந்தும் நல்ல மனிதர்களாக இருப்பதற்கு மனது வேண்டும். அது ஒரு சிலருக்கு இல்லாமல் போய்விடுகிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
21-09-2007, 07:34 AM
நல்லிதயம், பணம், (பகுத்)அறிவு, பண்பு மனிதர்களுக்கு தேவையான நாற்குணங்கள். மனிதனுக்கு மனிதன் இவற்றின் குறைவுத்தன்மை வேறுபடுகின்றது. எல்லாம் கூடி வந்தால் கோடி நலம் உலகுக்கு...பாராட்டுக்கள் ஆரென் அண்ணா.

நன்றி அமரன். உங்கள் பின்னூட்டம் அருமை. எல்லாம் கூடிவரவேண்டுமே, அதுதான் பிரச்சனை.

நன்றி வணக்கம்
ஆரென்

Narathar
21-09-2007, 07:41 AM
நல்ல மனிதனாக வேண்டும் என்ற எண்ணமே போதும் நல்லவனாக்!

இறைவன் நிச்சயம் நீங்கள் கேட்ட வரத்தை தருவார்

அக்னி
21-09-2007, 07:52 AM
வரம் கொடுத்த இறைவன்
சொன்னான் மனிதனிடம்,
கடத்திவந்த என்னுருவை,
மீள இருந்த இடம் வைத்துவிடு என்று...

மனிதன் சொன்னான்,
நல்ல மனிதனாகிவிட்டேன்,
தொழில் நாணயம் வேண்டும்,
விற்றுவிட்டதால் அதுமட்டும் முடியாதென்று...

வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா...

மீனாகுமார்
21-09-2007, 10:20 AM
மீண்டும் ஒரு அருமையான கவிதை...

ஆனால் இது கொஞ்சம் பேராசையாக தெரிகிறது.. இருப்பினும் இவை அனைத்து கிடைத்தால் அவனை விட பாக்கியசாலி யார் இருக்கிறார்கள்.. வாழ்த்துக்கள் தோழரே....

ஓவியன்
27-09-2007, 04:10 AM
இன்று உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எத்தனையோ பிரச்சினைகளின் ஆணி வேரே இது தான்...

"மனிதன் மனிதனாக வாழ மறுப்பது"

மனிதன் மனிதனாகவே இருந்து விட்டால் எத்தனையோ பிரச்சினைகள்ளுக்கு தீர்வு கிட்டி விடும் ஆரென் அண்ணா கவிதையில் கேட்டவைகளுடன் சேர்த்து.....

சுகந்தப்ரீதன்
27-09-2007, 04:24 AM
வாழ்த்துக்கள் அண்ணா... அருமையான கவிதை...

ஆனா.. அதுக்கு எதுக்கு கடவுள கூப்புடுறீங்க... நாம்ம கையிலதான்(மனசு) இருக்கு கடிவாளாம்.. நல்லவங்களாகவும் கெட்டவங்களாகம் மறுவதற்க்கு..?