PDA

View Full Version : யுவராஜ் 6x6



அறிஞர்
19-09-2007, 05:45 PM
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில்.. யுவராஜ் 6 பந்துகளில் 36 ரன்கள் (6x6) எடுத்து... 20 ஓவர் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக முதல் தர கிரிக்கெட்டில் சோபர்ஸும், ரவி சாஸ்திரியும்; உலக கோப்பையில் கிப்ஸும் ஒரு ஓவரில் 36 ரன்கள் எடுத்துள்ளனர்.

மேலும் 12 பந்துகளில் விரைவான 50 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்...

விரைவில் வீடியோ கிளிப் இங்கு இணைக்கப்படும்.

பூமகள்
19-09-2007, 05:48 PM
நானும் பார்த்தேன் அறிஞர் அண்ணா.. அபாரம்.

ஏதோ உசுப்பேத்தினால் தான் நம் மக்கள் ரன் எடுப்பார்கள் போல.
அதற்கு முந்தைய ஓவரில் இருந்த கடுப்பை அவர் இப்படி விளாசித் தள்ளியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

எப்படியோ ரன் எடுத்தால் சரி தான் அண்ணா.

அறிஞர்
19-09-2007, 05:48 PM
நான் இன்னும் பார்க்கவில்லை.. படித்தேன்.... இனி தான் அந்த ஆட்டத்தை பார்க்கனும்...

மனோஜ்
19-09-2007, 06:03 PM
மிகவிரைவில் தாங்க அறிஞர் அண்ணா

ஓவியன்
19-09-2007, 06:25 PM
ஆகா இன்று அந்தப் போட்டியை வெளியில் சென்ற இடத்தில் வீதியில் எதேச்சையாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது, அந்த சந்தர்ப்பம் ஒரு உலக சாதனையை பார்க்க வழிவகுத்தது........:)

புரோட்டின் பந்துகளை அலாக்காக தூக்கி மைதானத்துக்கு வெளியே போட்டு விட்டு அலட்சியமாக சுவிங்கம் மென்றபடி மட்டையை சுழற்றிய அந்த பாங்கைக் காணக் கண் கோடி வேண்டும். அட இப்படியும் ஆடலாமா என்று எங்க வைத்தது அந்த ஓவர்.... :)

12 பந்துக்களில் அரைச்சதம் அடித யுவராஜூக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

நேசம்
19-09-2007, 06:28 PM
நன்பரே அந்த வீடியோ லிங்க் சிக்கிரம் இனைக்கவும்

அமரன்
19-09-2007, 07:01 PM
நல்ல செய்தி..மகிழ்ச்சிகரமான செய்தி...அசைபடத்தைத் பார்த்தால் மகிழ்வு இரட்டிப்பாகும்...காத்திருகின்றோம்..

அன்புரசிகன்
19-09-2007, 07:14 PM
இங்கிலாந்தும் விரட்டி 200வரை வந்து தோல்வியை தழுவியிருக்கிறது.... 18 ஓட்டங்களால் இந்தியா வெற்றியை தனதாக்குகிறது.

leomohan
19-09-2007, 07:22 PM
கண் கொள்ளா காட்சி. கிரிகெட்டில் ஒரு ஓவரில் 36 ரன்கள் (அதற்கு மேலும் சாத்தியம் உண்டு) எடுக்க முடியும் என்பது வெறும் காகிதத்திலிருந்து காட்சியில் பார்க்க முடிந்தது.

ஆறு அடிகளும் அருமையான கிரிகெட் அடிகள். காட்டு அடி அல்ல.

அதுவும் இங்கிலாந்து எதிராக அடித்தது சிறப்பு. சென்ற ஆட்டத்தில் யுவராஜின் பந்து வீச்சில் 5 ஆறுகளை அடித்து அவரை கடுப்படைய செய்திருந்தார் மாஸ்கரீனாஸ்.

பைசா வசூல். அலுவலகத்திலிருந்து வேகமாக வந்தது வீண் போகவில்லை.

ஆனால் இந்த ஓவர் அவர் அப்படி விளையாடியிருக்காவிட்டால்........... என்பதை எண்ணி மனம் அஞ்சுகிறது. ஏனென்றால் இங்கிலாந்து கட்டாயம் வெற்றி பெற்றிருக்கும்.

ஆனால் இந்தியாவுக்கு பார்ப்பவர்களின் இதயங்களை வாய் வழியாக வெளியே கொண்டுவர வைத்து பிறகு உள்ள தள்ள வைப்பது வழக்கம் தானே.

அன்புரசிகன்
19-09-2007, 07:36 PM
யுவராஜின் ஆறு விளாசல்கள்...

http://www.youtube.com/watch?v=7Jf75akUmMM

---

http://www.youtube.com/watch?v=bob85WbW8cU

சற்றே பெரிய திரையில்... :D:D:D

மனோஜ்
19-09-2007, 07:43 PM
நன்றி நண்பா

மன்மதன்
19-09-2007, 09:31 PM
யுவராஜ் சிங்கின் 6X6கள் அபாரம்,,,,
ஆட்டநாயகன் விருது கொடுக்கும் போது , ரவிசாஸ்திரி அதைப்பற்றி கேட்டதற்கு அவர் சொன்ன பதில்.

'நான் இங்கிலாந்து தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் 5 சிக்ஸர்கள் கொடுத்தேன்.. உடனே எனக்கு போன் மேல் போன் போட்டு என்னை விசாரித்தார்கள். அவர்களிடம் சொன்னேன்..எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று.. அந்த சந்தர்ப்பம் இப்ப வந்துவிட்டது. இதற்கும் ஃபிளிண்டாஃப் என்னிடம் வாக்குவாதம் செய்ததற்கும் சம்பந்தமில்லை..இது உலகத்தர விளையாட்டில் சகஜம்தான்.'


(இந்த சிக்ஸர் அடிப்பதற்கு முன்னாடி ஃபிளிண்டாஃப் யுவராஜை கொஞ்சம் சீண்டிப்பார்த்தார்... அதற்கு கிடைத்த சன்மானமாக கூட இருக்கலாம்..)

என்னவன் விஜய்
19-09-2007, 10:43 PM
ஆபாரம்....
இந்தியா விழித்து கொன்டது சரியன நேரத்தில்.....

ஆனாலும் ஒரு கவலை , சிறிலங்கா அல்லது அவுஷ்ரேலியா வெலியே பொகப்போகின்ரதே

அறிஞர்
19-09-2007, 10:44 PM
அடுத்த நீளமான ஆட்டத்தின்(12 நிமிடம்) லிங்க் இங்கு உள்ளது

http://www.dipvid.com/view_video.php?viewkey=599dc199a75f0d02fc3d

aren
19-09-2007, 11:54 PM
நாளைய ஆட்டத்தில் இந்தியா வென்றால் தென் ஆப்பிரிக்கா வெளியேறும். அதுபோல் இன்றைய ஆட்டத்தில் இலங்கை வென்றால் ஆஸ்திரேலியா வெளியேறும்.

இது ஒரு இருதலைக் கொள்ளி மாதிரியாகிவிட்டது.

நான் ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்பிரிக்கா கோப்பையை வெல்லும் என்றேன், ஆனால் அது நிஜமாகவே இந்தியாவையோ அல்லது இலங்கைய்யோ ஆப்பு வைத்தால்தான் நடக்கும் போலிருக்கிறது.

ஓவியன்
20-09-2007, 04:01 AM
இதற்கு முன்னர் ஹரி சோபர்ஸ் அடித்த ஆறு ஆறுகள்....


http://www.youtube.com/watch?v=A8dLac__KKk

ஓவியன்
20-09-2007, 04:09 AM
உலகக் கிண்ண ஒரு நாள் போட்டியில் ஹேர்சல் ஹிப்ஸ் அடித்த ஆறு ஆறுகள்!

http://www.youtube.com/watch?v=CvzDLi-TQ-g

ஷீ-நிசி
20-09-2007, 04:11 AM
யுவ்ராஜின் 5 வது சிக்ஸர் இமாலய சிக்ஸர்...

முன்னதான ஓவரில் ஃபிளிண்டாஃப் வம்பிழுத்து விட்டு சென்றார் யுவராஜை.. அடுத்த ஓவர் பிராட் போட வந்தார்... 6 பந்துகள் 6 சிக்ஸர்கள்..

பறந்தது பந்துகள் அல்ல... ஒவ்வொன்றும் ஃபிளிண்டாஃப் தான்...

பாவம் சின்னாபின்னமானது பிராட் தான்...

வாழ்த்துக்கள் யுவி

தளபதி
20-09-2007, 04:22 AM
நண்பரே!! காண கண் கோடி வேண்டும். கண்டேன். மகிழ்ச்சியடைந்தேன். கோடி நன்றிகள்.

Mathu
24-09-2007, 05:56 PM
இந்த 20,20 ஆட்டம் SKY,SUPERSPORT தயவால் அனைத்து ஆட்டங்களும்
பார்க்க முடிந்தது. அனைத்து ஆட்டங்களும் பார்த்து பதிந்தும் வைத்துகொண்டேன். யூவியின் அபார அடிகள் இன்னும் கண்முன், வாழ்த்துகள் யுவி.

:aetsch013::p :p

xavier_raja
27-10-2007, 10:18 AM
கேரி சோபர்சும்,கிப்சும் அடித்த ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸ்ம் International Matchல் அடித்து, ஆனால் ரவிசாஸ்திரி அடித்தது Ranji Trophyl, அது கணக்கில் வராது.

சூரியன்
27-10-2007, 03:32 PM
அந்த சாதனையை நானும் பார்த்தேன்..

மாதவர்
29-10-2007, 03:36 AM
வாழ்த்துக்கள்