PDA

View Full Version : வைக்கோல்.



சாராகுமார்
19-09-2007, 03:27 PM
உனக்கென்ன
ஒரு பார்வையை
வீசிவிட்டு போகிறாய்...

என் உள்ளமல்லவா
வைக்கோலாய்ப் பற்றி
எரிகிறது.

அறிஞர்
19-09-2007, 03:30 PM
பற்ற வைக்கும் பார்வை...
உம்மை எரிய வைக்கிறதா...

அருமை சாராகுமார்....

அமரன்
19-09-2007, 03:37 PM
பஞ்சுப் பார்வை
பற்றவைக்கும் மாயம்..!
காதலில் சகஜம்.

பாராட்டுகள் சாரா.

சாராகுமார்
19-09-2007, 03:37 PM
பற்ற வைக்கும் பார்வை...
உம்மை எரிய வைக்கிறதா...

அருமை சாராகுமார்....

நன்றி அறிஞர் அவர்களே.

பற்ற வைத்த பார்வை
இப்போது அணைந்து விட்டது.

சாராகுமார்
19-09-2007, 04:35 PM
நன்றி அமரன் அவர்களே.

பென்ஸ்
20-09-2007, 05:05 AM
பார்வைதீயால் இதயத்தை பற்ர வைத்து சென்றவள் ஒருத்து
பாடத பாடு படுபவன் இவனொருவன்...

காதல் தீபத்தை ஏற்ரலாம்... வைக்கோலாய் பற்றி எரிவது ஆபத்து அல்லவா.... இந்த தீ பரவுமுங்கோ....

காட்டு தீ அனைக்க கடும் மழை வருமாம், கவனம்.

சாராகுமார்
21-09-2007, 07:08 AM
பார்வைதீயால் இதயத்தை பற்ர வைத்து சென்றவள் ஒருத்து
பாடத பாடு படுபவன் இவனொருவன்...

காதல் தீபத்தை ஏற்ரலாம்... வைக்கோலாய் பற்றி எரிவது ஆபத்து அல்லவா.... இந்த தீ பரவுமுங்கோ....

காட்டு தீ அனைக்க கடும் மழை வருமாம், கவனம்.

நன்றி பென்ஸ் அவர்களே.

இலக்கியன்
21-09-2007, 12:54 PM
அவள்
பார்த்திட்ட
பார்வையது
பற்றியதா
உன் இதயத்தில்
தீயாக...
வாழ்த்துக்கள் நண்பரே

பூமகள்
23-09-2007, 08:19 AM
பார்வை ரெண்டும்
உரசிக் கொண்டால்
பஞ்சும் இங்கே
மிஞ்சுமோ???

நல்ல கவி..! தொடர்ந்து எழுது அசத்துங்கள் சகோதரர் சாரா.
வாழ்த்துக்கள்..!!

சிவா.ஜி
23-09-2007, 08:34 AM
எளிதில் பற்றிக்கொள்ளும் வைக்கோலாய் காதல் மனதை உருவகப்படுத்தியிருக்கும் விதம் அருமை.காதலைப் பற்றிக்கொண்டு இறுதிவரை அதன் மீது பற்றுக்கொண்டு இருப்பதே உள்ளத்தைப் பற்றிக்கொண்ட காதலுக்கு மரியாதை.வாழ்த்துக்கள் சாராகுமார்.

ஓவியன்
23-11-2007, 06:30 AM
ஒரு வார்த்தை
காதலிப்பதாக கூறி
வைக்கோலாய் எரியும்
உள்ளத்தை
ஆனந்தத்தில் தாலாட்ட
மாட்டாயா....!!

நல்ல கவி..
எடுத்துக்கொண்ட உவமை அழகு..!!
பாராட்டுக்கள் சாராகுமார்.

ஆதி
23-11-2007, 06:46 AM
உனக்கென்ன
ஒரு பார்வையை
வீசிவிட்டு போகிறாய்...

என் உள்ளமல்லவா
வைக்கோலாய்ப் பற்றி
எரிகிறது.

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

- திருவள்ளுவர் - திருக்குறல் - குறிப்பறிதல் -1091

அழகு சாராகுமார்..

முதல் பார்வையில் பற்றியத்தீ
மறுப் பார்வையில் அனைய

வாழ்த்துகள்..

-ஆதி