PDA

View Full Version : காலச்சமுத்திரம்

சுகந்தப்ரீதன்
19-09-2007, 12:05 PM
சிறுதுளியாய் சிற்றோடையாய்
பெருந்நதியாய் பெருவெள்ளமாய்
மெல்லமெல்ல பெருக்கெடுத்து
உயிரிலே உருண்டோடிய
உணர்வொன்று.....
காலச்சமுத்திரத்தில் கரைந்தோடி
காணாமல் போனதுமேன்?!

Narathar
19-09-2007, 01:05 PM
காலச்சமுத்திரத்தின் முன்னே நீங்கள் என்ன நான் என்ன எல்லோரும் சமம் தான்!!!

நல்ல கவிதை வாழ்த்துக்கள்

சிவா.ஜி
19-09-2007, 01:07 PM
காலம் எதையும் கரைக்கும்.அதற்கு மலையும் ஒன்றுதான் மடுவும் ஒன்றுதான்.எல்லா சிறுநதிகளும் அதில் கரையத்தானே வேண்டும்.அழகாகச் சொல்லியுள்ளீர்கள் ப்ரீதன்.வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
19-09-2007, 01:26 PM
காலச்சமுத்திரத்தின் முன்னே நீங்கள் என்ன நான் என்ன எல்லோரும் சமம் தான்!!!

நல்ல கவிதை வாழ்த்துக்கள்

நன்றி நாரதரே..!

சுகந்தப்ரீதன்
19-09-2007, 01:26 PM
காலம் எதையும் கரைக்கும்.அதற்கு மலையும் ஒன்றுதான் மடுவும் ஒன்றுதான்.எல்லா சிறுநதிகளும் அதில் கரையத்தானே வேண்டும்.அழகாகச் சொல்லியுள்ளீர்கள் ப்ரீதன்.வாழ்த்துக்கள்.

நன்றி சிவா...!

அமரன்
19-09-2007, 03:15 PM
உணர்வுகள் அழிவில்லாதவை. காலச்சமுத்திரத்தில் அவை சேமிக்கப்படுகின்றன. பிடித்தமானசந்தங்களை அலைகள் காவிச்செல்லும்போது கரைசேர்கின்றன......

கடலில் உப்பு இருப்பது கண்களுக்கு தெரிவதில்லை....அதுபோலவே காலச்சமுத்திரத்தில் உணர்ச்சிகள் கலந்திருப்பது கண்களுக்குப் புலப்படுவதில்லை...நல்ல கவிதை. பாராட்டுக்கள் ப்ரீதன். தொடருங்கள்...

சுகந்தப்ரீதன்
20-09-2007, 03:28 AM

புலப்படுவதுமில்லை புரிந்து கொள்ளபடுவதுமில்லை உணர்வுகள் மட்டும் ஏனோ ஒருமையாய் காலத்தின் கரைகளில் சுற்றி திரிகையில்!
மிக்க நன்றி அமர் அண்ணா!

பென்ஸ்
20-09-2007, 04:42 AM
நல்ல கவிதை சுகந்தபிரிதன்...
மலையாய் மனதில் இருந்தவை மடுவாய் மறிய நிஜங்கள்.
ஆனால் எந்த ஒரு மடுவும் மடிந்து போவதில்லை, புதைந்து மட்டுமே போகிறது. வேலிப்புறம் மட்டும் எந்த அரவமும் இல்லாமல் எழிலாய், புதிதாய்...

வாழ்த்துகள்...

சுகந்தப்ரீதன்
20-09-2007, 09:57 AM

மிக்க நன்றி நண்பரே...! மிக அழகாய் சொன்னீர்கள்...! வேலிப்புறம் மட்டும் எந்த அரவமும் இல்லாமல் எழிலாய், புதிதாய்... வாழ்த்துக்க*ள்!

ஓவியன்
29-09-2007, 12:07 PM
நல்ல உணர்வுகள் காலச் சமூத்திரத்தில் கூட ஒரு போதும் காணாமல் போவதில்லை சுகந்தா...
மாறாக நாம் தான் அவற்றை காண மறந்து விடுகிறோம்....

அழகான குறுங்கவி பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சுகந்தா....

சுகந்தப்ரீதன்
01-10-2007, 03:13 AM
நல்ல உணர்வுகள் காலச் சமூத்திரத்தில் கூட ஒரு போதும் காணாமல் போவதில்லை சுகந்தா...
மாறாக நாம் தான் அவற்றை காண மறந்து விடுகிறோம்....

அழகான குறுங்கவி பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சுகந்தா....

மிக்க நன்றி அண்ணா.. நீங்கள் சொல்வதும் உண்மைதான்!

ஜெயாஸ்தா
01-10-2007, 03:27 AM
எவ்வளவோ உணர்வுகள் காலச்சமுத்திரத்தில் அமிழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அழிவதில்லை. எதாவது ஒரு விநாடியில் மீண்டும் ஞாபத்தில் அது வெளிவருகிறது. நல்ல பொருட்சொறிந்த கவிதை சுகந்தப்பிரீதன்.

சுகந்தப்ரீதன்
01-10-2007, 03:46 AM
எவ்வளவோ உணர்வுகள் காலச்சமுத்திரத்தில் அமிழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அழிவதில்லை. எதாவது ஒரு விநாடியில் மீண்டும் ஞாபத்தில் அது வெளிவருகிறது. நல்ல பொருட்சொறிந்த கவிதை சுகந்தப்பிரீதன்.

உண்மைதான் நண்பரே... முளைக்கும் போதுதான் தெரிகிறது அழிந்துவிடவில்லை அமிழ்ந்துதான் போயிருக்கிறது என்று...!
மிக்க நன்றி நண்பரே...!

சூரியன்
01-10-2007, 04:04 AM
காலசமுத்திரத்தின் விளையாட்டால் நிகழ்வது பல பல மாற்றங்கள்.
கவிதை அருமை வாழ்த்துக்கள் சுகந்தப்ரீதன்..

சுகந்தப்ரீதன்
01-10-2007, 06:20 AM
காலசமுத்திரத்தின் விளையாட்டால் நிகழ்வது பல பல மாற்றங்கள்.
கவிதை அருமை வாழ்த்துக்கள் சுகந்தப்ரீதன்..

மிக்க நன்றி நண்பரே..!