PDA

View Full Version : அம்மா...!!



பூமகள்
19-09-2007, 07:50 AM
http://img36.picoodle.com/img/img36/9/9/18/poomagal/f_ParsonMothem_f57c072.jpg
வயிற்றுச் சிறையில்
வாஞ்சையாய் வைத்து
கருவறை
வகுப்பறையில்
வித்தை பல
பயிற்றுவிக்கும்
கற்பிணி ஆசான் நீ...!!

துடிப்பை உணர்ந்து
வயிற்றைத் தடவி
துள்ளல் அடக்கி
துயிலவைக்கும்
மென்மையின் இதம் நீ...!!

உயிர்கொண்டு என் மீது
உணர்வோடு நித்தம்
உரையாடும் சத்தம்
தொப்பில் கொடி உணவுடனே
தகவல் பரிமாறும்
தகவல் தொழில்நுட்பம் நீ...!!

கருவறையில் நான்
கபடிவிளையாடி
உதைத்து வலித்தாலும்
வலிதாங்கி செல்லமாய்
இடுப்பைப் பிடித்து
வெட்கிச் சிவக்கும்
செவ்வாம்பள் மலரும் நீ..!!

குமட்டிக் குமட்டி
எல்லாம் கொட்டி
தலைசுற்றிப் போனாலும்
திட்டாமல் எனைத்
தாங்கும்
தன்னிகரற்ற உன்னதம் நீ...!!

'மலர்'முகம் காண
மாத்தவம் கொண்டு
மாவலி கண்டு
இம்சையை இச்சையாய் ஏற்று
பூமகளை பூவாய்
இப்பூமியில் பெற்றெடுத்த
பூமாதேவியும் நீ....!!

சிவா.ஜி
19-09-2007, 08:02 AM
அருமையான ஒரு சமர்ப்பணக்கவிதை. தாயெனும் தேவதைக்கு எத்தனை ஆயிரம் பாக்கள் படைத்தாலும் போறாது. மலராய் ஈன்று (பூ) மகளாய் வளக்கும் அந்த மகத்தான உறவுக்கு நீங்கள் தொடுத்தளித்த இந்த கவிமாலை அழகு. எதார்த்தமான வார்த்தைகள்..அதே சமயம் மிக நல்ல பொருள் பொதிந்த வரிகள்.வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள் பூமகள்.

(சின்னச்சின்ன எழுத்துப் பிழைகள்...பிறகு சொல்கிறேன் இப்போது அவசர வேலை)

ஷீ-நிசி
19-09-2007, 09:34 AM
தாய்மையின் கவிதை
ரொம்ப அழகாயிருக்கிறது.. பூமகள்!

அம்மா இந்த உலகத்தின் உன்னதமானவள்..
எத்தனை பாடுகளை சுமந்து பெற்றெடுக்கிறாள்...

செவ்வாம்பள் மலர்.. வித்தியாசமான ஒப்பீடு...

தாய்மையைப்பற்றி நான் எழுதின கவி...
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=164828&postcount=104

அமரன்
19-09-2007, 11:45 AM
ஜீவராசிகளின் ஜீவன் அன்பு..அன்பின் ஜீவநதி அம்மா. பெற்றெடுக்க முன்னும் பின்னும் அவள் கற்றுக்கொடுப்பது பல. அவற்ருல் சிலவற்றை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்..பாராட்டுக்கள்....

அன்னை புகழ்பாடும் இன்னொரு கவிதை...மீனாகுமாரின் சொல்நயத்துடன்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10377

மீனாகுமார்
19-09-2007, 11:59 AM
அன்னையின் தலைக்கு இன்னொரு மகுடம்.

நெகிழ்ச்சி மகிழ்ச்சி பூரிப்பு

வார்த்தைகளைத் தேடுகிறேன்...

ஷீ-யின் கவிதையையும் இப்போது தான் காண்கின்றேன்... மிக அருமை..
யாவருக்கும் எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள்..

சாராகுமார்
19-09-2007, 03:18 PM
அம்மா என்றால் அன்பு
அந்த அன்புக்கு உங்கள்
கவிதை நற் சான்று.

அருமையான அம்மா அம்மம்மா கவிதை.பாராட்டுக்கள்.

பூமகள்
19-09-2007, 03:31 PM
அருமையான ஒரு சமர்ப்பணக்கவிதை. தாயெனும் தேவதைக்கு எத்தனை ஆயிரம் பாக்கள் படைத்தாலும் போறாது. மலராய் ஈன்று (பூ) மகளாய் வளக்கும் அந்த மகத்தான உறவுக்கு நீங்கள் தொடுத்தளித்த இந்த கவிமாலை அழகு. எதார்த்தமான வார்த்தைகள்..அதே சமயம் மிக நல்ல பொருள் பொதிந்த வரிகள்.வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள் பூமகள்.

(சின்னச்சின்ன எழுத்துப் பிழைகள்...பிறகு சொல்கிறேன் இப்போது அவசர வேலை)

மிக்க நன்றிகள் சிவா அண்ணா. மெதுவாக வந்து பிழைகளைச் சுட்டுங்கள். காத்திருக்கிறேன்.

அறிஞர்
19-09-2007, 03:34 PM
அருமை தோழியே....

உம் வரிகள் கண்டு.. உம் அன்னை வெகுவாய் மகிழ்ந்திருப்பார்..

உம்மை சுமந்ததை... பெருமையாக எண்ணியிருப்பார்.....

தொடரட்டும் உம் வரிகள்

பூமகள்
19-09-2007, 03:35 PM
மிக்க நன்றிகள் ஷீ-நிசி..
உங்களின் கவியும் மிக அழகு. மழலைச் சிரிப்பில் பட்டத்துயர் மறக்கும் தாய். உண்மையே..நிதர்சனம்.
வாழ்த்துக்கள் தோழரே..!!

பூமகள்
19-09-2007, 03:43 PM
உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் அமர் அண்ணா. மீனாகுமாரின் கவி அழகோ அழகு. சுட்டி தந்தமைக்கு நன்றிகள் அண்ணா.

பூமகள்
19-09-2007, 03:45 PM
அன்னையின் தலைக்கு இன்னொரு மகுடம்.
நெகிழ்ச்சி மகிழ்ச்சி பூரிப்பு
வார்த்தைகளைத் தேடுகிறேன்...
ஷீ-யின் கவிதையையும் இப்போது தான் காண்கின்றேன்... மிக அருமை..
யாவருக்கும் எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள்..

மிக்க நன்றிகள் சகோதரரே..!
உங்களின் உற்சாகப் பின்னூட்டம் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. உங்களின் அம்மா பற்றிய கவி அருமையிலும் அருமை. பாராட்டுக்கள் அண்ணா.

பூமகள்
19-09-2007, 03:47 PM
அம்மா என்றால் அன்பு
அந்த அன்புக்கு உங்கள்
கவிதை நற் சான்று.
அருமையான அம்மா அம்மம்மா கவிதை.பாராட்டுக்கள்.
மிக்க நன்றிகள் அன்புச் சகோதரர் சாரா...!
உங்களின் பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிகள் கோடி..!!
தொடர்ந்து விமர்சியுங்கள்...!!

பூமகள்
19-09-2007, 03:50 PM
அருமை தோழியே....
உம் வரிகள் கண்டு.. உம் அன்னை வெகுவாய் மகிழ்ந்திருப்பார்..
உம்மை சுமந்ததை... பெருமையாக எண்ணியிருப்பார்.....
தொடரட்டும் உம் வரிகள்
மிக்க நன்றிகள் அறிஞர் தோழரே...!
ஆம்.. என் அன்னை இதனைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார் இன்று அவரிடம் என் கவியைக் காட்டிய போது...!
மகிழ்ச்சி.. நெகிழ்ச்சி...! கன்னம் கிள்ளி முத்தமிட்டார்...!!:icon_rollout:
உங்கள் ஆசியுடன் பணிவுடன் தொடர்கிறேன் மன்றத்தின் பூமகளாய்...!!

சூரியன்
19-09-2007, 04:12 PM
எப்படி சொல்வதென்றே தெரியவில்லை..

கவிதை மிகவும் அருமை..
கவிதைக்கு 100 இ−பணம் அன்பளிப்பாக..

பூமகள்
19-09-2007, 04:41 PM
மிக்க நன்றிகள் அன்புச் சகோதரர் சூரியன்.
உங்களின் இ-பண அன்பளிப்பிற்கும் நன்றிகள்.

இணைய நண்பன்
19-09-2007, 10:55 PM
அம்மாவின் அன்பை அழகிய கவிதையில் சொன்ன உங்களுக்கு 300 இ பணம் அன்பளிப்பு செய்கிறேன்.

பூமகள்
20-09-2007, 04:05 AM
மிக்க நன்றிகள் அன்புத் தோழர் இக்ராம். உங்களின் இ-பண அன்பளிப்புக்கு மிக்க நன்றிகள்.
தொடர்ந்து விமர்சியுங்கள்.

அக்னி
20-09-2007, 01:09 PM
இதயத்துடிப்பின் ஜதி,
தாலாட்ட,
ஒரு ஏகாந்தமான,
அமைதிக்குள்,
தொப்புள்கொடியினூடான,
பரிமாற்றத்தினுள்,
பூக்கும் மழலையைச்
சுமக்கும் கருப்பை...

தொப்புள்கொடி அறுத்து,
ஒரு பிறப்பு, பிரசவமாய் துளிர்க்க,
உச்ச வலியின் வேதனை மறந்து,
மறுபிறப்பாய், மகிழும் தாய்மை...

மனிதனின் முதற் குளியல்,
தாயின் குருதியில்...
மனிதனின் முதல் உணவு,
தாயின் குருதியில்...

பாராட்டுக்கள் பூமகள்...
தாய்மையின் சிறப்புக்கள், என்றும் மேன்மையான போற்றுதலுக்கும், வணங்குதலுக்குமுரியவையே...

பூமகள்
20-09-2007, 01:24 PM
மனிதனின் முதற் குளியல்,
தாயின் குருதியில்...
மனிதனின் முதல் உணவு,
தாயின் குருதியில்...

அருமை அக்னி அண்ணா.
உங்களின் பின்னூட்டமும் கவிதையும் எப்போதுமே ஜொலிக்கும் வைரங்களே..!!
அதன் மூலம் என் கவியை மின்னவைத்ததற்கு நன்றிகள் கோடி.

க.கமலக்கண்ணன்
20-09-2007, 01:46 PM
மிக அருமையான கவிதை மலரும்

மிளிர்கின்றார் உங்களுடன் அன்பு தங்கையே... அருமையிலும் அருமை...

அது போல என்னுடைய கிறுக்கல்...


அம்மா - அன்பை ஒவ்வொரு நொடியிலும்

ஆவலுடன் எனக்கு அளித்து

இனிய பண்பையும் பழக்கத்தையும்

ஈடு இல்லாத வகையில் போதித்து - பசியறிந்து

உணவை பாசத்துடன் எனக்கு

ஊட்டியே வளர்ந்து - என்னை

எங்கும் வெற்றி பெற்றிட

ஏதுவாக துணிவை எனக்குள் விதைத்து

ஐயம் என்பது என்னவென்று தெரியாமல்

ஒப்பில்லாத முழுமனிதானாக்க

ஓய்வில்லாமல் உழைத்த அம்மா

ஒளவை தமிழுக்கு - நீ எனக்கு

இஃதே பத்து மாதம் சுமந்து ஈன்றதற்கு

. அடுத்த ஜென்த்தில் நீ என் மகளாக பிறக்க

. ஆசையுடன் உனது தாழ் பணிந்து...

இலக்கியன்
20-09-2007, 05:13 PM
அம்மா என்பதே ஒரு கவிதைதான் அம்மாவுக்காக அழகன கவிதை படைத்தீர் வாழ்த்துக்கள்

பூமகள்
20-09-2007, 05:21 PM
மிக்க நன்றிகள் கமல் அண்ணா.
உயிர் எழுத்துக்களில் உயிர் தந்த அம்மாவினை துதித்துக் கவிபாடிய விதம் அருமை.
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் கமல் அண்ணா.

பூமகள்
20-09-2007, 05:28 PM
உண்மை தான் இலக்கியரே...!!
அம்மா என்ற ஹைகூவிற்கு என் புதுக்கவி சமர்பித்தேன்.
மிக்க நன்றிகள் உங்களின் ஊக்கத்திற்கு.

என்னவன் விஜய்
20-09-2007, 07:39 PM
பெண்ணின் சிறப்பு
தாய்மை
பிரமாதம்
சந்தர்ப்பத்திற்கு நன்றி

ஓவியன்
27-09-2007, 03:59 AM
'மலர்'முகம் காண
மாத்தவம் கொண்டு
மாவலி கண்டு
இம்சையை இச்சையாய் ஏற்று
பூமகளை பூவாய்
இப்பூமியில் பெற்றெடுத்த
பூமாதேவியும் நீ....!![/FONT][/COLOR]

அழகுத் தமிழில் அம்மாவுக்கு வடித்த சமர்ப்பணக் கவிதை அழகு பூமகள்!!
வார்த்தைகளில் நேர்த்தி தெரிகிறது பாராட்டுக்கள்...

எத்தனை எத்தனை சுகம் கிடைத்தாலும் இன்றும் நான் ஏங்குவது அம்மாவின் மடியில் தலை வைத்து அந்த தாய்மையின் பூரிப்பில் நனைந்திருக்கவே...

அம்மாவைப் பற்றி கவிஞர் வாலியின் திரைப்பட வரிகளிவை, படிக்க படிக்க உடம்பெல்லாம் புல்லரிக்கும் வரிகளிவை...

"பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா...?
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா..
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா.
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா ..? "

பூமகள்
27-09-2007, 05:28 AM
உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் என்னவன் விஜய் சகோதரரே...!!

பூமகள்
27-09-2007, 05:38 AM
அழகுத் தமிழில் அம்மாவுக்கு வடித்த சமர்ப்பணக் கவிதை அழகு பூமகள்!!
வார்த்தைகளில் நேர்த்தி தெரிகிறது பாராட்டுக்கள்...
எத்தனை எத்தனை சுகம் கிடைத்தாலும் இன்றும் நான் ஏங்குவது அம்மாவின் மடியில் தலை வைத்து அந்த தாய்மையின் பூர்ப்பில் நனைந்திருக்கவே...
அன்பு ஓவியன் அண்ணா,
உண்மையில் எல்லாருடைய ஆசையும் தனது அம்மாவின் மடியில் தலை வைத்து அன்பில் உளம் உருகிப் போவதே...!
உங்களின் பாராட்டு கண்டு மிக்க மகிழ்ச்சி அண்ணா.
நன்றிகள் கோடி அண்ணா.