PDA

View Full Version : கடற்கரைச்சாலை ஓரம்

இலக்கியன்
18-09-2007, 06:36 PM
http://img229.imageshack.us/img229/9260/2617083479be6eedcc0bv6.jpg (http://imageshack.us)

கடற்கரைச் சாலையோரம்
அந்தி சாயும் மாலை நேரம்

கடல் மகள் கலைந்த கோலம்
கண்களில் காதல் ஜாலம்

அலைகளின் ஆட்டம் எல்லாம்
கரைகளை கரைத்து சீண்டும்

கடலிடை நாரைக்கூட்டம்
காத்திடும் இரைகள் தேட

மணலிலே நண்டுக்குடைகள்
கடலுடன் தூது பேசும்

தவழ்ந்திடும் தென்றல் காற்று
உடலதை வருடிச்செல்லும்

கரைந்திடும் காக்கை
உறைவிடம் நாடிச்செல்லும்

இயல் இசைக்கவிதையாக
இயற்கையைப் போற்றிப்பாடும்

இளசு
18-09-2007, 08:21 PM
இயற்கையை உபாசிக்கும்..
அதன் இயல்போடு கலந்து இரசிக்கும்
படைப்புகள் என்றுமே அழகு..

இலக்கியன் கவிதை அழகு..

வாழ்த்துகள்!

( நேற்றுமுன் தினம் கடற்கரை தூய்மைக்கான உலகநாள்..
இரண்டாயிரம் பேர் காசிமேடு முதல் பெசண்ட் நகர் வரை
சென்னைக் கடற்கரையைத் தூய்மையாக்கினர்..

கூடவே 80 அத்துமீறிய ''காதல்'' ஜோடிகளை விரட்டி
காவல்துறையும் கூடுதல் தூய்மை செய்தது)

jpl
19-09-2007, 02:53 AM
மாலை நேரத்தை

கடல் மகள் கலைந்த கோலம்
கண்களில் காதல் ஜாலம்
வித்தியாசமான பார்வையில் பார்த்திருக்கின்றார் இக்கவிஞர்.

கூடவே 80 அத்துமீறிய ''காதல்'' ஜோடிகளை விரட்டி
காவல்துறையும் கூடுதல் தூய்மை செய்தது
காதல் ஜோடிகள் அதற்கெல்லாம் அசரவில்லை இளசு.
காவல் துறையினர் தான் அசந்து போவார்கள்.
(ஆதாரம்:இன்றைய நாளிதழ்)

இளசு
19-09-2007, 06:56 AM
காதல் ஜோடிகள் அதற்கெல்லாம் அசரவில்லை இளசு.
காவல் துறையினர் தான் அசந்து போவார்கள்.
(ஆதாரம்:இன்றைய நாளிதழ்)

எப்படியாகிலும் ''காதல்'' செய்வீர்!
எனப் புதுக்கவிதை படைக்கிறார்கள்!

ஆமாம், மணல் சுடுமே.. அதையும் மீறி மணிக்கணக்கில்
பட்டப்பகலில் கொளுத்தும் வெயிலில்...

எப்ப்ப்ப்ப்படிப்ப்ப்ப்ப்பா?

ஆதவனின் விடியலை மிஞ்சிய கனவுகள் கவிதையில்
இதைப் பற்றி படிக்கலாம்..

ஷீ-நிசி
19-09-2007, 09:46 AM
கடற்கரையின் மாலை நேரத்தை
மிக அழகாக பறைசாற்றியிருக்கின்றது இக்கவிதை. வாழ்த்துக்கள் தோழரே!

என்னவன் விஜய்
19-09-2007, 10:10 AM
இலக்கியன்..
காட்சி நன்றா?....
கவிதை நன்றா?....
அற்புதம்.........

பூமகள்
19-09-2007, 05:04 PM
கடலிடை நாரைக்கூட்டம்
காத்திடும் இரைகள் தேட

மணலிலே நண்டுக்குடைகள்
கடலுடன் தூது பேசும்

கவியோடு படமும் மிகக்கச்சிதம். எழில் கொஞ்சும் மாலை நேரம் எங்கள் கண் முன்.

அழகு வரிகள் இலக்கியரே...! வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்..!!

இயற்கையின் அழகை எத்தனை முறை பாடினாலும் அலுக்கவே அலுக்காது.

ஒரு சின்ன விளக்கம் தேவை.

கடலின் அருகில் நாரைகள் இரை தேடுமா? நாரைக் கூட்டம் வாழுமா??
எனக்கு கடல் பற்றி அதிகம் தெரியாது. யாரேனும் சொல்ல முடியுமா??

அமரன்
19-09-2007, 06:53 PM
இயற்கையை வர்ணிக்கும் கவிதைகளில் ஒரு சவுகரியம்..அந்த சூழலை நாம் அனுபவித்திருந்தால் அதற்கேற்ப கவிதையை அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். அங்கங்களை உருவகப்படுத்திக்கொள்ளலாம்..நயம் மிக்க கவிதை..பாராட்டுக்கள் இலக்கியன்...

கடலின் அருகில் நாரைகள் இரை தேடுமா? நாரைக் கூட்டம் வாழுமா??
எனக்கு கடல் பற்றி அதிகம் தெரியாது. யாரேனும் சொல்ல முடியுமா??

குளங்கள் ஏரிகள் சூழலில் நாரைகள் கூட்டம் கண்டிருக்கின்றேன். கடற்சூழலில் இதுவரை இல்லை..

அக்னி
20-09-2007, 02:07 PM
கடலை ரசிக்க நாம் சென்றால்,
அது, மகிழ்வின் உச்சம்...
எம்மை ரசிக்க கடல் வந்தால்,
அது, அழிவின் உச்சம்...

அழகான வரிகள்... சந்தமான கவிதை...
வாழ்த்துக்கள் இலக்கியன்...

இலக்கியன்
20-09-2007, 04:49 PM
இயற்கையை உபாசிக்கும்..
அதன் இயல்போடு கலந்து இரசிக்கும்
படைப்புகள் என்றுமே அழகு..

இலக்கியன் கவிதை அழகு..

வாழ்த்துகள்!

அழகான பின்னூட்டம் தந்தீர்கள் நன்றி இளசு அண்ணா

இலக்கியன்
20-09-2007, 04:51 PM
மாலை நேரத்தை

வித்தியாசமான பார்வையில் பார்த்திருக்கின்றார் இக்கவிஞர்.

காதல் ஜோடிகள் அதற்கெல்லாம் அசரவில்லை இளசு.
காவல் துறையினர் தான் அசந்து போவார்கள்.
(ஆதாரம்:இன்றைய நாளிதழ்)

அழகான பின்னூட்டம் நண்பரே நன்றிகள்

இலக்கியன்
20-09-2007, 04:54 PM
கடற்கரையின் மாலை நேரத்தை
மிக அழகாக பறைசாற்றியிருக்கின்றது இக்கவிதை. வாழ்த்துக்கள் தோழரே!

நன்றி நண்பரே உங்கள் அழகான பின்னூட்டத்துக்கு

இலக்கியன்
20-09-2007, 04:55 PM
இலக்கியன்..
காட்சி நன்றா?....
கவிதை நன்றா?....
அற்புதம்.........

நன்றி நண்பரே உங்கள் அழகான பின்னூட்டத்துக்கு

இலக்கியன்
20-09-2007, 05:04 PM
கவியோடு படமும் மிகக்கச்சிதம். எழில் கொஞ்சும் மாலை நேரம் எங்கள் கண் முன்.

அழகு வரிகள் இலக்கியரே...! வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்..!!

இயற்கையின் அழகை எத்தனை முறை பாடினாலும் அலுக்கவே அலுக்காது.

ஒரு சின்ன விளக்கம் தேவை.

கடலின் அருகில் நாரைகள் இரை தேடுமா? நாரைக் கூட்டம் வாழுமா??
எனக்கு கடல் பற்றி அதிகம் தெரியாது. யாரேனும் சொல்ல முடியுமா??

நன்றி பூமகள் உங்கள் பின்னூட்டத்துக்கு எனக்கும் கடல் பற்றிய அனுபவம் குறைவு
நான் தமிழ்நாட்டு மரினா கடற்கரையின் நினைவுகளோடு புனைந்த வரிகள்
கடலில் நாரை இருக்குமா எனக்கும் தெரியவில்லை அறிந்தவர்கள் கூறவும்

இலக்கியன்
20-09-2007, 05:05 PM
இயற்கையை வர்ணிக்கும் கவிதைகளில் ஒரு சவுகரியம்..அந்த சூழலை நாம் அனுபவித்திருந்தால் அதற்கேற்ப கவிதையை அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். அங்கங்களை உருவகப்படுத்திக்கொள்ளலாம்..நயம் மிக்க கவிதை..பாராட்டுக்கள் இலக்கியன்...

குளங்கள் ஏரிகள் சூழலில் நாரைகள் கூட்டம் கண்டிருக்கின்றேன். கடற்சூழலில் இதுவரை இல்லை..

அழகான பின்னூட்டம் நன்றி அமரன் அண்ணா

இலக்கியன்
20-09-2007, 05:09 PM
கடலை ரசிக்க நாம் சென்றால்,
அது, மகிழ்வின் உச்சம்...
எம்மை ரசிக்க கடல் வந்தால்,
அது, அழிவின் உச்சம்...

அழகான வரிகள்... சந்தமான கவிதை...
வாழ்த்துக்கள் இலக்கியன்...

அக்னி கடல் பற்றி அழக்க சொன்னீர்கள் அழகானது ஆபத்துதானே நன்றி

ஓவியன்
27-09-2007, 02:58 AM
இயற்கையன்னையின் பரிசுகளிலொன்று இந்த கடற்கரை, ஆனால் இன்று செயற்கையோடு வாழப்பழகிவிட்ட மனிதன் இயற்கை தந்த சொர்க்கமான இந்த கடற்கரையை தன் செயற்கை அறிவின் துணிவோடு நரகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றான்...

சிந்திக்க வேண்டும் எல்லோரும், சிந்திக்க வைக்கும் உங்கள் கவிதை, பாராட்டுக்கள் இலக்கியன்!.

இலக்கியன்
28-09-2007, 06:45 PM
இயற்கையன்னையின் பரிசுகளிலொன்று இந்த கடற்கரை, ஆனால் இன்று செயற்கையோடு வாழப்பழகிவிட்ட மனிதன் இயற்கை தந்த சொர்க்கமான இந்த கடற்கரையை தன் செயற்கை அறிவின் துணிவோடு நரகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றான்...

சிந்திக்க வேண்டும் எல்லோரும், சிந்திக்க வைக்கும் உங்கள் கவிதை, பாராட்டுக்கள் இலக்கியன்!.

ஆம் நண்பனே உன்மைதான் நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு