PDA

View Full Version : திருந்து

இலக்கியன்
18-09-2007, 08:04 AM
ஜாதியம் பேசுதல் பாவம்
மீறி ஜாதியம் பேசின்
அவன் நாக்கை நீ வெட்டு

சீதனம் வாங்குதல் கொடுமை
மீறி சீதனம் வாங்கின்
அவன் கையை நீ வெட்டு

பெண்ணை அடிமை
செய்பவர் கோழை
மீறி அடிமை செய்யின்
அவன் கழுத்தை நீ வெட்டு

ஏழையை வருத்துபவன் பாவி
மீறி ஏழையை வருத்தின்
அவன் முகத்தில் நீ துப்பு

லஞ்சம் வாங்குபவர் கறையான்
மீறி இலஞ்சம் வாங்கின்
அவன் தலையில குட்டு

ஊருக்கு உழைப்பவன் தொண்டன்
மீறி ஊரைக்கெடுத்தால்
மிளகாய் பொடி கொட்டு

உளவு பார்ப்பவன் ஒற்றன்
மீறி காட்டி கொடுப்பின்
தலையில வை பொட்டு

ஆதவா
18-09-2007, 10:41 AM
தவறுக்கு மாபெரும் தண்டனை திருத்துவது... திருத்துவதால் ஏற்படும் இழப்புகளல்ல.
வெட்டி ஒட்டி குட்டி, துப்பி ஒருவனைச் சாய்ப்பதைக் காட்டிலும் தட்டிக் கொடுத்து தவறைத் திருத்துவது சாலச் சிறந்தது. முடியாதெனில் நாம் பேசத் தகுதியற்றவர்கள்.
கவிதை அடக்கமாக இருந்தாலும் கரு ஏனோ எனக்கு பிடிபடவில்லை.

ஷீ-நிசி
18-09-2007, 10:59 AM
இலக்கியன் நல்ல சமூக சாடல்...

இதையெல்லாம் எத்தனை பேரால் செய்யமுடியும்??

இதையெல்லாம் செய்ய அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில், நம்மில் பலருக்கும் நாக்கு கை கழுத்து இருக்காது, முகம் காறி துப்பபட்டு இருக்கும்....

ஆதவா சொன்னதுபோல் கரு அவ்வளவாக சரியாக இல்லை.. நண்பரே!

பூமகள்
18-09-2007, 11:32 AM
சமூகச் சாடல்.. இப்படி செய்தால் தவறிழைக்க பயப்படுவார்களா மக்கள்?
பயத்திலேனும் கொடுமைகள் குறைந்தால் சரியே..!!
மற்றுமொரு சந்தக்கவி இலக்கியரே.!!
வாழ்த்துக்கள்..!!

சாராகுமார்
18-09-2007, 03:49 PM
நாம் முதலில் திருந்துவோம்.பின்னர் மற்றவர்களை திருத்துவோம்.

அருமை.வாழ்த்துக்கள்.

aren
18-09-2007, 03:51 PM
படிக்க நன்றாகத்தான் உள்ளது. ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா. இருந்தாலும் ஒவ்வொருவரும் இப்படி நினைத்தாலே உலகம் தானாகவே முன்னேறிவிடும் என்பது நிச்சயம்.

நல்ல சிந்திக்கவைக்கும் கவிதை. பாராட்டுக்கள்.

சூரியன்
18-09-2007, 04:10 PM
சிந்திகக்தக்க கவிதை வாழ்த்துக்கள் இலக்கியன்.

அக்னி
20-09-2007, 02:12 PM
ஆதவா சொல்வது போல், தவறின் உச்ச தண்டனை, மன்னிப்பு...
ஆனால் மன்னிப்பு பெறுபவன் திருந்துகின்றான என்றால்...???
முழுவதுமாக இல்லை.

திருந்தினால்,
நிரந்தரம்
திருந்துவோருக்கு...
திருத்தினால்,
இல்லை நிரந்தரம்
திருத்துவோருக்கு...

பாராட்டுக்கள் இலக்கியன்...

என்னவன் விஜய்
20-09-2007, 02:18 PM
இலக்கியன்
உங்கள் கவிதை பிரமாதம்
நீங்கள் சொற் பூக்களை
தொகுத்த விதமும் பிரமாதம்
அதைவிட பிரமாதம்
இதை எங்கள் வாழ்க்கையில்
ஒழுகினால்

சந்தர்ப்பத்துக்கு நன்றி

இலக்கியன்
20-09-2007, 04:31 PM
தவறுக்கு மாபெரும் தண்டனை திருத்துவது... திருத்துவதால் ஏற்படும் இழப்புகளல்ல.
வெட்டி ஒட்டி குட்டி, துப்பி ஒருவனைச் சாய்ப்பதைக் காட்டிலும் தட்டிக் கொடுத்து தவறைத் திருத்துவது சாலச் சிறந்தது. முடியாதெனில் நாம் பேசத் தகுதியற்றவர்கள்.
கவிதை அடக்கமாக இருந்தாலும் கரு ஏனோ எனக்கு பிடிபடவில்லை.

உங்கள் தனிப்பட்ட கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன்
உணர்ச்சி பொங்க ஒரு கவி புணைந்தேன் அவ்வளவுதான்

இலக்கியன்
20-09-2007, 04:33 PM
இலக்கியன் நல்ல சமூக சாடல்...

இதையெல்லாம் எத்தனை பேரால் செய்யமுடியும்??

இதையெல்லாம் செய்ய அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில், நம்மில் பலருக்கும் நாக்கு கை கழுத்து இருக்காது, முகம் காறி துப்பபட்டு இருக்கும்....

ஆதவா சொன்னதுபோல் கரு அவ்வளவாக சரியாக இல்லை.. நண்பரே!

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி கருத்துக்களை வளமாக சொல்வது எம் எழுத்தாறல்களுக்கு வளமாக அமையும் அந்த வகையில் உங்கள் கருத்துக்கு என் பாராட்டும் நன்றியும்

இலக்கியன்
20-09-2007, 04:35 PM
சமூகச் சாடல்.. இப்படி செய்தால் தவறிழைக்க பயப்படுவார்களா மக்கள்?
பயத்திலேனும் கொடுமைகள் குறைந்தால் சரியே..!!
மற்றுமொரு சந்தக்கவி இலக்கியரே.!!
வாழ்த்துக்கள்..!!

என் எண்ணத்தில் வந்த ஒரு புரச்சிகர சிந்தனை எனலாம் இது நடைமுறைக்கு சாத்தியமா என்பது கேள்விக்குறி விவாதத்துக்குரியது :)

இலக்கியன்
20-09-2007, 04:37 PM
நாம் முதலில் திருந்துவோம்.பின்னர் மற்றவர்களை திருத்துவோம்.

அருமை.வாழ்த்துக்கள்.

தன்னைத்தான் திருத்தினால் சமுகம் தானக திருந்தும் என்பதை மறைமுகமாக கூறி சென்றீர்கள் நன்றி

இலக்கியன்
20-09-2007, 04:38 PM
படிக்க நன்றாகத்தான் உள்ளது. ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா. இருந்தாலும் ஒவ்வொருவரும் இப்படி நினைத்தாலே உலகம் தானாகவே முன்னேறிவிடும் என்பது நிச்சயம்.

நல்ல சிந்திக்கவைக்கும் கவிதை. பாராட்டுக்கள்.

நன்றி நன்றாக சொன்னீர்கள்

இலக்கியன்
20-09-2007, 04:39 PM
சிந்திகக்தக்க கவிதை வாழ்த்துக்கள் இலக்கியன்.

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

இலக்கியன்
20-09-2007, 04:42 PM
ஆதவா சொல்வது போல், தவறின் உச்ச தண்டனை, மன்னிப்பு...
ஆனால் மன்னிப்பு பெறுபவன் திருந்துகின்றான என்றால்...???
முழுவதுமாக இல்லை.

திருந்தினால்,
நிரந்தரம்
திருந்துவோருக்கு...
திருத்தினால்,
இல்லை நிரந்தரம்
திருத்துவோருக்கு...

பாராட்டுக்கள் இலக்கியன்...

குட்ட குட்ட குனிபவனும் மடையன் குனிய குனிய குட்டு பவனும் மடையன்
சிந்திக்க வைத்த பின்னோட்டம் நன்றி அக்னி

இலக்கியன்
20-09-2007, 04:43 PM
இலக்கியன்
உங்கள் கவிதை பிரமாதம்
நீங்கள் சொற் பூக்களை
தொகுத்த விதமும் பிரமாதம்
அதைவிட பிரமாதம்
இதை எங்கள் வாழ்க்கையில்
ஒழுகினால்

சந்தர்ப்பத்துக்கு நன்றி

ஆம் அழகான சொன்னீர்கள் நண்பரே உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

ஓவியன்
27-09-2007, 02:47 AM
ஆதவனின் கருத்தே எனது கருத்தும்....
தவறுக்கு தண்டனை கொடுப்பதிலும்....
தவறைச் சுட்டிக் காட்டுவதே மேல்....

ஆனால்
தவறின் பால் கொடுக்கப்படும்
தண்டனைகளின் கொடுரம்..
மீள ஒருவனை
தவறு செய்யாது தடுக்கும் என்பார்கள்....

உங்கள் கவிதையும் அப்படித்தான்...
பாராட்டுக்கள் இலக்கியன்..

இலக்கியன்
28-09-2007, 06:49 PM
ஆதவனின் கருத்தே எனது கருத்தும்....
தவறுக்கு தண்டனை கொடுப்பதிலும்....
தவறைச் சுட்டிக் காட்டுவதே மேல்....

ஆனால்
தவறின் பால் கொடுக்கப்படும்
தண்டனைகளின் கொடுரம்..
மீள ஒருவனை
தவறு செய்யாது தடுக்கும் என்பார்கள்....

உங்கள் கவிதையும் அப்படித்தான்...
பாராட்டுக்கள் இலக்கியன்..

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டேன்
நன்றி ஓவியன்