PDA

View Full Version : உன் ஞாபக தொல்லைகள்



அகத்தியன்
18-09-2007, 06:30 AM
இன்றும் தொடங்கிற்று
உன் ஞாபக தொல்லைகள்

அச்சோதனை சாவடியில்
எல்லோரும் பொதிகளோடு இறங்க,
எப்போதும் போல்,
நான் மட்டும் உன் ஞாபக சுமையோடு இறங்குவேன்.

காலம் விழுங்கிய உன்னை
என்றும் ஞாபகப்படுத்தும்- அவள்,
காக்கி உடையோடு...
நீதான் நீயேதான் என மனம் கூவும்; அடம்பிடிக்கும்
ஆனாலும்,
காலம் உன்னை தொலைக்க காரணமும்,
அவள் அணிந்துள்ள காக்கிதான்
உண்மை சுட எப்போதும் போல்
அடையாள அட்டையுடன் முடித்து கொள்வேன்.
உன்னையும் உன் ஞாபகங்களையும்.

இலக்கியன்
18-09-2007, 08:27 AM
காக்கிசட்டை கண்டு அவள் நினைவுகள் உம்மை வாட்டியதோ தோழரே
வாழ்த்துக்கள் காலத்து நிலமையோடு காதல் கவிதை படைத்தீர்

ஓவியன்
19-09-2007, 07:23 AM
அகத்தியன், நீண்ட இடைவேளையின் பின் உங்கள் கவிதை ஒன்று, அதுவும் ஒரு நிதர்சனக் கவிதையாக....

காலம் செய்த தவறா...?
இல்லை
காலத்தில் நாம் செய்த தவறா..?

கடமையுடன் அவள்
காதலுடன் காதலன்...
சிக்கலான பிரச்சினைதான்.

கடமையா?, காதலா.?
காதலன் என்ற
கடமை தவறியதால்
இந்த நிலையா..?
இல்லை
காவலனாக கடமை
ஏற்க தவறியதால்
இந்த நிலையா..?
காலம் தான் பதில் சொல்லும்!.

பாராட்டுக்கள் அகத்தியன் தொடர்ந்து உங்கள் கவிப்பூக்கள் இங்கே பூக்கட்டும்.

ஷீ-நிசி
19-09-2007, 09:17 AM
இது கவிதை எழுதியவருக்கே முற்றிலும் புரியக்கூடிய ஒரு தனிப்பட்ட கவிதையான நிகழ்வு,

கவிதையில் பயணிக்கின்ற பாரம் படிக்கும் என்னையும் உரசிவிட்டுத்தான் செல்கிறது.. இன்னும் புரியும் வண்ணம் எழுதியிருக்கலாம் நண்பரே!

வாழ்த்துக்கள்!

அகத்தியன்
19-09-2007, 10:20 AM
இது கவிதை எழுதியவருக்கே முற்றிலும் புரியக்கூடிய ஒரு தனிப்பட்ட கவிதையான நிகழ்வு,


உண்மை நண்பரே, ஆனாலும் எனக்கு எட்டும் தூரம் வரைத்தான் என்னால் பாய முடியும்.
இனி முயற்சிக்கிறேன்.
உணர்ச்சிகளை வார்த்தையாக்குவது, பிரசவ வேதனையை விட வலிமிகுந்தது.
ஒத்துக்கொள்கிறீரா?:)

[/QUOTE]பாராட்டுக்கள் அகத்தியன் தொடர்ந்து உங்கள் கவிப்பூக்கள் இங்கே பூக்கட்டும்[/QUOTE].

நன்றி உமது கருத்துக்கும் பாராட்டுகளிற்கும்

அமரன்
19-09-2007, 12:04 PM
அகத்தியன் இந்தக்கவிதை இருவேறுபட்டு சிந்திக்க வைக்கின்றது. ஏற்கனவே பழக்கமான குறிப்பிட்டபெண் (எந்த இனத்தை சார்ந்தவளாகவும் இருக்கலாம்) காவல்துறையில் வேலைக்கு சேர்ந்து அவளை தமிழனாக ஒருவன் சாவடியில் (என்னமா சாவடிப்பாங்க) பார்க்க நேருடுகையில் நெருடும் நினைவலைகளின் அதிர்வாகவோ அல்லது காக்கியின் அராயகத்தால் மிலேச்சனத்தால் பிரிந்த ஒருத்தியின் நினைவு அலைகளின் அதிர்வாகவோ தோன்றுகின்றது.

எழுதுபவரின் மன அடுக்கில் நாமும் சஞ்சாரிக்கும்போது சிலகவிதைகளின் புரிதல் இலகுவாகும். உங்கள் அந்த அந்த அடுக்கை நான் தொட்டுள்ளேனா?
எப்படியானாலும் காலப்பிரதிபலிப்புக்கவிதைக்குப் பாராட்டுக்கள்..வரிகளை நரம்புகளாகவே பார்க்கின்றேன்..உணர்சிக்கடத்தல் வீரியம் மிக்கதாகவே உள்ளது. "அடையாள அட்டையுன் முடித்துக்கொள்வேன்" கவர்ச்சி அதிகமான பிரயோகம்...தொடருங்கள்.

அகத்தியன்
20-09-2007, 03:02 AM
காக்கியின் அராயகத்தால் மிலேச்சனத்தால் பிரிந்த ஒருத்தியின் நினைவு அலைகளின் அதிர்வாகவோ தோன்றுகின்றது.

எழுதுபவரின் மன அடுக்கில் நாமும் சஞ்சாரிக்கும்போது சிலகவிதைகளின் புரிதல் இலகுவாகும். உங்கள் அந்த அந்த அடுக்கை நான் தொட்டுள்ளேனா?.

நன்றி அமரன்! உங்களது இரண்டாவது கணிப்பே எனது கவிதையின் கரு. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நாம் நினைப்பதை இன்னொருவர் சொல்லும் போது ஏற்படும் நிறைவு என்னுள். (இன்றிரவு நிம்மதியாக தூங்குவேன்) நிச்சயமாக நீங்கள் என் எழுத்தின் மூலமாக என் உணர்வை புரிந்துள்ளீர்கள். மீண்டும் நன்றி.

அக்னி
20-09-2007, 02:41 PM
காவல்துறை,
மக்களின் நண்பன் என்பார்கள்...
ஆனால்,
இங்கு கடித்துக்குதறுபவர்கள்தான் அதிகம்.

வரைந்த அகத்தியனுக்கும், திறந்த அமரனுக்கும் பாராட்டுக்கள்...

சுமக்கும் இதயங்களும்,
கருவறைகளே...

என்னவன் விஜய்
20-09-2007, 03:00 PM
அகத்தியன் ..........
ஒரு உரசு உரசி
என்னை ஊருக்கே
அழைத்து சென்று விட்டீங்கள்

நண்பரே
நீர் படைப்பது உமது திருப்திக்குத்தான்
கவலையை விடும்
நன்றி

சாராகுமார்
20-09-2007, 03:13 PM
அகத்தியன் வாழ்த்துக்கள்.