PDA

View Full Version : தலையணை மந்திரம்!!!



aren
17-09-2007, 03:42 PM
தாலி கட்டியதால்
கணவாகமாட்டாய்!!!

மனைவியின் அன்பைப்
பெற்றால்தான் கணவனாவாய்!!!

கணவனாக இருப்பது வேறு
கணவனாக வாழ்வது வேறு!!!

கணவனாக வாழ்வதற்கு வழிதேடு
மனைவியை சரியாக வழிநடத்திடு!!!

வாழ்வே மாயம்
என்று சொன்ன நீ
வாழ்வே இன்பமயம் என்பாய்!!!

மனைவியின் விருப்பத்தைத் தெரிந்து
அதன் படி நடந்துகொள்
வாழ்வே உனக்கு சொர்கம்!!!

நரகத்தையே அறிந்த நீ
சொர்க்கத்தையும் அறிந்துகொள்
உன் வாழ்க்கையை புரிந்துகொள்வாய்!!!

உன் மனைவியை நீ நேசித்தால்
உன்னை நீ நேசிக்கலாம்
செய்வாயா!!!

சாராகுமார்
17-09-2007, 04:28 PM
காதல் செய்வீர் காதல் செய்வீர்
அன்பு மனைவியை
காதல் செய்வீர்.

நல்ல கவிதை.பாராட்டுக்கள்.

இளசு
17-09-2007, 07:11 PM
அன்பின் ஆரென்

அண்மைக்கால உங்கள் காதல்கவிதைகளால்
அவ்விடம் ஏற்பட்ட வெப்பத்தைத் தணிக்க
அன்பாய் தெளித்த இந்த பன்னீர்க்கவிதையால்
அளவிலா குளிர்ச்சி உங்கள் மீது பரவும் நிச்சயமாய்!

( அத்தனையும் நம் கமலக்கண்ணனால் வந்த பாதிப்பு)

இலக்கியன்
18-09-2007, 08:31 AM
வாழ்வையும்
காதலையும்
புரியவைத்து
மனைவியை காதலி
நன்றாக சொன்னீர்கள் பாராட்டுக்கள்

ஓவியன்
21-09-2007, 09:00 AM
ஆஹா இது தான் தலையணை மந்திரமா...?
மிக்க நன்றி ஆரென் அண்ணா - எதிர்காலத்திலே உபயோகப்படும்....:D

அமரன்
21-09-2007, 09:04 AM
தலை அணையில் சாய்ந்திருந்தால்
கேட்கும் வழிநடத்தும் மந்திரங்கள்.
எல்லாருக்கும் இது மிக பொருந்தும்.

மீனாகுமார்
21-09-2007, 10:14 AM
மனைவியின் விருப்பத்தைத் தெரிந்து
அதன் படி நடந்துகொள்
வாழ்வே உனக்கு சொர்கம்!!!

நரகத்தையே அறிந்த நீ
சொர்க்கத்தையும் அறிந்துகொள்
உன் வாழ்க்கையை புரிந்துகொள்வாய்!!!



முதலில் அருமையான கவிதை கொடுத்ததற்கு நன்றி..

சில கருத்துக்கள் -
மேலே நான் கோடிட்டு காட்டியிருக்கும் வரிகள் மேலோட்டமாக பார்க்க அருமையாக உள்ளது. ஆனால் இது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியம் என்பது அவரவர் வாழ்கையைப் பொறுத்தது. உதாரணத்திற்கு மனைவிகளின் சில விருப்பங்களை தருகிறேன்.. நீங்களே இதெல்லாம் சாத்தியமா என்று கூறுங்கள்..

1. மனைவிகள் பொதுவாக வரவுக்கு மேல் அதிகமாக செலவு செய்ய துடிப்பவர்கள்.
2. கணவன் கண்விழித்து உடல்வருத்தி சம்பாதிக்கும் பணத்தை உதட்டுசாயக்காரனிடமும் வளையல்காரனிடமும் எளிதாகத் தூக்கிக் தூக்கிக் கொடுக்கிறார்கள்.
3. கணவன் வீட்டில் வாழப் பிடிக்காமல் தன் தந்தையின் வீட்டில் சென்று வாழலாம் என்று உங்களை அழைக்கிறார்கள். பிறகு, நீங்கள் உங்களின் மாமனாரின் சிகரெட்டுக்கோ இல்லை அவர்களின் சுகத்துக்கோ சேர்த்து செலவு செய்ய வேண்டும்.
4. வீட்டு வேலை ஏதுமே செய்யாமல் முடிந்தால் 2 வேலைக்காரர்கள் வைத்துக் கொண்டு வெறும் மேற்பார்வையும் அதிகாரமும் மட்டுமே செய்ய எண்ணுகிறார்கள்.
இன்னும் பல...

மக்கள் இங்கே நன்கு கவனிக்க- நான் எல்லா மனைவிமார்களும் இப்படி இருக்கிறார்கள் என்று கூறவில்லை. இப்படிப்பட்ட சூழல் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வியை மட்டுமே எழுப்புகிறேன்.