PDA

View Full Version : மேரூர் முருகன் பதிற்றுப்பத் தந்தாதி



shivasevagan
17-09-2007, 10:18 AM

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

மேரூர் முருகன் பதிற்றுப்பத் தந்தாதி





சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை




--------------------------------------------------------------------------------

முன்னுரை:


1948

காஞ்சிக்கணித்தாய உத்தரமேரூரில் திருக்கோயில் கொண்டெழுந்தருளியுள்ள ஸ்ரீகஜவல்லீ சமேத ஸ்ரீசுப்பிரமணியப் பெருமானாரின் திருவடிக்கமலங்களுக்கு 'மேரூர் முருகன் பதிற்றுப்பத் தந்தாதி' யென்னும் இந்நூலை நான் ஆக்கி அலங்கலாகச் சமர்ப்பித்தேன். உத்தரமேரூர் வாசியும், செங்குந்த குல சிரேட்டரும், மாசற்ற மனத்தினரும், குகபக்தி மிக்காரும், சைவசமயாபிமானஞ் சிறந்தாரும், எனக் காப்தரும் ஆகிய தேவார திருப்புகழ் இசைமணி திருவாளர் U.D.இராஜரத்தின முதலியாரவர்கள் தம் பொருளுதவியால் இதனை யச்சிட்டு உலகிற்கு இலவசமாக வழங்கினார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக. அவர்கள் செய்துவருஞ் சிவபணிகளும் அவற்றிற் கனுகூலமான பிறமுயற்சிகளும் வெற்றிபெறுமாறு திருவருள்புரிய ஸ்ரீ பார்வதீ சமேத ஸ்ரீபரமசிவனாரின் திருவடிகளை நான் வணங்கி வேண்டிக் கொள்ளுகிறேன்.


--------------------------------------------------------------------------------

பதிப்புரை:

'மேரூர் முருகன் பதிற்றுப் பத்தந்தாதி' யென்னும் இந்நூலின் ஆசிரியவர்கள் வேறும் பல நூல்களை யாக்கியுள்ளார்கள். அவையனைத்தும் சைவ சித்தாந்த சாத்திர வரம்பைச் சிறிதும் மீறா. அந்த ஒரு காரணத்தாற்றான் அவர்கள் இயற்றும் நூல்களை அச்சிட்டு வெளியிட வேண்டுமென்ற ஆசையெனக்கு எழுவதாயிற்று. முன்னும் அவர்கள் நூலொன்றை நான் வெளியிட்டேன் இப்போது இந்நூலை வெளியிடுகின்றேன். இனியும் அவர்கள் ஆக்கும் நூல்களை வெளியிடல் எனக்கு மிகவும் விருப்பந்தான். சிவகிருபையுந் துணை நிற்கும்.

அவர்கள் பல ஆண்டுகள் இவ்வூரில் வாழ்ந்து விட்டு இப்போது தம் ஜன்ம தேசமாகிய திருநெல்வேலி ஜில்லாவுக்கு செல்லுகிறார்கள். ஆயினும் அவர்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு தளராது. அவர்களுக்கு எல்லா நலன்களையும் அளித்தருளுமாறு ஸ்ரீகஜவல்லீ சமேத ஸ்ரீ சுப்பிரமணியப் பெருமானாரின் திருவடிகளை நான் பிரார்த்திக்கிறேன்.

உத்தரமேரூர் தேவார திருப்புகழ் இசைமணி
30-5-1948 U.D.இராஜரத்தின முதலியார்


--------------------------------------------------------------------------------

shivasevagan
17-09-2007, 10:19 AM

சாற்றுக்கவி

திருவாவடுதுறை யாதீன மஹாவித்வான்
சிவஸ்ரீ. வி.சிதம்பர ராமலிங்கபிள்ளையவர்கள்
தந்தது

செந்தமிழ் வரைப்பி னெல்லா நலங்களுஞ் செழிப்புற் றோங்குஞ்
கந்தர நாடென் றேதுந் தொண்டைநன் னாட்டி லம்மை
ஐந்துற ழாறி ரண்டா மறஞ்செயுங் காஞ்சிக் கண்மை
தந்திடும் பதியா மேரூர்த் தலமொன்று சிறக்கு மன்றே.

அத்திருப் பதியி லென்னை வழிவழி யடிமை கொள்ளுஞ்
சத்திவேற் கரத்தெம் மண்ண றன்றுணை வியர்க ளானோ
ரொத்தொரு வடிவந் தாங்கிக் கசவல்லி யொருபேர் பூண்டு
நித்தலு மருவி நிற்ப நீடுறு மகிழ்வின் வைகும்.

அன்னவன் கமல பாதத் தன்புறு மனத்தா னாளு
முன்னிடும் பதிற்றுப் பத்தென் றோதுமந் தாதி மாலை
நன்னயப் பொருள்க ளிபாவு நாடுறு மிடங்க டோறுந்
துன்னிடப் பலசந் தத்தாற் சூட்டின னொருவன் மாதோ.

இவ்வகை யலங்கல் சூட்டு மேந்தன்மற் றியாவ னென்னிற்
றிவ்வியம் பழுத்த பாண்டிச் செழுந்தமிழ் நாடு தன்னி
லெவ்வமி னெல்லை யென்னு மெழினகர்க் குடபாற் பேட்டைத்
தெய்வநன் னகரில் வேளாண் டிருக்குலம் விளக்கு மேலோன்.

வைதிக சைவம் வாழ வந்தவ தரித்த வெண்ணை
செய்தவந் திகழ்மெய் கண்ட தேவன்றாண் மறவா நெஞ்சன்
பொய்திகழ் சமயம் பேர்க்குங் கோடரி புகல்வா சால
மெய்திடுஞ் சீர்த்தி மிக்கா னீச்சுர மூர்த்தி மாதோ.

shivasevagan
17-09-2007, 10:20 AM

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க


மேரூர் மூருகன் பதிற்றுப்பத் தந்தாதி

காப்பு

நல்ல தண்டக நாட்டிற் றவமெல்லாம்
வல்ல வுத்தர மேரூர் மகிழ்கச
வல்லி காந்தனை வாழ்த்துவல் மன்னுயிர்க்
கெல்லை யான கணேசனை யேத்தியே.

நூல்

1.

பாலின் கடலா மிதுவென்னப் பரந்த வேரி நிறைநன்னீர்
காலின் வாச்சூழ் கழனிவளங் காட்டு மேரூர்த் திருமுருக
னீல மயிலின் மீதிவர்ந்து நெடுக வீதி பவனிவருங்
கோலங் கண்டேன் கண்டடியேன் குறைதீர்ந் தின்பார்ந் திருந்தேனே.

2.

தேனின் றிரள்க டீங்குரலைச் செய்யுஞ் சோலைச் சீர்மேரூர்
ஞான நாதா வுனையன்றி நாயேன் பிறவிக் கடலேற
வான புணைதான் வேறுளதோ வாறு முகவா வருளுதியால்
தீன தயாளு வென்றுனையே செப்பல் கண்டேன் திருமறையே.

3.

மறைநான் கினையு நால்விரற்கோ வணமா வணிந்த சிவமுதல்வன்
சிறைவீ டமார்க் குதவவரு டேவ சேனா பதிநாமத்
திறைவா மகளிர் முகமதியே யிரவைத் துரக்கு மேரூரி
னிறையுங் கருணா கரமுருகா நின்னை நிகர்க்குந் தேவுண்டோ.

4.

உண்டு முடுத்து முறங்கியுநா ளோட்டி னுலகீ ருயிர்விடுநாட்
பெண்டுஞ் சேயும் பெருந்தனமும் பிறவுஞ் சிறிதுந் துணைவருமோ
ஞெண்டின் றொகுதி வரப்பொழுங்கி னின்று புரக்கும் வயன்மேரூர்
தொண்டு புரிய மகிழ்குகனைத் தொழுமின் றுயரம் போமின்றே.

5.

இன்றோ வன்றே நல்க்ஷந்தே னெனினு மெவனை யானிரந்து
நின்றிக் குறைதீ ரென்றேனென் னெஞ்ச முனக்கே யிடமன்றே
குன்றம் புரையு நெடுமாடங் கோடி யாகத் திகழ்மேரூர்
வென்றி வேலா விடலெனைநீ வீயாத் திருவின் பொக்கசமே.

6.

கசமே வளர்த்த கரும்பினையுங் கானக் குறவர் கண்மணிய்போல்
வசமே வளர்த்த வல்லியையு மணந்து மகிழ்ந்த மணவாளா
விசமே யுமிழும் பாம்பேனு மேவி னமிழ்தே யுமிழ்மேரூர்
நிசமே கோழிக் கொடியுடையாய் நின்னை நினைக்கத் தருவாயே.

7.

தருவில் வல்லி வழிநடையான் றண்ணார் நிழலிற் கருமுகிலி
னுருவ மஞ்ஞை மகிழ்வதுபோ லொவ்வோ ருறுப்புந் தனியழகு
மருவி நின்றென் னுளங்கவரும் வள்ள லாகி மேரூர்சேர்
முருக வேளைத் தாடலையாய் முயங்கி நாயேன் மகிழுவனோ

8.

வனசத் தலையான் றனைக்குட்டி வைத்தான் சிறையி லன்றொருநாள்
புனலின் மலரி லனம்யோகு புரிய மேரூர் வடிவேல
னெனினுங் கனியும் பேரருளே யேய்வா னியல்பின் வெம்புனறான்
றனுவைச் சுடினும் புனலியல்பு தண்மை யல்லாற் பிறிதுண்டோ

9.

பிறவாஞ் சார்பு கெடவொழுகிப் பெரிதும் பணிகள் புரிந்தன்பின்
றிறமே தாங்கித் தன்கழலிற சிறுபூ விலையு மிடுபவர்பா
னறவ மிலையிற் கயற்கூட்டு நளினத் தடஞ்சூழ் மேரூரி
லுறையுஞ் செவ்வே ளாணையிதென் றுறுவன் வேந்த னாளெனவே.

[வேந்தன் - இந்திரன்]

10.

ஆளாந் திருமால் விதிமுதலா வமரர் தமையான் பதியென்னின்
மீளாத் துயரை யவாபாலும் விதிப்பாய் விகிர்தா வதனாலுன்
றாளே பணிந்தே னவர்தணந்தார் தமது துயர மகங்குளிர்ந்தார்
பாளை கமுகின் றரளவொளி பரப்பு மேரூர்ச் சண்முகனே.

shivasevagan
17-09-2007, 10:22 AM
வேறு

11.

நேய மிக்குயிர் தமைநிதம் புரந்திட நினைவீர்
வீயு நாத்திகம் பேசலிர் மிகுபுகழ் மேரூர்ச்
சேயின் சீரினை யெனைவருந் தெளிதரச் செப்பீர்
தூய வாத்திக மலதுயிர்க் குளது கொல்துப்பே.

12.

பேர்ந்து போவது பிணங்கிய சமயிகள் பீடை
தேர்ந்து கொள்வது திருமறை நடுவுறு சேமஞ்
சார்ந்து வாழ்வது சற்சனர் தமைத்தனி மேரூர்
சேர்ந்து காண்பது சிவகுக னருளுருத் திருவே.

13.

திருவுங் கல்வியு முறுதியு மொழுக்கமுந் திறலும்
வெருவி வாண்மையுஞ் சிறந்தவ ரிம்மியு மேரூர்
முருகன் றன்னடி மறப்பது மூடமே முற்று
மொருவன் செய்ந்நல மயர்ப்பவற் குய்தியு முண்டோ.

14.

உண்ண நூல் மறுதியு மொழுக்கமுந் திறலும்
வெருவி லாண்மையுஞ் சிறந்த்வ ரிம்மியு மேரூர்
முருகன் றன்னடி மறப்பது மூடமே முற்று
மொருவன் செய்ந்நல மயர்ப்பவற் குய்தியு முண்டோ.

15.

கேடின் மன்றலான் மனிதருக் குயர்விவண் கிட்டி
னீடி வீசனுக் கதுதகா தெனலெவன் மேரூர்ப்
பாடி சேர்குக னன்றிவே றெம்மதப் பரமன்
வீடின் மன்றலந் தேவென வலான்புவி மேலே.

[ மன்றல் - கல்யாணம் ]

16.

மேலை நாண்முதல் வித்தகர் மலிதிரு மேரூர்
வேல னாண்டவ னடியவர் விண்டுவே விதியே
யேலு மாமறைக் கியைவிதே யெனவலார்க் கென்ரே
சால விவ்வுல கிருந்திடு மென்பது தகுமே.

17.

மேவு நல்லமு தருந்தினு மொன்பது விரிவா
யாவுங் காலுவ் திழிமல மிப்புலால் யாக்கை
வீவ தாயிடு நெஞ்சமே மதிக்கலை மேரூர்த்
தேவன் சேந்தனுக் கடிமைநீ நாடொறுஞ் செய்யே.

18.

செய்ய தாமரை வெண்மலர்த் தேவியர் சீரைக்
கையன் வேள்வியிற் கலந்தவ ரிழந்தமை கண்டோம்
வெய்யர் பக்கலிற புவியினிர் மேவலிர் மேரூர்த்
துய்யன் சண்முக னலதெவ னருளுவன் சுகமே.

19.

சுகம தாவது சுப்பிர மணியன்றாட் டொடர்பே
யகில லோகம தானினு மதுகிடைத் திடுமோ
சகல சீவத யாபர சரவணன் மேரூர்
புகுவ தொன்றுதான் றருமெனப் புவியிடைக் கொள்ளே.

20.

கொள்ளை நோய்பல குடையினு நிலையினைக் குலைக்குங்
கள்ளை மாந்தினர் தகமதி கலங்கினுங் கறங்கு
ளெள்ளென் றின்மையி லினைகினு மெனக்குநன் மேரூர்ப்
பிள்ளை யாண்டவ நின்பதப் பிடிவழங் குகவே.