PDA

View Full Version : ஆகவே காதல் செய்



சிவா.ஜி
17-09-2007, 07:26 AM
எத்தனை முயன்றாலும்
என் முகத்தை என்னால்
என்றுமே நிஜத்தில்
பார்க்க முடியாது..!
ஆகவே என்னைக் காதல்செய்..
உன்னுள் இருந்து
உன் விழியால்
என் முகம் பார்த்துக்கொள்கிறேன்

aren
17-09-2007, 07:40 AM
இதுவும் நல்ல ஐடியாவாக இருக்கிறது. நல்ல கவிதை சிவா. பாராட்டுக்கள்.

சிவா.ஜி
17-09-2007, 07:42 AM
நன்றி ஆரென்.ஐடியா நல்லதுதான் ஆனா நாம இப்ப செயல்படுத்த முடியாது...சரிதானே ஆரென்.

அமரன்
17-09-2007, 07:44 AM
ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹா...காதல் செய்வதற்கு இப்படி காரணம் சொல்லலாமா....எடுத்துக்கொடுத்தமைக்கு முதலில் நன்றி..ஆனால் இது பழையதுபோல் இருக்கே. எப்படி?
பார்த்தறியும் உணர்வு காதல் துணைக்குள் மாற்றீடு செய்யப்படுகிறது என்றால் நாம் குருடாகின்றோம் என்பது உண்மை. இதைத்தான் சொன்னார்கள் காதல் குருடாக்கும் என்று.
................................................................................................................................................................
காதலின் இன்னொரு முகம். உயிருடன் உயிர் கலந்து, அகத்துடன் அகம் குழைவது காதல். என்னில் உன்னையும் உன்னில் என்னையும் காண்பது காதல் என்பவை கடந்து உன்னுளிருந்து என்னையும் என்னுளிருந்து நீ உன்னையும் "பார்ப்பது"தான் காதல்......அகம்,முகம் இரண்டையும் பார்த்து வருவதுதான் காதல். அகம் மட்டும்பார்த்து வருவதுதான் காதல் என்பதெல்லாம் கப்சா...சபாஷ் சிவா...நல்ல காதல் சிந்தனை.

சிவா.ஜி
17-09-2007, 07:55 AM
அடேங்கப்பா....எத்தனை அழகான விளக்கம்....உங்கள் சிந்தனை வேகம் அசத்துகிறது அமரன்.ஒன்றாய் கலந்து ஈருயிர் ஓருயிர் ஆனபின் என்னிலிருந்து அவளையும்,அவளிலிருந்து என்னையும் பார்க்க முடியும்.மிக்க நன்றி அமரன்.

விகடன்
17-09-2007, 07:55 AM
காதலிக்க வைப்பதற்கு எப்படியெல்லாம் சிந்திக்கிறீர்கள் சிவா...
விழித்திரையில் பார்த்தாலும் விம்பந்தானே தெரியப்போகிறது...
அதிலும் பார்க்க தளவாடி எத்தனையோ மேல்.

இருந்தாலும் கவிதைவிடிவிற்கு பாராட்டுக்கள்

சிவா.ஜி
17-09-2007, 08:00 AM
விராடரே...விம்பம் பார்ப்பதானால் "ஆடி" போதுமே...முகத்தை அப்படியே முகமாகப் பார்க்க அடுத்த பார்வையின் அவசியமிருக்கிறதே...(எப்படியாவது காதலிக்க வைத்துவிடவேண்டும் அவ்வளவுதான்...ஹி.ஹி..)நன்றி நன்பரே.

விகடன்
17-09-2007, 08:04 AM
எனக்கு அநுபவம் கம்மி என்று சொல்வதிலும் பார்க்க இல்லை என்று சொல்வதுதான் சாலச் சிறந்தது...
அதோடு அப்படிப்பட்ட அநுபவம் பெறக்கூடிய நிலையில் நானும்மில்லை, அதற்கான எண்ணமும் எனக்கில்லை.

எது எப்படியோ....
உங்கள் நிலை உறுதிதானே............ விம்பத்தை பார்ப்பதில்.

சிவா.ஜி
17-09-2007, 08:08 AM
ஹா..ஹா..உறுதியாக இருந்து இனி என்ன செய்வது..என் இல்லாளின் உள்ளிருந்து பார்த்தால் ஒரு பரிதாபமான முகம்தான் தெரிகிறது.
அதுசரி தளவாடி என்றால் முகம் பார்க்கும் கண்ணாடிதானே...?

விகடன்
17-09-2007, 08:18 AM
ஹா..ஹா..உறுதியாக இருந்து இனி என்ன செய்வது..என் இல்லாளின் உள்ளிருந்து பார்த்தால் ஒரு பரிதாபமான முகம்தான் தெரிகிறது.
அதுசரி தளவாடி என்றால் முகம் பார்க்கும் கண்ணாடிதானே...?

ஆமாங்க. தளவாடி அதன் விஞ்ஞானக் கலைச்சொல். தளமென்றால் மட்டமான மேற்பரப்பு, ஆடி என்றாள் இரசம் ஒரு புறம் பூசப்பட்ட கண்ணாடி,

தளவாடி என்றால் உருப்பெருக்கத்தை ஒன்றாக (1) வைத்து விம்பத்தை உருவாக்கும் ஆடி.

சிவா.ஜி
17-09-2007, 08:21 AM
விளக்கத்துக்கு நன்றி விராடன்.

சுகந்தப்ரீதன்
17-09-2007, 08:55 AM
ஆக உங்கள் சுயநலத்திற்க்கு அவளை காதலிக்க சொல்கிறீர்கள்...அப்படிதானே சிவா? இருந்தாலும் பரவாயில்லை..அவள் காதலிக்க தொடங்கினால் உங்கள் சுயநலம் சுருங்கிவிடும் இல்லையா நண்பா..?வாழ்த்துக்கள்..!

சிவா.ஜி
17-09-2007, 09:21 AM
ஆக உங்கள் சுயநலத்திற்க்கு அவளை காதலிக்க சொல்கிறீர்கள்...அப்படிதானே சிவா? இருந்தாலும் பரவாயில்லை..அவள் காதலிக்க தொடங்கினால் உங்கள் சுயநலம் சுருங்கிவிடும் இல்லையா நண்பா..?வாழ்த்துக்கள்..!

காதலில் ஏது சுயநலம் பொதுநலம் நன்பா...எல்லாம் நம் நலத்துக்குத்தானே...ஒன்றாகிவிட்டபின் தனியென்று எதுவுமில்லையே...வாழ்த்துக்களுக்கு நன்றி ப்ரீதன்.

அமரன்
17-09-2007, 09:49 AM
ஈருடல் ஓருயிர்
ஆகவே காதல் செய்...!
ஈரகம் ஓரகம்
ஆகவே காதல் செய்...!
இருவரும் ஒருவரில்
ஆகவே காதல் செய்...!

சிவா.ஜி
17-09-2007, 01:01 PM
ஆஹா..அமரன்...தொடங்கிவிட்டீர்களா....செய் செய் என காதல் செய்ய அழைப்பு விடுக்க வைக்கும் அந்த சேல்விழியால் யாரென்று சொல்வீரா....
அழகான கவிதை வரிகள்.வாழ்த்துக்கள் அமரன்.

அமரன்
17-09-2007, 01:08 PM
ஆஹா..அமரன்...தொடங்கிவிட்டீர்களா....செய் செய் என காதல் செய்ய அழைப்பு விடுக்க வைக்கும் அந்த சேல்விழியால் யாரென்று சொல்வீரா....
அழகான கவிதை வரிகள்.வாழ்த்துக்கள் அமரன்.
ஹி...ஹி...உங்கள் கவிதைதான்...!

பூமகள்
17-09-2007, 01:42 PM
கொஞ்சம் நகைச்சுவையாய் விமர்சிக்கிறேன். உங்களை மகிழ்விக்க வேண்டியே... தவறாயின் உடன் பதிவை நீக்கிவிடவும்.


எத்தனை முயன்றாலும்
என் முகத்தை என்னால்
என்றுமே நிஜத்தில்
பார்க்க முடியாது..!

அப்போ தினமும் கண்ணாடியே பார்ப்பதில்லையா நீங்கள்??:aetsch013:

ஆகவே என்னைக் காதல்செய்..

என்ன கொடுமை சார் இது??!!!!!!:confused:

உன்னுள் இருந்து
உன் விழியால்
என் முகம் பார்த்துக்கொள்கிறேன்
எனக்கு கண்ணு தெரியாது... ஹீ ஹீ எப்படி பார்ப்பாய்..???:icon_rollout:

நிற்க,
அழமான கரு சொன்ன கவி. அருமை.. பாராட்டுக்கள் சிவா அண்ணா.

"விழி மூடி அவள் இதயம் திறந்து
காதல் கண்ணாடியில் முகம்
காட்ட ஆவலாய் காதலன்...!!"

அசத்தீட்டீங்க...அண்ணா.

சிவா.ஜி
17-09-2007, 01:58 PM
அப்போ தினமும் கண்ணாடியே பார்ப்பதில்லையா நீங்கள்??:aetsch013:[/COLOR]

கல்யாணத்துக்கு முன்னால பார்த்தது...ஹீம்...இப்ப எல்லாம் எப்படியிருந்தா என்னங்கற சித்தர் மனப்பக்குவம் வந்துட்டு...

என்ன கொடுமை சார் இது??!!!!!!:confused:

ஆமா என்ன கொடுமை....இது?

எனக்கு கண்ணு தெரியாது... ஹீ ஹீ எப்படி பார்ப்பாய்..???:icon_rollout:

ஊணக்கண் அவசியமில்லை உள்ள இருக்கிற ஞாணக்கண்ணால பார்ப்பேனே...

நிற்க,
அழமான கரு சொன்ன கவி. அருமை.. பாராட்டுக்கள் சிவா அண்ணா.

நன்றி அன்புத் தங்கையே..!

"விழி மூடி அவள் இதயம் திறந்து
காதல் கண்ணாடியில் முகம்
காட்ட ஆவலாய் காதலன்...!!"
[/COLOR][/B]
முகம் காட்ட மட்டுமல்ல காணவும் ஆவல்.

சாராகுமார்
17-09-2007, 04:02 PM
அருமை அருமை.வாழ்த்துக்கள் சிவா.
உங்கள் முகம் பார்க்க காதல் செய்வீர்
உங்கள் அன்பு மனைவியை.

சிவா.ஜி
18-09-2007, 04:36 AM
மிக்க நன்றி சாராகுமார்.உங்கள் சித்தப்படியே அதையே செய்கிறேன்.

kampan
18-09-2007, 05:30 AM
உன் நிஜத்தையே நிழலாக்கும் காதல்
எப்படியப்பா உன் நிஜத்தை காட்டும்
குடிப்பவன்தான் தன் குடிக்கு
காரணம் தேடுவான்
மனதை மற்றவரிடம் தொலைப்பவனுமா
காரணம் தேடுவான்

சிவா.ஜி
18-09-2007, 06:27 AM
காதலில் நிழலும் நிஜமாகும்,நிஜமும் நிழலாகுமப்பா...அது நிஜக்காதலெனில்,
காதல் என்பது மகத்தானது...அது கிடைத்திட ஆயிரம் காரணங்கள் சொல்லலாமப்பா...

ஷீ-நிசி
19-09-2007, 11:09 AM
என்னால் என் நிஜமுகம் காண முடியாது..
எனவே என்னை காதல் செய்..
உன் விழி வழி பார்க்கிறேன்...

அவள் விழிவழி பார்த்தாலும்
அது நிஜ பிம்பம் அல்லவே சிவாஜி...

கவிதைத்தனம் சூப்பர்...
ஆனால் முரண் உள்ளது...

சிவா.ஜி
19-09-2007, 12:48 PM
நன்றி ஷீ-நிசி..அவள் பார்ப்பது என் நிஜமுகம்தானே..எனவே அவளாய் இருந்து என்னை நான் பார்த்தல் என்பது என் நிஜமுகம் பார்ப்பதுதானே..சும்மா ஒரு கற்பனைக்கு+காதலிக்கவைக்க....

பென்ஸ்
20-09-2007, 05:07 AM
என்ன சிவா
உள்ளிருந்து நோக்கும் போது காதல் முகம் தெரியுதோ.
அவளுல் பாரும் இன்னும் அழகான உம் முகம் தெரியும்.

சிவா.ஜி
20-09-2007, 05:16 AM
அதேதான் பென்ஸ்..அதுக்குத்தானே அப்ளிகேஷன்....!