PDA

View Full Version : பிறந்த நாள் 2007மனோஜ்
16-09-2007, 10:26 PM
பிற ந்தநாள் 2007


புவியில் பிறந்திட்ட இன்னாள்
பூவுலகம் கண்ட பொன்னாள் :icon_rollout:
பெற்றெடுத்த அன்னைக்கும்
வளர்த்திட்ட தந்தைக்கும்
வந்தனங்கள் சொல்லும் நன்னாள்


இத்தனை வருடங்கள்
இனிதே காத்திட்ட
இறைவனை இன்றும், என்றும்
இதயத்தில் போற்றி துதிக்கிறேன்.


ஆரம்பவகுப்பில் ஆர்வம் தந்த ஆசானையும்
நடுத்தரவகுப்பில் வித்திட்ட வித்தகரையும்
மேல்வகுப்பில் கொட்டிட்ட மோலாளரையும்
கல்லூரியில் கற்பித்த பேராசிரியரையும்
தொழில் கல்விபழக்கிட்ட தோழரையும்
ஒரு முறை உள்மனதில் நினைக்கின்றேன்


சாதித்திட துடித்திட்ட இதயதிற்கு
சவுரியங்கள் செய்த உள்ளங்கள்
சரிந்திடும் பொழுது சறுக்காது
கைதந்த நெஞ்சங்கள்
நினைக்கிறேன் நன்றியை உதிர்க்கிறேன்.


பறந்து வந்த தருணங்கள்
தனிமை உணர்ந்த நேரங்கள்
தவிப்புகள் தவிர்த்திட
இங்கே புகுந்தேன்....


மலர்ந்தது புது உறவு
விரிந்தது இதய உணர்வு
இன்னும் இனித்திடும் பதிப்பு
உண்ணும் போதும் உறைத்திடும் கனவு


வாழ்த்திடும் உள்ளங்கள்
கண்ணில் கண்டதில்லை
வாய்விட்டு பேசியதில்லை
உள்ளஉணர்வுகள் பதிவாய்
நன்றிகள் என் இணைய
இதயஉறவுகள் அனைவருக்கும்!!:icon_ush:

பாரதி
17-09-2007, 12:47 AM
அன்பு மனோஜ்,
இன்று உங்கள் பிறந்ததினமா..?
மன்றத்திற்கு நன்றி கூறும் விதமாக அமைந்த கவிதை சிறப்பு.
பல வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க.

ஓவியன்
17-09-2007, 03:07 AM
அன்பான மனோஜூக்கு.......

பல்கலைகளும் கற்று, தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி பெற்று சீரும் சிறப்புடனும் வாழ ஓவியனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!. :)

சுகந்தப்ரீதன்
17-09-2007, 04:06 AM
வாழ்ந்திடும் உள்ளங்கள்
கண்ணில் கண்டதில்லை
வாய்விட்டு போசியதில்லை
உள்ளஉணர்வுகள் பதிவாய்
நன்றிகள் என் இனைய
இதயஉறவுகள் அனைவருக்கும்!!

காணாமலே எங்கள் மனதை கண்டுகொண்ட அண்ணன் மனோஜ் அவர்கள் எல்லா வ*ள*மும் பெற்று வாழ்வாங்குவாழ* அவ*ர*து பிற*ந்த*நாளான* இன்று வாழ்த்துவ*தில் மிக*வும் ம*கிழ்கிறேன்...!

சிவா.ஜி
17-09-2007, 04:50 AM
உள்ளம் உணர்த்தும் அழகிய கவிதையுடன்,ஆளாக்கிய அனைவரையும் நினைவுகூர்ந்து,முகம்காணா உறவுகளையும் பெருமைபடுத்தி...கொண்டாடும் இந்த பிறந்தநாள் போல என்றென்றும் மகிழ்வோடு எல்லா வளமும் பெற்று வாழ
மனமார்ந்த வாழ்த்துக்கள் மனோஜ்.

மனோஜ்
17-09-2007, 01:26 PM
பாரதி - நன்றி பாரதி அண்ணா
ஓவியன் - நன்றி நண்பா
சுகந்தபிரீதன் - நன்றி அன்பு தம்பி
சிவா.ஜி - நன்றி நண்பரே

ஷீ-நிசி
17-09-2007, 02:23 PM
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் மனோஜ்.....

மனோஜ்
17-09-2007, 06:15 PM
நன்றி ஷீ

பூமகள்
17-09-2007, 06:21 PM
என் அன்பிற்கினிய மனோஜ் அண்ணாவிற்கு,

பூமகளின பூபாள இசையாய் உள்ளம் பாடும்,

:nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002:
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
:nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002:

உங்களுக்கு ஆண்டவன் எல்லா வளங்களையும் சந்தோசத்தையும் அளிக்க வேண்டுகிறேன்.

இளசு
17-09-2007, 06:31 PM
அன்பு மனோஜ்

தனிமடலில் தெரிவித்தாலும், ப்ரொபைலில் குறிப்பிடாததால்
வாழ்த்துத்திரி நான் தொடங்க தயங்கி விட்டுவிட்டேன்..

அடடா..

இங்கே அனைத்து வாழ்க்கைப்படிகளையும் நினைவுகூர்ந்து
அழகாய் நன்றி கூறும்விதமாக

உன் அன்பு மடல் கண்டு நெகிழ்கிறேன்..

பண்புகள் நிறைய அமையப்பெற்ற நீ
எந்நாளும் எல்லா நல்வளங்களும் வெற்றிகளும் சூழ
பல்லாண்டு நிறைவாழ்வு வாழ அண்ணனின் வாழ்த்துகள்!

mgandhi
17-09-2007, 07:38 PM
இனிய பிறந்த நாள்

வாழ்த்துக்கள்!!

மனோஜ்
17-09-2007, 08:10 PM
பூமகள் - அன்பு சகோதரின் வாழத்தில் மகிழ்தேன்

இளசு - அன்பு அண்ணா உங்களிடமிருந்து இன்னேன்றை எதிர்பாத்தேன் எனினும் மிக்க நன்றி அண்ணா

மோகன் காந்தி - மிக மிக நன்றி அண்ணா தங்களின கலபுல் வாத்துக்கு

அறிஞர்
17-09-2007, 08:33 PM
வாழ்த்துக்கள் மனோஜ்...

எல்லா வளமும்.. நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்..

அமரன்
18-09-2007, 07:32 AM
மாதா,பிதா,குரு(க்கள்),தெய்வம் என்ற நாலுடன் (முகம் காணா) நட்பையும் சேர்த்ததற்கு பாராட்டுக்கள். மனோஜ். நல்ல கவிதை...தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மனோஜ்
18-09-2007, 02:16 PM
அறிஞர் - தங்கள் வாழத்துக்கள் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி

அமரன் - இந்த பிறந்தநாள் என் மன்றஉறவுகளுடன் கொண்டாடியதில் மகிழ்ச்சி
( பிழைதிருத்ததிற்கு நன்றி அமரன்)

தாமரை
18-09-2007, 02:22 PM
வாழ்த்துக்கள் மனோஜ். இன்னும் பற்பல ஆண்டுகல் கவி படைத்து காவியம் படைக்க வாழ்த்துக்கள்

மனோஜ்
18-09-2007, 02:30 PM
என் அருமை தாமரை அண்ணா வாழத்தியதில் 2 மடங்கு மகிழ்ச்சி நன்றி

சாராகுமார்
18-09-2007, 03:16 PM
கவிதையாய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழ்க பல்லாண்டு
வளர்க தொண்டு செய்து..
எல்லாம்அமைய வேண்டும்
கடவுளிடம் வேண்டிக்கொண்டு.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மன்மதன்
18-09-2007, 09:47 PM
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மனோஜ்...

guna
19-09-2007, 02:30 AM
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மனோஜ்.:icon_08:

பிறரின் பிறந்த தினத்தில் கவிதை சொல்வது இயல்பு..
உங்களின் பிறந்த தினதிலே
உறுதுணையாய் இருந்தவர்களுக்கு நன்றி சொல்லி
கவிதைப் படைதிருப்பது அழகு..:icon_b:

என்னவன் விஜய்
19-09-2007, 11:32 AM
மனோஜ்....
இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகள்....
தமிழனாய் படைத்ததுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கல் அண்ணா

மலர்
20-09-2007, 08:15 AM
மனோஜ்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....
வாழ்வின் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...