PDA

View Full Version : உன் நினைவு

இலக்கியன்
16-09-2007, 03:24 PM
http://img255.imageshack.us/img255/88/naamloosmd8.png (http://imageshack.us)

பள்ளி நாட்களில்
பட்டாம் பூச்சிபோல்
பழகிய உன் நினைவு
பசுமையாக என் மனதில்...

பல்லாண்டுகள்
பல பொழுதுகள்
பறந்து போனாலும்
பால் நிலவாக உன் நினைவு...

நட்புக்கு நீயும் தோழி
இரங்குவதில் நீயும் என் தாய்
அன்புக்கு நீயும் காதலி
அறிவில் நீயும் என் ஆசான்

உன்னை நான் சந்தித்தேன்
இளவேனிற்காலம்

உன்னை நான் பிரிந்தேன்
இலையுதிர்காலம்

உன்னைப்பிரிந்த பின் என்வாழ்வு
மாரிகாலம்

வாழ்கை என்பது கனவு
உன் நினைவுகள் நனவு
உறங்குமா உன் நினைவு

என்றும் அன்புடன்
உங்கள் இலக்கியன்
http://img213.imageshack.us/img213/9849/guest15tqrv9qm8.gif (http://imageshack.us)

aren
16-09-2007, 03:32 PM
பிரிவைத் தாங்காமல் வந்துவிழுந்த அழகான கவிதைவரிகள் இலக்கியன். நன்றாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள். தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சாராகுமார்
16-09-2007, 03:33 PM
அருமையான நினைவு கவிதை.
நினைவே ஒரு சங்கீதம்
அதுவே வாழ்வின் அரு மருந்து.

பாராட்டுக்கள்.

இலக்கியன்
16-09-2007, 03:34 PM
பிரிவைத் தாங்காமல் வந்துவிழுந்த அழகான கவிதைவரிகள் இலக்கியன். நன்றாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள். தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

வாழ்வியலின் நட்பு என்பது என்றும் மாறாதது அது உண்மையான அன்பானால் அப்படியான உணர்வைதாங்கியது இந்தக்கவிதை பாராட்டுக்கு நன்றி

இலக்கியன்
16-09-2007, 03:35 PM
அருமையான நினைவு கவிதை.
நினைவே ஒரு சங்கீதம்
அதுவே வாழ்வின் அரு மருந்து.

பாராட்டுக்கள்.

நினைவுகள் மீட்பது ஒரு வித சுகம் அதில் ஒரு துளி இது உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

சூரியன்
16-09-2007, 03:38 PM
இலக்கியன் நீங்கள் எழுதும் இவ்வொரு கவிதையும் உணர்ந்து எழுதியது போலவே இருக்கிறது.. வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் படைப்பை.

பூமகள்
16-09-2007, 03:41 PM
வாழ்கை என்பது கனவு
உன் நினைவுகள் நனவு
உறங்குமா உன் நினைவு

அழகான வரிகள்.
அவள் நினைவுகள் உறங்கினால் வசந்தம் வருமோ நிஜத்தில்..??
சில சமயம் பின்னோக்கிப் பார்க்கவும் மறக்காதிருப்பதே சிறந்தது இலக்கியரே..!!
கடந்து வந்த பாதையில் வழி நடத்திய ஓர் கையை.. மறப்பது சரியாகுமா???

நல்ல கவி அத்தோடு படம் மிகக் கச்சிதம். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..!!

இலக்கியன்
16-09-2007, 03:41 PM
இலக்கியன் நீங்கள் எழுதும் இவ்வொரு கவிதையும் உணர்ந்து எழுதியது போலவே இருக்கிறது.. வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் படைப்பை.

கவிதைகள் உணர்ந்து எழுதும் போது அது முழுமையடைகின்றது. உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

இலக்கியன்
16-09-2007, 03:44 PM
அழகான வரிகள்.
அவள் நினைவுகள் உறங்கினால் வசந்தம் வருமோ நிஜத்தில்..??
சில சமயம் பின்னோக்கிப் பார்க்கவும் மறக்காதிருப்பதே சிறந்தது இலக்கியரே..!!
கடந்து வந்த பாதையில் வழி நடத்திய ஓர் கையை.. மறப்பது சரியாகுமா???

நல்ல கவி அத்தோடு படம் மிகக் கச்சிதம். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..!!

அழகான பின்னூட்டம் நன்றி பூமகள்

இலக்கியன்
20-09-2007, 05:44 PM
[QUOTE=இலக்கியன்;

நட்புக்கு நீயும் தோழி
இரங்குவதில் நீயும் என் தாய்
அன்புக்கு நீயும் காதலி
அறிவில் நீயும் என் ஆசான்

உன்னை நான் சந்தித்தேன்
இளவேனிற்காலம்

உன்னை நான் பிரிந்தேன்
இலையுதிர்காலம்

உன்னைப்பிரிந்த பின் என்வாழ்வு
மாரிகாலம்

வாழ்கை என்பது கனவு
உன் நினைவுகள் நனவு
உறங்குமா உன் நினைவு

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை கருத்துக்கள் தந்த அனைவருக்கும் நன்றி

என்னவன் விஜய்
20-09-2007, 07:02 PM
இலக்கியன்
உங்கள் கவி கேட்டு
உள் மனதில்
உறங்கிய அவளின் நினைவு
உந்துருளியின் வேகத்தில்
உதிர்கிறது என் நென்சில்
உங்கள் கவியில் பிடித்தது ஒரு பிடி

நட்புக்கு நீயும் தோழி
இரங்குவதில் நீயும் என் தாய்
அன்புக்கு நீயும் காதலி
அறிவில் நீயும் என் ஆசான்

அழகு
அழகோ அழகு

நன்றி

அமரன்
23-09-2007, 06:20 PM
பள்ளி நாட்கள் பசுமையானவை. பசுமரத்தாணி போல மனதில் பதிபவை..அவற்றை அசைபோடுவது இதமானது. சில நேரங்களில் விழியோரம் கசிவுகள் ஏற்படுவதும் வழக்கம். இழப்பின் பிறப்பிடம்,வடிவத்துக்கேற்ப கசிவின் தீவிரம் மாறுபடும்..
இப்போதெல்லாம் மாரி பருவம் தப்பி வருவதும் பொய்த்துப்போவதும் இயற்கையாகிவிட்டது.
பாராட்டுகள்..தொடருங்கள்...வளம்பெறுங்கள்.

மொட்டை மரங்கள்
பச்சை சடைகளுடன்
கால ஓட்டத்தில்!

ஓவியன்
28-09-2007, 11:30 AM
நட்புக்கு நீயும் தோழி
இரங்குவதில் நீயும் என் தாய்
அன்புக்கு நீயும் காதலி
அறிவில் நீயும் என் ஆசான்

உங்கள் கவிதை ஆண் பெண் நட்புக்குக்கும் காதலுக்குமிடை கொஞ்சம் நின்று தவிக்கின்றதென நினைக்கின்றேன்...

இரண்டிற்குமிடை இருப்பது ஒரு நூலிடை இடைவெளியே....
காதலா நட்பா எதுவென்றாலும் ஆரம்பித்திலேயே தெளிவாக தீர்மானித்து விட வேண்டும்..
அப்போது தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்...

இலக்கியன்
28-09-2007, 06:05 PM
இலக்கியன்
உங்கள் கவி கேட்டு
உள் மனதில்
உறங்கிய அவளின் நினைவு
உந்துருளியின் வேகத்தில்
உதிர்கிறது என் நென்சில்
உங்கள் கவியில் பிடித்தது ஒரு பிடி

நட்புக்கு நீயும் தோழி
இரங்குவதில் நீயும் என் தாய்
அன்புக்கு நீயும் காதலி
அறிவில் நீயும் என் ஆசான்

அழகு
அழகோ அழகு

நன்றி

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி என்னவன் விஜய்

இலக்கியன்
28-09-2007, 06:07 PM
பள்ளி நாட்கள் பசுமையானவை. பசுமரத்தாணி போல மனதில் பதிபவை..அவற்றை அசைபோடுவது இதமானது. சில நேரங்களில் விழியோரம் கசிவுகள் ஏற்படுவதும் வழக்கம். இழப்பின் பிறப்பிடம்,வடிவத்துக்கேற்ப கசிவின் தீவிரம் மாறுபடும்..
இப்போதெல்லாம் மாரி பருவம் தப்பி வருவதும் பொய்த்துப்போவதும் இயற்கையாகிவிட்டது.
பாராட்டுகள்..தொடருங்கள்...வளம்பெறுங்கள்.

மொட்டை மரங்கள்
பச்சை சடைகளுடன்
கால ஓட்டத்தில்!

உங்கள் அழகான பின்னூட்டத்துக்கு நன்றி அமரன் அண்ணா
எம் கூடபடித்த நண்பரகள் ஒருவரும் இல்லை என்பது என் ஆதங்கள்
நானோ நாடோடியான அவர்கள் எங்கு காண்பது

இலக்கியன்
28-09-2007, 06:09 PM
உங்கள் கவிதை ஆண் பெண் நட்புக்குக்கும் காதலுக்குமிடை கொஞ்சம் நின்று தவிக்கின்றதென நினைக்கின்றேன்...

இரண்டிற்குமிடை இருப்பது ஒரு நூலிடை இடைவெளியே....
காதலா நட்பா எதுவென்றாலும் ஆரம்பித்திலேயே தெளிவாக தீர்மானித்து விட வேண்டும்..
அப்போது தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்...

ஆம் ஓவியரே கல்லூரிக்காதலை நினைவு மீட்பது இந்தக்கவிதை
அந்தகாலத்தில் காதலுக்கும் நட்புக்கும் வித்தியாசம் புரியாதகாலம்
அதன் பிரதிபலிப்பாக இந்தக்கவிதை