PDA

View Full Version : ஒப்பனை முகங்கள்சிவா.ஜி
16-09-2007, 02:51 PM
குழந்தைத் தொழிலாளர்
ஒழிப்பு வாரியத்தின்
உயர்ந்த அதிகாரி..
ஓங்கிக் குரல் கொடுத்தார்...
சனியனே சீக்கிரம் வா..
சடுதியில் வந்து காலணி துடைத்தான்
எட்டு வயது எடுபிடி பையன்!
கரும்புத் தோட்டத்திற்கு
களிறொன்று காவல்...!

சூரியன்
16-09-2007, 02:58 PM
குழந்தைத் தொழிலாளர்
ஒழிப்பு வாரியத்தின்
உயர்ந்த அதிகாரி..
ஓங்கிக் குரல் கொடுத்தார்...
சனியனே சீக்கிரம் வா..
சடுதியில் வந்து காலணி துடைத்தான்
எட்டு வயது எடுபிடி பையன்!
கரும்புத் தோட்டத்திற்கு
களிறொன்று காவல்...!


இன்றைய* நிலைய* அப்ப*டியே எழுதியிருக்கிறீர்க*ள்.

வாழ்த்துக்கள் சிவா.

சாராகுமார்
16-09-2007, 03:01 PM
குழந்தைத் தொழிலாளர்
ஒழிப்பு வாரியத்தின்
உயர்ந்த அதிகாரி..
ஓங்கிக் குரல் கொடுத்தார்...
சனியனே சீக்கிரம் வா..
சடுதியில் வந்து காலணி துடைத்தான்
எட்டு வயது எடுபிடி பையன்!
கரும்புத் தோட்டத்திற்கு
களிறொன்று காவல்...!

வாழ்த்துக்கள் சிவா.ஜி.முதலில் அவர்கள் திருந்த வேண்டும்.

சிவா.ஜி
17-09-2007, 04:44 AM
நன்றி சூரியன்,சொல்வது ஒன்று செய்வது ஒன்று-இதுதான் இந்த அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் அடையாளமே.

நன்றி சாராகுமார்.திருந்த வேண்டுமே...மாட்டார்கள் என்பதே என் எண்ணம்.

அமரன்
17-09-2007, 07:30 AM
"இதில் என்ன தப்பு. உலகமேடையில் நாமெல்லாம் நடிகர்கள் தானே...! என்ன நாம் கொஞ்சம் அதிகமாக நடிப்பைக் காட்டுகின்றோம். திரையில் நடித்தால் சபாஷ் போடுறது. உலக அரங்கில் நடித்தால் எள்ளி நகையாடுவது." இப்படித்தான் சப்பைக்கட்டு கட்டுவார்கள்...இந்த வர்க்கத்தினர். நடிப்பின் மறுபக்கம் எதிர்கால சந்ததியினரின் சிலபக்கங்களையும், சமுதாயத்தின் கறுப்பாக்குவது தெரியாமல். திருந்துவார்கள் என்று நம்புவோம் சிவா.

சிவா.ஜி
17-09-2007, 07:38 AM
எதை தப்பு இல்லையென்று சொல்கிறீர்கள் அமரன்?தெரியாமல் தப்பு செய்பவன் திருந்த வாய்ப்புண்டு...ஆனால் இவர்கள் தெரிந்தே செய்பவர்கள்...திருந்த வாய்ப்பே இல்லை.ஒரு சாதாரணன் இந்த தவறைச் செய்தால் மன்னித்துவிடலாம்....காக்கவேண்டியவனே கசக்கி எறிந்தால்..பாவம் பூக்கள் என்ன செய்வது?

அமரன்
17-09-2007, 07:46 AM
சிவா...நான் தப்பு இல்லை என்று சொல்லவில்லையே....அவர்கள் சொல்கின்றார்கள் என்றுதான் சொன்னேன்....இறுதியில் வரும் திருந்துவார்கள் என்று கூறுவதுதான் நான்.

சிவா.ஜி
17-09-2007, 07:50 AM
சரியான அவசரக்குடுக்கை நான்...மன்னித்துவிடுங்கள் அமரன்..மேற்கோள் குறியைக்கவனிக்காமல் இருந்துவிட்டேன்.மிக்க நன்றி அமரன்.

அமரன்
17-09-2007, 07:52 AM
அச்சச்சோ..மேற்கோள் போடாதது என் தப்புச் சிவா. உங்கள் பதில் பார்த்தபின்னர்த்தான் இட்டேன்.....(விஜய்காந்தின் ரமணா படம் எனக்குரொம்பப் பிடிப்பதுக்குக் காரணம் அதில் வரும் ஒரு வசனம்தான்)

விகடன்
17-09-2007, 07:52 AM
பாராட்டுக்கள் சிவா.ஜி.

எப்போதிருந்தப்பா அமரா இப்படி மாறினீர்கள். பழுத்த பழமாகிவிட்டீரோ???

சிவா.ஜி
17-09-2007, 07:57 AM
பாராட்டுக்கள் சிவா.ஜி.

எப்போதிருந்தப்பா அமரா இப்படி மாறினீர்கள். பழுத்த பழமாகிவிட்டீரோ???

யாரிது..விராடரா.....மிக்க சந்தோஷம் உங்களைக் காண்பதில்.நலமா?வேலைபளு அதிகமா..?

விகடன்
17-09-2007, 08:16 AM
யாரிது..விராடரா.....மிக்க சந்தோஷம் உங்களைக் காண்பதில்.நலமா?வேலைபளு அதிகமா..?

சரியாகச் சொன்னீர்கள் அன்பரே...
இதுவரை நால்வர் பார்த்த வேலையை இப்போது இருவர் பார்க்கிறோம். என்னுடைய கஸ்ட்டகாலம் உள்ள எல்லா சப்கொன்ராக்ரரும் என்னிடமே நாடுகிறார்கள். அவர்களை சொல்லளவிலும் புண்படுத்தக்கூடாது, பேச்சால் சலிப்பும் வந்திடக்கூடாது, அப்படி நடந்தால் விளைவை எதிர்கொள்ளப்போவது கொம்பனிதான். அதற்கு தகுந்தால்ப்போல் கதைக்கவும் வேணும் என்னுடைய வேலைகளை செய்யவும் வேண்டும்..

இதுக்கு மேல விளக்கந்தந்தால் திரியின் பாதை மாறிவிடும். ஆகையால் இத்தோடு நிருத்திவிடுகிறேன்

ஷீ-நிசி
17-09-2007, 08:59 AM
நல்ல முரண் கவிதை சிவா...

தீக்குச்சி என்ற தலைப்பில் நான் ஒரு கவிதை எழுதியுள்ளேன்.. நேரமிருக்கும்போது பாருங்கள்....

சிவா.ஜி
17-09-2007, 09:19 AM
நல்ல முரண் கவிதை சிவா...

தீக்குச்சி என்ற தலைப்பில் நான் ஒரு கவிதை எழுதியுள்ளேன்.. நேரமிருக்கும்போது பாருங்கள்....

நன்றி ஷீ...கண்டிப்பாகப் பார்க்கிறேன்..குறுங்கவிதைகள் பகுதியிலா இருக்கிறது?

இளசு
17-09-2007, 08:31 PM
சில முரண்கள் முகத்தில் அறையும்...

சிவாவின் இக்கவிதை அந்த ரகம்...

ஷீ - தீக்குச்சி சுட்டி கொடுங்கள்..

முன்னர் முரண்காட்சிப் பாக்கள் தொடரில் இதுபோல்
பல 'பளார்'கள் பளீரிட்டன..

சிவா.ஜி
18-09-2007, 04:18 AM
நன்றி இளசு.புரிந்து திருந்தவேண்டியவர்கள்...திருந்தவே போவதில்லையே...அதுதான் வேதனை.