PDA

View Full Version : ஏன் போனாய்...???

பூமகள்
16-09-2007, 11:27 AM
http://img36.picoodle.com/img/img36/9/9/16/poomagal/f_IndigoLifeCm_9356e23.png

நட்பெனச் சொல்லி
இட்டுவந்தாய் இதுவரை....

நட்டாற்றில் விட்டு
எட்டிப் போனதேனோ....??

விட்டில் பூச்சி நானா? - என் வாழ்வை
வெட்டிப் போனதேனோ....??

ஒட்டிவந்த மனம் அதனை
விட்டுப் போனதேனோ....??

எட்டுத்திக்கும் கதறுகிறேன் - நீ
கேட்காது போனதேனோ....??

இளசு
16-09-2007, 12:00 PM
துணிவும் உள்பலமும்
முழுதாய் முதன்முதலாய்
உன்னை உணரவைக்க
என்னை விலக்கினேன்..

மார்பகம் பிரிந்தால் - திட உணவு..
வீடகம் விலகினால் - பல்கலைக் கல்வி..

பிரிவுகள் வளர்ச்சியெனில்
பிரிவுகளை வரவேற்போம்..

வாழ்த்துகள் பூமகள்!

பூமகள்
16-09-2007, 12:15 PM
அருமை இளசு அண்ணா.
சரியாகச் சொன்னீர்..!!

பிரிவுகள் வளர்ச்சியெனில்
பிரிவுகளை வரவேற்போம்..

உண்மையில் வாழ்க்கையில் சில பிரிவுகளே நம்மை முன்னேற்றும் படிக்கற்களாய் அமையும்.
ஆன்ம பலம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் தனியாய்..!!
உங்களின் உடன் ஊக்கத்திற்கும் அழகான பின்னூட்டக்கவிக்கும் நன்றிகள் அண்ணா.

இணைய நண்பன்
16-09-2007, 12:53 PM
மனசு ஒத்த மனங்கள் இணைந்து பிரியும் சோகத்தை கவிதை நயத்தில் சொல்லிவிட்டீர்கள் .பிரிவை தாங்க முடியாது தான்.வாழ்க்கையில் பிரிவை ஒருநாள் சந்திக்க தானே வேண்டும்.எல்லாம் நிலையானது அல்ல.நன்றி கவிதைக்கு

பூமகள்
16-09-2007, 12:58 PM
உண்மை தான் தோழரே..!
உலகில் மாறுதல் ஒன்றே மாறாதது... மிக்க நன்றிகள் இக்ராம் உங்களின் பின்னூட்டத்திற்கும் பாராட்டுதலுக்கும்.

அமரன்
16-09-2007, 01:15 PM
பிரிவுகள்
நெருக்குதலுக்கு ஆளாக்குகுகின்றன
நெருக்கத்தை ஆளாக்குகின்றன.

பிரிவினால்
சலிப்பு "ஏற்பு" ஏற்படுகிறது
சலிப்பு அவசியம் ஏற்படுகிறது.

ஆளாவதும் அவசியங்களும் ஏற்புகளும் நன்மை பயக்குமானால்
அண்ணாவினின் வழி ஒற்றி நானும்..பாராட்டுக்கள் தங்கையே...!

சிவா.ஜி
16-09-2007, 01:16 PM
நட்பெனச் சொல்லி
இட்டுவந்தாய் இதுவரை....

நட்டாற்றில் விட்டு
எட்டிப் போனதேனோ....??

விட்டில் பூச்சி நானா? - என் வாழ்வை
வெட்டிப் போனதேனோ....??

ஒட்டிவந்த மனம் அதனை
விட்டுப் போனதேனோ....??

எட்டுத்திக்கும் கதறுகிறேன் - நீ
கேட்காது போனதேனோ....??[/QUOTE]

காதலுக்கும்,நட்புக்கும் இடையில் சிக்கி நொண்டியடிப்பதைப் போலுள்ளதே கவிதை....சந்தத்திற்காக,பொருள் மாறியதாய் படுகிறது எனக்கு.எதற்காவோ எதையோ compromise செய்தது போல ஒரு தோற்றம். நல்ல நடை, இருந்தும் பூமகளின் இந்த கவிதையில் சம்திங் மிஸ்ஸிங்.
(கோவிச்சுக்காதம்மா...மனதுல பட்டதை சொல்லிட்டேன்)

அமரன்
16-09-2007, 01:19 PM

உண்மைதான் சிவா....
பூமகள் முத்திரை முகத்திரை காட்டவில்லை...
திரைவிலக்கினால் கிடைக்கும் காட்சியாக
பிரிவு இருப்பது மட்டும் புரிகிறது......

பூமகள்
16-09-2007, 01:33 PM
காதலுக்கும்,நட்புக்கும் இடையில் சிக்கி நொண்டியடிப்பதைப் போலுள்ளதே கவிதை....சந்தத்திற்காக,பொருள் மாறியதாய் படுகிறது எனக்கு.எதற்காவோ எதையோ compromise செய்தது போல ஒரு தோற்றம். நல்ல நடை, இருந்தும் பூமகளின் இந்த கவிதையில் சம்திங் மிஸ்ஸிங்.
(கோவிச்சுக்காதம்மா...மனதுல பட்டதை சொல்லிட்டேன்)
மிக்க நன்றிகள் உங்களின் ஆழமான விமர்சனத்திற்கு.
இது முழுக்க முழுக்க நட்பின் பிரிவைச் சொல்லும் கவியே... அண்ணா. சந்தத்திற்காக பொருள் மாறியது போன்ற ஒரு மாயை தோற்றுவித்ததற்கு மன்னிக்கவும். இங்கு நட்புப் பிரிதலை இன்னும் தெளிவாய்ச் சொல்லியிருக்கனும் என்று தோன்றுகிறது இப்போது... இன்னும் மெருகேற்றியிருக்கலாம்.
புது விதமாய் கவி எழுத எத்தனித்தேன்.. அவ்வளவே.. இல்லை என் பாணியே சிறந்தது என்பது உங்களின் பின்னூட்டம் மூலம் புரிகிறது.

(உங்களின் உண்மை விமர்சனங்களே என்னை ஊக்குவிக்கும்....கோவிக்க மாட்டேன் சிவா அண்ணா..!!)

அமரன்
16-09-2007, 01:36 PM
புது விதமாய் கவி எழுத எத்தனித்தேன்.. அவ்வளவே.. இல்லை என் பாணியே சிறந்தது என்பது உங்களின் பின்னூட்டம் மூலம் புரிகிறது

பிறந்ததும் குழந்தை உடலை புரட்டமுனைகிறது..ஆனால் முடிவதில்லை..அதற்காக அது முயற்சியை முடிப்பதும் இல்லை. அந்த குணம்தான் பல முடிகளுக்கு காரணமாகிறது....

பூமகள்
16-09-2007, 01:46 PM
பிறந்ததும் குழந்தை உடலை புரட்டமுனைகிறது..ஆனால் முடிவதில்லை..அதற்காக அது முயற்சியை முடிப்பதும் இல்லை.

புரிகிறது அமர் அண்ணா.. முயல்கிறேன்... இன்னும் நன்றாய்..!!
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் அண்ணா.

சிவா.ஜி
16-09-2007, 01:56 PM
புது விதமாய் கவி எழுத எத்தனித்தேன்.. அவ்வளவே.. இல்லை என் பாணியே சிறந்தது என்பது உங்களின் பின்னூட்டம் மூலம் புரிகிறது.
[/COLOR])

இல்லை பூமகள்...புது முயற்சிகளைத் தொடருங்கள்...அமரன் குறிப்பிட்டதுபோல குழந்தையின் அந்த முயற்சிதான் அதனை அடுத்த படிக்கு கொண்டு செல்கிறது....எங்களின் இந்த பின்னூட்டம் நிச்சயமாக குட்டுவதல்ல...புதிய முயற்சிக்கு தட்டுதலே.தொடருங்கள் தங்கையே உங்கள் அடுத்த அடியை.

சூரியன்
16-09-2007, 02:03 PM
நல்ல கருத்துகளை கொண்ட கவிதை வாழ்த்துக்கள் பூமகள்.

பூமகள்
16-09-2007, 02:13 PM
நன்றிகள் சகோதரர் சூரியன்...!!

பூமகள்
16-09-2007, 02:14 PM
இல்லை பூமகள்...புது முயற்சிகளைத் தொடருங்கள்...அமரன் குறிப்பிட்டதுபோல குழந்தையின் அந்த முயற்சிதான் அதனை அடுத்த படிக்கு கொண்டு செல்கிறது....எங்களின் இந்த பின்னூட்டம் நிச்சயமாக குட்டுவதல்ல...புதிய முயற்சிக்கு தட்டுதலே.தொடருங்கள் தங்கையே உங்கள் அடுத்த அடியை.

நன்றிகள் சிவா அண்ணா... நிச்சயம் தொடர்வேன் உங்களின் அன்பு ஆசியுடன்.

இலக்கியன்
16-09-2007, 02:25 PM
அன்பான நட்பு ஒன்று
கை நழுவிப் போனதுவோ
காத்திருந்த பறவை இன்று-சோக
கானம் இசைத்ததுவோ

உண்மை நட்பு என்றும் மாறாது தோழி வாழ்த்துக்கள் நல்ல கவிதை

பூமகள்
16-09-2007, 02:49 PM
சரியாகச் சொன்னீர் இலக்கியரே..!
உங்களின் ஊக்கத்திற்கு நன்றிகள்...!!

சாராகுமார்
16-09-2007, 03:26 PM
பிரிவு தவிர்க்க முடியாத செயல்.
அது சில நேரம் மனசை தவிக்க செய்யும்.
அன்பு கூடும்.

பூமகள்,அற்புதம்.வாழ்த்துக்கள்.

பூமகள்
16-09-2007, 03:33 PM
மிக்க நன்றிகள் அன்புச் சகோதரர் சாரா.
தொடர்ந்து விமர்சியுங்கள்..!!
உங்களின் பின்னூட்டங்களே எனக்கு கிடைக்கும் சந்தோசங்கள்..!!

aren
16-09-2007, 03:36 PM
பிரிவு நிரந்தரமல்ல பூமகள்
விட்டுச்சென்றவன்
இட்டுச்செல்ல
வருவான் ஒருநாள்!!!

காத்திருங்கள்
வருவான் மாலையுடன்!!!

அழகான கவிதை வரிகள். உங்களுக்கெல்லாம் எப்படித்தான் இப்படி வார்த்தைகள் வந்து கொட்டுகிற்தோ. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

பூமகள்
16-09-2007, 03:50 PM
மிக்க நன்றிகள் ஆரென் அண்ணா.
உங்களின் புரிதலில் ஒரு சிறிய திருத்தம். இது நட்பின் பிரிதலே அன்றி காதல் பிரிதல் அல்ல.
வார்த்தைகளின் அர்த்தங்கள் காதல் பிரிவைக் குறிப்பது ஓர் மயக்கத்தை ஏற்படுத்திவிட்டதோ??!! மன்னிக்கவும்.

புதியதாய் முயன்றேன் சந்தக் கவிபாட. அதன் முயற்சியில் முதல் படி இது.
வார்த்தைகள் இசையாய் இசைந்து வர வேண்டும் கவியில்.. இழுத்து வந்தால் கவி அழகாய் இருக்காது அண்ணா.

aren
16-09-2007, 03:54 PM
நன்றி பூமகள். மறுபடியும் திருத்திப் படித்தேன், இன்னும் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

வார்த்தைகள் இசையாய் இசைந்துவர நமக்கு ஞானம் வேண்டுமல்லவா, அது உங்களிடம் நிறையவே இருக்கிறது என்று உங்கள் கவிதைகளைப் படித்தாலே தெரிகிறது. நாங்களெல்லாம் இழுத்தால்கூட அது வரமாட்டேங்குதே, என்ன செய்வது.

நன்றி வணக்கம்
ஆரென்

lolluvathiyar
17-09-2007, 09:02 AM
நட்பு காதலாய் மாறுகிறதா. நட்பாய் இருக்கும் வரை எந்த திக்கில் பார்த்தாலும் இருக்கும் காதலாய் மாரினால் எட்டுதிக்கு நோக்கினால் மிஞ்சுவது கதறல் தான்

சுகந்தப்ரீதன்
17-09-2007, 09:16 AM
ஒட்டிவந்த மனம் அதனை
விட்டுப் போனதேனோ....??

எட்டுத்திக்கும் கதறுகிறேன் - நீ
கேட்காது போனதேனோ....??

எட்டுத்திக்கும் கதறுகிறேன்−நீ
எனைவிட்டு போனததுமேனோ?

இப்படியிருந்தால் இன்னும் இறுக்கமாயிருக்குமென நினைக்கிறேன்..
அழகாக உள்ளதக்கா உன் கவிதை...வாழ்த்துக்கள்..!

அக்னி
17-09-2007, 11:57 AM
குறைந்த ஆயுளை உணர்த்தவோ...
இணைந்தது பூ...
நட்பு(பூ) ஆக...

கருமை வரவை உணர்த்தவோ...
இணைந்தது மை..,
தோழமை ஆக...

உணர்த்தியது உறவு...
உணராததால் பிரிவு...

பாராட்டுக்கள் பூமகள்...
சிவா.ஜி சொன்ன அதே கருத்து என் மனதிலும் பட்டது.
வரும் காலம் மெருகேறும்; தொடர்ந்தும் வரிகள் வளரும்போது...

பூமகள்
17-09-2007, 12:28 PM
நன்றி பூமகள். மறுபடியும் திருத்திப் படித்தேன், இன்னும் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

வார்த்தைகள் இசையாய் இசைந்துவர நமக்கு ஞானம் வேண்டுமல்லவா, அது உங்களிடம் நிறையவே இருக்கிறது என்று உங்கள் கவிதைகளைப் படித்தாலே தெரிகிறது. நாங்களெல்லாம் இழுத்தால்கூட அது வரமாட்டேங்குதே, என்ன செய்வது.

நன்றி வணக்கம்
ஆரென்

மிக்க நன்றிகள் ஆரென் அண்ணா. எனக்கும் உங்களின் நிலையே.. இழுத்தாலும் வரமாட்டேன் என்கிறது.. என்ன செய்ய.. முயற்சிக்கிறேன் தொடர்ந்து..!

பூமகள்
17-09-2007, 12:41 PM
நட்பு காதலாய் மாறுகிறதா. நட்பாய் இருக்கும் வரை எந்த திக்கில் பார்த்தாலும் இருக்கும் காதலாய் மாரினால் எட்டுதிக்கு நோக்கினால் மிஞ்சுவது கதறல் தான்

மிக்க நன்றிகள் வாத்தியாரே..!!
உங்களின் பின்னுட்டம் கண்டு மகிழ்ச்சி.

பூமகள்
17-09-2007, 01:04 PM
எட்டுத்திக்கும் கதறுகிறேன்−நீ
எனைவிட்டு போனததுமேனோ?
இப்படியிருந்தால் இன்னும் இறுக்கமாயிருக்குமென நினைக்கிறேன்..
அழகாக உள்ளதக்கா உன் கவிதை...வாழ்த்துக்கள்..!

அழகாய் சொன்னாய் அன்புத் தம்பி ப்ரீதன். நல்ல முயற்சி..வாழ்த்துக்கள்.
நன்றி தம்பி உன் பின்னூட்டத்திற்கு.

பூமகள்
17-09-2007, 01:27 PM
அக்னியாரின் வரிகள்கள் மீண்டும் மின்னும் வைரங்களாய்..
பின்னூட்டத்திலேயே கவிதையை ஜொலிக்கச்செய்ததற்கு நன்றிகள் சகோதரரே...!!

ஆதவா
18-09-2007, 10:55 AM
நட்பெனச் சொல்லி
இட்டுவந்தாய் இதுவரை....

நட்டாற்றில் விட்டு
எட்டிப் போனதேனோ....??

விட்டில் பூச்சி நானா? - என் வாழ்வை
வெட்டிப் போனதேனோ....??

ஒட்டிவந்த மனம் அதனை
விட்டுப் போனதேனோ....??

எட்டுத்திக்கும் கதறுகிறேன் - நீ
கேட்காது போனதேனோ....??

எனக்கென்னவோ கவிதையில் விசேடம் இருப்பதாகத் தெரியவில்லை. இன்னும் அழுத்தமாக கொடுத்திருக்கலாம்....

பூமகள்
23-09-2007, 03:18 PM
உன் பின்னூட்டத்திற்கு நன்றிகள் ஆதவா.

ஓவியன்
27-09-2007, 12:06 PM
ஒரு செடி வளரும் வரை அந்த செடியைத் தாங்கும் கொழு கொம்பை, செடி நன்கு வளர்ந்த பின்னர் அகற்றி விடுவதில்லையா.....
அந்த நிலையிலே அந்த தடியை அகற்ற வேண்டியது அந்த செடியைப் பொறுத்த வரையிலே காலத்தின் கட்டாயம்....
அதே போன்றதே உங்கள் கவிதை சொல்லி நிற்கும் கருவும்....

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பூமகள்!.

kampan
27-09-2007, 12:20 PM
விட்டில் பூச்சி நானா? - என் வாழ்வை
வெட்டிப் போனதேனோ....??

....??

விட்டில் பூச்சியெடா விரல் விட்டெண்முன்
விட்டுப் பறந்திடும் பெண் நட்பு
என்பதை தொட்டுவிட்டது உம் கவிதை

பூமகள்
27-09-2007, 01:49 PM
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பூமகள்!.
மிக்க நன்றிகள் அன்புச் சகோதரர் ஓவியரே..!

பூமகள்
27-09-2007, 01:50 PM
மிக்க நன்றிகள் சகோதரர் கம்பன்.