PDA

View Full Version : பழ.நெடுமாறன் உண்ணாவிரதம், ராமதாஸ் முடித்Ī



mgandhi
15-09-2007, 06:51 PM
பழ.நெடுமாறன் உண்ணாவிரதம், ராமதாஸ் முடித்து வைத்தார்.

இன்று, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் முதல்வரிடம் பேசியதையடுத்து, ஈழத்தமிழர்களுக்கான உதவிப்பொருட்கள் செஞ்சிலுவைச்சங்கம் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக முதல்வர் கலைஞர் உறுதியளித்ததன் பேரில் ராமதாஸ் வழங்கிய பழரசம் அருந்தி பழ.நெடுமாறன் தனது காலவரையற்ற உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் உடனிருந்தார். இன்று காலவரையற்ற உண்ணாவிரத்தின் நான்காவது நாள் என்பது குறிப்பிடத் தக்கது

ஓவியன்
15-09-2007, 07:17 PM
ஒரு மனிதாபிமானப் பணிக்கு அகரம் எழுதிய நெடுமாறன் அவர்களுக்கு அல்லறும் ஈழ மக்கள் ஒவ்வொருவரும் தம் நன்றிக் கடன்களைச் செலுத்தக் கடமைப் பட்டவரே...

அவர் உண்ணா நோன்பை முறித்துக் கொண்டது மகிழ்ச்சியே....

kampan
16-09-2007, 08:26 AM
பழ நெடுமாறன் ஜயாவிற்கு எமது நன்றிகள்.

அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டது மகிழ்ச்சியே தருகிறது.

ஜெயாஸ்தா
16-09-2007, 12:21 PM
பழநெடுமாறன் அவர்களின் உண்ணாவிரதம் பயனுள்ளதாய் அமைந்ததில் மகிழ்ச்சி. என்றும் தீரும் நம் சகோதரர்களின் இன்னல்கள்?