PDA

View Full Version : நிலவிலிருந்து பூமிக்கு மின்சாரம்ஜெயாஸ்தா
15-09-2007, 04:41 PM
நிலா நிலா ஓடி வா... நில்லாமல் ஓடிவா..... மலை மீது ஏறி வா.... மல்லிகைப்பூ கொண்டு வா....! என்று பாடி பிள்ளைக்கு அம்மா சோறு ஊட்டுவது வழக்கம்.அந்த நிலவில் இறங்கி மனிதன் வெற்றிக் கொடி நாட்டி இயற்கையை வென்று ஏறக்குறைய 38 ஆண்டுகள் ஆகிவிட்டன. விஞ்ஞானம் வளர வளர நாடுவிட்டு நாடு சென்ற மனிதன், கண்டம் விட்டு கண்டம் சென்ற மனிதன், கிரகம் விட்டு கிரகம் செல்ல முடிவு செய்து அந்த முயற்சியில் இறங்கினான்.

வழக்கம் போலவே இதுவும் கேலிப் பேச்சுக்கு உள்ளானது. இதெல்லாம் சாத்தியமா என்ற அவநம்பிக்கை பிரச்சாரம் கிளம்பியது. ஆனால், விஞ்ஞானிகள் சோர்ந்து விட வில்லை. தொடர்ந்து முயற்சி செய்தார்கள். அதன் பயனாக 1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி, முதன் முதலாக மனிதனின் காலடித் தடம் நிலவில் பதித்தது. நீல் ஆம்ஸ்ட்ராங் என்ற விண்வெளிவீரர் நிலவின் மேற்பரப்பில் முதல் அடியை எடுத்து வைத்தார். அவரை அடுத்து எட்வின் ஆல்ட்ரின் இறங்கினார். உலகமே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்தது. விண்வெளியில் இறங்கிய வீரர்களுக்கும் இது புது அனுபவம். அந்தக் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்து ஆனந்தக் கூத்தாடிய மக்களுக்கும் புது அனுபவம்.

இந்த அனுபவம்தான், விண்வெளியில் மனித சமுதாயம் நிகழ்த்திய அத்தனை சாதனைகளுக்கும் அச்சாரமாய் அமைந்தது என்று சொல்லலாம்.விண்வெளி வீரர்கள் நிலவில் இருந்து ஒரு கல்லைக் கொண்டு வந்தார்கள். அந்தக் கல் உலகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.அதன்பிறகு நிலாவை நோக்கி பயணப்படும் ஆய்வுகள் செம்மையாக்கப் பட்டு அமெரிக்க வீரர்கள் நிலவில் இறங்கினார்கள். அங்கு கார் ஓட்டினார்கள். நிலவின் மேல் அமெரிக்கா ஆர்வம் காட்டியதற்கு மிக முக்கிய மான காரணம் இருந்தது. ரஷ்யாவும் விண்வெளிப் பயணத்தில் அமெரிக்காவோடு போட்டி போட்டதற்கும் இந்தக் காரணந்தான் முக்கியமாக இருந்தது.

நிலவில் மனித இனம் கிடையாது. அங்கு பயன்படுத்துவார் இல்லாது கனிம வளங்கள் கொட்டிக் கிடக்கும். அதை அள்ளிக் கொண்டு வந்து விடலாம் என்பதுதான் அந்தக் காரணம். ஆனால், அதுபோல் எதுவும் அங்கு கிடைக்காததால் அமெரிக்காவும் ரஷ்யாவும் நிலவுக்கு டூ விட்டுவிட்டு பயணத்தை நிறுத்திக் கொண்டன. விண்வெளி ஆய்வில் முன்னேற்றமடைந்த அமெரிக்க - ரஷ்ய விஞ்ஞானிகளுக்குப் புலப்படாத சில முக்கிய அம்சங்கள் இந்திய விஞ்ஞானிகளின் மூளையில் பளிச்சிட, நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை இந்தியா மேற்கொண்டது.இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ, 2008ஆம் ஆண்டு வாக்கில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமாக ஒரு விண்வெளி ஆய்வு ஓடத்தை அனுப்பத் தயாராகி வருகிறது.

உலகம் எரிபொருள் பற்றாக்குறையை நோக்கி வெகுவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 1/2 நூற்றாண்டில் பெட்ரோலுக்கு பெரிய தட்டுப்பாடு வரும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இந்த நேரத்தில் மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்கும் கட்டாயம் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது. ஆகவே, இன்டர்நேஷனல் தெர்மல் எனர்ஜி ரியாக்டர் எனும் ஒளி அணுக்களைப் பிளந்து அதில் கிடைக்கும் வெப்பத்தை மின்சக்தியாக மாற்றும் திட்டத்தின் பக்கம் அவர்களின் கவனம் திரும்பியுள்ளது.ஹீலியம் - ஹைட்ரஜன் வாயுக்களைப் பிளந்து அந்த அனல் சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த ஹீலியம் மூலப் பொருள் சந்திரனில் அபரிமிதமாக இருக்கிறது. இதை பூமிக்கு கொண்டு வரும் தொழில் நுட்பத்தைப் பெற்று விட்டால் எரிபொருள் தேவையில் பெரும் பகுதி பூர்த்தி அடைந்து விடும் என்பது விஞ்ஞானிகளின் கணக்கு. இதற்காக வளர்ந்த நாடுகளும் வளரும் நாடான இந்தியாவும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாகத்தான் 2008ஆம் ஆண்டில் இந்தியாவின் விண்வெளி ஓடம் சந்திரனை நோக்கிப் பறக்கப் போகிறது.இந்தியாவின் எரிபொருள் தேவை மட்டும் பூர்த்தியாகி விட்டால் வல்லரசு நாடுகளே வாயைப் பிளக்கும் அளவுக்குமுன்னேறி உலகில் முதல்நிலை நாடாக மாறும் என்பதில் ஐயமில்லை.

மாதவர்
16-09-2007, 02:38 AM
சபாஷ்

lolluvathiyar
21-09-2007, 08:14 AM
அந்த வின் வெளி ஓடத்துக்கு பெயர் சந்திரா என்று வைத்திருகிறார்களாம். முதல் கட்ட முயற்ச்சி நிலவில் இறக்குவதே.
பிறகு அங்கிருந்து ஹீலியத்தை குரைந்த செல்வில் இங்கு கொண்டு வர ஆராய்சிகள் செய்ய வேண்டும். நிலவை கூட பட்டா போட்டு சுரண்டி விடுவார்கள் போல இருக்கு